Naan Ini Nee - Precap 8

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
‘கை பிடிச்சா கை கட் பண்ண போறா??!! அப்போ..’ என்று யோசித்தவனுக்கு அதற்குமேல் யோசிக்க முடியவேயில்லை.

இது காதலா??!! உறுதியாய் திண்ணமாய் சொல்லிட முடியவில்லை. ஆனால் அண்ணன் என்றாலும் கூட விட்டுக்கொடுக்க முடியாது என்றுமட்டும் தோன்றியது.
பின் அந்த பிரஷாந்த்.. அவனை எதற்கு இவள் தேடிக்கொண்டு போகிறாள்?? அதுவும் தெரியாது..


இவள் மனதில் காதல் இருப்பின்??!!

‘நோ நோ...’ அதைப் பற்றிய சிந்தனையே வரவில்லை.. அனைத்திற்கும் மாறாய்.. யார் என்ன சொன்னாலும் செய்தாலும், அனுராகாவே மறுத்தாலும் கூட, அவளைத் தன் வசத்தில் இருந்து விட்டுவிட அவன் தயாராய் இல்லை.

நிச்சயம் நல்லவன் என்ற முகமுடிக்குள் இதனை செய்திடவே முடியாது.??
அட போடா..!! நீ நல்லவனா இருந்து உனக்கு சிலையா வைக்கப் போறாங்க... மனது கேலி செய்ய, முதல் வேலையாய் அனுராகாவின் அலைபேசியை எடுத்து வைத்துக்கொண்டான்.


----------------------------------------------------


“இது அப்படியில்ல..” என்றார் திட்டவட்டமாய்..

“எதுவா இருந்தாலும் தீபன் சரியாய் இருப்பான்..”

“இந்த விசயத்துல எனக்கு அப்படித் தோணலை...”

அம்மாவும் அப்பாவும் மாறி மாறி பேசிக்கொள்ள, மிதுன் இதனைக் கண்டவன் “மாம்..!!! போதும்...” என்றான் கைகளை உயர்த்தி..

“என்னடா நீயும்..!!!” என்று அவர் ஆரம்பிக்க, “அவங்க ட்ரிப் போயிருக்கிறது எனக்கும் தெரியும்.. சிக்னல் இல்லை அவ்வளோதான்.. டோன்ட் வொர்ரி..” என, பெரிய மகன் முகத்தினை உஷா கூர்ந்து பார்த்தார். “உனக்குத் தெரியுமா??!!!” என்று..

“ம்ம்ம்..” என்று தோள்களை உயர்த்தியவன், “நாகா, தர்மா எல்லாம் இப்போ என்னோட தான் இருக்காங்க.. நெக்ஸ்ட் வீக் பொதுக் கூட்டம் இருக்கே அது தீபன் தான் செய்யப் போறான். சோ வந்திடுவான்..” என,

“இல்லடா.. அவன்..” என்று உஷா சொல்லையில், “லீவ் இட் மாம்.. இந்த மேரேஜ் எல்லாம் கொஞ்சம் நிம்மதியா சந்தோசமா பேசணும்.. இப்போ இருக்க ஹர்ரி பர்ரில வேணாமே...” என்றுவிட்டு மிதுன் சென்றுவிட்டான்
-----------------------------------------------


அது என்னவோ கிராமம் போலிருந்தது. ஆனால் ஊர் போல் இல்லை.. கிராமம் போல உருவாக்கப்பட்டு இருப்பது புரிந்தது. இருந்தாலும் அழகாய் இருந்தது. எப்படியும் ஒரு ஐநூறு ஏக்கர் நிலப் பரப்பில் இருக்கும். விஸ்தாரமாய்.. வித்தியாசமாய்.. பார்க்கவே அனுராகாவிற்கு மனதில் ஒரு புது உணர்வு தோன்றியது..

