Nesam marava nenjam by Priya Prakash

maheswariravi

Well-Known Member
#1
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம் - 1
"செல்லாத்தா செல்ல மாரியத்தா- எங்கள்
சிந்தையில் வந்து அருள் நாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா- இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா"அதிகாலை 4 மணியளவில் ஒலித்த பாட்டு சத்தத்தை கேட்டு கண்விழித்தாள் கயல்விழி. அவள் இருபுறமும் அவளின் இருதங்கைகளும் படுத்து அவள் மேல் காலை போட்டு இருந்ததால் அவளால் எழ முடியவில்லை.


கயல்விழி மாணிக்கம் - சகுந்தலா தம்பதியரின் மூன்றாவது மகள்.
இந்த தம்பதிகளுக்கு ஐந்து பெண் பிள்ளைகள் கடைசியாக ஒரு ஆண் பிள்ளை.
மூத்தவள் தாமரை அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அடுத்தவள் சுதா தற்பொழுது வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நம் கதையின் நாயகி கயல்விழி வயது 19 வயது பெயருக்கேற்ப அழகான கண்களை உடையவள் கதாநாயகி Sri Divya போல முகச்சாயலும் சிவந்த நிறமும் தன் முன்னால் கிடந்த நீண்ட பின்னலை எடுத்து பின்னால் போட்டு கொண்டு தன் தங்கைகள.

"ஏய் எழுந்திருங்கடி நேரமாச்சு" என்றாள்.
'ம்கூம் இருவரும் அசையவில்லை'

"எனக்கென்ன அப்பத்தா திட்டினால் நீங்கதான் வாங்குவிங்க" என்று கூறி குளிக்கச்சென்றாள்.

இன்றோடு திருவிழாவிற்கு காப்புகட்டி எட்டு நாட்கள் ஆயிற்று ஊரெங்கும் ஜெகஜோதியாய் காட்சியளிக்கிறது. அதிகாலையில் எழுந்து பெண்கள் அனைவரும் வீட்டு வாசலில் பெரிய கலர்கோலம் போட்டு குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு செல்வார்கள்.

கயல்விழி குளித்து வருவதற்குள் அப்பத்தா காந்திமதி வந்து "ஏய் எழுந்திருங்கடி மணி 5 ஆச்சு".


திடுக்கிட்டு எழுந்த மல்லிகாவும், அருணாவும் தன் அக்காவை தேடி காணவில்லை என்றதும் அப்பத்தாவை வாயிற்குள் முணுமுணுத்தப்படி குளிக்கச்சென்றார்கள்.
கயல்விழி குளித்தவுடன் சாமி கும்பிட்டு தன் தாயிடம் டீ வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தாள்.

அப்பத்தா" ஏய் கயலு இன்னைக்காச்சும் காலேசு லீவாடி இல்ல இருக்கா....?" என்று கேட்க.

"அப்பத்தா நம்மூர்ல திருவிழான்னா எங்க காலேஜிக்கு என்ன வந்துச்சு அது பக்கத்தூரில் தான இருக்கு....".

"ஆமாடி பெரிய காலேசு தான் நீ படிக்கிறது பெரிய படிப்புதான்..." என்று நீட்டி முழக்கினாள்.

" ஆமாம் பெரிய காலேஜ் தான் நாந்தான் இந்தவீட்ல முதல் முதல்ல காலேஜ் போறேன் "என்று கூறி அப்பத்தாவிடம் வம்பிழுத்து ஓடி விட்டாள்.

அவர்கள் வீட்டிலேயே தாமரை பத்தாம் வகுப்புடன் நின்றுவிட அவளுக்கு உடனேயே திருமணம் முடித்திருந்தார்கள். அடுத்தவள் சுதா பன்னிரண்டாம் வகுப்புவரை எப்படியோ தட்டுத்தடுமாறி தேறி விட்டாள். ஆனால் அவளுக்கு படிப்பை விட தன்னை அலங்காரம் செய்து எப்பொழுதும் தன்னை மட்டுமே சிந்திக்கும் ஒரு சுயநலவாதி. அடுத்தவள் கயல்விழி பக்கத்தூரில் உள்ள கல்லூரியில் BCA இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். அவள் தன் தாயைப் போல சுயநலமில்லா அனைவரிடமும் பாசம் காட்டும் தனிப்பிறவி. தன் தம்பி, தங்கைகள் என்றால் உயிர். அதனாலேயே அவள் அப்பத்தாவிற்கு அந்த பேத்தி மீது தனிப்பிரியம்.

தன் அக்காவின் பிள்ளைகள் வந்தால் அவர்களுடன் சேர்ந்து அடிக்கும் கூத்து வீடே ஜே ஜே என்று இருக்கும்.

கூட்டு குடும்பத்தில் வாக்கப்பட்ட தாமரை தாய்வீட்டிற்கு வந்தால் குழந்தைகளை கயல்விழியுடன் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக தன் தாயுடன் நேரத்தை செலவழிப்பாள். அவள் கணவர் கோவிந்தன் மளிகை கடை வைத்திருப்பதால் அவரால் வந்து இங்கு தங்கமுடியாது. இரவு கடை முடிந்தவுடன் வந்து காலையில் ஓடி விடுவார்.

