KUK - 11

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends i come with the next update and sorry for the delay last week i have lot of work so i am unable to post update and thanks for your valuable comments and i am waiting for your comments on this update, happy reading..........................................


உள்ளம் – 11

தன்னுடைய மாமாவை சமாளித்து அறைக்கு வந்த அபைக்கு அவனின் நாசியில் புதிய நறுமணம் நுகர அம்முவின் துணிகள் பெட்டின் மேல் அப்படியே கிடந்தது

என்னடா அபை உன்னுடைய அறையே பெண்கள் தங்கும் அறை போல் உள்ளது அவ வந்து ஒரு பத்து நிமிடம் இங்கே இருந்திருப்பாளா அதற்கே அவளின் அறையில் நுழைவது போல் உள்ளது இனியும் இப்படித்தான் இருக்குமோ உனக்கு எப்பொழுதும் உன்னுடைய அறை தூய்மையாக இருக்க வேண்டும் அதோடு எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும் ஆனால் இவளுக்கு சுத்தம் என்றால் என்ன என கற்று தர வேண்டுமோ அவன் மனது அவனையே கேலி செய்ய அதை அடக்கி பெட்டின் மேல் கிடந்த அவளின் பட்டு சேரியை மடித்து கபோர்டில் வைத்தான் அதோடு அவள் கலட்டி அப்படியே போட்டுவிட்டு சென்ற நகைகளை எடுத்து பத்திர படுத்தினான்

இவளையும் இவள் பேச்சு,நடவடிக்கை எல்லாம் ரொம்ம பணக்காரி போல் தெரிகிறது இவளுக்கும் மாமாவிற்கும் அப்படி என்ன பகை இருக்கும் அவரை அவுமனபடுத்தி பார்க்க எண்ணுகிறாள்

இப்பொழுது எங்கே போனால் எப்போது வருவாள் என ஒன்றும் தெரியவில்லை அவளின் பேர் கூட தெரியவில்லை அவளின் அண்ணன் எதோ பெயர் சொல்லி கூப்பிட்டனே என்ன பெயர் ம் நியாபகம் வந்துவிட்டது அம்மு அப்படிதானே அழைத்தான்

ஆனால் இது அவள் உண்மையான பெயர் போல் தெரியவில்லையே ஒருவேளை செல்ல பெயராக இருக்குமோ அபை இவளின் பெயர் என்ன வாக இருந்தால் என்ன இப்போது அது ரொம்ப முக்கியமா அவள் உன்னை மிரட்டி திருமணம் செய்தது உள்ளாள் அதோடு திட்டத்தோடுதான் இந்த வீட்டில் அடியெடுத்து வைத்து வந்துள்ளாள் முதலில் அது என்ன என்பதை கண்டுபிடி

என்ன இருந்தாலும் இது உன்னுடைய குடும்பம் இதில் அவள் பெரிதாக ஏதேனும் செய்யும் முன் அதை தடுத்து மாமாவையும் காக்க வேண்டும் எண்ணிகொண்டான்

ரவி வீட்டின் எடுத்த படாத சட்டம் ஒன்று அனைவரும் இரவு உணவிற்கு வந்து விட வேண்டும். இரவு ஒரு வேளை மட்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர் அப்பொழுதுதான் வீட்டில் நடக்கும் அனைத்து விசியங்களும் விவாதிக்கபடும் அதற்காகவே இந்த விதிமுறை

அன்று இரவும் அனைவரும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க அம்மு,அச்சு இருவர் மட்டுமே அங்கே இல்லை இதை கவனித்த ரவி வர்ஷாவிடம் எங்கே உனது கணவன் நமது வீட்டின் விதிமுறை உனக்கு தெரியும் தானே இதை பற்றி அவரிடம் நீ சொல்லவில்லையா இப்பொழுதே போன் செய்து வர சொல் என்னதான் இருந்தாலும் என்னுடைய பெண்ணின் கணவன் ஆகிவிட்டான் அதற்கான மரியாதையை கொடுத்து ஆகாவேண்டியுள்ளது என்று விட்டு