வயல்.. தோட்டம்.. குளம்.. கிணறு.. குடில்கள்.. ஆங்காங்கே பண்ணைகள்.. என்று எல்லாமே அப்படியே ஒரு கிராமத்தில் இருப்பது போலவே இருந்தது.. ஒவ்வொரு இடத்திற்கு தெருவின் பெயர்கள் வைப்போது போல் போர்ட் வேறு மாட்டியிருந்தார்கள்..

என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால் மனதிற்கு அமைதியாய் இருந்தது.
நிறைய வெளிநாட்டினர் தான் இருந்தனர். பின் நம் நாட்டவரும்.. தோட்டம் வயலில் கூட சிலர் இறங்கி வேலைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். சமையல் கூட அப்படியே பாரம்பரிய சமையல் முறைதான்..


இப்படியொரு இடம் அவள் இதுவரைக்கும் கண்டதில்லை.. எத்தனை வெளிநாடுகள் சுற்றினாலும் மனது இங்கே லயிக்கத் தொடங்கியது.. சுற்றி சுற்றிப் பார்த்தாள் என்ன இடம் இது என்று பின் வெகு நேரம் கழித்தே ஒரு போர்ட் கண்ணில் பட்டது ‘ D – வில்லேஜ்...’ என்று..

------------------------------------------

“இது என்னோட இடம்.. முழுக்க முழுக்க என்னோட எண்ணங்களால உருவானது..” என,

“ஓ..!!” என்று உதடு பிதுக்கினாள்.

இதனை அவள் எதிர்பார்க்கவில்லை தான். ஆனாலும் அவனை ஒன்றும் பாராட்டவும் மனது வரவில்லை.

“உனக்கு பிடிச்சிருக்கா??!!!” என்றவனைப் பார்த்தவள் “பிடிச்சிருக்கு சொன்னா எழுதி வச்சிடுவியா??!!” என்றால் நக்கலாய்..

‘திமிர் டி உனக்கு..’ அப்படித்தான் தீபன் எண்ணினான்.

“சுத்தி சுத்தி பார்த்தியே...”

“ம்ம்ம் எந்தப் பக்கம் எஸ்கேப் ஆகலாம் பார்த்தேன்..” என்றுவிட்டு போனவளை என்ன செய்தால் தகும் என்றே இருந்தது.

ஆனால் தர்மாவின் அழைப்பு அவனை தடை செய்ய, எடுத்துப் பேசியவன் “என்னது??!! D – வில்லேஜ்லயா??!!” என்று அதிர்ந்து கேட்க,

‘இனி இவளை அறைக்குள் சிறை வைக்கவேண்டுமா??!!!!’ என்று உள்ளம் சொல்ல,

‘என்னை ரொம்ப ரொம்ப கெட்டவன் ஆக்குறாங்க எல்லாரும்...’ என்று அவனே எண்ணியும் கொண்டான்..
 

Joher

Well-Known Member
Tks sarayu....

கை பிடிச்சா கை cut பண்ணபோறா...... அய்யோ ஓடிடுடா...... உயிருக்கு ஆபத்து......

Mobile எடுத்துக்கும் போதே கெட்டவனாயிட்ட.......
அப்புறம் என்ன எல்லோரும் என்ன கெட்டவனாக்குறாங்க சொல்ற.......

எவண்டா இவன்......
நிம்மதியா சந்தோசமா பண்ணுறதுக்குள்ள கல்யாணமே முடிஞ்சிடும் போல......

Deepan village...... சரியான இடத்துக்கு தான் வந்திருக்கிற ராகா......
பாரம்பரிய சமையல் மாதிரி D village சக்கரவர்த்தியும் பிடிக்கும் பிடிக்கணும் பிடிக்கவைப்பான்......

Village உன்னோடது தான்...... எழுதி வேற குடுக்கணுமா......

ஒரு ரகசியம் அனு.......
நல்லா சுத்தி பாரு...... அந்த பிரஷாந்த் இந்த D village ல தான் இருக்கிறான்....... ஓடி போய்டு......
இவன் என்ன party வைக்கிறானானு பார்க்கணும்.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top