Nee Enbathu Yaathenil 18.2

Riy

Writers Team
Tamil Novel Writer
#41
சுந்தரி வார்த்தை விடுவதில் கவனம் மிக மிக முக்கியம். ஏற்கனவே நடந்த தவறை திருத்திட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் இருப்பதும் மடத்தனம் தான்.
 
Sainandhu

Well-Known Member
#42
hi MM,
மனம் கனக்கிறது
ஆனா MM லவ் யூ :love::love:
எப்போதும் நிஜத்திலும் நிழலிலும்
ஆண்கள் சொல்வது போல் கேட்டும் படித்தும் இருக்கிறேன்
இஷ்டமில்லைனா போயிடு உங்க அம்மாவீட்டுக்கு என்று
அதை உங்கள் கைவண்ணத்தில் மாத்தியோசி பார்முலாவை போட்டு
மனசு ஹாங் என்ற சந்தோஷம் ஒரு புறம்
கண்ணனின் மன வலியும் நினைத்து வருத்தமும் வந்தது
இருந்தும் இதே போல் ஆண்கள் சொல்லும் போது
பெண்கள் திகைத்து அழுவார்கள் இல்லை பயந்து போவார்கள்
மனதுக்குள் குமுறுவார்கள்
ஆனால் இவன் அவளை அதற்கு எதிர்க்கிறான் because he not she

பிடித்த மாதிரி மாற பிடித்தம் வரவேண்டும்
அவளை மறந்து அவனை உணர வேண்டும்
இது இயல்பு
சிலர் வாழ்வு நிலைக்கவும் வேறு வழியற்று மாறுவர்
சிலர் சாமர்த்தியம் என்று நினைத்து செய்வர்
சிலர் சொல்லி கொடுத்து செய்வர்
தனியாய் வளர்ந்து தாங்க ஆளில்லாமல்
தத்தளித்து தானே சுயமாய் நின்றவளுக்கு
வீம்பு இருந்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது
இது எல்லாம் ஒரு ஹீரோக்கு லட்சணமாய் காண்பித்து இருந்தால்
மாஸ் ஹீரோ சொல்லப்படும் /படுகிறது
ஹீரோயினுக்கு இருந்தா மாஸ் ஹீரோயின் சொல்லக்கூடாதா
சுந்தரி மாஸ் ஹீரோயின்

செமயா கொண்டு போறீங்க இருவரையும்
நாள் கழித்து வந்து சலிக்காமல் தொடர்கிறது
நுணுக்கமான வாழ்வை அக்குவேறு ஆணிவேரா பிச்சு உதறறீங்க (y)(y)(y)(y)(y)
நான் சொல்ல நினைத்ததை ,எல்லாம்,
நீங்களே சொல்லிட்டீங்க.....(y)(y)


சுந்தரி மாஸ் ஹீரோயின் மட்டுமில்ல.....
மறத் தமிழச்சி .....:love::love:
அவளோட நிலையிலிருந்து அவளை புரிந்து கொள்ளணும்..
 
#44
ஏதோ தப்பு நடந்து பிரிஞ்சிட்டோம் இனியாவது நம் வாழ்க்கையை
நல்லா வாழணும்னு
நினைத்துத்தான் சுந்தரியைத்
தேடி வந்து கண்ணன் அவளோடு
வாழ நினைக்கிறான்

சரின்னு இவளும் ஒத்துப் போய்
அவனுடன் இணக்கமாகப் பேசி
நல்ல முறையில் வாழாமல்
எப்போப் பாரு எகனைக்கு
மொகனையா பேசி புருஷனுடன்
சண்டை போட்டு நான் இப்படித்தான்
இருப்பேன் மாற மாட்டேன்
நீதான் என்னை வேண்டாம்னு
விட்டுட்டுப் போனியேன்னு
பழையதையேப் பேசி டார்ச்சர்
செய்தால் எப்பேர்ப்பட்ட
மகாத்மாவான புருஷனுக்கும்
மனசு விட்டுப் போகும்
அதான் வேற வேலை தேடிக்கலாமா
மெட்ராஸுக்கு போலாமான்னு
துரை நினைக்க ஆரம்பிச்சுட்டான்

கையில் ஒரு குழந்தையையும்
வைச்சுக்கிட்டு இவங்க இரண்டு
பேரும் இப்படி இருந்தால் எப்படி
இவங்க லைப் சரியாகும்?
அந்த பாட்டிக்கு மட்டும்தான்
இவங்க மேல அக்கறை இருக்கு
சுந்தரியும் தன்னைக் கொஞ்சம்
மாத்திக்கணும்
துரையும் அவளுக்கு கொஞ்சம்
நம்பிக்கை வர்ற மாதிரி பேசணும்

சொத்து பணம் காசுன்னு பார்த்து
நண்பனின் அடமெண்ட்டான
கூமுட்டை மகளை கட்டி வைத்து
ஒரே பையனின் வாழ்க்கையை
சந்திரன் வீணடிச்சுட்டாரோன்னு
தோணுது, மல்லிகா டியர்
 
kayalmuthu

Well-Known Member
#48
ஹா ஹா ஹா
இரண்டும் இரண்டு அகப்பை
இரண்டும் மறைகழண்ட அகப்பை
கரெக்ட் பானு மா....இதுங்களை எப்படி தான் மல்லி அக்கா சேர்க்க போரங்களோ ஹா ஹா ஹா
 
Sainandhu

Well-Known Member
#49
“ கண்ணனுக்கும் புரியவில்லை....சுந்தரிக்கும் தெரியவில்லை ...”
தெரியாதவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம்,....
புரியாதவர்களுக்கு.....?? அவர்களாகவே புரிந்து கொண்டால் தான்உண்டு..
என்னாத்தை புரிந்து எதை தெரிய வைக்கப் போகிறானோ..?
அபி ஒருத்தன் தான் இப்ப இருவரையும் இணைக்கும் பாலம்,...
எப்படி இணைக்கப் போகிறதோ....?
 
Advertisement

New Episodes