Oru Vaanavil Polae 13

Advertisement

Sasireka

Member
புத்தக வாசிப்பு என்பது என்னுடைய பள்ளிப்பருவத்தில் ஆரம்பமானது. அந்த நாட்களில் நண்பர்களோடு அரட்டை, பொதிகை டிவி & தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது தவிர, பொழுபோக்கு என்றால் எனக்கு புத்தக வாசிப்பு மட்டுமே ! சிறுவர்மலரில் ஆரம்பித்து வாரமலர், குடும்பமலர், ரீடர்ஸ் டைஜிஸ்ட், துக்லக், புகழ்பெற்றோரின் சுய சரிதை (அக்னி சிறகுகள், இந்தியா 2020 , கிரண் பேடி சுய சரிதை etc .,), என்று தொடர்ந்து, கல்கி மற்றும் சாண்டில்யனின் படைப்புகளில் என் இளமைக்காலத்தையும் காதல் வாழ்க்கையையும் தொலைத்து இருந்த நேரத்தில், என் வாழ்க்கையும் அடுத்த கட்டத்திற்கு போனது. வாழ்க்கையில் எத்தனையோ இடர்களையும் இன்னல்களையும் கடந்தே நல்லதொரு படிப்பையும் வேலையையும் பெரு முயற்சி செய்து அடைந்திருந்த எனக்கு என்னை சூழ்ந்திருந்த உறவுகளை சமாளிப்பதும், திருமண வாழ்க்கையும் அதன் பின் விளைவுகளை எதிர் கொள்வதும் மிகப் பெரிய சவாலாகவே இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் என் மூளையை மழுங்கச்செய்யும் , என் உணர்வுகளை மரணிக்கச்செய்யும் , என் நிம்மதியைக் கெடுக்கும் , என் உயிரை குடிக்கும் காலனாகவே என் பிரச்சினைகள் தலை எடுத்த பொழுது, எப்பொழுதும் போல புத்தக வாசிப்பு கை கொடுத்தது ! உயிர் கொடுத்தது, மறுஜென்மம் கொடுத்தது, உறவுகளை உயிர்ப்பித்து கொடுத்தது , மொத்தத்தில் என்னை எனக்கே திரும்ப கொடுத்தது என்றால் மிகை ஆகாது !!
ஆம் , ரமணிச்சந்திரனில் ஆரம்பித்து இன்று மல்லிகா மணிவண்ணன் மற்றும் இதர படைப்புகளில் என் வாழ்க்கையைப் புதுப்பித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேரேஜ் கவுன்சிலிங்கை இப்படியும் பண்ண முடியும் என்று இவர்களின் கதைகளை படித்த பின்பே அறிந்து கொண்டேன். பிறகென்ன, இந்த நாவல்களுக்கு அடிமை ஆனேன். நிறைய படித்தேன், படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கப் படிக்க தெவிட்டவில்லை. இன்னும் இன்னும் என்று என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்த கதைகளைப் படிக்கிற பொழுது, அந்த உணர்வுகளில் என்னையே தொலைத்து , அதன் உண்மை கூற்றை உணர்ந்து , அதை என் வாழ்விலும் ஒப்பிட்டு பார்த்து, வேண்டியவற்றை கடைபிடித்து, வேண்டாததை களைந்து என் வாழ்வை மெருகேற்றி இருக்கிறது ! மிக்க நன்றி !!
 
Anuradha Ravisankarram

Well-Known Member

இங்கு படிக்கும்(எழுதும் ) பலரின் எண்ணங்களை அப்படி யே காட்டி இருக்கீங்க dear Sasireka..
Marriage Counseling ங்கற
Phrase very apt....
 
Geetha sen

Well-Known Member
Lovely story super ma
இந்த லாக்டவுன் காலகட்டத்தில் நம்மை சந்தோசமாக வைத்துக்கொள்ள திரும்ப படித்து புத்துணர்வுடன் இருக்க உங்களின் எழுத்து எங்களை மகிழ்க்க உதவுகிறது:love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top