Naan Ini Nee Epilogue

Advertisement

Joher

Well-Known Member
நான் இனி நீ.. epilogue 1

4 வருடங்கள் கழித்து..
கோமாவில் இருந்து விழிப்பு வர முதலில் ஒன்றும் புரியவில்லை. வீட்டினில் அந்நேரம் உஷாவும் தீபனின் மகன் மிதுல் சக்ரவர்த்தி மட்டுமே இருக்க, தீபனும் ராகாவும் வேலை காரணமாக வெளிநாடு சென்று இருந்தனர்.
"

சாந்தினி Naan Ini Nee - Epilogue Contest இங்கே போடணுமாம்.......

சரயு இப்போ லிங்க் கொடுத்திருக்காங்க.......
 
banumathi jayaraman

உஷாவிற்கு மகனின் விழிப்பைக் கண்டதும் கண்ணீர் பெருக மகனின் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவரைத் தேடி வந்த பேரனைக் கண்ட மிதுன் அசந்து விட்டான். சிறு வயதில் பாசமாக உடன் வளர்ந்த தன் தம்பியின் ஜாடையில் இருந்த மிதுலை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. எவரும் சொல்லாமலே அக்குழந்தை தீபன் மகன் எனத் தெரிந்தது. ஏனோ அக்குழந்தை மீது வெறுப்பு வரவில்லை.
அவனை அருகில் அழைத்த மிதுன் "உன் பெயர் என்ன" என்று கேட்டான். மழலையில் "மிதுல் சக்கரவர்த்தி " எனக் கூறியதைக் கேட்டவுடன் அதிர்ந்து போய் தாயைப் பார்க்க அவர் கண்ணீருடன் ஆமென தலையசைத்தார். "நான் யார் தெரியுமா " எனக்கேட்டதற்கு அவனும் "ம்.. தெரியுமே. பெரியப்பா" என்றான்.
"யாரு சொன்னா" -மிதுன் கேட்க, சிறுவனோ
"எங்க அப்பா. நீங்க ரொம்ப நல்லவங்களாம். நீங்களும் அப்பாவும் ஜாலியாக விளையாடுவீங்களாம். டெய்லி அப்பா காலையில் வந்து உங்க பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டுப்போவார். அப்போ நானும் வருவனே. அப்பா சில சமயம் உங்களை பார்த்து அழுவார். ஏன்னு கேட்டா கண்ணுல தூசி விழுந்துடுச்சினு பொய் சொல்லுவார்."
சூப்பர், @Chandhini டியர்
அருமையாக இருக்கு, சாந்தினி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
நான் இனி நீ. epilogue 2
மிதுன் ஒன்றும் பேசவில்லை. அமைதியாக கண் முடி அமர்ந்துவிட்டான். சில பல நிமிடங்கள் கழித்து அவன் தலைமீது ஒரு கரம் படிந்து தலை வருட கண் விழித்தான். உஷா கையில் உணவுடன். "அம்மா" என மெதுவாக அழைக்க, "எதுவும் யோசிக்காதப்பா. முதல்ல சாப்பிடு. எதுனாலும் அப்புறம் பாத்துக்கலாம்" என்றார். "இல்லமா.. நான்.. அவன்.." எனத் தடுமாற, "வேண்டாம்பா. நீ முதல்ல நல்லா குணமாகு. அப்புறம் பேசலாம் " என்றார் அழுத்தமாக. சோர்வு மற்றும் குழப்பம் காரணமாக மிதுனும் அமைதியாகி விட்டான். நன்றாகத் தெரிந்தது சில வருடங்கள் கழிந்து விட்டதென. உடனடியாக செய்ய எதுவும் இல்லை என்ன இருக்கிறது எனத் தெரியவும் இல்லை. எனவே அமைதியாகி விட்டான்.
சில நிமிடங்களில் அவசரமாக வந்த தந்தையைக் கண்டவுடன் அமைதியாக அவரை அளவிட்டான். லேசாக மூப்பு கூடியிருந்தார். கண்கள் கண்ணீரையும் மகிழ்ச்சியையும் ஒருசேர காட்டின. அருகில் வந்து கையைப் பிடித்து சிறிது நேரம் அமர்ந்து விட்டார். மிதுனுக்கே என்னவோ போல் ஆகிவிட்டது. அப்பொழுது அவர் அப்பாவாக மட்டுமே தெரிந்தார். தன்னை அடைத்து வைத்த மந்திரியாக எண்ண முயற்சித்தாலும் ஏனோ மிதுனால் முடியவில்லை. அவன் கட்டுப்படுத்தியும் மூடிய அவன் விழிகளின் ஓரத்தில் இருந்து கண்ணீர் கசிந்தது.
"ஒரு நாயகி உதயமாகிறாள்
ஊரார்களின் இதயமாகிறாள்........
 
banumathi jayaraman

Well-Known Member
நான் இனி நீ.. epilogue 3

விடிந்ததில் இருந்து மிதுனின் கண்கள் அறை வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தன. யாரையோ எதிர்பார்ப்பது போல் யாரையோ தேடுவது போல். உஷாவிற்கு புரிந்தாலும் அவராக எதுவும் கேட்கவும் இல்லை சொல்லவும் இல்லை. சக்கரவர்த்தியும் வெளியே செல்லவில்லை. தீபன் வரும் நேரம் வீட்டில் இருக்க எண்ணினார். பிரச்சனை வருமோ வராதோ அவரால் வெளியே செல்ல முடியவில்லை. எனவே தீபனுக்காக காத்திருக்கத் தொடங்கினார்.

