Poorani's கரைய துடித்திடும் மனசு 2

Midhun

Writers Team
Tamil Novel Writer
எல்லோருக்கும் வணக்கம் ப்ரண்ட்ஸ்..:):)

முந்தைய பதிவிற்கு லைக் மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...!!!

பெரிய பெரிய பெரிய தேங்க்ஸ்....

Always Keep supporting me friends....

அத்தியாயம் : 2

கார் சீரான வேகத்துடன் செல்ல , பசுமை போர்த்திய வயல் வெளியையும்,தூரத்தில் தெரியும் சூரியனின் மறைவையும், தன்னை கடந்து செல்லும் மரங்களையும் ,மேகங்களையும் இமைக்க மறந்து பார்த்தபடி வந்தாள் சுசிலா....


'ப்பா இங்க எல்லாம் வாழ குடுத்து வச்சு இருக்கணும் பா.... எவ்ளோ பச்சை பசேல்ன்னு இருக்கு பாருங்களேன்.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசேன்னு..கண்ணுக்கு குளிர்ச்சியா , அழகா, செம்மையா,குயூட்டா, லவ்லியா ,செம்ம ப்பா...ஐ ரியல்லி லவ் இட்....' என உற்சாகம் பொங்கிய குரலில் கூறிய சுசியை மென்னகையுடன் நோக்கினார் அன்பு...


கார் அந்த நெடுஞ்சாலையை கடந்து, கிராமத்துக்கு செல்லும் வழியில் வளைந்து பயணிக்க துவங்கி இருக்க,கண்ணில் தெரிந்த காட்சிகளை கண்டு சிலிர்த்து ,தன் தந்தையுடன் விவரித்துக்கொண்டே வந்தாள்...


முன்பு வரும் போதெல்லாம் அனைத்தையும் கண்ணுக்குள் ரசித்து மனதிற்குள் பொத்தி வைத்துக்கொள்வாள்...


ஏதாவது சொன்னாலோ ,கேட்டாலோ 'அமைதியா வேடிக்கை பாரு சுசி...அப்பா டிரைவ் பண்றாங்க இல்ல... டிஸ்டர்ப் பண்ணாத ...' என ஒற்றை வரியில் அவளின் ஆர்பரிப்புக்கு முற்றுப்புள்ளி இட்டிடுவார் தேவகி..


ஆனால் இப்போது முற்றுப்புள்ளி , காற்புள்ளியாய் இருக்க கண்களில் காணும் அனைத்தையும் தந்தையுடன் விவரித்துக்கொண்டே வந்தாள்...


தேவகியையும் அன்பு உடன் அழைக்க ,தான் வரவில்லை என மறுத்துவிட்டதால், தந்தை மற்றும் மகள் இருவர் மட்டுமே இப்போது காரில் பயணம்...


ஒரு கிலோ மீட்டர் பயணத்தின் முடிவில் கார்,அந்த அழகிய கிராமத்தில் நுழைந்து பழமை வாய்ந்த ஓர் அழகிய வீட்டின் முன் நின்றது...


'அதுக்குள்ள வந்துடுச்சா...???!!,இன்னும் கொஞ்சம் மெதுவா வந்து இருக்கலாம் இல்ல பா... ' என சலிப்புடன் கூறியவளை நோக்கியவர்...


'இதை விட மெதுவா வரதா இருந்தா,நீயும் நானும் நடந்து தான் டா வந்திருக்கணும்...' என சொல்லி சிரித்தப்படி இறங்கியவர் , அன்னை வரவும் அவரிடம் பேச சென்றார்...


'எப்படி அன்பு இருக்க....' என அங்கயற்கண்ணி மகனை நலம் விசாரித்தாலும் பார்வை எல்லாம் பேத்தியின் மீதே இருக்க...


அவரின் பார்வை தன் மீது படுவதை உணர்ந்து ,சட்டென்று காரில் இருந்து இறங்கியவள் அவரை நெருங்கி காலில் விழுந்து பணிய...


'நல்லா இருடா என் ராசாத்தி....' என வாழ்த்தியவர் ,அவளை எழுப்பி உச்சி முகர்ந்தார்...


'என் பேத்திக்கு அப்படியே உன்னோட குணம்ப்பா அன்பு...' என்க...


நல்ல வேளை தேவகி இல்லை என எண்ணிக்கொண்டனர் இருவரும்...
இருந்திருந்தால் 'ஏன் எனக்கு என்ன கெட்ட குணமா...???' என தன் கணவரிடம் சண்டைக்கு சென்றிப்பார்...'ஆனாலும் இந்த பாட்டிக்கு கொழுப்பு தான்..' என எண்ணிக்கொண்டாள் மனதில் தான்...


அங்கையற்கண்ணியும் தேவகியை மனதில் வைத்து தான் அப்படி கூறினார்...தேவகியின் பேச்சு சில சமயம் மரியாதை தன்மை அற்றதாய் இருப்பதாக தோன்றும் அவருக்கு...


நேருக்கு நேர் மோதும் பழக்கமெல்லாம் எப்போதும் இருவருக்கும் இருந்ததில்லை.. மட்போர் தான் எப்போதுமே ..அதுவும் அன்பு எனும் அம்பு வழியாகவே...


நலம் விசாரிப்புக்கு பின்,இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்...பச்சை மற்றும் லேசான மயில் கழுத்து நிற கட்டங்கள் நிறைந்த கண்டாங்கி சீலை கட்டியிருந்தார்...


வெள்ளை கற்கள் பதித்த பெரிய தோடு அவரின் காதை நிறைத்திருந்தது... கழுத்தில் சற்று கனமான தாலி சங்கிலி...கையில் கண்ணாடி வளையல்களின் தொகுப்பு... நெற்றியில் வட்டமான சிவப்பு பொட்டு...