மல்லிகா உள்ளூரில் இருக்கும் பெண்கள் பள்ளியில் பதினோராம் வகுப்பும், அருணா ஒன்பதாம் வகுப்பும் படிக்கிறார்கள். கடைசி தம்பி அருண் ஆறாம் வகுப்பு படிக்கிறான். தந்தை மாணிக்கம் கடின உழைப்பாளி விவசாயம் தோப்பு, வயல், மாடு, உரம் என்றும் சிந்தனையிலே இருப்பவர். சகுந்தலா இருப்பதால் குடும்ப கவலை இல்லை வெளிவேலைகளை பார்த்து கொண்டு வருமானத்தை மனைவியிடம் கொடுத்து ஒதுங்கி கொள்வார்.அவர்களின் வீடு பழைய அந்த கால பெரிய ஓட்டு வீடு நடுவில் முத்தம் வைத்து முன்புறம் நீண்ட வரவேற்பரை அதை தாண்டி வேற்று ஆட்கள் உள்ளே வரமாட்டார்கள். தனித்தனியாக நான்கு அறைகள், பெரிய சாமி அறை, பெரிய சமையல் கட்டு, சாப்பாட்டு அறை, ஸ்டோர் ரூம் பெரிய பெரிய பாத்திரங்கள் உடைய அழகிய கிராம புற வீடு பெரும்பாலும். வெங்கல பாத்திரங்கள் அதிகம் இருக்கும். நகரங்களை போல பிளாஸ்டிக் சாமான்கள் இருக்காது.
சுற்றிலும் பெரிய தோட்டம் அனைத்து வகை மரங்கள் மா, வாழை, சப்போட்டா, எலுமிச்சை போன்ற மரங்களும், அனைத்து பூச்செடிகளும் இருக்கும்.


"ஏய் கயலு காலேஜ்க்கு நேரமாச்சு வர்ரீயா இல்லையா...?" என்று தோழியின் சத்தம் கேட்டவுடன் சாப்பிட்டதை பாதியில் விட்டு தன் பையை எடுத்துக் கொண்ட ஓடி வந்தாள்.

"ஏய் ஏய் சாப்பிட்டு போடி....." என்ற தாயின் சத்தம் காற்றோடு கலந்தது.

மைஊதா கரைவைத்த பாவாடை சட்டை, வெள்ளை தாவணி போட்டு ஓடி வந்தவளை கண்டு அவள் தோழி அமுதா "என்னடி தாவணியில் வர்ற சுடிதார் என்னாச்சு...?".

"போடி எப்படியும் நாம வர சாயந்தரம் 5 மணி ஆகிரும். வந்து நல்ல டிரஸ் பண்ண நேரமிருக்காது. சாமி வந்துரும் அதனால் டிரஸ் மட்டும் பண்ணியிருக்கேன். வந்ததும் டச்சப் மட்டும் செஞ்சாப் போச்சு.... டிரஸ் எப்படிடி..".

"ஏண்டி இந்த டிரஸ்ஸை உன் அக்கா சுதா பாக்கலையா...? எப்படிடி விட்டா சூப்பரா இருக்கு...? "
" போடி அவளுக்கு அம்மா மூன்றுபட்டு புடவை குடுத்து நைஸ் வச்சுட்டாங்க இருந்தாலும் அவளுக்கு தெரியாமத்தான் ஓடி வந்தேன்... "." இந்த பாவி HOD இப்பத்தான் முக்கியமான Exam வைக்கணுமா இல்லாட்டி இன்னைக்கு லீவ் எடுத்திருக்கலாம்... (சே வடை போச்சே....!!) பரவாயில்லை இன்னைக்காச்சம் ஆடல்பாடல் பாக்க வருவியா மாட்டியா..? ".

" கவலைபடாதடி அப்பத்தா தூங்கியவுடன் நான் ஓடிவந்துறேன் நீ இந்த முக்குல நில்லு எப்படியாச்சும் போய் பாத்துரலாம்... "." பாத்துரலாம் - யாரை பாக்க போறீங்கன்னு....? "


...... தொடரு‌ம்..!!..
 

Latest profile posts

no precap friends, tomorrow direct end episode.
தொடரும் போட்ட கதையை போல இந்த மாலை முடிகிறதே
உந்தன் கண்கள் பார்க்கத்தானே எனது காலை விடிகிறதே
வாரம் ஏழு நாளும் உன்னாலே வானவில்லாய் தெரிகிறதே
உன்னைக்காணா நாட்கள் எல்லாமே கருப்பு வெள்ளை ஆகிறதே
மின்சாரத் தோட்டமே உன்மேனி பூக்கும் பூக்கள் ஒரு அதிர்ச்சியடி
காதல் செய்யலாம் முழுதும் நீ பார்த்த மூர்ச்சை ஆகும்படி
ஒரு கண் ஜாடை செய்தாலே மனம் பஞ்சாகும் தன்னாலே
இடைவிடாத அன்பாலே எனை வெண்மேகம் செய்தாளே
தரையில் போகும் மேகம் இவளா மயங்கி
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த UD போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்......ஏன் லேட்ன்னு, நீங்க அடிக்க வர்றதுக்குள்ள, மீ சுவர் ஏறி குதித்து ஓடிபையிங்க்.......
கல்லுக்குள் ஒரு காதல் அடுத்த அத்தியாயம் பதிவு செஞ்சுட்டேன் ப்ரண்ட்ஸ் படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ போட்டுருங்கப்பா
update given friendssss

Sponsored