Mutton keema with peas..

Advertisement

fathima.ar

Well-Known Member
டிசம்பர் வந்தாச்சு..
பச்சை பட்டாணி ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும்..
பட்டாணி வைச்சு ஒரு டிஷ்....


தேவையான பொருட்கள்
கீமா-150கி
பட்டாணி-1/4கி
வெங்காயம்-2
தக்காளி-1சின்னது
ப.மிளகாய்-2
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
கரம் மசாலா-1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
தனியா தூள்-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
சீரகத்தூள்-1/4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு..
தயிர்-2ஸ்பூன்..
புதினா சிறிதளவு
எண்ணெய்-4 ஸ்பூன்
கருவேப்பிலை சிறிதளவு..

செய்முறை..

வெதுவெதுப்பான நீரில் கீமாவை சுத்தம் செய்து கொள்ளவும்..
பட்டாணி உரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்..

குக்கரில் எண்ணெய் விட்டு..
கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்..
வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள் சேர்த்து பின்னர் தக்காளி சேர்க்கவும்..
அதில் கீமா சேர்த்து இஞ்சி பூண்டு விழுது.. தயிர்.. மஞ்சள் தூள்..
கரம் மசாலா.. தனியா தூள்.. உப்பு..புதினா..
சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்..

இறுதியாக பட்டாணி சேர்த்து..
கால் டம்ளர் தண்ணீர் விட்டு
3விசில் வரும் வரை வேக விடவும்..

10நிமிடம் பின்னர் தண்ணீர் சுருங்கும் அளவு அனலில் இடவும்..

சப்பாத்தி பூரிக்கு நல்ல சைட் டிஷ்..
 

Joher

Well-Known Member
படிக்க நல்லாத்தான் இருக்கு.....
ஆனால் வீட்டில் மட்டானோடு பட்டாணியானு கொல பண்ணவருவாங்க.....

பார்சல் ப்ளீஸ்........;)

ஒரு கட்லெட் எப்பவோ அனுப்புனதே எனக்கு இன்னும் கிடைக்கல......;););)
 

MythiliManivannan

Well-Known Member
படிக்க நல்லாத்தான் இருக்கு.....
ஆனால் வீட்டில் மட்டானோடு பட்டாணியானு கொல பண்ணவருவாங்க.....



ஒரு கட்லெட் எப்பவோ அனுப்புனதே எனக்கு இன்னும் கிடைக்கல......;););)
:rolleyes::oops::(
 

fathima.ar

Well-Known Member
படிக்க நல்லாத்தான் இருக்கு.....
ஆனால் வீட்டில் மட்டானோடு பட்டாணியானு கொல பண்ணவருவாங்க.....

:confused::mad::oops::rolleyes::confused::confused::mad::mad:



ஒரு கட்லெட் எப்பவோ அனுப்புனதே எனக்கு இன்னும் கிடைக்கல......;););)

:eek:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top