Preetha Gowri's Mugil koottam(short story)

Advertisement

Preetz

Writers Team
Tamil Novel Writer
IMG_20181224_235830.jpg



முகில் கூட்டம்



வெளியே சில்லென்ற காற்றுடன் லேசாக மழை தூரிக்கொண்டிருக்க அந்த ‘லேக் வ்யூ’ ரெஸ்டாரன்டிலோ இனிமையான இசை கசிந்துக்கொண்டிருந்தது...சிலர் இசையை ரசித்துக்கொண்டும்...சிலர் உணவை ருசித்துக்கொண்டும்...உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டும்...போனில் மூழ்கியபடியும்...மனிதர்கள் பலவிதம் அங்கே…

அதே ரெஸ்டாரென்டில் ஒரு ஓரமாகயிருந்த இருக்கையில்...தனிமையில் ஒருத்தி அந்த கண்ணாடி யன்னலில் பட்டுத்தெறித்த நீர் துளிகளை கண்ணாடி பூக்களாய் ரசித்துக்கொண்டிருந்தாள்...அவள் ருத்ராக்ஷா...ருத்ராக்ஷா விக்ரமாதித்யன்…

இனிமையான இசை மாறிவிட...அவள் ரசித்துக்கொண்டிருந்த அழகான பூக்களும் கரைந்துவிட(தூரல் நின்றுவிட)...அந்நேரம் பார்த்து அவளது போனும் பாட அதை எடுத்தவள் அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்துவிட்டு...அதை உயிர்ப்பித்து அந்தப் பக்கம் இருந்தவரிடம்…

“எங்கயிருக்க?” என்று அடிக்குரலில் சீற அந்தப் பக்கத்தில் இருந்தவன் என்ன கூறினானோ இவளோ அதே குரலில்

“இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் கிளம்பிடுவேன்” என்று வைத்துவிட்டாள். பின்னே இரண்டு மணியளவில் அங்கிருப்பேன் என்றவன் இன்னும் வரவில்லை மணி மூன்றாக இன்னும் சில மணித்துளிகளே இருந்தன…

சரியாக மணி மூன்றாவதற்கு இரண்டு நிமிடமிருக்கையில் அவள் முன் ஒருவன் வந்து உட்கார அவளோ அவனை கொலைவெறிப் பார்வை பார்க்க அவனோ அதை கண்டுக்கொள்ளாமல் அவளையே குற்றம் சாற்றினான்.

“நான் வர லேட்டாச்சுனா என்ன? ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிட்டிருக்கலாமே...எவ்வளவு நேரமாச்சு”என்றவன் அவளுக்காக வருந்த அவளோ எழுந்துக்கொண்டு

“மணி மூணாச்சு…3:30 க்கு க்ளாராவோட அப்பாய்ன்மென்ட் இருக்கு” என்று நகர அவனோ

“ஹே! சாரிடா இவ்வளவு லேட்டாகும்னு நான் எதிர்ப்பார்க்கல...ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்” என்று வருந்த அவளோ அதைக் கண்டுக்கொள்ளாமல்

“ ஃபைவ் ஓ க்லாக் மூங்கில் தோட்டத்துக்கு வந்துடு” என்று கிளம்பிவிட்டாள்.

அவனுக்கு அவளது கோபம் நன்றாக புரிந்தது. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனுக்கு நினைவுகள் பின் நோக்கிச் சென்றது.


