P7 எனக்கென வந்த தேவதையே

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1

இவனைப் பார்த்ததும் யாதவி சுமதியிடம், “எனக்கு சந்தோஷ் ஸ்கூல்ல ஒரு வேலை இருக்கு போயிட்டு வந்திடுறேன்.” என்று கிளம்ப... லிங்காவுக்கு பயங்கிற கோபம் வந்துவிட்டது.

யாதவி வெளியில் வர... அவள் அருகில் சென்றவன், “இப்போ எதுக்கு என்னைப் பார்த்திட்டு ஓடுறீங்க? சந்தோஷை வெளியில விளையாட கூட விடாம வச்சிக்கிற அளவுக்கு நான் என்ன பண்ணேன்? உங்களுக்கு நான் எதுவும் பிரச்சனை கொடுப்பேன்னு பயப்படுறீங்களா?”

“உங்ககிட்ட இருந்து இதை நான் நிச்சயமா எதிர்பார்கலை யாதவி.” என்றவன் திரும்பி செல்ல...

அவன் தவறாக புரிந்து கொண்டு சென்றதும், அதை விளக்கி விடும் வேகத்தில், “லிங்கா... லிங்கா ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க.” என யாதவி சொல்ல... அவன் நின்று, சொல்லுங்க என்பது போல பார்க்க.

“சத்தியமா நான் உங்களை தப்பா நினைக்கலை. நினைக்கவும் மாட்டேன்.” என்றாள்.

“எப்படி அப்படி உறுதியா சொல்றீங்க?”

“நான் வெளியவும் சரி, வேலைக்கு போற இடத்திலேயும் சரி, நிறைய பேரை பார்த்திருக்கேன். ரொம்ப நாகரிகமா இருக்கவங்க கூட... நான் புருஷனோட இல்லைன்னு தெரிஞ்சதும், வேற மாதிரி பார்க்கவும், பேசவும் செய்வாங்க. இவங்களை எளிதா வலைக்கலாம்னு நினைப்பாங்க போல...”

**********************************************************************************

சிறிது நேரம் அமைதியாக இருந்த லிங்கா, “ஒருவேளை நாம அவங்க கண்ணுக்கு பொருத்தமான ஜோடியா தெரியிறோமோ... சில நேரம் நாம மத்தவங்க சொல்றதையும் எடுத்துக்கலாம்.” என புன்னகைக்க... இவன் என்ன சொல்கிறான் என்பது போல யாதவி பார்க்க...

“யாதவி நான் ஒன்னு சொல்லட்டுமா.... நான் டீன் ஏஜ் பையன் இல்லை... நீங்க விவரம் தெரியாத பொண்ணு இல்லை... நாம எதுனாலும் மனசு விட்டு பேசலாம்.”

“கல்யணம் பண்ணிகிட்டோம் அதுக்காக வாழனும் அப்படின்னு, இல்லாம... நமக்கு ஒத்துவராத திருமணத்துல இருந்து நாம வெளிய வந்துட்டோம்.”

“இன்னும் ரொம்ப நாள் இருக்கு வாழ்க்கை. எதுக்கு முடிஞ்சு போனதையே நினைக்கணும். புதுசா ஆரம்பிக்கலாமே...”

“நீங்க எதுவும் உங்களுக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம், அந்த மாதிரி யோசிக்கிறீங்களா?”

**************************************************************************************

அப்போது மற்ற அலுவலர்கள் வர தொடங்கினர். லிங்காவை பார்த்து சதீஸ், “என்ன வக்கீல் சார் இன்னைக்கு என்ன வேலையா வந்தீங்க?” என கிண்டலாக கேட்க... மற்றவர்களின் பார்வையும் அதையே உணர்த்த...

“நான் யாதவியை பார்த்து பேசிட்டு போக வந்தேன். இப்போ வந்தா தான் அவங்க ப்ரீயா இருப்பாங்க.” என்றதும், எல்லோரின் முகமும் மாற... எப்படி சொல்றான் பாரு என்று நினைத்தாலும், யாதவி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“வரேன் யாதவி.” என்றவன் அங்கிருந்து கிளம்பியும் விட்டான்.

அதன் பிறகு வந்த நாட்கள், அவர்களால் வெளியே சந்தித்து பேச முடியவில்லை என்றாலும், லிங்கா இரவு கைபேசியில் அழைப்பான். அப்போது இருவரும் நிறையவே பேசினார்கள். யாதவி அவள் மனதில் இருந்த கேள்விகளை, சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டாள். ஆனாலும் அவள் முழுசாக சம்மதம் என்று வாயை திறந்து சொல்லவில்லை.

**************************************************************************************

“ஏற்கனவே கல்யாணம் ஆகி இருந்தாலும் பரவாயில்லை... ஆனா குழந்தையும் இருக்கே... இன்னொருத்தன் குழந்தைக்கு நீ அப்பாவா இருப்பியா? எனக்கு அதெல்லாம் ஏத்துக்க முடியாது.” என்றார் சிவகாமி கோபமாக.

“எனக்கு அப்பா ஆகவே தகுதி இல்லைன்னு சிலர் சொல்லிட்டு திரியுறாங்க. அது தெரியுமா உங்களுக்கு?”

“உங்களுக்கு ஏத்துக்க முடியாதுன்னா எத்துக்காதீங்க. ஆனா நான் யாதவியை தான் கல்யாணம் பண்ணுவேன்.”

“நான் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்கலை. தகவல் தான் சொன்னேன்.” என லிங்கா பிடிவாதமாக இருக்க,

“யாரோ எதோ பேசுறாங்க. அதுக்காக நீ இப்படி கல்யாணம் பண்ணனுமா?”

“அப்படி உன் இஷ்ட்டத்துக்கு பண்ணிக்கிறதுன்னா பண்ணிக்கோ. ஆனா நான் எதுக்கும் வர மாட்டேன்.” என்று சிவகாமியும் தன் கருத்தில் பிடிவாதமாக இருந்தார்.

பரத்தும் எடுத்து சொல்ல, சிவகாமி புரிந்து கொள்ளவே தயாராக இல்லை.

 
Joher

Well-Known Member
#2
:love::love::love:

மாப்பிள்ளை ரெடி
மாமியார் நாட் ரெடியா...

So ஆபிஸ்ல பேசினது ஜனனி சொன்னது எல்லாம் யாதவிக்கு தெரிஞ்சுடுச்சு....
அதான் தலைமறைவா....

யாதவியை தான் பார்க்க வந்தேன் னு போட்டு உடைச்சுட்டான்....
இனி என்ன பேச....

லிங்கா மேல நல்ல அபிப்ராயம் இருக்கு யாதவிக்கு....
லிங்கா அம்மா முட்டுக்கட்டை போடுறாங்களே....

சந்தோஷ் க்கு அவ்ளோ வரவேற்பு ஸ்னாக்ஸ் எல்லாம் கொடுப்பாங்க....
பையன் கட்டிக்கிறேன்னு சொல்றப்போ சந்தோஷ் தான் தடையா இருக்கிறான்....
வினோத உலகம்....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#6
:love::love::love:

லிங்கா செம ஃபாஸ்ட் தான்..... ஆனா சிவகாமி?? :rolleyes::rolleyes: மாமியார்னாலே இப்படி தான் இருக்கணுமா?? இவங்க பொண்ணுக்கு இப்படி நடந்து இருந்தா.... வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்க நினைக்க மாட்டாங்களா??
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement