oil free lemon pickle

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hiiii hiii frndsss

யாருக்கெல்லாம் ஊறுகாய் பிடிக்கும்...??? பிடிக்காதவங்கன்னு யாரும் இருக்கீங்களா??? ஆனா பிடிச்சிருந்தாலும் சாப்பிட முடியாம இருக்கவங்க நிறைய பேர் இருப்பாங்க..

so here im going to share oil free lemon pickle

ஊறுகாய் கெட்டு போகாம இருக்க நிறைய எண்ணெய் உப்பு காரம் எல்லாம் போட்டு இருப்போம்.. பட் நான் இங்க சொல்ல போறது எண்ணெய் துளி கூட விடாம பண்ற எலுமிச்சை ஊறுகாய்..

இது எங்க வீட்டுல கிட்டத்தட்ட 40 வருஷமா செஞ்சிட்டு வர ரெசிபி..


தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 30

மிளகாய் வத்தல் – 100 gm (காரமாக வேண்டுமென்றால் 150gm)

உப்பு – தேவைக்கு ஏற்ப

வெந்தயம் – 50 gm

பெருங்காயம் – 50 gm


பச்சை மிளகாய் - 100gm


செய்முறை:

காலையிலேயே அடி கனமான பாத்திரத்தில் எலும்பிச்சை பழத்தை 4 துண்டுகளாக வெட்டி போட்டு கொள்ளவும்.. அதனுடன் உப்பு சேர்த்து நன்றாக ஊற வைக்க வேண்டும்.. அவ்வபோது அந்த பாத்திரத்தை குலுக்கி விடவும்..

மிளகாய் வத்தலை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவேண்டும்..

3 மணிநேரம் கழித்து.


அடுப்பில் அந்த எலுமிச்சை உப்பு ஊற வைத்த பாத்திரத்தை வைத்து அரைத்த மிளகாய் கலவையை போட்டு நன்கு கொதிக்க விடவேண்டும்..

இன்னொரு தனி கடாயில் வெந்தயம் மற்றும் பெருங்காயத்தை வறுத்து பொடி செய்துக்கொள்ளவும்..


பச்சை மிளகாயை கழுவிவிட்டு, ஈரம் போக நன்கு ஒரு துணியில் துடைத்து காம்பு கிள்ளாமல் அதன் நுனி பகுதியில் மட்டும் லேசாய் கீறிவிட்டு வைத்துகொள்ள வேண்டும்..

எலுமிச்சை வெந்து மிளகாய் வற்றலின் பச்சை வாசம் சென்றதும் பச்சை மிளகாயை அதனுடன் சேர்த்து ஒரு கொதிவிட்டு அடுப்பை அனைத்து பாத்திரத்தை இறக்கும் தருவாயில் பொடித்து வைத்துள்ள வெந்தய பெருங்காய பொடியை போட்டு மூடி வைக்கவும்..

ஆறியவுடன் தனி தனியே டப்பாவில் போட்டு எடுத்து வைத்து கொள்ளுங்கள்..
4 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து வைக்கவும்.. தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவேண்டும்..

 

Joher

Well-Known Member
ஒரு காலத்தில் சரயு பேரை கேட்டால் IIT சரயு hostel நியாபகம் வரும்......

இப்போது அதே சரயு பேரை படித்தால் சித்ரங்கதா சரவெடி தான் நியாபகம் வருது.......:p
 

fathima.ar

Well-Known Member
ஒரு காலத்தில் சரயு பேரை கேட்டால் IIT சரயு hostel நியாபகம் வரும்......

இப்போது அதே சரயு பேரை படித்தால் சித்ரங்கதா சரவெடி தான் நியாபகம் வருது.......:p

உப்பில்லாத உப்புமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top