மிதுன் அமைதியாக யோசித்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு நிறையக் கேள்விகள் இருந்தன. அவன் கடைசியாகப் போட்ட திட்டம் வரை தெரிந்தும் ஏன் இத்தனை வருடங்கள் அவனை விட்டு வைக்க வேண்டும். ஹாஸ்பிட்டலில் தீபனின் பரிதாபத்தில் வாழ விருப்பமில்லையென சொன்னதும் அதற்கு அவன் முகம் வேதனையில் கலங்கியதும் நினைவில் இருந்தது. இருந்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை வர விருப்பமும் இல்லை. எனவே அமைதியாக இருக்க விரும்புனான். ஆனால் மனம் ஏனோ தீபனைத் தேடியது.
கண்கள் முடி யோசனையில் இருந்த மிதுன் ஏதோ தோன்ற கண் விழித்துப் பார்த்தான்.
அறையின் ஆரம்பத்தில் தீபன். கண்களில் தவிப்புடன்.
வசீகரமும் கம்பீரமும் கூடியிருந்தது. ஆனால் மிதுன் தேடிய மாற்றம் இல்லை..
அருமையா எழுதுறீங்க, @Chandhini டியர்
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், சாந்தினி டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
தீபன் அமைதியாக வந்து மிதுன் எதிரில் அமர்ந்தான். அதுவரை தீபனும் பார்வையை விலக்கவில்லை. மிதுனும் பார்வையை விலக்கவில்லை. மிதுனுக்கு ஆராய்ச்சி பார்வையென்றால் தீபனுக்கு உணர்வுகள் அடக்கப்பட்ட பார்வை. மிதுனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் தேடிய எதிர்பார்த்த மாற்றம் மிதுனிடம் இல்லை. எதிர்பார்த்தது தென்படாத உணர்வு அப்பட்டமாக முகத்தில் தெரிய கேள்வியாக ஏறிட்டான்.
உணர்வுகள் மொத்தமாக துடைக்கப்பட்ட உணர்வுடன் "அது உனக்கானது. அதை நான் எப்படி எடுக்க முடியும். இல்லை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். எவர் எவரோ சொன்னதைக் கேட்டாயே. என்னைக் கேட்டாயா. கட்சி மேடையில் கூட அப்பாவுடன் நீதான் உட்கார்ந்தாய். எனக்கு வரும் எண்ணம் இருந்தால் அப்போதே வந்திருப்பேனே. உனக்கு ஏன் அது புரியவில்லை."
இது இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன், சாந்தினி டியர்
தீபன் சக்ரவர்த்தி சூப்பரா கேட்டான்
 
Sundaramuma

Well-Known Member
தீபன் அமைதியாக வந்து மிதுன் எதிரில் அமர்ந்தான். அதுவரை தீபனும் பார்வையை விலக்கவில்லை. மிதுனும் பார்வையை விலக்கவில்லை. மிதுனுக்கு ஆராய்ச்சி பார்வையென்றால் தீபனுக்கு உணர்வுகள் அடக்கப்பட்ட பார்வை. மிதுனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் தேடிய எதிர்பார்த்த மாற்றம் மிதுனிடம் இல்லை. எதிர்பார்த்தது தென்படாத உணர்வு அப்பட்டமாக முகத்தில் தெரிய கேள்வியாக ஏறிட்டான்.
உணர்வுகள் மொத்தமாக துடைக்கப்பட்ட உணர்வுடன் "அது உனக்கானது. அதை நான் எப்படி எடுக்க முடியும். இல்லை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும். எவர் எவரோ சொன்னதைக் கேட்டாயே. என்னைக் கேட்டாயா. கட்சி மேடையில் கூட அப்பாவுடன் நீதான் உட்கார்ந்தாய். எனக்கு வரும் எண்ணம் இருந்தால் அப்போதே வந்திருப்பேனே. உனக்கு ஏன் அது புரியவில்லை."
அருமையா எழுதுறீங்க சாந்தினி :love::love::love:
 
SINDHU NARAYANAN

Well-Known Member
நான் அமேசான் ல இருந்து வர்றேன் :p
Epilogue பார்த்ததும் ஓடி வந்து ஏமாந்து போய்ட்டேன்.......

பரிசு வாங்க ட்ரை பண்ணலையா Fathi.....
ஏமாறச் சொன்னது நானோ.. ;)
என் மீது கோபம் தானோ.. ;)
 
Chandhini

Well-Known Member
சாந்தினி Naan Ini Nee - Epilogue Contest இங்கே போடணுமாம்.......

சரயு இப்போ லிங்க் கொடுத்திருக்காங்க.......

ஆனால் நான் ஒரு flow ல எழுத ஆரம்பித்துவிட்டேன். dont want to break in middle. Anyway thanks a lot. நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் பார்த்தேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top