KUK - 12

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends sorry for the delay and i come with next update read and tell your comments all of u tell your comments it helpful for me improve my self and happy reading


உள்ளம் – 12

வர்ஷாவை பார்த்து கொண்டே அர்ஜுன் அவள் இனி அவளின் அப்பா வாங்கியதை பயன்படுத்த மாட்டாள் சொல்ல அதில் வர்ஷா அவன் சொல்வதை செய்தாகவேண்டும் என்ற கட்டளை இருப்பதாக அனைவருக்கும் தோன்றியது

இதுவரை நடந்தது அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டிருந்த வர்ஷன் “என்ன அப்பா வாங்கி தந்ததை போட வேண்டாம் சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு அவள் போடுவாள்”

அர்ஜுன் “அப்படியா என்று வர்ஷாவை பார்க்க அவளின் தலை இல்லை என்று தானாகவே ஆடியது”

ரவியும் ஒன்றும் பேசாதே என வர்சனை பார்த்து சொல்ல அப்பா என்ற சொல்லோடு அமைதியானான்

உணவு முடித்து அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல லக்ஷ்மி கணவனின் பின் வந்து “என்னக என்னதான் இருந்தாலும் அவர்களுக்கு இன்றுதான் திருமணம் முடிந்து உள்ளது நடக்க வேண்டிய சடங்குகளை நடத்த வேண்டாமா”

இப்போதிக்கு எதுவும் வேண்டாம் லக்ஷ்மி அவர்கள் இருவரும் எதற்கு எடுத்தாலும் சண்டையிடவே தயாராக இருக்காங்க இதை ஆரம்பித்து பின் புதிதாக ஒரு பிரச்சனை உருவாகும் வேண்டாம் அவர்களே அவர்கள் வாழ்கையை முடிவு செய்யட்டும்

நாம் பார்த்து வைத்த திருமணத்தை வேண்டாம் என்று இருவரும் வேறு துணைகளை தேடி கொண்டனர் அதே போல் அவர்கள் வாழ்க்கையை எப்போது தொடங்க வேண்டும் என்பதையும் அவர்களே பார்த்து கொள்ளட்டும்

அபையின் அறைக்கு வந்த அம்மு தனது லேப்டாப்வுடன் தரையில் அமரவும் அபை “இங்கே சோபா இருக்கே பின் எதற்கு தரையில் அமர்ந்து இருக்கிறாய்”

என்ன பாசமா பேசி என்கிட்ட இருந்து என்ன தெரிந்து கொள்ள நினைக்கிற

நான் ஒன்னும் தெரிந்துகொள்ள நினைக்கலை தரை ஜில்லுனு இருக்குமே என்று எப்போதும் நமக்கு தெரிந்தவரை கேட்போமே அதே போல் கேட்டேன் அதுமட்டுமல்ல நான் வேற உனக்கு தாலி கட்டி இருக்கிறேன் என்ன இருந்தாலும் நீ என்னுடைய பொண்டாட்டி என அழுத்தி சொல்ல

அபி “இதோ பார் பொண்டாட்டி கிண்டாட்டி என சொல்லிக்கிட்டு பக்கத்தில் வந்த அவ்வளவு தான்”

அப்பா என்னுடைய பொண்டாட்டிக்கு எவ்ளோ கோவம் வருது ஏண்டி நானா உன்னை திருமணம் செய்து கொண்டேன் நீ தானே என்னை மிரட்டி திட்டம் போட்டு திருமணம் செய்து கொண்டாய் நீ செய்ததை விட்டு உன்னை நான் பொண்டாட்டி என்று சொல்றேன் இதுக்கு நீ சந்தோசம் படனும்

ஓ இதுக்கு நான் சந்தோஷ படனுமா உனக்கே தெரியும் உன்னை நான் எதற்கு திருமணம் செய்தேன் என்று பின் எதற்கு வீணா பேசிற அது சரி பொண்டாட்டி பொண்டாட்டி என்று சொல்றியே நான் கிழே உங்கர்ந்து உள்ளேன் என கேட்கிறியே அந்த அந்த அளவுக்கா இந்த கயிற மதிக்கிற என தன்னுடைய கழுத்தில் உள்ளதை துக்கி கண்பிக்க

ஏய் உனக்கு வேணா அது கயிறா தெரியலாம் நமக்கு எந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடந்து இருந்தாலும் இனி வாழ்க்கை முழுவதும் நீ ஏன் மனைவி அதை மனதில் வைத்துகொள் அதோடு நீ என்னுடைய மாமாவை பழி வாங்க என்னை மணந்து கொண்டாய் என்று தெரியும் உன்னை முழுசா என்னுடைய மனைவியா மாற்றுவது மட்டுமல்லாமல் உன்னிடம் இருந்து என்னுடைய மாமாவையும் காத்து நீயே அவரிடம் நீ செய்தவைகளுக்கு மன்னிப்பு கேட்குமாறு செய்வேன்