அபையின் புறம் திரும்பி எங்கே உன்னுடைய மனைவியும் இன்னும் வர வில்லையா நமது வீட்டின் கட்டுப்பாடு உனக்கு தெரியும் தானே நம்முடைய வீட்டு பெண்கள் மாலை 7 மணிக்கு முன்பே வீட்டில் இருக்க வேண்டும் அதன் பின் வெளியே செல்வது என்றால் வீட்டில் உள்ள ஆண்கள் துணையோடுதான் செல்ல வேண்டும் இனி ஒருமுறை இதுபோல் நடக்க கூடாது பார்த்துகொள் அவளுக்கு போன் செய்து எங்கே இருக்கா கேட்டு சென்று அழைத்து வா

ரவி சொல்லியும் வர்ஷாவும், அபையும் அமைதியா இருக்க சுமலா “போன் பண்ண வேண்டியது தானே எதற்கு இரண்டு பேரும் அமைதியா இருக்கீங்க ஒரு வேளை இருவரின் போன் நேம்பர்களும் உங்களிடம் இல்லையா”

அபை அவசரமாக போன் நெம்பர் இருக்கு ஆனால் அவளுக்கு அவளின் வேலை நேரத்தில் யாரும் தொந்தரவு செய்வது பிடிக்காது எதோ அவளுடன் நீண்ட நாள் பழகியது போல் பதிலளிக்க வர்ஷாவும் “அப்பா அது வந்து அவரும் ஒரு மருத்துவர் தான் இப்போது ஏதேனும் அவசர சிகிச்சை அளித்து கொண்டிருந்தால் தொந்தரவாக இருக்கும்”

வர்ஷா, அச்சு மருத்துவர் என்றவுடன் ரவிக்கு பரவாயில்லை நம் பெண் ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து உள்ளாள் இனி அவளின் வாழ்க்கை நன்றாக இருக்கும் அவள் எப்படி வாழ்க்கை நடத்துவாளோ அவனிடம் என்ன வசதிகள் இருக்கும் நினைத்து கவலை கொள்ள தேவையில்லை வேண்டும் என்றால் ஒரு மருத்துவமனையை கட்டி அபையையும்,வர்ஷாவின் கணவரையும் பங்குதார்களாக இருக்க செய்து விடலாம் இருவரும் மத சம்பளத்திற்கு ஏன் இன்னொருவரிடம் கைகட்டி நிற்க வேண்டும்

வர்ஷா கணவர் என்றே சொல்கிறோம் அவரின் பெயர் என்ன அதைகூட தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே எண்ணி ரவி “வர்ஷாவிடம் உன்னுடைய கணவரின் பெயர் என்ன வினவ” அவளோ தெரிந்தால் தானே சொல்வாள் தெரியாது முழிக்க பாட்டி “கணவனின் பெயரைதானே கேட்டான் நீ அதற்கு எதற்கு இப்படி திருவிழாவில் காணாமல் போன குழந்தை மாதிரி முழிக்கிற சொல்ல வேண்டியது”

வர்ஷா மனதில் தெரிந்தால் சொல்ல மாட்டேன் என்றா சொல்கிறேன் அவரின் பெயர் சுருக்கம் ஸ்.எ என்பது மட்டும் தெரியும் ஆனால் பெயர் தெரியாதே நினைக்க அபை இவளுக்கு அவனை முன்பே தெரியும் போல ஓருவேளை இவன் அவளின் காதலனோ அதனால் அமைதியா இருக்காளா அன்று இவள் பேசியதற்கும் இப்போது இருப்பதையும் பார்த்தால் இவள் காதலித்தவன் இவனாக இருக்க வேண்டும்

பின் எதற்கு பழி வாங்குகிறேன் என வந்திருக்காங்க அவனும் இவளை காதலித்து என்னுடன் இவளுக்கு திருமணம் நடக்கஇருந்ததால் இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பர்களோ ஒன்றுமே தெளிவாக தெரியவில்லையே நினைக்க

லக்ஷ்மி “வர்ஷா என அழைத்து அனைவரின் கவனத்தையும் இழுக்க” தன் நினைவுகளில் இருந்து வெளிவந்தனர் வர்ஷாவும்,அபையும்

உன்னுடைய கணவரின் பெயரை அப்பா கேட்டு கொண்டுக்கிறார் நீ எதோ யோசனையில் உள்ளாய் முதலில் அவரின் கேள்விக்கு பதில் சொல் என்க

இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தனர் அம்முவும்,அச்சுவும்.

இருவரும் உள்ளே வரவும் அனைவரின் கவனமும் அவர்கள் புறம் திரும்பியது ஏற்கனவே தங்கள் நினைத்து நடக்காத கடுப்பில் இருந்த சுமலாவும் பாட்டியும் அம்முவை நோக்கி “ஒரு பெண் பிள்ளை வீட்டிற்கு வரும் நேரமா இது மணி என்ன தெரியுமா வினவ”

அம்முவோ இவர்களை வேற்றுகிரக வாசி போல பார்த்துவிட்டு நேராக அபையின் அறையை நோக்கி சென்றாள் அவளின் பின்னே வந்த அச்சு அந்த நேரம் போன் வரவும் அவனும் பேசிக்கொண்டே வர்ஷாவின் அறையின் பக்கம் சென்றான்

பாட்டி “இங்கு நடப்பது ஒன்றும் சரியாக தெரியவில்லை அவ என்ன என்றால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் முறைத்துவிட்டு செல்கிறாள் இவன் நாம் இருப்பதையே கண்டு கொள்ளாமல் போன் பேசிக்கொண்டு செல்கிறான், இதை முதலிலே கண்டித்து வைக்க வேண்டும் ரவி இருவரும் வந்த உடன் இதை முதலில் பேசி முடி”

ரவிக்கும் அவர்கள் நடந்து கொள்வது பிடிக்கவில்லை எனவே தனது அம்மா சொன்னதற்கு சரி என்றான்

இருவரும் எப்போது வருவர் என்று அனைவரும் காத்திருக்க அனைவரின் பொறுமையும் சோத்தித்து விட்டே இருவரும் வந்தனர்

அம்மு அபையின் அருகில் அமர வர்ஷாவின் அருகில் அமர்ந்திருந்த யாதவை தள்ளி அமர சொன்ன அச்சு அவளின் அருகில் அமர்ந்து கொண்டான் அவர்கள் தங்கள் துணையுடம் அமர்ந்தது ஒருவிதத்தில் ரவிக்கும்,லக்ஷ்மிகும் நிம்மதியை அளித்தது

ரவி பேச வாய் எடுக்க அதற்கு முன்பே அச்சு பேச தொடக்கி இருந்தான் அம்முவிடம் “அம்மு உன்னுடைய போன் என்ன ஆனது அம்மா போன் செய்திருந்தார் உனக்கு முதலில் அழைத்தாராம் அழைப்பு செல்ல வில்லையாம் எனவே எனக்கு அழைத்தார்”

அம்மு “என்னுடைய போனில் சார்ஜ் இல்லை அச்சு அதனால் ஆப் ஆகிவிட்டது இப்பொழுதான் ஜார்ஜ் போட்டுவிட்டு வந்தேன், சரி என்னவாம் எதற்கு அழைத்தார்களாம்” எப்பொழுதும் போல் இவர்கள் ஹிந்தியில் பேசிக்கொள்ள எதுவும் புரியாமல் அனைவரும் முழிக்க ரவி மட்டும் இருவரையும் நோக்கி உங்களின் அம்மா அல்லது அப்பாவின் போன் நெம்பர் கொடுங்கள்

உங்களின் திருமணத்தை பற்றி பேசவேண்டும் எங்க அச்சு இவர்க்கு எப்படி ஹிந்தி தெரியும் என யோதித்தாலும் எப்படியும் என்ன பேசுகிறோம் என்று அனைவர்க்கும் தெரிந்துவிடும் பின் எதற்கு ஹிந்தியில் பேச நினைத்து தமிழிலே பேச தொடங்கினர்

அர்ஜுன்,அம்மு இருவரும் பதிலளிக்காது அவர்கள் பாட்டுக்கு பேசி கொண்டிருந்தனர். அச்சு “நீ அவர்களிடம் பேசியே இரண்டு நாள் ஆகிவிட்டதாம் செல்ல பெண்ணின் குரலை கேட்காமல் இருக்க முடியவில்லையாம்”

