Kaathal Sinthum Thooral - Precap 15

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“ப்பா.. என்னப்பா என்ன பண்ணுது??” என்று கண்ணன் கேட்கும்போதே,

கண்மணி “ப்பா...” என்று மறுபுறம் வர, உறவுகளோ “என்னாச்சு??” என்று விசாரிக்க,
சியாமளாதான் “கண்ணா பேச நேரமில்லட.. டக்குனு ஹாஸ்பிட்டல் போயிடலாம்.. எதுன்னாலும் அங்க பார்த்துப்போம்..” என்று சொல்ல, சடகோபனோ “வேண்டாம்...” என்று தலையை ஆட்டி மறுத்தார்..


“ப்பா ப்ளீஸ் ப்பா..” என்றவன், “ம்மா நீயும் கண்மணியும் கூட்டிட்டு வாங்க..” என்று வேகமாய் போய் காரை கிளப்ப, சியாமளாவிற்கு உள்ளே பதறினாலும், கொஞ்சம் திடமாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்டே கணவரை அழைத்துக்கொண்டு மெதுவாய் நடக்க,

அவரின் வாயோ “ஒன்னுமில்லைங்க.. எல்லாம் நல்லதுக்குனு நினைப்போம்..” என்று சொல்ல, கண்மணிக்கோ எதுவுமே புரியவில்லை..
--------------------------------


ஸ்விட்ச் போர்ட் நோக்கிப் போனவளோ தற்செயலாய் பார்வையை டிவியில் பதிக்க, அது அந்த நேரம் பார்த்து மீண்டும் வருண் பற்றிய செய்தியினை ஒளிபரப்ப, கண்மணியின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்து, இமைக்கவும் மறந்து அப்படியே நின்றுவிட்டாள்..

மனதினுள்ளே ஒரு உணர்வு.. அதிர்ச்சிதான் அதிகம் இருந்தது..

‘வருண் இப்படியானவனா??!!’ என்ற கேள்வி..

இதுநாள் வரைக்கும் அவனைப் பற்றிய ஒரு ஆராய்வு அவள் மனம் நிகழ்த்தியதில்லை.. ஆனால் இன்றோ, முடிவே எழுதிவிட்டது எனலாம்.. ‘பணத்திற்காக....’ என்ற வார்த்தை அவள் முகத்தினை சுறுக்க வைக்க,

“ச்சே..” என்று கண்மணியின் இதழ்கள் முணுமுணுத்தது.
--------------------------------------------------------------


‘கண்மணி... இதோ இதோ வர்றேன்...’ என்று பறக்க, “அதிரூபா உனக்கு ஹெல்ப் பண்ண அந்த கடவுளே இருக்காருடா...” என்றவன் அத்தனை வேகமாய் சென்ற இடம், வேறெங்கே, மத்ய கைலாஷ் தான்..

பின்னே கண்மணி அங்கேதானே இருப்பாள்.. அந்த திண்ணம் அவனுக்கு உறுதியாய் இருக்க, அவனின் எண்ணமும் வீண் போகவில்லை.. நேரே உள்ளே சென்றவன் அன்று அவள் அமர்ந்த இடத்திற்கு செல்ல, அன்றுபோலவே இன்றும் சிலையென அமர்ந்திருந்தாள் கண்மணி..

‘ஆனா ஊனா சிலையாகிடுவா...’ என்றெண்ணியவனுக்கு என்ன முயன்றும் அவனின் மகிழ்வை மறைக்கவே முடியவில்லை..

“கண்மணி...” என்று மெதுவாகவே அழைக்கவேண்டும் என்று எண்ணியவன் அவனையும் மீறி சத்தமாய் அழைத்திட, வேகமாய் திரும்பிப் பார்த்தவளின் முகத்தினில்

‘எப்படி வந்தாய்...??’ என்ற கேள்வியே இருக்க,
“நீ இங்கதான் இருப்பன்னு தெரியும்...” என்றான் சந்தோசமாய்...
------------------------------


“பின்ன எப்படியாம்??” என்று புருவம் சுளித்து முகத்தை உர்ரென்று வைத்தே கண்மணி கேட்டாலும், அது அவனிடம் இருக்கும் உரிமையை காட்டுவதாகவே அவனுக்குத் தெரிய,

“சரி சரி கோவிக்காத கண்மணி...” என்றான் இன்னமும் மிருதுவாய்..

“நான் கோவப்படல.. ஆனா இப்படி கேட்டா எப்படி?? நான் ஏன் அழனும்...”

“சரி சரி கூல்...”

“நிஜமா சொன்னா எனக்கு வருத்தமோ, ஏமாற்றமோ எல்லாம் இல்லை.. ஒரு ஷாக் இருந்தது அவ்வளோதான்..” என்று வேகமாய் அப்போதும் கூட முனுமுனுப்பாகவே பேச,

“ஹ்ம்ம் நான் உன் கண்ண பார்த்து பேசணும் நினைக்கிறேன்.. ஆனா நீ இங்க பார்த்து பேச வைக்கிற..” என்று கண்மணியின் இதழ்களை நோக்கி அதிரூபன் விரல் நீட்டி சொல்ல,

“ஹா...!!!!!” என்று அதிர்ச்சி பாவனை தான் காட்டினாள் கண்மணி..
 

Joher

Well-Known Member
Ty Sarayu............

அதானே கண்ணை பார்த்து பேசணும்னு நினைக்கிறவனை ஏம்மா லிப்ஸ் பார்த்து பேசச்சொல்லுற......... கொஞ்சம் சத்தமா பேசிடு.......... ஹாப்பினு சொல்லிடு......... பயபுள்ள சந்தோசமா தூங்கட்டும்.......

டேய் நல்ல டிசைன்ல ஒரு வாட்ச் ரெடி பண்ணு.........

I love you I love you நீ எங்கு செல்லக் கூடும் என்னை மீறி?????
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு.....................

பணத்திற்காக வருண் என்ன பண்ணினான்????? ஆள்(பெண்) கடத்தல்????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top