KUK - 15

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends first i wish u all for happy women's day and i come with the next update also thanks for your valuable comments for last update..... tell your comments for this update also i am waiting for your comments friends and happy to read............................... next update for tuesday paa



உள்ளம் – 15

கலையிலே அனைவரையும் ஒருவழி செய்துவிட்டு அம்முவும், அச்சுவும் அவர்கள் சென்னை வந்ததிலிருந்து தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர் இவர்களுக்கு முன்பே வெற்றி அங்கு வந்திருந்தார்

அவரை பார்த்த உடன் அம்முவும்,அர்ஜுனும் தங்களுக்குள் கண்ஜாடை கட்டி கொண்டனர் இவர்களுக்கு முன்பே தெரியும் அவரால் காத்திருக்க முடியாது என்று எனவே அலுவலகத்திற்கு செல்லாமல் நேரடியாக இங்கே வந்து விட்டனர்

அம்மு ராஜன் அங்கிளையும் வர சொல்லி இருந்தாள் அவர் வருவதற்காக இருவரும் காத்திருந்தனர் ஆனால் வெற்றிக்கோ கொஞ்ச நேரம் கூட பொறுக்க முடியவில்லை வந்ததிலிருந்து நந்தினியை பற்றி கேட்டு கொண்டே இருந்தார்


அர்ஜுன் “கொஞ்ச நேரம் பொறுங்கள் உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்” என்றான்
ஒருவழியாக ராஜன் அங்கிள் அங்கு வந்து சேர்ந்தார் வந்தவர் “அம்முவை பார்த்து எதுக்குமா என்னை இன்று காலையிலே இங்கு வர சொன்னாய் ஏதேனும் பிரச்சனையா”


அம்மு அது பிரச்சனையெல்லாம் ஒன்றும் இல்லை அங்கிள் இவரை பார்க்க உங்களை வர சொன்னேன்
ராஜனை பார்த்த வெற்றி “உங்களுக்கு இவர்களை முன்பே தெரியுமா நான் உங்களிடம் எத்தனை முறை கேட்டு இருப்பேன் என்னுடைய தங்கை எங்கே என்று உங்களுக்கு தெரியுமா என அப்பொழுதெல்லாம் நீங்கள் தெரியாது என்று தானே சொன்னீர்கள் இப்பொழுது பார்த்தால் உங்களுக்கு அனைத்தும் தெரியும் போல


உங்களுக்கு அனைத்தும் தெரிந்தும் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்னுடைய தங்கைகாக நான் எவ்வளவு துடித்தேன் என்று உங்களுக்கு தெரியும் தானே பின் எதனால் என்னிடம் மறைத்தீர்கள்”

ராஜன் “கொஞ்சம் பொறுமையாக இருங்க வெற்றி முதலில் நான் சொல்வதை கேட்டுவிட்டு பின் பேசுங்கள்”

வெற்றி “எனக்கு உங்களிடம் இருந்து உண்மை மட்டுமே வேண்டும் தயவு செய்து இப்பொழுதாவது உண்மை மட்டும் கூறுங்கள்”

ராஜன் “நந்தினிக்கு உங்கள் யாரையும் பார்க்க விருப்பம் இல்லை அதோடு ரவியின் வீட்டினர் வந்து அவள் யோருடனோ சென்றுவிட்டாள் என்று சொல்லும்போது உங்களுடைய பெற்றோர் அவர்கள் சொல்வதை நம்பினார்களே ஒழிய தன்னுடைய மகள் இப்படி ஒரு காரியத்தை செய்வாளா என்பதை எண்ணி பார்க்கவில்லை நீங்கள் ஒருவர் மட்டுமே என்னுடைய தங்கை இப்படி ஒரு காரியத்தை செய்திருக்க மாட்டாள் என்று கூறுனிர்கள்

மற்றவர்கள் அதை நம்ப தயாராக இருக்கவில்லை அதோடு நந்தினியும் உங்களை பார்க்கலாம் என்று வரும்போது நீங்கள் அவளுக்காக உங்கள் பெறோர்களால் சுமலாவிற்கு கணவனாக இருந்திர்கள் அது நந்தினியை குற்றவுணர்வுக்கு கொண்டு சென்று விட்டது தன்னால் தான் அண்ணன் வாழ்வு கேட்டுவிட்டது என்று

