JERRY'S - 3. ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

JERRY

Active Member
#1
ஐ ஹேட் பாடிகார்ட்ஸ் addtext_com_MDMwMjQ1NTUzMzc.jpg

அத்தியாயம் 3.

"எப்படிடா அவன் தப்பிச்சான்? ஒரு சின்ன பையனை உங்களால பிடிக்க முடியல? போங்கடா இங்க இருந்து , இருக்குற கோபத்துல உங்கள எதாவது செய்திட போறேன்" என்ற தீரனின் ஆதங்கமான குரல் அங்குள்ளவர்களை நடுங்க செய்தது. அவனது எதிரில் இருந்த அடியாட்களில் ஒருவன் "இல்லண்ணா ஒரு பொண்ணு நடுவுல வந்து அவன காப்பாத்திட்டாண்ணா" என்றான்.
"காரணம் சொல்லாதீங்கடா எனக்கு ஈசன் வேண்டும் அவனை உயிரோட கொண்டு வாங்க, அதுவர என் கண் முன்னாடி வராதீங்க, எல்லாரும் இங்க இருந்து முதல்ல போங்க"என்று தன் அடியாட்களை விரட்டியவன் "இந்த தடவை என்கிட்ட தப்பிச்சுட்ட ஈசா... ஆனா அடுத்த தடவ என்கிட்ட சிக்குவடா அப்போ இருக்கு உனக்கு" என்று தீரனின் உறுமல் அந்த கட்டிடம் எங்கும் எதிரொலித்தது.

அதேநேரம் ஈசனின் விருந்தினர் வீட்டில், அவனது சிந்தனையை ஆட்டுவிக்கும் மெய்க்காப்பாளினி அவளுக்கான அறையின் சாளரம் வழியாக பரவும் இருளை வெறித்தவளின் எண்ண அலைகளில், "நீ என்ன பாப்பா... சண்டை போடுற?இப்படி சண்டைப் போட்ட உன்ன அடிச்சி சாய்க்க 10 செகண்ட் போதும், நீ கீழ விழுந்துடுவ" என்ற குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. "என்னை பார்த்தா பாவமா இல்லையா?" என்ற பத்ராவின் மறுமொழிக்கு, "பாப்பா உன்ன கொல்ல வர்றவன் உன்னை பொண்ணுனு பார்த்து இரக்கப்படமாட்டான். இரக்கத்தை எப்போவுமே எதிர் பார்க்காத அதே மாதிரி நீயும் இரக்கப்படாத... உன்னோட இரக்கம் உனக்கே வினையா வரும்" சிறிது நேரம் அந்த குரலை தன்னுள் ஒலிக்க விட்டவளின் விழிகள் கண்ணீரால் நிரம்பியது.

அன்றைய இரவில் உறங்காத மூன்று ஜோடி கண்கள் வானத்தை பார்த்துக் கொண்டு வெவ்வேறான சிந்தனையில ஆழ்ந்தன, அவைகளில் இரையை இழந்த வேடனின் கண்கள் ஒன்று, அதிர்ச்சியா இல்லை ஆச்சர்யமா என உணராத கண்கள் ஒன்று, தொலைந்த அன்பை தன் நினைவுகளில் குரலாக நினைத்து உருகும் கண்கள் என மற்றொன்று...

மறுநாள் காலை 7 மணிக்கு ஈசனை எழுப்பினான் கதிர், "டேய் மாப்பிளை காலேஜ்க்கு டைம் ஆச்சு எந்திரிடா, அந்த பொண்ணு பத்ரா கூட எந்திரிச்சி எனக்கு உதவி செஞ்சிச்சு" என்று கூறவும் வேகமா எழுந்து அமர்ந்தான் ஈசன்."மச்சான் நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும் அவ இருக்களா... அந்த பத்ரா... அவ... அந்த பொண்ணு என்னோட பர்சனல் பாடிகார்ட்" என்று சொல்ல,"காலங்காத்தால என்னய வச்சி காமெடி பண்ண கொன்னுடுவேன் ஓடிடு... அதுவே சின்னப் புள்ளை மாதிரி இருக்கு இதுல அந்த பிள்ளைய பர்சனல் பாடிகார்டுனு சொல்லுற... போடா டேய்... பொய் சொல்ல ஒரு அளவு வேண்டாம்"என்றான் கதிர்,
தன் நண்பனை நம்பவைக்க நேற்று அந்த சண்டைக்காரியை சந்தித்த நொடியில் இருந்து அவனை பாதுகாத்து அழைத்து வந்த வரை சொன்னான்.