அபி “என்ன சவாலா”

அபை “அப்படிதான் வைத்து கொள்ளே”

பார்க்கலாம் நானும் உன்னிடம் ஒரு சவால் விடுறேன் நீயே உன் வாயால் உன்னுடைய மாமாவிற்கு நான் செய்தது சரிதான் என சொல்ல வைக்கிறேன் பார்

அபை “அதையும் பார்க்கலாம்”

அபி “பாரு பாரு, ஆனால் எனக்கு இப்ப ஒன்னு சொல்லு இந்த அறையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் யார் சம்பாதித்து வாக்கியது கேள்வி எழுப்ப

“இப்போது அதை எதற்கு கேட்கிறாய் அபை வினவ”

சொல்லுங்கள் என அம்மு கூற அபை “என்னுடைய மாமா வாங்கியவைகள் எனும் போதே அவனும் உணர்ந்தான் அவள் கிழே அர்ஜுனிடம் சொன்ன வார்த்தைகளை”

அவன் மாமா வாங்கியது என்று சொல்லும்போதே தடுமாற்றத்துடன் சொல்ல அவனுக்கு புரிந்துவிட்டது என்பதை அம்மு அறிந்தாள் எனவே அவளே பேசத்தொடங்கினாள் “புரிந்துவிட்டது போல பொண்டாட்டி என்று உரிமை கொண்டாடினால் மட்டும் போதாது அதற்கான கடமைகளையும் செய்ய வேண்டும்

நாளை இந்த அறையில் இருக்கும் சிறிய பொருள் என்றாலும் சரி உங்களுடைய சொந்த வருமானத்தில் வாங்கியதாக இருக்க வேண்டும் நீ உன் வருமானத்தில் என்னால் ஒரு பாய் மட்டுமே வாங்க முடியும் என்றாலும் சரி வேறு ஒருவரின் பணத்தில் அதிலும் குறிப்பாக உங்கள் மாமா பணத்தில் வாங்கியதை நான் உபயோகிக்க மாட்டேன்

இவ்வளவு நேரம் நீ பேசினாயே என்னை உன்னுடைய மனைவியாக இருக்க செய்வேன் என்று அதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் எனக்கு அதில் ஒன்றும் இல்லை

இங்கு இருக்கும் பொருட்களில் ஒன்று கூட நீ வாங்கியது இல்லையா

இந்த அறையில் இருக்கும் என்னுடைய புத்தகங்கள் இந்த போர்வை என ஒரு போர்வையை சுட்டிகாட்டி இவை இரண்டும் மட்டுமே நான் வாங்கியவை என்றான்

அவள் அவன் கூறிய போர்வையை எடுத்து தரையில் விரித்து அதில் படுத்து கொண்டாள்

அபைக்கு அவள் செய்வது அனைத்தும் வித்தியாசமாகவே தெரிந்தது தெரிந்தது இருந்தும் அதை காட்டிகொள்ளாமல் அவளின் அருகே சென்று படுத்தான்

தான் அருகே அபை படுக்கவும் அவனை நோக்கி திரும்பியவள் இங்கே எதற்கு படுக்கற உனக்குத்தான் உன்னுடைய மாமா வாங்கி கொடுத்த பெட் இருக்கே அதில் தூங்க வேண்டியது தானே

இன்றுதான் திருமணம் செய்து உள்ளேன் யாராவது புது பொண்டாட்டியை விட்டு தனியா படுப்பானா என அவளை ஒட்டி படுக்க

கொழுப்பா நான் முதலிலே சொல்லிவிட்டேன் இந்த பொண்டாட்டி சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடுகிற வேலை வேண்டாம் அதோடு நீ எதுக்கு என்னை நெருங்க பாக்குற என்று தெரியாத அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை

இவரு திடிர்னு வந்து நீ தான் என்னுடைய மனைவி சொல்வாராம் நா அதை நம்பனுமா உனக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை என்னிடம் நீ நேரடியாகவே கேட்கலாம்

அபை “நான் கேட்ட நீ உண்மையை சொல்வாயா”

கேட்பது எப்படி உன் விருப்பமமோ அதே போல் நீ கேட்பதற்கு பதில் அளிப்பது சொல்லாமல் இருப்பதும் என்னுடைய விருப்பம் அதுக்காக நீ இப்படி சிப் ட்ரிக் எல்லாம் உபயோகிக்க வேண்டாம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும் என நினைத்தால் தான் சொல்வேன் இல்லை எனில் உன்னால் என்னிடம் இருந்து ஒரு வார்த்தை கூட உன்னால் வாங்க முடியாது