ஐந்து வருடங்களுக்கு முன்…


விக்ரமாதித்யன்



அந்தப் பரப்பரப்பான கஃபேட்டீரீயா இன்று கொஞ்சம் அமைதியாகயிருந்தது...காரணம் லஞ்ச் ப்ரேக் முடிய இன்னும் சில நிமிடங்களேயிருக்க பலர் தங்களது உணவையும் அந்த வயதிற்கே உரிய சில சேட்டைகளையும் முடித்துக் கொண்டு அந்த செமினார் ஹாலை நோக்கிப் படையெடுத்திருந்தனர்…

“தியா அந்த ஸாஸ்ஸ இங்க நகர்த்தேன்…”என்றவனை கொலைவெறிப் பார்வைப் பார்த்தவள்

“சும்மாயிருந்துரு...நானே ப்ரோகிராம் அட்டன்ட் பண்ணமுடியாத கடுப்புல இருக்கேன்”என

“ஹே...அதுவே ஒரு மொக்க ப்ரோகிராம்...மனுஷனாயா அவன்? பேசியே கொன்னுருவான்...ஏதோ ஆதி புண்ணியத்துல தப்பிச்சோம்னு நினைப்பியா…”என்று அவசியமில்லாமல் ஆஜரானான் ஆகாஷ்.

தியாவின் பார்வை அவனைத் தாறுமாறாகத் தாக்க அதில் பதறிய ராஷித்தோ ‘இவங்க ஆரம்பிச்சிட்டாங்கய்யா’ என்று சமாதானப்படுத்த முயல இதற்கெல்லாம் காரணம்மானவனோ பூரியென்றப் பெயரில் அவர்கள் கேண்டினில் கொடுத்த அந்த அப்பளத்தை நொறுக்கிக் கொண்டிருந்தான்…ரசிகனவன்...ஆம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசிக்கும் முயற்சியில் அவன்!...

அப்படி அவன் அந்த அப்பளத்தை...ஸாரி...பூரியை ரசித்துக்கொண்டிருந்தப் போது அவனுக்கு பின்னிருந்த டேபிளில்…

“ஹே...இது என்ன டி?”

“என்னது டி யா?”

“ஆமாம்…”

“நான் உன்ன டா ன்னா கூப்பிட்டேன்?”

“கூப்பிடேன்…”என அவன் அப்பட்டமாக வழிய

“சரிடா...என்னடா?...வேணும்டா?..உனக்குடா...இந்த டாபிக்காடா?...இது ரொம்ப சிம்பிள்டா…”என்றவள் வார்த்தைக்கொரு டா போட அவனோ

“ஒரு நிமிஷம் ருத்ரா...வாஷ்ரூம் போய்ட்டு வரேன்” என்றுவிட்டு ஓடிவிட்டான்.
அவனுக்கோ ‘மனுஷியாடா இவ ஒரு டி க்கு எத்தன டா...ஷப்பாஹ்!!! சரியான திமிரு பிடிச்சவ” என்றுதானிருந்தது.

அவன் இனி வரமாட்டான் என்று தெரிந்துவிட அவள் அந்தப் புக்கை மூடிவிட்டு அவள் தட்டில் கவனமாகியிருந்தாள்.

இங்கு இவர்கள் சம்பாஷனை அனைத்தும் இவனின் காதில் விழ...முதலில் வியப்பு...பின் ஆர்வம்…!

அவளை அப்படியே திரும்பிப் பார்க்க முடியாதல்லவா!...அது வித்யாசமாகப்படுமே...அங்கு காலியாகியிருந்த ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு “இருடா சாம்பார் வாங்கிட்டு வரேன்” என்றெழுந்தவன் பார்வையை திருப்ப...மிகவும் சாதாரணமான தோற்றத்துடன் காதில் இயர்போன்ஸும் ஒருபக்கம் ஏதோ சில புத்தகங்களும்...இன்னொரு பக்கம் ஒரு ஷோல்டர் பேகும்…
தட்டிலேயே தன் கவனத்தைப் பதித்திருந்தவள்...இவனை கவனிக்கவில்லை...இவனும் சில நொடியே அவள்புறம் அவன் பார்வையை வீசியிருந்தானென்றாலும் அவளிடம் ஏதோ ஒன்று அவனுக்கு வித்யாசமாகப்பட்டது...ஈர்த்தது...
கவனிக்கத் தூண்டியது...அது என்ன…?


ருத்ராக்ஷா


கேண்டினிலிருந்து கிளம்பியவள் லான்ட் ஆன இடம்...ஸ்டாஃப் ரூம்...அங்கு அவளது ப்ரொஃபஸருக்கு அவள் அவளது ப்ரெஸன்டேஷனுக்கானவற்றை விவரித்துக் கொண்டிருந்தாள்...ஒரு சில மாற்றங்களை கூறியவர்

“ருத்ராக்ஷா இது இன்டிவ்ஜுவல் ப்ரெஸன்டேஷன் சோ எல்லாரோட கவனமும் ஒருத்தர் மேலதானிருக்கும்...நீ போல்டா பண்ணுவேன்னுதான் உன்ன செலக்ட் பண்ணிருக்கேன்...ஆல் த பெஸ்ட்!!!” என்க அவளும்

“தாங்க்யூ மேம்!!!”என்று அங்கிருந்து விடைப்பெற்று லைப்ரரியில் எடுக்கவேண்டிய சில புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்ப…
பக்கத்து காஃபி ஷாப் அவள் கவனத்தை ஈர்த்தது… காரணம் அந்த பிறந்தநாள் கொண்டாட்டம்!

“அண்ணா என்னண்ணா வெக்கபட்டுக்கிட்டு?” என அவர்களது காலேஜ் செக்யூரிட்டி அண்ணன்னோ

“என்ன ஆதி நீ விஷ் பண்ணதேப் போதும்பா எதுக்கு இதெல்லாம்…”

“அண்ணா இப்பமட்டும் நீங்க கட் பண்ணல...எப்ப வேணாலும் கேக் மேல பாயறதுக்கு இவன் தயாராயிருக்கான்…”என்றது தியா

ஆகாஷோ “அவ கிடக்கறா ண்ணா சில்லி கர்ள்...பட் சீக்கிரம் கட் பண்ணிடுங்க” என அங்கு ஒரே கும்மாளம்தான்…

ருத்ராக்ஷாவிற்கு தெரிந்ததெல்லாம் அந்த செக்யூரிட்டி அண்ணன் கண்ணிலிருந்த சந்தோஷம் மட்டுமே...ஒருவரை சிரிக்க வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்!...அதைத்தான் அவன் செய்துக்கொண்டிருந்தான்…

ஒரு இளநகையொன்று அவளுதட்டில் உறைந்துவிட அன்றைய தினமும் அவள் நினைவுப் பெட்டகத்தில் இனிமையென்ற இடத்தில் அழகாக அமர்ந்துக் கொண்டது…

சில வாரங்களுக்குப்பின் வரயிருந்த ‘டாலன்ட்ஸ் டே’ வை தொகுத்து வழங்குவதற்காக அவளை அழைத்த ப்ரொபஃஸர் அதேப்போல் மற்றொரு டிபார்ட்மென்டிலிருந்து ஆதித்யனையும் அழைக்க...அன்று அந்த நிகழ்ச்சிக்காக இணைந்தவர்கள்...இன்று பிஸ்னஸ்ஸில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பார்ட்னர்களே…

இதில் எந்த நொடி காதல் பிறந்ததென்பது இருவருக்குமே இன்றுவரை புதிர்தான்...இந்த இருவேறு துருவங்களையும் இணைத்தது எது…?


நினைவுகள் சுகமானதல்லவா(சில)...அப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கியிருந்த ஆதித்யனது ஃபோன் அலறியது. அதையெடுத்தவனது முகத்திலோ ஓர் இளநகை!...காரணம் அது அவளல்லவா!...



மூங்கில் தோட்டம்-அவர்களது முதல் குழந்தை...மூங்கில் தோட்டத்துக்குள்ளிருப்பதுப் போன்ற அமைப்புடைய ரெஸ்டாரென்ட்!...இயற்கைக்கென்றே உண்டானத் தனி வாசமும்...கண்ணுக்கு குளிர்ச்சியாகத் திரும்பிய இடமெல்லாம் பச்சை நிறமும்...அது ஒரு சொர்க்கம்!