அந்த குற்றவுணர்வினால் உங்களை சந்திக்கும் தைரியம் அவளுக்கு இல்லாமல் போனது எனக்கே அவள் வீட்டை விட்டு சென்று ஆறு மாதங்கள் கழித்தே தெரியவந்தது அவள் வீட்டை விட்டு வெளியே அனுப்பும்போது ஒரு வேலையாக நான் வெளிநாடு சென்று இருந்தேன் 6 மாதம் கழித்தே நான் நாடு திரும்பினேன் அப்போதுதான் எனக்கு தெரிய வந்தது நானும் அவளை பல்வேறு இடங்களில் தேடினேன் ஆனால் என்னாலும் அவளை கண்டு பிடிக்க முடியவில்லை

என் காதலை வெற்றியடைய செய்து எனக்கு வாழ்க்கை கொடுத்தவள் அவள் அந்த நன்றிவுணர்வு எனக்கு எப்பொழுதும் உண்டு எனவே நானும் அவளை தேடினேன்

அவளை நானும் தேடிகொண்டிருக்கும் போதுதான் நீங்களும் என்னிடம் வந்து நந்தினி எங்கே என்று தெரியுமா என்று கேட்டீர்கள் அப்போது எனக்கு தெரியாது என்பதால் நானும் அவளை பற்றி தெரியாது என்று உங்களிடம் கூறினேன்

நந்தினி இங்கிருந்து சென்று ஐந்து ஆண்டுகள் கழித்து அவளே என்னை பார்க்க வந்தாள் வந்தவள் தன்னுடைய அப்போதைய நிலைமையையும் தான் இங்கு வந்து சென்றது யார்க்கும் தெரியவேண்டாம் என்றும் கேட்டுகொண்டாள்.

நந்தினி அவ்வாறு கேட்டுகொண்டதால் நான் யாரிடமும் சொல்லவில்லை அதோடு நானும் உன்னுடைய அண்ணன் உன்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறான் அவனை மட்டுமாவது பார்த்துவிட்டு போ என்றேன் அதற்கு அவள் குற்றவுணர்வோடு உங்களை காண விரும்பவில்லை என்றாள்

வெற்றி “எல்லாம் சரிதான் ஆனால் இப்போது நந்து எங்கே இருக்கிறாள் நான் இப்பொழுதே அவளை பார்க்க வேண்டும்”

அர்ஜுன் “நா தழுதழுக்க சின்ன குரலில் அத்தை இப்போது உயிரோடு இல்லை என்றான்”

அதை கேட்ட வெற்றி அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது அப்படியே கால்களை மடக்கி கிழே அமர்ந்தவர் கதறி அழுதார் அவரின் அழுகை அங்கிருந்தவர்களுக்கு மீண்டும் நந்தினியின் இழப்பை கண்களின் முன்னால் காட்டியது அவர்களாலும் தாங்கிகொள்ள முடியவில்லை

இருந்தும் தங்களை சமன் செய்து கொண்டு வெற்றியை சமாதனம் செய்ய முயன்றனர் வெற்றியோ என்னுடைய தங்கை ஒருநாள் என்னை தேடி வருவாள் என்றே என்னயுடைய உயிரை உடம்பில் பிடித்து வைத்துள்ளேன் அவளே இல்லாத போது நான் இந்த உலகில் வாழ்ந்து என்ன பயன்

இதவரை இவர்கள் பேசியை கண்டுகொள்ளாமல் தன்னுடைய அன்னையின் நினைவில் உழன்று கொண்டிருந்த அம்மு வெற்றி இப்படி சொல்லவும் “நாம் எதற்கு சாக வேண்டும் மாமா அம்மாவை இந்த நிலைக்கு கொண்டுவந்த அனைவரும் ஏன் அவ்வாறு செய்தோம் என்று வேதனையில் துடிக்க வேண்டும். இவர்களால் அம்மா எவ்வளவு துன்பத்தை அனுபவித்தர்களோ அதைவிட பல மடங்கு இவர்கள் அனுபவிக்க வேண்டும்”

அபிதா சொல்ல சொல்ல அவளையே பார்த்திருந்த வெற்றி தன்னுடைய கதறலை நிறுத்தி “அம்மு நந்தினியை அம்மா என்று குறிப்பிட்டதை கண்டு நீ என்னுடைய தங்கை மகளா ஆனால் எப்படி”

ராஜன் “நந்தினி இங்கிருந்து செல்லும்போதே கர்ப்பமாக இருந்து இருக்கிறாள் ஆனால் அதை அவள் யாரிடமும் சொல்லவில்லை அதற்கான சந்தர்பமும் அமையவில்லை”

