P18 Uppuk Kattru

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“நீ என்ன முறைய மாத்துற... பவித்ரா உனக்கு அண்ணி. அதோட என்னோட செல்ல பொண்டாட்டி வேற...” என மாதவன் வேண்டுமென்றே சொல்ல... பவி முறைக்க... ரோஜாவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
பவி கொஞ்சம் எழுதுக்கிறியா? என, எதற்கு என்று தெரியாமலே பவித்ரா எழுந்து நிற்க, கட்டிலில் சென்று உட்கார்ந்த மாதவன், “கார்ல வந்தது டயர்டா இருக்கு. நான் கொஞ்சம் படுத்துகிறேன்.” என அவன் படுத்துக் கொள்ள...
இவன் என்ன இப்படி நீட்டி நிமிர்ந்து படுத்துட்டான் என நினைத்த பவித்ரா நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“ரோஜா உனக்கு நல்லா சமைக்க தெரியுமா?” மாதவன் கேட்க, ரோஜா அருளைப் பார்க்க...
“நீ என்ன உன்னை கேள்வி கேட்டா அவரை பார்க்கிற... அப்ப அவன்தான் சமைக்கிறாறா...” என்றதற்கு..
“இல்லை... நான்தான்.” என ரோஜா பதட்டமாக...
“சொல்லாம வந்ததுனாலதான் நான் மதியம் இங்க சாப்பிடலை... நைட் இங்க சாப்பிட்டு தான் கிளம்புவேன். எனக்கு இந்த மீன், நண்டு, இரால் எல்லாம் ரொம்ப பிடிக்கும். செஞ்சு தரியா?” என கேட்க,
இது வேறையா என்பது போல பவித்ரா பார்க்க... மாதவன் அவளை கண்டுகொண்டால் தானே...
நம்ம வீட்ல எல்லாம் இவங்க சாப்பிட மாட்டாங்க என அவள் நினைத்தற்கு மாறாக மாதவன் இப்படி கேட்கவும், ரோஜாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை.
அவள் சார்பாக அருள் தான். “அதெல்லாம் நல்லா சமைப்பா.... ஆனா ராத்திரியில் நீங்க கார் எடுத்திட்டு போக வேண்டாம். பக்கத்து ரெசார்ட்ல ரூம் போட்டு தூங்கிட்டு காலையில போங்க.” என்றான்.

****************************************************************************************************************

“இந்த இடம் செம்மையா இருக்கு இல்ல....”
“ம்ம்... ஆமாம் நீங்க என்ன ஊருக்கு கிளம்பாம இங்க உட்கார்ந்து உங்க தங்கச்சிகிட்ட பாச பயிர் வளர்த்திட்டு இருக்கீங்களா...”
“ஹே.... வந்திட்டு உடனே கிளம்ப நாம யாரோ இல்லை. அதோட உங்க அண்ணனும் வருத்தபடுவார். நமக்கு வசதி இல்லை... அதனால தான் இருக்கலைன்னு நினைப்பாங்க.”
“நாம அவங்க வீட்ல சாப்பிட மாட்டோம்ன்னு நினைச்சு தான் உங்க அண்ணன் நம்மை வெளிய சாப்பிட வச்சு கூடிட்டு வந்தார்.”
“ரோஜா டீ போடுறதுக்குள்ள பத்து தடவை கையையும், கப்பையும் கழுவி இருப்பாள்..”
“நமக்குள்ள இருக்கிற ஏற்ற தாழ்வுல, நாம இப்ப அவங்களை விட்டு விலகி நின்னா... அவங்க மொத்தமா நம்மகிட்ட இருந்து விலகிடுவாங்க.”
**************************************************************************************************


பவித்ரா கிளம்பும் போது ஒரே அழுகை. “அண்ணா எங்களோட வந்திடு.” என அவள் அழுதது. அருளுக்கு மட்டும் அல்ல ரோஜாவுக்கும் கஷ்ட்டமாக இருந்தது.
அருளும் மாதவனும் அவளை நிறைய சமாதானம் செய்தனர். “நீ வெளிநாடு போகும் போது, அண்ணன் கண்டிப்பா உன்னை வழியனுப்ப வருவேன்.” என சொல்லி அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் சென்ற பிறகு வீட்டிற்கு வந்த தம்பதிகளுக்கு வீடே வெறுமையாக தோன்றியது. அருள் எதோ யோசனையில் இருக்க, ரோஜாவை அவன் கவனிக்கவே இல்லை.
வெகு நேரம் சென்று, “நான் மட்டும் இல்லைனா... நீங்க இந்நேரம் உங்க வீடல் உங்க சொந்தங்களோட சந்தோஷமா, நிம்மதியா இருந்து இருப்பீங்க இல்ல...”
“இப்ப எல்லாம் என்னால தான். உங்க தங்கச்சி வேற அழுதுகிட்டே போறாங்க.”
“என்னால உங்களுக்கு எப்பவும் கஷ்ட்டம் தான்.” என்றாள் ரோஜா.
 

Joher

Well-Known Member
:love::love::love:

மீன் நண்டு இறால் மட்டும் போதுமா???
கணவாய் கருவாடு எல்லாம் வேண்டாமா???

இந்த பவி சும்மாவே இருக்க மாட்ட போலவே.......
ஏற்கெனவே நொந்து போன ரோஜாவை இன்னும் கந்தலாக்குறா :cry::cry::cry:
மாதவன் சொன்னாலும் புரியமாட்டேங்குது........ இதுல கல்யாணம் வேற ஆச்சு.....
அமெரிக்காவில் இருந்து வந்த அவனுக்கு மனுஷ மனம் புரியுது.......
இவை US க்கு போனால் அண்ணனுக்கும் யாருமில்லை இங்கேன்னு புரியலையே.....

இப்போ அருளும் அவன் கோபத்தை ரோஜா மேல காட்டுவானா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா பவித்ரா
தாத்தா பாட்டியோடு இருந்தும் நீ அனாதையாத்தான் வளர்ந்திருக்கே
நீயோ புருஷனோடு வெளிநாட்டுக்கு போகப் போறாய்
அவனுக்கு பிடிச்ச பெண்ணை அருள் கல்யாணம் செஞ்சால் உனக்கு எங்கே வலிக்குது?

மாதவன் அருமையான மனிதன்
மனைவிக்கு இருக்கும் ஒரே உறவை வலுப்படுத்த நினைக்கிறான்
அது இந்த கூமுட்டை பவிக்கு புரியுதா?
அண்ணனை மட்டும் உன்னோடு வந்திடுன்னு கூப்பிட்டு அருள் குடும்பத்திலே குழப்பம் பண்ணப் பார்க்குறியே, பவி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top