அவள் கூறியிருந்த 5:00யும் தாண்டி மணி 6:30 ஆகியிருந்தது...ஆனாலும் அவள் வரவில்லை...வேலை இழுத்துக்கொண்டது...கடைசியாக 6:35க்கு வந்தவள் அவர்களது கேபினுக்குள் நுழைய அங்கே அவளுக்காக காத்துக்கொண்டிருந்தவனோ…

“ஏதாவது சாப்பிட்டியா?” என்றதுதான் அவனது முதல் கேள்வி...அவளுக்குத் தெரியும் அவன் இதைத்தான் முதலில் கேட்பானென்று...அவளது தாயிற்கடுத்து அவளது பசியைப் பற்றி கவலைப்படும் ஒருவன்...இனிமையான உணர்வல்லவா…

“அப்போ சாப்பிடல...எத்தன தடவை சொல்லிருக்கேன் அக்ஷா…”என்றுவிட்டு ஃபோனை கையிலெடுத்து உணவுக் கொண்டுவரச் சொல்ல

“இல்ல ரமா...நேரமே கிடைக்கல…”என்றவள் உறைக்க தலையை மறுப்பாக ஆட்டியவன் உணவு வந்துவிட

“நீ ஃப்ர்ஸ்ட் சாப்பிடு”

“நீயும்தானே சாப்பிடல வா சேர்ந்தே சாப்பிடலாம்”என்றவளைப் பார்க்க அவளோ

“அதெல்லாம் தெரியும் சாப்பிடு” என சாப்பிட்டுமுடித்து அவனோ ஒரு சிரியளவிலான ஒரு பெட்டியை அவளிடம் நீட்ட அதைத் திறந்துப் பார்த்தவளுக்கோ நாவெழவில்லை…

‘முகில் கூட்டம்’ என்று மேகங்களுக்கு நடுவே...வெள்ளியிலான கீ செய்ன் அவளைப் பார்த்து கண் சிமிட்டியது…

முகில் கூட்டம்- ஈவன்ட் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்...அது அவளது நீண்ட நாள் கனவு...நிறைவேறாதக் கனவும்கூட...கல்லூரி காலத்து கனவு...என்றோ ஒரு நாள் அவள் பகிர்ந்துக்கொண்ட ஒன்று...அதை இன்றும் நினைவு வைத்திருக்கிறான்…

“இது உன்னோட ட்ரீம் இல்லையா?...அப்போ முடியல பட் இப்போ தான் நாம பிஸ்ன்ஸ்ஸ நல்லாவே கொண்டுப் போறோமே...நீ ஏன் மறுபடியும் ட்ரை பண்ணக்கூடாது…’என அவனைப் பார்த்தவளுக்குதான் ஒன்றும் கூற முடியவில்லை...பண உதவியைவிட பெரியது...ஒருத்தருக்கு துணையாய் நிற்பது...மாரல் சப்போர்ட் என்பார்களே அதற்கு சக்தி அதிகம்…



தூரத்தில்…

மூங்கில் தோட்டம்... மூலிகை வாசம்...என்றப் பாடல் ஒலிக்க அவனிடம் திரும்பியவளோ…

“ஒரு வாக் போலாமா…” என பிறகு என்ன

மூங்கில் தோட்டம்...மூலிகை வாசம்...
நெறஞ்ச மௌனம்... நீ பாடும் கீதம்...
பௌர்ணமி இரவு... பனிவிழும் காடு...
ஒத்தையடி பாதை... உன்கூட பொடி நட...
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும்... நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும்... நீ போதுமே!...


(அக்ஷா&ரமா)




 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
ப்ரீத்தா கௌரி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top