நான் உன்னிடம் இருந்து எதாவது தெரிந்து கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் உன்னை என்னுடைய மனைவி என்று சொன்னது உண்மைதான் நான் முன்பு சொன்னது போல் என்னுடைய வாழ்க்கையில் மனைவி என்றால் அது நீ ஒருத்தி மட்டுமே அதையும் நீ உன் மனதில் நிறுத்திகொள் அதனால் நான் எப்பொழுதும் உன்னுடன் தான் இருப்பேன் உன் அருகில் படுப்பேன் உன்னால் என்ன செய்ய முடியும் இது நீயே ஏற்படுத்தி கொண்டது ஏற்றுதான் ஆக வேண்டும் என்றுவிட்டு கண்களை முடிகொண்டான்

அவன் அவ்வாறு சொல்லியது அவள் மனதில் ஏன் என்றே தெரியாமல் ஒரு நிம்மதி எழுந்தது என்னதான் பழிவாங்க அவள் வந்திருந்தாலும் அதை வெளியில் இருந்தே செய்து இருக்கலாம் இவனை திருமணம் செய்ய தேவையே இல்லை இருந்தும் அபையை மணக்க வழுவான காரணம் அவளிடம் இருந்தது

இதையெல்லாம் யோசித்து கொண்டே உறங்கிபோனாள்

இங்கே வர்ஷாவின் அறைக்கு வந்த அர்ஜுன் அவளிடம் ஏதும் பேசாமல் தன்னுடைய உடைகளை மாற்றி கொண்டு வந்து தரையில் படுத்துவிட்டான்

அவன் வெறும் தரையில் படுக்கவும் இதுவரை தயக்கம் மற்றும் அவனிடம் எப்படி பேசுவது என நினைத்த வர்ஷா ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கொண்டு ஏங்க கிழே படுத்து இருக்கீங்க மேலே பெட்டில் படுங்க தரையில் படுத்தால் குளிரும்

தரையில் படுத்து கண்களை முடிய நிலையிலே அவள் சொல்வதை கேட்டு கொண்டிருத்த அர்ஜுன் அவள் முடிக்கவும் நான் இந்த வீட்டில் இருப்பதையே அருவெறுப்பாக உணர்கிறேன் இந்த வீடு உன்னுடைய தாத்தா கட்டியதாமே அதனால் தான் நானும் அம்முவும் இந்த வீட்டில் இருக்கிறோம் உன்னுடைய அப்பா மட்டும் கட்டிஇருந்தார் என்றால் எங்கள் மூச்சு காத்துகுட இந்த வீட்டில் விட மாட்டோம்

அம்மு சொன்னதை நீயும் கேட்டாய் தானே நாளையில் இருந்து நான் என்ன வாங்கி தருகிறேனோ நீ அதை மட்டுமே உபயோகிக்க வேண்டும் நாளை இந்த அறையில் உள்ள பொருட்கள் உன்னுடைய பொருட்கள் எதுவும் இங்கே இருக்க கூடாது

நாளை காலை சிக்கிரம் தயாராக இரு உன்னையே கடைக்கு அழைத்து செய்கிறேன் என்ன தேவையோ வாங்கிகொள் அம்முவிற்கு வாங்குவது என்றால் நானே வாங்கிவிடுவேன் ஆனால் நீயோ அந்த ரவி-லக்ஷ்மி பொண்ணு அதனால் உனக்கு எது பிடிக்கும் என்று எனக்கு எப்படி தெரியும் கடையில் இருப்பது பிடிக்குமா இல்லை அடுத்தவர் வைத்திருக்கும் பொருள் பிடிக்குமா என்று என்றான்

வர்ஷாவோ என்ன இவர் கடைக்கு கூட்டி செல்லும்போது அங்கிருக்கும் பொருட்டகளை தானே வாங்க முடியும் அடுத்தவர் வைத்திருப்பதை எப்படி வாங்க முடியும் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை தனக்குள் சொல்லி கொண்டு அவளும் கிழே படுத்து கொண்டாள் அவனை விட்டு சிறிது தள்ளி

பொழுது யாருக்கும் காத்திருக்காமல் அதன் வேலையை செய்ய அதிகாலை ஐந்து மணிக்கே எப்பொழுதும் போல் அபிக்கு விழிப்பு வந்து விட்டது தன்னுடைய போனின் வழியாக மணியை பார்த்தவள் அவளுடன் ஒருவன் இருக்கிறான் என்பதை கண்டுகொள்ளாமல் எப்பொழுதும் போல் தன்னுடைய காலை ஓட்டத்திற்கு தயார் ஆகினாள்

