Ramadan 2021- Day 3

Advertisement

fathima.ar

Well-Known Member
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தச்சு வேலை செய்து வந்தார்கள். அதிகமாக வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள். பனீ இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் இவர்களைத் தனது நபியாக அனுப்பியிருந்தான்.

ஜகரிய்யா நபி அவர்களின் மனைவியார் மிகவும் அழகுள்ளவர்களாக இருந்தார்கள். ஒருசமயம் சிலர் ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காண அவர்களுடைய வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்பொழுது ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வீட்டில் இல்லை. அவர்களது மனைவியைப் பார்த்தவர்கள் ஒரு நபிக்கு இவ்வளவு அழகான மனைவி எதற்கு? என்று தமக்குள் பேசிக் கொண்டு திரும்பச் செல்ல ஆரம்பிக்கும்போது, வழியில் ஜகரிய்யா நபியை கண்டார்கள்.

அன்னார் ஒரு வீட்டில் சுவர் எழுப்பும் பணிக்காக செய்த வேலைக்கு வாங்கிய கூலியான உணவைத் தாமே சாப்பிட்டு விட்டதைக் கண்டார்கள். மேலும் அவர்கள் அங்கிருந்து செருப்பில்லாமல் நடக்க ஆரம்பி;த்து விட்டார்கள்.
இந்த மூன்று செயல்களுக்கும் (அழகான மனைவி, தாமே சாப்பாட்டை உண்டது, செருப்பில்லாமல் நடந்தது) காரணம் கேட்டார்கள் வந்தவர்கள்.
பிற பெண்கள் மீது என் பார்வை பட்டு நான் பாவக்கடலில் மூழ்காமல் இருக்கவே பேரழகியைத் திருமணம் செய்து கொண்டேன். பிறருக்குத் தராது நான் முழு உணவையும் உட்கொண்டதற்கு காரணம் அந்த உணவு எனக்கே போதாதநிலையில் இருந்தது. அந்த உணவை பிறருக்கு கொடுத்துவிட்டு நான் பலஹீனமடைந்து விட்டால், எனக்கு வேலை கொடுத்தவருக்காக திறமையுடன் வேலை செய்ய முடியாது போய் விடுமே என்ற பயத்தின் காரணமாக, நானே அந்த உணவை உண்டு விட்டேன். காலில் செருப்பு அணியாது நான் நடக்க காரணம் நான் இருவருக்கும் சொந்தமான இரு நிலங்களில் நடக்க வேண்டியதிருந்தது. காலில் செருப்புடன் நடந்து சென்றால்> ஒருவர் நிலத்து மண் இன்னொருவர் நிலத்திற்குப் போய்ச் சேர்ந்து விடுமே என்ற அச்சத்தில்தான்’ என்று கூறினார்கள்.
ஹழ்ரத் ஜகரிய்யா நபிக்கு நீண்ட நாட்களாகவே பிள்ளை இல்லாதிருந்தது. அவர்களக்கு அப்போது வயது 130ம், மனைவி ஈஷாவுக்கு வயது 90ம் ஆகியிருந்தது. தமக்குப் பிறகு தவ்ராத் வேதத்தை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க வாரிசு ஒன்று வேண்டும் என்று அவர்கள் மிகவும் கவலையடைந்திருந்தார்கள்.
இதற்காக அல்லாஹ்விடம் உருக்கமாக துஆ கேட்டார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: ‘ ஓ ஜகரிய்யாவே! உமக்கு ‘யஹ்யா’ என்ற பெயருடன் ஒரு மகனைத் தரப்போகிற நன்மாராயம் கூறுகின்றோம். அந்த மகன், மிகவும் பொறுமையுள்ளவராகவும், இறையச்சம் அதிகமுள்ளவராகவும், எம்முடைய தூதராகவும் இருப்பார்;’

என் மனைவி கருவுற்று விட்டாள் என்பதற்கு நான் என்ன அடையாளம் காண முடியும்? என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ் நீர் நல்ல உடல் நிலையிலிருக்கும் பொழுதே, திடீரென்று உம்மால் பேசமுடியாது போய்விடும். இதேநிலை உமக்கு மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அப்போது நீர் காலையிலும், மாலையிலும் எந்நேரத்திலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிரும்’ என்று கூறினான்.
அல்லாஹ் நீர் நல்ல உடல் நிலையிலிருக்கும் பொழுதே> திடீரென்று உம்மால் பேசமுடியாது போய்விடும். இதேநிலை உமக்கு மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அப்போது நீர் காலையிலும்> மாலையிலும் எந்நேரத்திலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிரும்’ என்று கூறினான்.
இதற்குப் பின் சிறிது காலம் கடந்ததும் ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசும் சக்தியை இழந்து விட்டார்கள். அல்லாஹ் கூறியபடி இந்தநிலை அவர்களுக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அந்த மூன்று நாட்களிலும் அவர்கள் இறைதியானத்தில் அதிகமாக மூழ்கியிருந்தார்கள்.
இதை அல்குர்ஆன் 19:3-11தெளிவாகக் கூறுகிறது.

ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).
(அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?”எனக் கூறினார்.

(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து> நானே உம்மை படைத்தேன்”என்று இறைவன் கூறினான்.


(அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!”என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்”என்று கூறினான்.

ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் ) அவர் “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்”என்று உணர்த்தினார்.
ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களிடம் அறவழிபோதம் பண்ணிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் போதனைக்கு செவியேற்று அவர்கள் மீது விசுவாசம் கொண்டு ‘இம்ரான்’ என்பவர் செயலாற்றிக் கொண்டிருந்தார்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top