Potato side dishes for Chapathi

Advertisement

Devi29

Well-Known Member
உருளை கிழங்கு..3.. ...வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வைச்சுக்கோங்க .....

பெரிய வெங்காயம் --2
தக்காளி -- 1
clove -3
மிளகாய் போடி--1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி.... கடுகு ,ஜீரா ,கறிவேப்பிலை உடன் மேல சொன்ன அனைத்தும் போட்டு நல்லா வதக்கனும்......பிறகு தண்ணீர் ஊற்றனும் ...நல்லா கொதிக்கும் போது மசித்து வைத்த உருளை கிழங்கு போடணும் ....கெட்டியா இருந்தா நல்லா இருக்காது ...சாம்பார் போல இருக்கணும் .....கோவை ரெஸிபி .... கொஞ்சம் வெல்லம் சேர்ப்பாங்க.....
one teaspoon kadalai mavu karaithu kodhikum pothu oothina innum nalla irukkum sis:):):):)
 

malar02

Well-Known Member
உருளை கிழங்கு..3.. ...வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வைச்சுக்கோங்க .....

ஒரு கப் தேங்காய் + ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை + 4 பல் பூண்டு மிக்ஸில்-ல போட்டு நல்லா அரைக்கணும் .....

பெரிய வெங்காயம் or சின்ன வெங்காயம் ----- ஒரு கப் (cut in small)
பச்சை மிளகாய் -- 4 (நீள வாட்டமா கட் பண்ணனும் )

பாத்திரத்துல எண்ணெய் ஊற்றி கடுகு, ஜீரா(cumin ) கறிவேப்பில்லை , 3 clove , ஒரு இன்ச் பட்டை .....வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு நல்லா வதக்கனும்..... பிறகு அரைச்சு வைச்சதை ஒரு ஸ்பூன் தனியா தூள் சேர்த்து போட்டு .....தண்ணீர் ஒரு மூணு டம்ளர் ஊற்றி கொதிக்க விடணும் ....மஞ்சள் தூள் சேர்க்கணும் + உப்பு......நல்லா வாசனை வரும் போது மசித்து வைத்த உருளை கிழங்கு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கணும்.....சேலம் ரெஸிபி ........
:)
 

malar02

Well-Known Member
உருளை கிழங்கு..3.. ...வேக வைச்சு தோல் உரிச்சு மசிச்சு வைச்சுக்கோங்க .....

பெரிய வெங்காயம் --2
தக்காளி -- 1
clove -3
மிளகாய் போடி--1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி.... கடுகு ,ஜீரா ,கறிவேப்பிலை உடன் மேல சொன்ன அனைத்தும் போட்டு நல்லா வதக்கனும்......பிறகு தண்ணீர் ஊற்றனும் ...நல்லா கொதிக்கும் போது மசித்து வைத்த உருளை கிழங்கு போடணும் ....கெட்டியா இருந்தா நல்லா இருக்காது ...சாம்பார் போல இருக்கணும் .....கோவை ரெஸிபி .... கொஞ்சம் வெல்லம் சேர்ப்பாங்க.....
:)
 

Joher

Well-Known Member
அப்போ சப்பாத்தியை போட்டிற வேண்டியது தான்... சூப்பர் ஜி சூப்பர் ஜி... இன்னும் கொஞ்சம் ரெசிபிஸ் எல்லாம் இறக்குமதி செய்ங்க... குட்டீஸ்க்கு ஈசியா செஞ்சு கொடுத்து அனுப்புறா போல...

ஜி அம்மா உணவகம் சப்பாத்தி வேண்டாமா???:p:p:p
 

Joher

Well-Known Member
Intha injee poondu masaala illama... NV illama ...yethavathu......
Naan Vendai fry .. Dhaal.. keerai kootu .. aviyal seiven... any other receipe...??
அய்யோ.... இம்புடு தானா????

நான் இஞ்சி பூண்டு இல்லாத சமையல் போடுறேன்.....
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஜி அம்மா உணவகம் சப்பாத்தி வேண்டாமா???:p:p:p

ஜி நேத்து எங்கம்மா அதான்ஜி வாங்கி வைச்சிருந்தாங்க பொண்ணு பாவம் களைச்சு போய் ஆபீஸ்ல இருந்து வருதேன்னு... வந்ததும் நானும் பையனும் சாப்பிட்டோம் சப்பாத்தியும் எங்கம்மா வைச்ச தக்காளி தொக்கும்... இருந்தாலும் எங்க வீட்டு சோதனை எலிக்களுக்கு (என் வீட்டுக்காரரும் என் புள்ளையும் தான்) என் கையால செஞ்சு கொடுக்குற மாதிரி ஆகுமா...
 

Sundaramuma

Well-Known Member
அரைத்து விட மூணு வித மசாலாக்கள் .....
1. தேங்காய் --1 கப்
பூண்டு --5

2. தேங்காய் -- 1 cup
பூண்டு --5
சோம்பு --1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் --2
பொட்டுக்கடலை --1 ஸ்பூன்
வரமிளகாய் --4

3. தேங்காய் ---- 1 cup
பூண்டு-----5
இஞ்சி----- 1 inch
முந்திரி or Almond --10-15

Veg combinations ....
1. potato alone ....
2. potato + green peas
3. potato + cauliflower
4. carrot,peas, beans , cauliflower. potato, chow chow
5.cauliflower +green peas

லவங்கம் , பட்டை விரும்பியவர்கள் அரைத்து போடலாம் ...இல்லை எண்ணெயில் வெங்காயத்துடன் போட்டு வதக்கி விடலாம்.....பொட்டு கடலைக்கு பதில் வேர்க்கடலை சேர்க்கலாம் ...உங்கள் விருப்பம் .....
 

Sundaramuma

Well-Known Member
காளான் --1/2 கிலோ
பெரிய ஓர் சின்ன வெங்காயம் ... 1 கப்
கறிவேப்பில்லை ...20 இலைகள்
மிளகு --1 1/2 ஸ்பூன்
தனியா --- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்
உப்பு

இஞ்சி பூண்டு விழுது விரும்பினால் போடலாம் ....அதுபோல லவங்கம் அண்ட் பட்டை போடலாம் ..... தேங்காய் பால் விரும்பினால் சேர்க்கலாம் .....

காளான்லிருந்து அதிதிகம் தண்ணீர் வரும் ...அதனால பாத்திரத்தில் முதலில் தண்ணீர் வற்றும் வரை வதக்கி கொள்ளவும் ....

பாத்திரத்தில் எண்ணெய் கொஞ்சம் அதிகம் ஊற்றி கடுகு,ஜீரா , வெங்காயம் அண்ட் கறிவேப்பில்லை தாளிக்கவும் ..... பிறகு காளான் ,மசாலா பொருட்கள் சேர்த்து மிதமான தீயில் ௧௦ நிமிடம் வைத்து இறக்கவும் .....

இதனுடன் உருளை கிழங்கு ஒரு கப் போடலாம் .....
காரைக்குடி ரெஸ்டாரெண்ட்-ல boneless சிக்கன் பொட்டு இருந்தாங்க ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top