Ramya Rajan's SN 11

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

நல்ல முடிவா எடுத்துட்டான் பிரபாகர்......
சில பேரை திருத்த முடியாது....... சோ நாம திருந்திக்கலாம் தப்பில்லை.....

சிதம்பரம் சொத்தை பற்றி எடுத்த முடிவு கூட நல்லது தான்......
இருக்கும் பிசினெஸ்ஸை கெடுக்காமல் பார்த்துக்கிட்டார்.......
ஒரு மருமகள் சரியில்லைன்னா கூட அந்த வீடு எப்படி பிரிஞ்சி போயிடுது.......
அந்த மருமகள் சரியில்லாமல் போக சிதம்பரம் தான் காரணம்......
பொண்டாட்டிங்க வீட்டுல பேசலாம்....... ஆனால் குடும்பத்தில் பொது விஷயத்தில் தலையிட்டால் இப்படி தான் ஆகும்...... நிறைய நேரில் கூட பார்த்திருக்கிறோம்......

வசுந்தரா கூட கூட்டணி போட்டு வீடு நிம்மதியை கெடுத்தாங்க ரெண்டு பேரும்........ இப்போ வசுந்தரா இங்கே ஐக்கியமாச்சு...... தேவி ???
இதான் நாத்தனார் கூட கூட்டணி போட்டு co-sister கூட மல்லுக்கு நிக்கக்கூடாது......
என்ன தான் வீடுகளில் இருந்தாலும் குடும்பங்களில் பணம் அந்தஸ்து படிப்பு னு மருமகள்கள் பிரிஞ்சு தான் நிக்குறாங்க.....

குட்டி கதை....... நல்லா இருந்துச்சு...... தேங்க்ஸ் ரம்யா :love::love::love:
அடுத்த கதை போடுங்க.......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பவித்ரா,யாழினி அவளிடம் சொன்னதை தேவியிடம் சொன்னதற்கு என் பொண்ணு அப்படியெல்லாம் பண்ண மாட்டா,அபாண்டமா பழி போடறதா பவித்ராவிடம் ரகளை பண்ணியிருக்கா:oops::eek::oops:.

பவித்ரா வீட்டுக்கு வந்தா யாழினி சொன்ன பொய் தெரிந்து விடும் என ,யாழினி வீட்டை விட்டு போக பவித்ரா தான் காரணம் அவ இருக்கும் இருக்கற வீட்டில் இருக்க மாட்டேன்னு சொல்லி, அவள வீட்டுக்கு வர விடாம செஞ்சிருக்காளே ராட்சஷி:devilish::devilish::devilish:.

தேவி தன் மேல் எந்த தவறும் இல்லாததை போலவே நடந்துக்கறதும்,இப்ப நாம விட்டுக் கொடுத்து போனா,உன்னை மதிக்கவே மாட்டாங்க,ஒரு குடும்பம் சேர்ந்திருக்க நாம் மட்டும் நினைத்தால் போதாது,எல்லோரும் நினைக்கனும் என பிரபா சரியாக சொன்னான்(y)(y).

தனியா போறோம்னு சொன்னா கால்ல வந்து விழுவாங்களா:unsure::unsure:.ஆனாலும் தேவிக்கு இத்தனை திமிர் இருக்க கூடாது:mad::mad:.தனியா போறதா சொல்லவும் தடுக்காம,கிளம்புங்க காத்து வரட்டும்னு சொல்லிட்டாங்களா;):D:D.சிதம்பரம் முடிந்தவரை வியாபாரம் செய்யட்டும்,முடியாத போது பணமாகவோ,சொத்தாகவோ பங்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்தது மிகவும் சரி(y)(y)(y).

யாழினி வீட்டை விட்டு சென்றதற்கும்,வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் தன் மனைவியும் ஒரு காரணம் என நினைத்து விலகி இருப்பதும்,உண்மை தெரிந்து வருந்துபவன் தன் மனைவியை மதிக்காதவர்களோடு இருக்க முடியாது என பிரபா முடிவெடுப்பது அருமை:):):).

பிரபாகர்,பவித்ராவை காலேஜில் சேர்த்து படிக்க வைப்பதும்,பிரபா தொழிலில் மேலும் முன்னேற...
பிரபாகருக்கு காரியம் யாவிலும் கை கொடுக்கும் உற்ற துணையாய் பவித்ரா இருப்பது மகிழ்ச்சி....
அருமையான குடும்பகதை.எளிமையான நடை.நிறைவான முடிவு(y)(y).
பழைய கதைகளை படிக்காதவர்களுக்காக ரீ ரன் கொடுத்ததற்க்கு நன்றி ரம்யா ராஜன்:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top