தன்னுடைய ஓட்டத்தை தொடர கீழே வந்ததவள் ஒரு நிமிடம் நின்று மேலே வர்ஷாவின் அறையை நோக்கினாள் எப்போதும் அர்ஜுனும் அவளும் சேர்ந்து தங்களுடைய காலை உடற்பயிற்சி ஆன ஜாகிங் செல்வர்கள் அதனலே பார்த்தால் அறை இன்னும் திறக்காமல் இருக்கவும் அவள் தனியே தன்னுடைய உடற்பயிற்சியை தொடர சென்றாள்

அம்மு அந்த வீட்டில் சுற்றியுள்ள தோட்டத்தில் ஒரு முழு ஓட்டத்தை முடிக்க அவளின் எதிரே அர்ஜுன் நின்றிருந்தான்

அச்சுவை பார்த்த அம்மு “அச்சு நீயும் எழுந்து விட்டாயா சரி வா நான் ஓட்டத்தை தொடரலாம்”

அச்சு அசையாது நிற்கவும் அம்மு அவனை நோக்க அவனோ “நான் எதற்கு அம்மு நீ தான் தனியாக செய்து கொண்டுருக்கிறாயே என்றான்”

என்ன கோவமா நான் முதலில் தயாராகி வந்தததும் உன்னுடைய அறையை பார்த்தேன் திறக்கவில்லை நீ தூங்குகிறாய் என்று நினைத்து வந்தேன். இனி நான் உன்னிடம் அதிக உரிமை எடுக்க முடியாது தானே இப்போது உனக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாள்

அம்மு அவள் வந்தால் என்ன எனக்கு எப்போதும் நீயே முதலில் அதன் பின்பு மற்றவர்கள் அது யாராக இருந்தாலும் சரி

சரி வா கொவபடாதே இனி இப்படி செய்ய மாட்டேன் என்றால் பின் இருவரும் தங்களுடைய ஓட்டத்தை தொடர்ந்தனர்.

அவர்கள் தங்களுடைய உடற்பயிற்சி முடித்து உள்ளே வர அப்பொழுதுதான் அந்த வீட்டில் ஒவ்வொருவராக எழுந்து வெளியே வந்தனர் அவர்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் அம்முவும், அபையும் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க எப்போதும் அருந்தும் பழசாறு கோப்பைகளில் நிரப்பி கொண்டுவந்தார் கங்கா

அம்மு கங்காவை பார்த்ததும் கங்கா மா நீங்க எப்ப இங்கே வந்தீர்கள்

கங்கா “ நான் நேற்று நைட் வந்துவிட்டேன் அர்ஜுன் தம்பி இந்த வீடு விலாசம் கொடுத்து வர சொன்னுது அதுதான் வந்தேன்”

சோ ஸ்வீட் அச்சு நீ என்று விட்டு கங்காவை பார்த்து “கங்கா மா அங்கே நீங்கள் எப்படி எங்களை கவனித்து கொண்டிர்களோ அதே போல் எங்களை மட்டும் இங்கே நீங்கள் பார்த்தால் போதும்

அம்மு இவற்றை சொல்லும் போதே அதை கேட்டவாறு படியில் இறங்கி வந்தான் அபை வந்தவன் கங்கா மா நீங்கள் உங்க அபியை மட்டும்தான் கவனிபிங்களா இந்த அபியோட புருஷன் அபையும் கொஞ்சம் கவனிக்கலாம்

கங்கா “பாப்பா உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா அதனால் தான் அர்ஜுன் தம்பி இங்கே வர சொன்னுதா மாப்பிள்ளை நல்லா இருக்கார் பாப்பா உனக்கு ஏத்த மாதிரியே”

அபை சும்மா இருக்காமல் என்ன கங்கா மா நான் மட்டும்தான் நல்ல இருக்கேனா உங்க அர்ஜுன் தம்பி மனைவி நல்ல இல்லையா என அப்போது அங்கு வந்த வர்சாவை கட்டி கேட்டான்

என்ன அர்ஜுன் தம்பி உங்களுக்கும் கல்யாணம் முடிந்து விட்டதா இந்த பாப்பாவும் எங்க தம்பிக்கு எத்த மாதிரி நல்லாத்தான் இருக்கு என்றார்

அம்மு,அச்சு இருவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை ஏன்னெனில் சென்னை வந்ததில் இருந்து அவர்களை பார்த்து கொள்பவர் கங்கா எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாமல் அவர்கள் மீது அன்பை பொழிபவர் அவருக்கு பிள்ளை என்று யாரும் இல்லை கணவனையும் இழந்துவிட்டார்

அம்முவும்,அச்சுவும் இங்கிருந்து செல்லும்போது அவரையும் தங்களுடன் அழைத்து செல்வது என்ற முடிவிற்கு வந்திருந்தனர் அந்த அளவிற்கு கங்கா அவர்களின் மீது அன்பை காட்டினார்

உள்ளம் கரையும்......................................
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top