அப்பொழுதும் நண்பனின் கூற்றை நம்பாத கதிர்,"நல்லா இருக்கு மாப்பிள சீன், நீ வேணும்னா ஒரு கதை எழுது நல்லா போகும் ஏன்டா டேய் பெருசா எம்பிஏ படிக்க வந்தா அடுத்தவன் தலையில மிளகா அரைச்சுடுவீங்களே, ஒழுங்கா காலேஜ் கெளம்புற வழிய பாரு" என்று கூறி சென்றான் கதிர்.

"என்ன சொன்னாலும் நம்பமாட்டேங்கிறான் இவனை வச்சு என்ன செய்ய? முதல்ல காலேஜ் கெளம்பி போவோம் ஈவினிங் வந்து இன்னொரு தடவ சொல்லி பார்ப்போம்" என்று தனக்குள் சொல்லியாவாறு தயார் ஆனான் ஈசன். (அவன் சொல்லும் அவசியம் இன்றி பத்ராவின் செயல் திறனை கதிர் காண்பான் என்று அங்கு எவரும் அறிய வாய்ப்பில்லை...)

"டேய் கதிரு என்ன சொல்லிட்டு நீ என்னடா பண்ணுற வேகமா வாடா" என்று கதிரை கூவி கொண்டு இருந்தான் ஈசன்.

ஈசன், கதிர், பத்ரா மூவரும் கதிர் சமைத்த காலை உணவை முடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களுக்கான காரை நோக்கிச் சென்றனர்.

கதிர் வாகனம் இயக்க, அவன் அருகில் ஈசன் உட்காரந்து கொண்டான், பின் சீட்டில் பத்ரா அமர.. அவர்களது வாகனம் கல்லூரி நோக்கி கிளம்பியது.

****
அவர்களை பின் தொடரும் அடியாட்கள் ஒருவன் அவனது தொலைபேசியை இயக்கி, "அண்ணா அவங்க மூணு பேரும் காலேஜ்க்கு கெளம்பிட்டாங்க,

"என்னடா சொல்லுற அவன், அவன் பிரண்ட் ரெண்டு பேரு தானே..."

"இல்லண்ணா கூட ஒரு பொண்ணு இருக்கா",

"யாரு இருந்தா என்னடா மிச்ச பேரை போட்டுட்டு அவனை தூக்கிட்டு வாங்கடா"... என்ற உத்தரவை செயலாற்ற சென்றான்.

கல்லூரி செல்லும் வழியில் ஒரு வயதானவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்க அவருக்கு ஒரு சிலர் உதவி கொண்டு இருந்ததை பார்த்த கதிர் வேகத்தை குறைக்க, அதனை பார்த்த ஈசனும்... "வண்டிய நிறுத்துடா ஹெல்ப் ஏதும் பண்ணலாம்" என்று கூற,கதிரும் வாகனத்தை ஓரமாக நிறுத்தியவன் அவருக்கு உதவ வாகனத்தில் இருந்து இறங்கும் நேரம் அவர்களை தடுத்தாள் பத்ரா, "இல்ல இங்க தப்பா இருக்கு நம்ம உடனே கெளம்பனும் வாங்க" என்றவாறு சுற்றி கவனித்தாள், அவளது பேச்சை கவனிக்காமல் அவருக்கு உதவ சென்றனர் இருவரும்.

விபத்து எதிர்திசை சாலையில் நடந்ததால் ஈசனும், கதிரும் சாலையை கடக்க காத்திருந்த நேரம் எங்கிருந்தோ வேகமாக வந்த கார் இவர்களை இடிக்க நெருங்கிய நேரம், கதிரும், ஈசனும் சாலையின் ஓரமாக தள்ளப்பட்டனர் பத்ராவின் அதிவேக செயலால், அவர்களுடன் பத்ராவும் கீழே விழுந்து இருந்தாள்.இருவரும் சுதாரித்து எழும் முன்னரே, அவர்கள் உதவ நினைத்த பெரியவரும், அவருக்கு உதவியவர் என ஐந்து பேரும் இவர்களை தாக்க ஓடி வந்தனர்.

பத்ரா தன் கைச் சட்டையின் மடிப்பில் இருந்த கூர்மையான ஊசிகளை எடுத்து தனது இரு கைகளினால் தாக்க வந்தவர்களின் கண், கழுத்து என மாறி மாறி வேகமா குத்தினாள், அவளின் செயலை தடுக்கும் பொருட்டு ஒருவன் அவள் கைகளை பிடித்து, மற்றொருவனுக்கு சைகை காட்டும் முன் தன் ஒரு கையை சுழற்றி அவனிடம் இருந்தது விடுபட்டு பேண்ட் பாக்கெட்டில் இருந்த கத்தியால் அவன் கழுத்துல ஒரு கோடு இழுத்ததில் தெறித்த ரத்தம் அவளின் முகத்தில் பட்டு சூரம் செய்யும் பத்ரகாளியாக காட்சியளித்தாள்.