அம்முவை கனிவுடன் பார்த்த வெற்றி அவளின் தலையை தடவிகொடுத்து என்னுடைய தங்கை மகளா நீ என்றார் கண்களில் நீர் துளிர்க்க அம்முவும் தலையசைக்கவும் அவளின் நெற்றியில் முத்தமிட்டு தன்னுடைய வயிற்றோடு அனைத்து கொண்டார்

அங்கே அதன் பின் மவுனமே ஆட்சி செய்தது அதை கலைக்கும் விதமாக ராஜன் “சரிமா எல்லாம் நன்றாக முடிந்தது இதை முதலில் நான் உன்னுடைய ஆண்டி இடம் சொல்லவேண்டும் நான் வருகிறேன் பிறகு உன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்” என்றுவிட்டு அவர் சென்றார்

அதன் பின் சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி நந்தினியை பற்றி வினவ அம்முவும்,அர்ஜுனும் டெல்லியில் நடந்தது அத்தனையும் கூறினர் அதையெல்லாம் கேட்ட வெற்றிக்கு சுபத்திரா மீதும்,அர்ஜுனின் மீதும் தனி மரியாதையே தோன்றியது. தன்னுடைய தங்கையையும்,தங்கை மகளையும் கடைசிவரை பார்த்து கொண்டவர்கள் என்று அதே பார்வையுடன் அவர் அர்ஜுனை பார்க்க

வெற்றியின் பார்வையை உணர்ந்த அர்ஜுன் “நாங்கள் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் அத்தையை பார்த்து கொள்ளவில்லை வாழ்வதற்கு வழியில்லாமல் சாக சென்ற எங்களை காப்பாற்றி இவ்ளோ பெரிய வாழ்வை கொடுத்தது அத்தை தான் என்றான்”

அம்மு “அவன் சொல்வது போய் மாமா அம்மா என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார் அவருடைய வாழ்விற்கு அர்த்தம் தந்தது நானும், சுபத்திரா அத்தையும், அர்ஜுனும் தானாம் இல்லை என்றால் அவரால் இந்த உலகில் வாழ்ந்திருக்கவே முடியாது என்று அதனால் அவன் சொல்வதை நம்பாதீர்கள்”

அம்முவும்,அர்ஜுனும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காது பேசி கொண்டே இருக்கவும் அவர்களின் பேச்சை நிறுத்துவதற்காக வெற்றி “நீங்கள் பழி வாங்க மட்டுமே அபையையும்,வர்சாவையும் திருமணம் செய்து கொண்டீர்களா”

அம்முவும்,அச்சுவும் ஒரே நேரத்தில் இல்லை எங்க வெற்றி அடுத்த கேள்வியாக பின் எதற்கு இந்த திருமணம்
இருவரும் பதில் சொல்லாது மவுனமாக நிற்க வெற்றியும் எனக்கு பதில் வேண்டும் என்ற பார்வையோடு அவர்களயே பார்த்து கொண்டிருந்தார்


அம்மு “மாமா இதை பற்றி இப்போது பேச வேண்டாம் நேரம் வரும்போது இந்த திருமனத்திக்கான காரணத்தை சொல்கிறோம் அதுவரை எதுவும் கேட்காதீர்கள்”

வெற்றி “திருமணம் ஒன்றும் விளையாட்டு காரியம் அல்ல என்பதை நீங்கள் இருவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்”

அர்ஜுன் “நாங்கள் நந்தினி அத்தையின் வளர்ப்பு வெற்றி பா ஒருநாளும் அத்தையின் வளர்ப்பை போய்யாக்க மாட்டோம்”

அர்ஜுன் அதை கூறிய உடன்தான் வெற்றிக்கு நிம்மதியா இருந்தது ஏன்னெனில் அபையின் மீது அதிக பாசம் கொண்டிருந்தார் வெற்றி அதோடு ரவி மற்றும் சுமலா,பாட்டி செய்த தவறுக்காக வர்ஷா, அபையை தண்டிப்பது அவருக்கு ஏற்புடையதாக இல்லை

அம்மு “எப்படி அம்மாவின் வளர்ப்பை குறைசொல்ல விட மாட்டோமோ அதே போல் அம்மாவை இந்த நிலைமைக்கு கொண்டுவந்த யாரையும் சும்மாவும் விட மாட்டோம்”

வெற்றி “நீ சொல்வது என்ன அம்மு இதுவரை நடந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கள் ஏற்படுத்தியதா”

அர்ஜுன் “அமாம் வெற்றி பா ரவியின் தொழிலில் பிரச்சனையை கொண்டுவந்தது அவரை யோசிக்கவிடாமல் செய்ய தினமும் புது புது பிரச்சனையை கிளப்புவது அனைத்தும் எங்களது திட்டமே”

வெற்றி “இது எல்லாம் நமக்கு தேவையா அவர்கள் எப்படியோ போகட்டும் நந்தினியே போன பின்பு இந்த பழிவாங்கும் வேலை தேவைதானா”

அம்மு “நிச்சியம் நான் இதை செய்தே தீருவேன் அம்மா மனதில் எவ்வளவு ரணம் இருந்திருந்தால் தனக்கு வந்த இருதய பிரச்சனைக்கு சிகிச்சை எடுக்காமல் இதுவரை வாழ்ந்ததே போதும் என்று முடிவெடுத்து இருப்பார்.

