Mm- Poraattam

Advertisement

fathima.ar

Well-Known Member
ஆண்டின் முடிவோ
பலருக்கு முடிவாக
இயற்கை நம்மை வஞ்சிக்க..

ஆண்டின் தொடக்கமோ
போராட்ட காலமாக
மாறி வருகிறது...

கடந்த ஆண்டு
நம் கலாச்சாரத்தை மீட்க
ஜல்லிக்கட்டு போராட்டம்..

இந்த ஆண்டு
ஊதியஉயர்வு கோரி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..

செயல்படாத அரசுதான்
மக்களின் நலம் பெரிதில்லை..
தகுதி இல்லாத தலைமை
தகுதி இல்லாத ஓட்டுநரிடம் பேருந்து...

பாதுகாக்க வேண்டிய அரசின்..
அலட்சியமா???
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பாதுக்காக்க வேண்டிய அரசை தீர்மானித்த நம் மீதும் குற்றமிருக்கிறது பாத்தி... இவர் இவரை விட்டால் அவர் என்று மாற்றி மாற்றி நாம் நிர்மானித்ததின் பலன் கலாச்சாரத்திற்காய் போராட்டம், ஊதிய உயர்வுக்காய் ஊழியர்கள் போராட்டம், நாளை அரிசி பருப்பு என்று அத்துனைக்கும் நாம் போராடியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி நிற்கிறோம் இன்று...

வலி நிறைந்த கவிதை, வழி தேடி வளியாய் அலைகிறோம் நாம்...
 

RITHWIK ANU

Writers Team
Tamil Novel Writer

பேருந்து போராட்டம் மட்டும் இல்லை பாத்தி அக்கா எங்கள் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை போராட்டமும் தான் நல்ல முடிவு தெரியாமல் நடந்து கொண்டே இருக்கிறது..
இதுவும் நம் அரசின் அலட்சிய போக்கு தான்..இதனால் எவ்வளவு மக்கள் அன்றாட வேலை மற்றும் கூலி இல்லாமல் அவதிபடுகின்றனர் ..இதை எதையுமே நம் அரசு கண்டு கொள்ள போவது இல்ல அக்கா..

 

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
தொடர் போராட்டம்... நிம்மதி இல்லா வாழ்வு... நிராசையில் மக்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட நான் அரசியல் போகலாம்னு இருக்கேன் ஃபாத்தி.
 

arunavijayan

Well-Known Member
ஆண்டின் முடிவோ
பலருக்கு முடிவாக
இயற்கை நம்மை வஞ்சிக்க..

ஆண்டின் தொடக்கமோ
போராட்ட காலமாக
மாறி வருகிறது...

கடந்த ஆண்டு
நம் கலாச்சாரத்தை மீட்க
ஜல்லிக்கட்டு போராட்டம்..

இந்த ஆண்டு
ஊதியஉயர்வு கோரி
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்..

செயல்படாத அரசுதான்
மக்களின் நலம் பெரிதில்லை..
தகுதி இல்லாத தலைமை
தகுதி இல்லாத ஓட்டுநரிடம் பேருந்து...

பாதுகாக்க வேண்டிய அரசின்..
அலட்சியமா???
Nice one
but it pains to see such situation
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top