பத்ராவின் அதிரடியில் அதிர்ச்சியான கதிர், ஈசனிடம் திரும்பி, "இப்படி ஒரு ஆக்ஷன் சீன, நீ டீட்டைலா சொல்லலேயேடா... "என்று குற்றம் சாட்டியவன், "இப்டி ஒரு பொண்ணா, அப்பா சாமி இப்போவே எனக்கு கண்ணை கட்டுதே " என்று ஆராய்ச்சியில் இருந்து மீளாமல் மயக்க நிலைக்கு செல்லும் நேரம்."உடனே இங்க இருந்து கிளம்பனும்" என்று இவர்களிடம் கூறியவள், ஓட்டுநர் இருக்கையில் அமர, கதிரை பின் இருக்கையில் தள்ளி அவள் அருகில் அமர்ந்து கொண்டான் ஈசன்.

பத்ரா கெஸ்ட் ஹவுசை நோக்கி காரை திருப்பினாள்...

அவர்கள் தப்பிச் செல்வதை பார்த்த அடியாட்களில் ஒருவன் வேகமாக தன் தலைவனிடம் சென்று நின்றான். "அண்ணா அந்த கதிர் பையன் தப்பிச்சுட்டான் "என்று கூற,
"அவனை தப்பிக்கவிட்டுட்டு நீ என்ன வெடிக்க பாத்துட்டு இருந்த...", என்று தன் வெறி அடங்கும் வரை அடித்து நொறுக்கினான் அவர்களின் தலைவன்.

(என்னது?கதிரையா? டேய் அப்போ நீங்க ஈசனை போட வரலையா? கதிரு பையல போட வந்தீங்கலா? அடி ஆத்தி இது என்ன இன்னொரு குரூப் இந்த பத்ரா புள்ள எத்தனை பேரடா சமாளிக்கும்!)


"எம்மா பத்ரகாளி இப்போ எதுக்கு இப்படி ஸ்பீடா வண்டி ஓட்டுற? அவங்ககிட்ட இருந்து எங்கள காப்பாத்திட்டு இப்போ வண்டியை வேகமாக ஓட்டி எங்கள கொல்ல பாக்குறியா?" என்றான் கதிர். அவனை திரும்பி முறைத்தவள், "பின்னாடி ஒரு காரு நம்மள துரத்தறாங்க" என்றாள்.பின் திரும்பி பார்த்த ஈசன், "இப்போ எவன்டா.... கேப் விடாம வந்தா நாங்க என்னதான்டா செய்யுறது? " என்றான்.
அதுக்கு பத்ரா, "முதல்ல வந்த குரூப், கதிர போட வந்தாங்க, இப்போ வரவங்க உன்னை தான் கொல்ல வராங்க" என்றாள். "என்னதுதுதுதுது என்ன கொல்ல வந்தாங்களா" என்ற கதிருக்கு தலையே சுற்றியது.

அப்பொழுது எதிர் திசையில் இருந்து பாதை மாறி தங்களை நோக்கி நேர் எதிராக வந்த லாரியை கண்ட பத்ரா மிக திருத்தமாக செயல் பட்டு வாகனத்தை இடது பக்கம் செலுத்த முயன்றும் வலது பக்கமாக இடித்து சென்ற லாரியினால் இவர்களது வாகனம் சிறு குட்டிக்கரணம் அடித்து நேராகியது, முன் இருக்கையில் உள்ள காற்றுப்பை(airbag) வெளியேறும் முன் ஈசனை காக்க அவனை காக்கும் பொருட்டு இரு கைகளால் அவனை மறைத்தாள், அவளின் நிலையில்லா அசைவினால் வாகனத்தின் முன் கண்ணாடி சிதறியதால் அவளது தலையில் பலத்த காயம்பட்டன,அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் ஈசனின் பாதுகாப்பை ஆராய்ந்தாள், அவன் தலை இருக்கையின் இடது பக்கமாக நிலையில்லாமல் சாய்ந்து இருப்பதை பார்த்த பத்ரா, "ஏய்... ஈசா... உனக்கு ஒண்ணுமில்ல எந்திரிடா , ஈசா எந்திரிடா, ஈசா, ஈசா..."என்று கூறி அவன் மயக்கத்தை தெளிய வைக்க அவனது இரு கன்னத்திலும் மாறி மாறி அரைந்தாள், அந்த அதிர்வில் ஈசன் சிறிதாக கண்ணை சுருக்கி கண்ணின் இமைகளை மெதுவாக அசைத்தான்.சட்டென்று தன் கலக்கமான முகத்தினை அவனுக்கு காட்டாமல் பின் திரும்பி கதிரை பார்த்தாள்.கதிருக்கும் நெற்றியில் சிறு அடிப்பட்டு இடது பக்கம் நிலையில்லாமல் சாய்ந்திருந்தான்.
அவர்களின் பாதுகாப்பை பார்த்து கொண்டிருந்த பத்ர சிறுது சிறிதாக மயக்கத்திற்கு சென்றாள்.