இவர்கள் பதில் சொல்லாமல் அவர்களுக்குள் பேச சுமாலா “அண்ணா இவர்களிடம் போய் பெற்றோரின் நெம்பரை கேக்கிறீங்க அவர்கள் ஒழுங்கா வளர்த்து இருந்தால் இந்நேரம் எந்த சூழ்நிலையில் திருமணம் நடந்தது என அவர்களின் அம்மா,அப்பாவிடம் சொல்லி இருப்பார்கள்

ஆனால் இவர்கள் நல்ல பெரிய பணக்கார இடம் கிடைத்தவுடன் பெற்றோரையே மறந்து இங்கு இருக்கிறார்கள்”

சுமலாவின் பேச்சை கேட்டு அச்சு கோவம் கொண்டு எல்லோரையும் உங்களை மாதிரி பணத்திற்கு மதிப்பு கொடுப்பவர்கள் என நினைத்து விட்டிர்களோ எங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் வினவ அம்முவோ அச்சு அமைதியா இரு முதலில் சாஜி [அத்தை) எதற்கு போன் செய்தார்கள் என்று கேட்கலாம் உன்னுடைய போனை கொடு

அச்சு போனை கொடுக்க சுபத்தராவை அழைத்த அம்மு போனை பீக்கர் மோடில் போட்டு பேச தொடங்கினாள். அச்சு இப்ப எதுக்கு இவள் பீக்கரில் போட்டு பேசுகிறாள் நினைத்து அவள் பேசுவதை அங்குள்ள எல்லோர் போல கவனிக்க தொடங்கினான்

அந்த புறம் போனை எடுத்த சுபத்தரா “அம்மு நன்றாக இருக்கியா என் இரண்டு நாளாக போன் செய்யவில்லை பிரச்சனை ஒன்றும் இல்லையே இந்த அச்சுவும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறான் எதுவாக இருந்தாலும் அம்முவிடம் கேளுங்கள் என்கிறான் அங்கு என்னதான் நடக்குது. முதலில் இருவரும் அங்கிருந்தது கிளம்பி வாருங்கள் நான் உங்களை அங்கே செல்ல அனுமதித்து இருக்க கூடாது”

அம்மு “சாஜி முதலில் மூச்சை விடுங்கள் ஒரே நேரத்தில் இத்தனை கேள்வி கேட்டால் எப்படி”

நீ நன்றாக உள்ளாய் தானே முதலில் அதற்க்கு பதில் சொல்

ரவி “சாஜி என்றால் அத்தை தானே இவன் அம்மா என்கிறான் இந்த பொண்ணு அத்தை சொல்லுது அப்படி என்றால் இவர்கள் அண்ணன்,தங்கை இல்லை பின் எதற்கு அபை இருவரும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லவேண்டும். முதலில் இவர்கள் பேசுவதை கவனிக்கலாம் மற்றதை பின்பு பேசிக்கொள்ளலாம்”

அம்மு “சாஜி நான் நன்றாக இருக்கிறேன் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் உங்களுக்கு தெரியவேண்டிய விசியம் ஒன்று உள்ளது இதை உங்களிடம் சொல்லாமல் மறைக்க என்ன வில்லை நேரில் வந்து சொல்லலாம் என்று இருந்தேன் ஆனால் இப்படி போனில் சொல்வேன் என்று நினைக்கவில்லை”

அம்மு என்ன என்றாலும் சொல்லு மா உன்னுடைய அத்தை இருக்கேன் அனைத்தையும் பார்த்து கொள்கிறேன்

உங்களை பற்றி தெரியாதா அத்தை அது என்ன வென்றால் எனக்கும் டாக்டர். அபை சரணுக்கும் திருமணம் நடந்து விட்டது அதோடு அச்சுக்கும்-வர்ஷாக்கும் திருமணம் நடந்துள்ளது

எதிர் புறம் ஒரு நொடி அமைதி நிலவ அனைவரும் என்ன சொல்ல போறாங்க அவளுடன் கவனிக்க சுபத்தராவோ “அம்மு நீ எது செய்தாலும் யோசித்து செய்வாய் நீ இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க என்றால் இதையும் நன்கு யோசித்தே செய்திருப்பாய் ஒரு குறை என்ன வென்றால் உங்களின் திருமணத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்பதே”

அங்கிருந்த அனைவரையும் நோக்கி அம்மு திமிருடன் கலந்த கர்வ பார்வை பார்த்தாள் பின் அர்ஜுனிடம் போனை கொடுக்க அவனும் பேச தொடங்கினான் “மா உனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே சாரி மா இதை உங்களிடம் முன்பே என்னால் சொல்ல முடியவில்லை”

விடு பா இப்ப என்னுடைய பையனுக்கும்,பெண்ணிருக்கும் திருமணம் நடந்து இருக்கு அதை நான் பார்க்கவில்லை என்ற ஒரு குறையை தவிர எனக்கு இதில் மகிழ்ச்சியே சரி இரண்டுபேரும் உங்கள் வாழ்க்கை துணையை எப்போது நமது வீட்டிற்கு கூட்டி வர போறீங்க

இங்கு நாங்கள் என்ன நினைத்து வந்தோமோ அது அனைத்து நடந்த பிறகு அழைத்து வருகிறோம் அதுவரை நீங்கள் அனைத்தையும் பார்த்து கொள்ளுங்கள் உங்களது உடம்பையும் சேர்த்து சரி நான் வைக்கிறேன்

அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் பிள்ளைகள் மேல் அவ்வளவு நம்பிக்கையா என்றிருந்தது வெற்றிக்கு மட்டும் தனது தங்கை மீது பெற்றோர் நம்பிக்கை வைத்திருந்தால் நான் இந்த வீட்டில் இருந்தே இருக்க மாட்டேன் என்று தோன்றியது

இப்போது நீங்கள் பேசியதற்கு விடை கிடைத்ததா என்ற ரீதியில் அம்மு சுமலாவை நோக்க

ரவி இருவரது பெயர் என்ன அம்மு என்று அம்முவை பார்த்து வினவ ரவி “அம்மு என்றதும் அவளுக்கு அளவில்லாத கோவம் வந்தது” இவர் யார் என்னை என்னுடைய அம்மா வைத்த செல்ல பெயர் சொல்லி அழைக்க

அந்த கொவத்தினுடனே அங்கிருந்த தட்டை விசியடிக்க அது தரையில் விழுந்து நொறுங்கியது அதோடு அவள் அனைவரையும் நோக்கி “நான் இங்கு யாருக்கும் அம்மு இல்லை என்னுடைய பெயர் அபிதா அதை சொல்லி அழைத்தால் போதுமானது அதோடு இங்கு என்னை அழைத்து பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லை” என்று ஒரு பெண் சிங்கம் போல் கர்ஜிக்க

அவள் தட்டை துக்கி எறிந்தவுடன் அவளிடம் விரைந்த அச்சு அவள் பேசி முடிக்கவும் அங்கிருந்த நாற்காலியில் அவளை அமர்த்தி அமைதி படுத்தினான்

பின் அச்சு அங்கிருந்தவர்களை நோக்கி இங்கே பாருங்கள் அவளுக்கு அவளை மிகவும் நிசிப்பவர்கள் மட்டுமே அம்மு என்று அழைத்தால் பிடிக்கும் மற்றவர்கள் அப்படி அழைப்பதை விரும்ப மாட்டாள் அதோடு நான் அர்ஜுன் என்னையும் நீங்கள் அச்சு என்று அழைக்க வேண்டாம் புரிகிறதா

இவளின் கோபத்தை கண்ட அனைவரும் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோவம் வருமா நினைக்க அபை மட்டும் மனதில் என்னடா இன்னும் ஒன்றும் நடக்கவில்லையே நினைத்தேன் அதற்குள் சிறப்பாக நடந்துவிட்டது

வர்ஷா மிரச்சியுடன் அம்முவை பார்க்க அவளின் பார்வையை கண்ட யாதவ் “என்ன வர்ஷா அவங்களயே பார்த்து கொண்டிருக்க”

யாதவ் எனக்கு ஒன்னு சொல்லு ஒரு பொண்ணுக்கு இவ்ளோ கோவம் வருமா எனக்கு எல்லாம் கோவம் வந்தாலே அழுகையும் சேர்ந்துவந்துவிடும் ஆனால் இவங்க கொவப்படும்போது அபப்டியே பெண் சிங்கம் மாதிரி இருக்காங்க, என்ன ஒரு கர்ஜனை

யாதவ் “இவங்க செய்த செயலில் அங்கே பார் என்னுடைய அம்மாவும், நம்ம பாட்டியும் எப்படி மிரண்டு நிற்கிறாங்க”

வர்ஷாவும் பார்க்க இருவருமே பேய் அறைந்த மாதிரி நிற்கவும் அதை பார்த்து வர்ஷாக்கு சிரிப்பு வந்துவிட்டது பின்னே வீட்டில் உள்ள அனைவரும் இவர்களை பார்த்து நடுங்க இவர்கள் அம்முவின் கோவத்திலும்,செயலிலும் இப்படி நின்றால் சிரிப்புதானே வரும்

வெற்றி சூழ்நிலையை சகஜமாகும் வண்ணம் சரி நடந்ததை விடுங்க வந்து அனைவரும் அமருங்கள் சாப்பிடலாம் இன்று நேரம் அதிக மாகிவிட்டது நாளை நிறைய வேலை இருக்கு அதோடு மணமக்களை பார்க்க நமது உறவினர்கள் வருகிறார்கள் அதற்க்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

வெற்றி சொல்வது சரியாக பட அனைவரும் அமர்ந்தனர் சாப்பிடுவதற்கு அம்முவும் சாப்பிட தட்டில் கைவைக்க அச்சு சாப்பிடாதே அம்மு என்றான்

அனைவரும் அவனை கேள்வியாக நோக்க அம்முவும் “என்ன அச்சு என் சாப்பிட வேண்டாம் என்கிறாய்” அம்மு இந்த வீட்டில் இவர்கள் சமைத்து சாப்பிட வேண்டாம் யாருக்கு தெரியும் இதில் விஷம் கூட இருக்கலாம்

அபை இதற்குமேல் பொறுக்க முடியாது நினைத்து யாரேனும் தொடங்கும் முன் அவனே “மிஸ்டர்.அர்ஜுன் போதும் நிறுத்துங்கள் ரொம்ப அதிகமாக பேசுறீங்க அப்படி உண்ணும் உணவில் விஷம் வைக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, வாய்க்கு வந்ததை பேசாதீர்கள்”

அம்மு “அச்சு சொல்வதில் என்ன தவறு எப்படியும் இன்று நடந்த திருமணம் எப்படி என்று எல்லோருக்கும் தெரியும் அதில் எங்களை உங்கள் வீட்டில் சிலருக்கு பிடிக்காமல் இருக்காலாம் அதனால் விஷம் கூட எங்களுக்கு வைக்கலாம்”

அப்படி விஷம் வைக்கும் அளவுக்கு இங்கு யாருக்கும் கல் நெஞ்சு கிடையாது. உங்களை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்கு போய் யாராவது ஒருவரை கொள்ளும் அளவிற்கு செல்வார்களா

அது எங்களுக்கு எப்படி தெரியும் உங்கள் வீட்டில் இருப்பவர் பற்றி

அச்சு “நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் எனக்கு இங்கு உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லை, அம்மு நான் வரும் போதே உணவகத்தில் சொல்லிவிட்டு வந்தேன் இப்போது வந்துவிடும் எங்க அவன் சொல்லும்போதே உணவு வந்துவிட்டது”

இருவரும் அதையே உண்டனர் அதன் பின் அங்கு அமைதி நிலவ அம்மு “அச்சு வர்ஷா போட்டு இருப்பது எல்லாம் அவளின் அப்பா வாங்கி தந்தவை தானே இனி அவள் அவளின் அப்பா வாங்கி கொடுத்ததில் ஒரு குண்டு ஊசி கூட பயன் படுத்த கூடாது எல்லாம் நீ வாங்கி தந்தவைகளாக இருக்க வேண்டும் பார்த்துகொள்”

சரி அம்மு நாளைக்கே கடைக்கு சென்று அனைத்தையும் வாங்கி வந்து விடுகிறேன். அவள் இனி அவள் அப்பா வாங்கி தந்தவைகளை பயன் படுத்த மாட்டாள்

உள்ளம் கரையும்................................
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
நளினி ஸ்ரீ. p டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
ஆஹா பயங்கரமாக இருக்கு
இது பத்தாதே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top