P13 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
சனிக்கிழமை காலை உணவை எட்டு மணிக்கே முடித்துக் கொண்டு வெண்ணிலாவின் பிறந்த வீட்டிற்கு கிளம்பினர். பொளாச்சியில் இருந்து பஸ்சில் தான் சென்றனர். அங்கே கரூரில் இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்கு சென்று சேரும்போது மதியம் ஆகி இருந்தது.

மகளைப் பார்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் இருக்க... “என்ன இப்படி கருத்து மெலிஞ்சு போய் வந்திருக்க.” என்ற கற்பகத்தின் பேச்சை யாரும் கண்டு கொள்ளவில்லை.

மகேஸ்வரி மகளைத்தான் கண்ணில் நிரப்பிக் கொண்டு இருந்தார்.

“அவங்களுக்கு பசிக்கும் சாப்பாடு எடுத்து வை.” என ராஜகோபால் சொன்னதும், மகேஸ்வரி உணவை எடுத்து வைக்க செல்ல.. உடன் வெண்ணிலாவும் சென்றாள்.

ஜெய்யுடன் யுவராஜ் பேசிக் கொண்டு இருந்தான். மகேஸ்வரி மதிய உணவை தடபுடலாக செய்திருந்தார்.

“எல்லாம் வாங்க சாப்பிடலாம்.” என அவர் அழைக்க, எல்லோரும் எழுந்துகொள்ள, “நீங்க சாப்பிடீங்களா பாட்டி?” என ஜெய் கேட்க,

“இல்லை...” என்றார் கற்பகம்.

“நீங்களும் எங்களோட சாப்பிட வாங்க.” என ஜெய் அழைக்க,

“ஆமாம் நீங்களும் வாங்க மா.” என்றார் ராஜகோபால்.

பாட்டியோட நீங்க எப்ப சமரசம் ஆனீங்க என்பது போல வெண்ணிலா கிண்டலாக பார்க்க, ஜெய் அவளைப் பார்த்து கண்சிமிட்டி விட்டு கைகழுவ சென்றான்.

***********************************************************************************************

வெண்ணிலா வாய் ஓயாமல் அவள் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருக்க, அப்போது வந்த ராஜ், “படத்துக்கு டிக்கெட் புக் பண்றேன். போயிட்டு வர்றீங்களா... உனக்கு பிடிச்ச விஜய் படம் என்றதும்,

“அது நாங்க அடுத்த வாரம் எல்லோரும் குடும்பத்தோட போறதா இருக்கோம். அகல்யா ராதிகாவுக்கும் விஜய் பிடிக்கும்.” என வெண்ணிலா சொல்ல...

“குடும்ப இஸ்த்திரியாவே மாறிட்ட போல....” ராஜ் தங்கையை கிண்டல் செய்ய,

“டேய் அவளே ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கா, ரெண்டு நாள் நம்மோட இருந்திட்டு போகட்டும்.” என மகேஸ்வரி சொல்ல, வெண்ணிலாவும் ஆமோதிக்க, ராஜ் சரியென்று ஹாலில் சென்று டிவி பார்த்தான்.

***************************************************************************************************

மதியம் அவர்கள் சின்ன அத்தையின் வீட்டில் விருந்துக்கு சென்றனர். கொஞ்சம் தூரம் தான். வெண்ணிலா வீட்டு காரில் டிரைவர் போட்டு இருவரையும் அனுப்பி வைத்தனர்.

மதிய உணவு நேரத்திற்கு தான் சென்றனர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தவர்கள், சாப்பிட அழைக்கவும் உணவ உண்ண சென்றனர்.

விசேஷமான சமையல் தான். ஆனால் வெண்ணிலாவுக்கு வித்யாசம் நன்றாகவே தெரிந்தது. அவர்கள் வீட்டில் சாதாரணமாகவே ஞாயிற்றுக் கிழமை என்றாலே தடபுடலாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது அத்தனை வகைகள் இல்லை. அதோடு முன்பே செய்து வைத்து விட்டது போல ஆறிப் போய் இருந்தது.

விடுமுறைக்கு இங்கே கரண் வரும் போதெல்லாம் அத்தை எப்படிக் கவனிப்பார் என வெண்ணிலாவுக்கு தெரியும்.

ஜெய் இவர்கள் வீட்டிற்கு வருவது இப்போது தான் முதல்முறை. அவனுக்கு எங்கே இவர்களைப் பற்றி தெரியும்.

அவன் நல்ல நாளிலேயே ஒழுங்காக உண்ண மாட்டான். இப்போது இவர்கள் வீட்டில் கேட்கவே வேண்டாம்.

இலையில் என்னென்ன இருக்கிறது என்றாவது பார்த்தானா தெரியவில்லை. டிவி பார்த்துக் கொண்டே உண்டவன், இலையில் பரிமாறியது மட்டும் உண்டு விட்டு எழுந்து விட்டான்.

அதே போல அவர்கள் கிளம்பும் சமயம், இருவருக்கும் உடைகள் வைத்து தாம்பூலம் கொடுக்க, குறைவான விலையிலேயே வாங்கி இருப்பது நன்றாக தெரிந்தது.

வெண்ணிலாவுக்கு சிரிக்கத்தான் தோன்றியது. இவர்கள் மட்டமாக நினைத்தால்... நாம் மட்டமாக ஆகி விடுவோமா என்ன? என நினைத்துக் கொண்டாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
அல்ப்பைகள்
ஓடிப் போனவனின் சித்திக்காரி வீட்டுக்கு நீ எதுக்கு போனே, வெண்ணிலா?
ஓடினவனை விட்டுட்டு அண்ணன் மகள்ன்னு கூட பார்க்காமல் இவளை மட்டம் தட்டி பேசினவள்தானே இந்த சின்ன சொத்தை
அப்புறம் அவளுடைய புத்தி இப்படித்தான் மட்டமாக இருக்கும்
இதெல்லாம் நீங்க எப்போ தெரிஞ்சுக்குவீங்க கோப்பால் ராஆஆஆஆஜகோப்பால்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top