"இவளுக்கு இது தேவையா? என்னை எனக்கு காப்பாத்திக்க தெரியாதா? எப்ப பார்த்தாலும் நடுவுல வரா, இப்போ பாரு இவளுக்கு தான் பெருசா அடிப்பட்டு இருக்கு" என்று தன்னை இரண்டு முறை எதிரிகளின் தாக்கத்தில் இருந்து அவளது உயிரை பொருட்படுத்தாமல் காப்பாற்றியது நினைவிருந்தும் வெளிபடையாகவே திட்டினான்.இதனை கேட்ட கதிர், "அடப்பாவி, அந்த புள்ள உயிரை பணையம் வைச்சு உன்ன காப்பாத்தனா நீ இப்ப அந்தப் புள்ள சுயநினைவுல இல்லாம இருக்கிறப்ப திட்டுற... டேய் அந்த புள்ள மயங்கிருக்குடா முதல அவள எழுப்புடா " என்றான்.

தன் கைகளை பிடித்து இருந்த அவளது கைகளிடம் இருந்து தன் வலது கையை எடுத்து அவளை "எம்மா பத்ரகாளி எந்திரி " என்று அவள் தோள்பட்டையில் கை வைத்து அவளை அசைத்து சுயநினைவிற்கு கொண்டு வர முயன்றான்.

எந்தவொரு அசைவும் அவளிடம் இல்லை என்றவுடன் ஈசனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது, அந்த நொடியில் தன்னை மறந்து சுற்றம் மறந்து, அனைத்தையும் மறந்து, "ஏய் பத்ரா உனக்கு ஒண்ணுமில்ல எந்திரிடி , பத்ரா எந்திரிடி, பத்ரா, பத்ரா..." என்று கத்தி கொண்டு இருந்தான்.

"அடப்பாவிங்ளா கொஞ்சம் நேரம் முன்னாடி இப்டி தான் அவ, ஈசனை எழுப்புனா! இப்போ இவன், அவளை எழுப்புறான், வசனம் மாறாமல் பேசுறீங்களேடா... ஆனா அவன் கன்னத்துல விழுந்த அரை மிஸ்ஸிங் ,இவங்க ரெண்டு பேரும் பார்த்தே ரெண்டு நாளு தான் ஆகுதுனு இவன் சொன்னா... இதை நான் வேற நம்பனுமா" தனக்குள் கேட்பதை போல் வாய்விட்டே புலம்பினான் கதிர்.

கதிரின் குரலில் தெளிந்த ஈசன், எங்கு இருக்கிறோம் என்று பார்த்தான். மேலும் கதிர் அவனிடம், "அவ மயக்கமா இருக்கா, மத்தபடி நம்ம இங்க இருந்து உடனே கிளம்பனும், அப்றோம் நம்மள தொரத்தின கார் இப்போ இங்க இல்ல, ஆனா நம்மள இடிச்ச லாரி அங்க நிக்குது, நான் பார்க்குறதுகுள்ள டிரைவர் இறங்கி ஓடிட்டான்" என்றான்.

சட்டென்று தன கால்ச்சட்டைப் பையினுள் இருந்த தன் தொலைபேசியை எடுத்து தந்தைக்கு அழைத்து நடந்ததை கூறினான் ஈசன்.
"அங்க எல்லாரும் பாதுகாப்பாக இருக்கீங்களா" என்ற வெற்றிக்கு, "பத்ராவுக்கு மட்டும் தலையில் அடிப்பா... மயங்கிட்டா" என்றான் ஈசன்.

"தப்பு பண்ணிட்டேன் ஈசா, ஒரு பொண்ண உனக்கு பாடிகார்டா போட்டு இருக்க கூடாது, இப்போ பாரு அவளுக்கும் சேர்த்து நீயே பாதுகாக்க வேண்டியதா இருக்கு" என்ற சொன்ன தந்தையிடம்,"நிறுத்துங்க அப்பா, கிட்டதட்ட ரெண்டு தடவ தன்னோட உயிரை பணையம் வைச்சு என்னை காப்பாத்துனா, அவளை போய் இப்படி சொல்லுறீங்களேப்பா, அவளாலேயே என்னோட உயிரை காப்பாத்த முடியலனா வேறு யாராலும் என்னை பாதுகாக்க முடியாது, இனிமே அவளை பத்தி தப்பா எதுவும் சொல்லாதீங்க" என்று சொல்லி போனை வைத்தான்.

"இவனுக்கு இன்னைக்கு என்னமோ ஆகிடுச்சு" என்றவாறு ஈசனை பார்த்தான் கதிர்.

( "பத்ரா, எந்திரி ஈசன் உனக்கு சப்போர்ட் பண்ணிட்டான்")

தொடரும்...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes