Karuvarai Sontham - The End

murugesanlaxmi

Well-Known Member
#81
ரொம்ப ரொம்ப நன்றி அப்பா.....:):):)

நீங்கள் எதிர்பார்ப்பது உண்மை ப்பா...படித்த பெண் ஒரு வார்த்தை கூட எதிர்க்காமல் இருப்பாளா ?? அவளுடைய சூழ்நிலை அப்படி ப்பா...எந்த பெண்ணும் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க விரும்பமாட்டாள். ஆனால் எந்த காலமாக இருந்தாலும், இன்றும் பெண்கள் தனியே வாழுவது மிகவும் ஆபத்து என்பதை தான் செய்திகளில் வரும் செய்திகள் தெளிவாக காட்டுகிறது.......அது மட்டுமில்லாமல், அவளுக்கு பிறகு ஒரு பெண் (தங்கை) இருக்கிறாள். எவ்வளவோ பகுத்தறிவை வளர்த்துக் கொண்டாலும், இன்றும் சில விஷயங்களில் நம் சமூகம் பின்தங்கி தான் இருக்கிறதே ப்பா....ஒரு பெண் கணவனை விட்டு பிரிந்து வந்தால், என்ன காரணமோ, எதுவோ ? என்று தவறை பெண் பக்கம் தான் திருப்புவார்கள். அப்படி இருக்கையில், தன்னால் தன் தங்கையின் வாழ்க்கை பாதிக்கபட கூடாது என்று மிருதுளா நினைக்கத்தானே செய்வாள் ......இல்லை எனக்கு என் நிம்மதி தான் முக்கியம் என்று பிரிந்து வர முடியுமா ?? இது எல்லாவற்றுக்கும் மேல், ஒரு கத்தி மிருதுளா மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறதே அப்பா.....நீ பிரிந்துபோனால், ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோவை இன்டர்நெட்டில் போடுவேன் என்று ஒருவன் மிரட்டும்போழுது ஒரு பெண் என்ன செய்யமுடியும் ? ஒன்று போலீசுக்கு போகலாம........ ஆனால் அது அவ்வளவு சுலபமோ, அங்கே தனக்கு நியாயம் கிடைக்கும் என்றோ எப்படி எதிர்பார்ப்பது ??

மிருதுளாவின் பெற்றோர் செய்த செயல், நிச்சயம் தவறான ஒன்று தான்...ஆனால் அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தாலி கட்டிய கணவனே சொல்லிய பின், அந்த குழந்தையை கூடவே வைத்து, அதனால் வரும் கேள்விகளுக்கு பெண்ணை பெற்ற ஒரு தகப்பானாக மோகன் என்ன பதில் சொல்லமுடியும் ?? அதில் மிருதுளாவின் நடத்தை விமர்சிக்க படுமே......இதுகூட அவர் செய்த செயலுக்கு காரணமாக இருக்கலாமே ப்பா ......அதேபோல பின்னாளில் மாப்பிள்ளை வருவர் என்று அவர் நினைத்ததற்கு காரணம் குழந்தை தன்னுடையது இல்லை என்று சந்த்ருவிற்கு தெரியும்...அப்படி இருக்கையில் அந்த குழந்தையை அவன் கேட்க வாய்ப்பில்லை....வேறு ஒருவருக்கு பிறந்த குழந்தையை தன் குழந்தையாக வளர்க்கும் அளவுக்கு அவன் நல்லவன் இல்லை ...வேண்டுமென்றால், மனைவி செய்த தவறை மன்னித்துவிட்டுஅவளை ஏற்றுகொள்ள பின்னலில் வரலாம் என்று ஒரு தகப்பனாக அவர் நினைத்ததில் தவறில்லையே ப்பா.......சந்துரு வருவான் என்பது சந்தேகம் தான், இருந்தாலும் ஒரு நப்பாசை கூட இருக்காதா ?? அவர் மகளின் வாழ்கையை நினைத்து பார்கையில்...

இவையெல்லாம் என் மனதுக்குள் இருக்கும் எண்ணங்கள் தான் ப்பா, இதில் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
பிழை இல்லையம்மா. வருத்தம் தான் உள்ளது. இப்போ தான் வெளியே வராங்க. வரட்டும். இனி கதையில் கூட பெண்ணை படம் பிடிப்பவனை நல்லயிருப்பான் என்று கணிக்ககூடாது. எங்க அம்மா பட்ட கஷ்டத்தை நாவலில் படிக்க கூட எனக்கு பிடிக்காது. இது போன்ற நாவலை நான் படிப்பதை தவிர்த்துவிடுவேன். மகளுக்காக படித்தது. தனி கடிதத்தில் கூறியது போல் எதிர்பார்ப்புடன் இருப்பேன்
 
#82
வணக்கம் தோழிகளே !!

ஒருவழியாக உங்களின் ஆதரவோடு, எனது மூன்றாவது கதையான இந்த கருவறை சொந்தம் நாவலை முடித்துவிட்டேன். கதை திரி அமைத்துகொடுத்து ஊக்கபடுத்திய மல்லிகா அக்காவிற்கு என் நன்றிகளும், முத்தங்களும். thank you so much malli akkaa...

வாசகர்கள் நீங்க இல்லைனா, இந்த கதை இவ்ளோ அருமையா, அழகா வந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு எபிக்கும் உங்க கமெண்ட்ஸ் சொல்லி, என்னை ஊக்கபடுத்தின தோழிகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி. இந்த கதை என் இதயத்திற்கு நெருக்கமான ஒன்று. அவ்ளோ உணர்வு பூர்வமா எழுத முடிஞ்சது, அந்த கடவுள் கருணையால் தான். சோ அவருக்கும் என் பாதம் பணிந்த நன்றிகள். இந்த கடைசி எபி படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காம சொல்லுங்க ப்ரிண்ட்ஸ். உங்கள் கருத்துக்கு will be waiting eagerlyyyyyyyyyyy....அடுத்த கதை சம்வ்ரிதாவுடன் கூடிய சீக்கிரம் உங்களை சந்திக்க வருகிறேன்.;);)

கருவறை சொந்தம் கதை லிங்க் அடுத்த பத்து நாட்களுக்கு ஆக்டிவ்வில் இருக்கும். தோழிகள் அனைவரும் அதற்குள் படித்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். :):):):):):)

karuvarai sontham - end
Super story sis.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement