Just Smile please

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
படித்ததில் சிரித்தது.

சிரிக்காம படிக்கனும்

ஜட்ஜ்:
எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???

விண்ணப்பதாரர்:-
ஐயா என் மனைவி என்னை தினமும்
பூண்டு உறிக்கச் சொல்கிறாள்
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள்
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள்
என்னால் முடியவில்லை .

அதனால் விவாகரத்து தாருங்கள். ...

ஜட்ஜ்: -
இதெல்லாம் காரணமாக ஏற்றுக்
கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய
பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு
மூடி நான்கு முறை குலுக்கினால்
தோல் தன்னால் வரப்போகிறது.
அரிய வேண்டிய வெங்காயத்தை
பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால்
ஈசியாகவும் வெட்டலாம்
அரியும் போது கண்ணிலும்
தண்ணீர் வராது.
பத்து பாத்திரத்தையெல்லாம்
பத்து நிமிஷம் தண்ணீரில்
ஊற வைத்து விம் பாரால
தேய்ச்சா சரியா போயிடுது.
அப்படியும் போகலேண்ணா
பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை
போட்டு ஒரு ஸ்பூன் வினிகர்
விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா
இருந்தாலும் பளிச்சுண்ணு
ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல
ஊற வைக்கறதுக்கு முன்னாடி ,
நல்ல தண்ணியில ஒரு தடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊற வைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப
பூ மாதிரி இருக்கும்.

நீ சொன்ன காரணங்களுக்கெல்லாம்
டைவர்ஸ் தர முடியாது. புரிஞ்சதா...

விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க.

ஜட்ஜ் :
என்ன புரிஞ்சது.?

விண்ணப்பதாரர்:
எம் பொண்டாட்டி பூண்டு, வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top