அவரை அப்படி ஒரு நிலைக்கு கொண்டுவந்து விட்டு இவர்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ்வார்கள் அதை நான் பார்த்துகொண்டு இருக்க வேண்டுமா அம்மாவும் நான் என்ன செய்வேன் என்று தெரிந்தே முன்பே என்னிடம் நீ எடுவேண்டுமனாலும் செய்துகொள் உன் மனதிற்கு தோன்றும்படி என்று கூறினார்

வெற்றி “என் நந்துக்கு தெரிந்திருக்கிறது நீ என்ன செய்வாய் என என்றார்”

அர்ஜுன் “அம்மு அடுத்து என்ன செய்ய போறோம்”

அம்மு “இப்போ வீட்டில் பிரச்சனையை கொண்டுவந்தோம் இதற்கு அடுத்து அவர்கள் சிறிதும் யோசிக்க அவகாசம் கொடுக்க கூடாது அதனால் நாம் தான் அவர்கள் கம்பனியின் பங்குகளை வாங்கி உள்ளோம் தானே அதனால் முழு அதிகாரம் நம்மையே சாரும் என்று நம்முடைய வக்கிலை கொண்டு அவர்களுக்கு நோட்டிஸ் அனுப்பு அதுவும் கம்பனியின் அதிக பங்குகளை வைத்துள்ளதால் அனைத்து முடிவுகளும் நாமே எடுப்போம் என்றும் நம்மை கேட்காமல் அவர்கள் எதுவும் செய்ய கூடாது என்றும் அனைத்து கம்பனியின் பொறுப்புகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் நாம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறு”

அர்ஜுன் “அருமை அம்மு என்னுடைய அம்மு என்றால் சும்மாவா”

இவ்வாறு அன்றைய தினம் முடிவுக்கு வந்தது எப்போதும் போல் அம்மு அபையின் அறையில் உள்ள ஊஞ்சலில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருக்க அங்கே வந்த அபை ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் அம்முவையே பார்த்து கொண்டிருந்தான்

அம்முவின் முகம் அவ்வளவு அமைதியாக இருந்தது இப்போது அவளின் முகத்தை பார்க்கும் யாரும் இவள் இந்த குடும்பத்தை பழிவாங்க வந்துள்ளாள் என கூறினாள் யாரும் நம்ப மாட்டார்கள் அவ்வளவும் அமைதியும்,சாந்தமும் அவளின் முகத்தில் தென்பட்டது அபையும் இதையே நினைத்து அவளை பார்த்து கொண்டிருந்தான் கூடவே அவனுடைய மனதில் “அத்தை நமக்காக பார்த்த பெண் இவள் தானோ அதனலே ஒருவேளை என்னை மிரட்டிய திருமணம் செய்தாளா என்கிற கேள்வியும் எழுந்தது” அதையும் அவளிடமே கேட்டுவிடுவோம் நினைத்த அபை அவளை நோக்கி சென்றான்

அவன் அவளின் அருகே செல்லவும் அம்மு ஊஞ்சலில் இருந்து எழவும் சரியாக இருக்க இவன் அவளின் அருகே சென்று நிற்க ஊஞ்சலில் இருந்து இறங்க நினைத்து காலை கிழே வைத்த அம்மு கால் வழுக்கி அவனின் மேலே விழுந்தாள். இதை இருவரும் எதிர்பார்க்கவே இல்லை

அவள் அபையின் மீது விழ அபையோ அவள் தன்மேல் விழுவாள் என்று அதிர்பார்க்கததால் அவனும் பிடிப்பின்றி கிழே விழுந்தான் அவனின் மீது அம்மு விழுந்து கிடந்தாள் அபையின் ஒருகரம் அவளின் இடையை வளைத்து இருக்க மற்றொரு கரமோ அவனின் தலையின் பின்புறம் இருந்தது விழ போகிறோம் என தெரிந்த உடன் தன்னுடைய தலைக்கு அடி படாதவாறு கைகளை தலைக்கு கொடுத்திருந்தான்

அம்மு அபையின் மீதிருந்து எல முயல அவளால் முடியவில்லை ஏனென்றால் அபையின் காரம்தான் அம்முவை பிடித்து இருந்ததே அம்மு எல முயலவும் தன்னுடைய கைகளில் அழுத்தத்தை கூட்டி அவளின் இடையை அழுத்தினான்

அவளின் இடையை பற்ற அவனுக்கு எது தைரியம் கொடுத்தது அவனுடைய மனைவி என்ற உரிமையா இல்லை இன்று காலை அவள் சொல்லாமல் சொன்ன உன்னுடைய பணத்திற்காக உன்னை மணக்கவில்லை என்ற பதிலா என்று தெரியவில்லை

தன்னுடைய இடையில் அழுத்தத்தை உணர்ந்த அம்மு அபையை பார்க்க அவனோ இன்னும் அழுத்தம் கொடுத்தான் அவனின் செயலை கண்டு அம்மு முறைக்க அதற்கெல்லாம் அஞ்சுவேனா என்று பார்த்த அபை “நான் கேட்கும் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு உன்னை விடுகிறேன் என்றான்”

அபிக்கு தான் ஒரு ஆணின் மீது உள்ளோம் என்பதும் அவள் வாழ்வில் முதன் முதலில் உணர்ந்த ஆணின் நெருக்கமும் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை கொடுத்தது இருந்தும் அதை மறைத்து மீண்டும் அவனை முறைக்க அவனோ அதை பற்றி சிறிதும் கவலைபடமால் தன்னுடைய கேள்வியை கேட்டான் “அத்தை உன்னை எனக்காக அனுப்பி வைத்தார்களா என்னை மணக்கும் படி அதனால் என்னை நீ மணந்து கொண்டாயா”

அம்மு அவனின் கேள்வியில் திகைத்து அவனை பார்க்க அவனும் இவளையே பார்த்து கொண்டிருந்தான் பதிலுக்காக

அபை சொல் என்னும் படி அவளின் இடையை தன் கரங்களால் இருக்க இவனுடைய திண்டலில் சிலிர்க்கும் மனதையும்,உடலையும் கட்டுபடுத்தி அவனிடம் சொல்லவில்லை என்றால் என்ன செய்வாய் என்றாள்

அபையும் உனக்கு சளைத்தவன் நான் இல்லை என்னும் விதமாக “சொல்வதும் சொல்லாததும் உன் விருப்பம் ஆனால் எனக்கு வேண்டியது உன்னுடைய பதில் சொல்லவில்லை என்றால் எவ்வளவு நேரம் ஆனாலும் சரி நீ இந்த நிலையில் தான் இருப்பாய் என்றான்”

அம்மு அப்பொழுதும் பதில் சொல்லாமல் அவனிடம் இருந்து விடுபட முயற்சிக்க அவளால் முடியவில்லை அபையின் கைகள் அவளை நன்கு சூழ்ந்து இருந்தது அவள் விடுபட நினைக்க அபையோ தன்னுடைய மற்றொரு கரத்தை கொண்டு அவளை இறுக்கினான் அவனின் இருகரங்களும் அம்முவை அனைத்து இருக்க அவளால் சிறிதும் விடுபட முடியவில்லை

விடுபட முடியாமல் இருந்தாலும் அம்மு வையை திறக்கவே இல்லை அபையும் அவள் பதில் சொல்லாமல் விடுவதாக இல்லை என பார்வையோடு ஒருவரை ஓருவர் பார்க்க இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று கவ்விகொண்டது

அவ்வாறே எவ்வளவு நேரம் சென்றதோ தெரியவில்லை யாதவின் அண்ணி எங்க இருகீங்க என்ற குரல் கேட்டு இருவரும் தங்கள் மோன நிலையில் இருந்து விடுபட்டனர் யாதவின் குரல் அறையின் அருகே கேட்க அபை அவளை விடுவித்தான் விடுவித்ததோடு நீ இப்போது சொல்லாமல் தப்பித்து இருக்கலாம் ஆனால் இரவு என்னிடம் இருந்து நீ தப்ப முடியாது அப்போது உன்னை பார்த்துகொள்கிறேன் என்றுவிட்டு அவளை விளக்கி சென்றான். அபை வெளியே வரவும் யாதவ் அண்ணி அண்ணி குரல் கொடுத்து கொண்டே அறையில் நுழையவும் சரியாக இருந்தது


உள்ளம் கரையும்.........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top