கொண்டு வந்திருந்த பைககளை எல்லாம் வேலையாள் ஒருவர் எடுத்து வந்து வைத்துவிட்டு சென்றார்...


இருவரையும் அமரவைத்துவிட்டு , 'செல்லா ....மோர் கொண்டு வா...' என உள் நோக்கி குரல் கொடுக்க...


சில நிமிடங்கள் கழித்து பதினெட்டு வயதுமிக்க ஒரு பெண் இரண்டு குவலைகளில் கொண்டு வந்து கொடுக்க, அதனை வாங்கி மகனுக்கும் பேத்திக்கும் கொடுத்தார்...


'இந்த பொண்ணு யாரும்மா,புதுசா இருக்கு...யேன் சிவம்மா வேலைக்கு வரது இல்லையா....????!!' என்றார் அன்பு..


'நம்ம செல்லைய்யனோட புள்ள... சிவம்மாக்கு உடம்புக்கு சுகமில்ல... முன்ன மாதிரி எல்லாம் அவளால வேலை பார்க்க முடியிறது இல்ல ப்பா...சரின்னு அவளை நிறுத்திட்டு ,இந்த புள்ளையை வேலைக்கு வரச்சொல்லிட்டேன்...' என்றார் அங்கிருந்த மற்றொரு நாற்காலியில் அமர்ந்தபடி...


'பார்க்க படிக்கிற புள்ள மாதிரி இருக்கு, இதை ஏம்மா வேலைக்கு வச்சிருக்க...' என்றார் சென்ற பெண்ணை பார்த்தபடி...சுசிலாவை விட ஐந்து அல்லது ஆறு வயது குறைவாய் இருக்கலாம் என்பது அவரின் கணிப்பு....


'இப்போ தான் பன்னெண்டாவது முடிச்சு இருக்கா...மேல படிக்க வைக்கிறேன்னு நம்ம அய்யா சொல்லி இருக்காங்க, காலேஜ் போற வரை நான் வேலைக்கு வரேன்னு ,அவளாத்தான் வரப்பா....நல்ல பிள்ளை... கொஞ்ச நாளைக்குத்தான் , அப்புறம் வேற ஆளை வச்சிப்போம்....' என்றார் அமைதியாய்...


சரி என்பதாய் தலையசைத்த அன்புவின் கண்கள் வீட்டை சுற்றி அலசியது...


மகனின் பார்வையை கண்டு கொண்டவர் ' ஐயா தென்னந்தோப்புக்கு போய் இருக்காக, இப்போ வந்திடுவாக...
அதுக்குள்ள ரெண்டு பேரும் சாப்ட்ருங்க...' என்றப்படி இருவரையும் சாப்பிட அழைத்து சென்றார்...செல்லா அனைத்தையும் சாப்பாட்டு மேசையின் மேல் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள்...கைகள் வேலையை செய்தாலும் ,கண்கள் எல்லாம் சுசீலாவின் மீதே படிந்து மீண்டுக்கொண்டு இருந்தது....


சாப்பிடும் வேளையிலே நாச்சியப்பன் தோப்பில் இருந்து திரும்பி வந்திட , 'அம்மாடி சுசி....' என்றப்படி அவளின் அருகே வந்தார்...


'தாத்தா....' என்றப்படி எழுந்து சென்று அவரின் வலது தோளின் மீது சாய்ந்துகொள்ள...


'வாங்க ஐயா...' என்ற மகனின் அழைப்பை ஆமோதிப்பதாய் தலையசைத்தவர்...


'நல்லா இருக்கியா டா...' என்றார் பாசமாய் பேத்தியின் தலையை வருடியபடி...


'நல்லா இருக்கேன் தாத்தா....நீங்க எப்படி இருக்கீங்க....'


'நானும் நல்லா இருக்கேன் டா....சரி வா வந்து சாப்பிடு...' என்று அவளை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்தவர் தானும் அருகே அமர்ந்துக்கொண்டார்...


'நீங்களும் சாப்டுறீங்களா....' என்ற மனைவியின் கேள்விக்கு...


'பேத்தியை கவனி...பிறகு நான் சாப்பிட்டுக்குறேன்....குடிக்க கொஞ்சம் தண்ணியை மட்டும் இப்போதைக்கு குடு....'


'நீங்களும் எங்களோடவே சேர்ந்து சாப்பிடுங்க தாத்தா....' என்ற பேத்தியின் அழைப்புக்கு...


'இப்போ தான் தோட்டத்துல இளநீர் குடிச்சிட்டு வந்தேன்டா...பசியில்ல, நான் பிறகு சாப்புட்டுக்கிறேன்...நீ நல்லா சாப்பிடு..' என்றவர் இப்போது தான் மகனின் புறம் திரும்பினார்...


'மருமக சௌக்கியமா...???!!'


'ஹ்ம்ம் சௌக்கியம் தானுங்க ஐயா...' என்றவர் உண்டு முடித்து கை கழுவ சென்று விட்டார்...


சுசிலா அசதியாய் இருக்கிறதென்று உறங்க சென்றுவிட, தந்தையும் மகனும் வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்திருந்தனர்...


'வேலையெல்லாம் பரவாயில்லையா...???,இப்போ எதுவும் பிரச்சனை இல்லையே...??...'


'இல்லீங்க ஐயா...எந்த பிரச்சனைக்கும் இப்போ அவங்க வரது இல்ல...'


'அப்படின்னு அசால்ட்டா மட்டும் இருந்திடக்கூடாது ...கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க...' என்க...


சரி என்பதாய் தலையசைத்தவர் மனதினில் பல வித யோசனைகள் மற்றும் குழப்பங்கள்....


மனம் கரையும்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement