and sarayu dear. நீங்க சொன்னதுனால தான் உங்க work ல கை வெச்சேன். கதையோட்டத்தில் சொதப்பி இருந்தால் மன்னிக்கவும். And thanks a lot for giving the opportunity. Bye.
and sarayu dear. நீங்க சொன்னதுனால தான் உங்க work ல கை வெச்சேன். கதையோட்டத்தில் சொதப்பி இருந்தால் மன்னிக்கவும். And thanks a lot for giving the opportunity. Bye.
Ok no problem....... அவங்க லேட்டா தான் போட்டிருக்காங்க.......
இப்போ அங்கே உங்க பேரில் ஒரு thread open பண்ணி மொத்தமா போட்டுருங்க.........
படிக்க ஈஸியா இருக்கும் சேர்ந்திருந்தா.........
நானே இன்னும் படிக்கலை........
"இதுவரை அப்பாவின் பின்னால் இருந்தேன். இனி உன் பின்னால் இருக்கப் போகிறேன். இதில் எனக்கு குறைவும் இல்லை. நான் விட்டுக்கொடுக்கவும் இல்லை. இதை நாம் மனம் விட்டு பேசியிருக்கிறால் என் எண்ணம் உனக்கு முன்பே தெரிந்திருக்கும்". பெருமூச்சுடன், "டேய் அண்ணா. நீ நீயாக இரு. தேறி வா. பார்த்துக் கொள்ளலாம்" என்றான். மிதுன் ஏதாவது பேசுவானா என காத்திருந்தான். ஆனால் அவன் அமைதியாகக் கண்களை மூடி விடவும் பெருமூச்சுடன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்று விட்டான்.
அனுராகா அவர்கள் அறையில் காத்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் கண்ணீருடன் புன்னகைத்தான். "என்னப்பா. உன் உடன்பிறப்பு கிட்ட பேசிட்டியா. உன் மனபாரம் தீர்ந்துடுச்சா".
"ம்.. அவன் இப்ப சில வருஷமா தான் இப்படி ஆயிட்டான். அதுக்கு முன்னால அவன் எப்படி இருந்தான்னு எங்களுக்குத் தெரியும் ல. என்ன பெரிய பதவி. உனக்கும் பிடிக்காத அவனுக்கும் பிடிக்காத பதவில நான் இருந்து என்ன செய்ய போறேன். முதல்ல எனக்கு behind the stage இருக்க தான் பிடிச்சிருக்கு. ம்.. அம்மா சந்தோஷப்படுவாங்கல..".
"சரிப்பா. ஆனால் அவ்ளோ பண்ண ஏன் உன்ன இல்லாம பண்ண உன் அண்ணனுக்கு இப்ப நீ நல்லது இல்ல பண்ணி இருக்க. அப்ப அவர் guilty யா feel செய்ய மாட்டாரா. பதவி வேணாம் னு சொல்லிட்டா என்ன செய்யறது".
தீபன் மென்னகையுடன், "சில விஷயங்கள் நாம ஒன்னும் செய்ய முடியாது. அந்த guilty conscious அவன் அனுபவிச்சு தான் ஆகனும். என்ன வெளியே காட்டிக்காம கெத்தா இருந்துப்பான். And பதவி ஏத்துக்காம விட்டுக் கொடுக்க இங்க என்ன மூணாவது பையன் நாலாவது பையன் இருக்குறாங்களா என்ன. எப்படியும் நான் ஏத்துக்க மாட்டேன். So அவன் ஏத்துட்டு தான் ஆகனும். ஏன்னா நாங்க perfect அரசியல்வாதி குடும்பம். வெளியாளுங்கள உள்ள விட மாட்டோம்" என்றான் சிரிப்புடன்.
அடுத்த நாள் காலை உணவு மேடையில் அனுராகாவைக் கண்ட போது மென்னகையுடன் நிறுத்திக் கொண்டான். அவளும் மரியாதையுடன் புன்னகைத்ததோடு சரி.
கட்சி தலைமையுடன் பேசி அடுத்த தேர்தலில் தனது மூத்த மகன் மிதுன் சக்கரவர்த்தியை வேட்பாளராக நிறுத்தி விட்டு சக்கரவர்த்தி அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
வீட்டிலும் மிதுலிடம் மட்டுமே இயல்பாக இருக்கும் மிதுன் மற்றவரிடம் கண்ணுக்குத் தெரியாத கோடு போட்டு இருக்க பழகிக் கொண்டான். தீபன் சக்கரவர்த்தி and their team தீயாக வேல செய்ததில் மிதுன் அமோக வெற்றி பெற்றான்.