Iratturamozhithal 19

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ப்ரெண்ட்ஸ் .. இன்னிக்கி லீவ்.. பதிவும் உடனே...

இதோட தொடர்ச்சி இன்று இரவு அல்லது நாளை...

படிச்சு பிடிச்சா லைக்... & கமெண்ட்..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
IM 19

அன்னை பார்வதிக்கு அருளிய ஈசனாய் , ப்ரித்வி லிங்கமாய், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் அருள் பாலிக்க, சூர்ய நாராயண பிரகாஷின் குடும்பமும், அவன் சன்னதியில் ... எம்பெருமானின் அருளை வேண்டி நின்றிருந்தது. குலம் பெருகிய மகிழ்ச்சி ஒரு புறம், மலையாய் தெரிந்த வழக்கு, கடுகாய் மாறி, அனைவரும் மீண்டு வந்தது ஒருபுறம், என ஈசனின் பாதம் பணிந்து நன்றி சொல்ல காரணங்கள் இருக்க, விடியலிலேயே சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தனர். நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி, என்பதற்கு ஏற்ப.. அனைவரின் மனமும் ஒரே விதமான லயத்தில், அமைதியாய், நிறைவாய் இருந்தனர்.

கோவிலில் இருந்து வெளியேறி, அருகிருந்த மரங்களின் கீழ் அமர்ந்து, ப்ரசாதத்தினை அனைவருக்கும் பகிர பாஸ்கர் ஆதித்யா, மௌனமாய் இருந்தான், அவன் இயல்பான இயல்பு, லதிகாவின் மன மாறுதலில்தான் திரும்பும் என்பது புரிந்து அமைதி காத்தனர்..

ஆனால், பரிதியின் திருமதி விடுவாளா என்ன?

"ம்மா...என்னதான் இவங்க பிரச்சனை?, பேசினா தான தீரும்? இவன் மூஞ்சி சும்மாவே பாக்க சகிக்காது .. இன்னும் தேவதாஸா வேற திரியறான். இவனை பாத்து பாத்து ... என் புள்ளயும் உர் .ர்ருன்னே புறந்து வைக்க போகுது.. ", என்று அன்னையிடம் முறையிட்டவள், "டேய் .. நீ ஓகே சொல்றயோ இல்லையோ தெரியாது , அடுத்து வர்ற நல்ல நாள்-ல, நாம கல்பா வீட்டுக்கு.. பொண்ணு பாக்க போறோம்..",

"என் கல்யாணத்துலயே இந்த பொண்ணு பாக்கற படலம் மிஸ்ஸிங். கூடவே பஜ்ஜி, சொஜ்ஜியும்.. அதை இப்போ நேர் செய்யறோம்.. டேய் .. அவங்கம்மா நல்லா சமைப்பாங்கடா , சோ.. போறோம் ... மொக்கறோம்... எப்படி இருந்தாலும் நீ அவளைத்தான் கட்டிப்ப . அவளும் அப்படித்தான்.. அதனால, கல்யாணம் முடிச்சு, நீ சண்டையை கண்டின்யு பண்ணு.. மண்டைய உடைச்சுக்கோ.. இல்ல புத்திசாலித்தனமா அவர் அட்வைஸ் கேட்டு நட.. ", என்று தியா பாஸ்கரை பார்த்து பொரிய ... அவள்.. சாப்பிடுவதற்கு, தன் கையில் இருந்த புளியோதரையை கொடுத்தவன்...

"எப்படி மாமா, இவளை சமாளிக்கிறீங்க ? என்னா பேச்சு? டாக்டர் மாதிரியா பேசறா?, ", என்று நிறுத்தியவன்.. "மாமா, நிஜமா கொஞ்சம் பொறாமையா இருக்கு, உங்களுக்குள்ள சண்டை வந்ததே இல்லையா என்ன?"

"மச்சான், பொண்டாட்டிய சமாளிக்க இருக்கிற ஒரே வழி, கால்-ல விழறதுதான். இது யூனிவர்சல் தத்துவம்.. அங்க பாருங்க உங்க அப்பா, உங்கம்மா பேசறதுக்கு தலையாட்டிட்டு இருக்கார்.." சிரித்து கூற..

பாஸ்கரோ, உன்னை நம்பமாட்டேன் என்று பார்த்தான்.. சற்று சீரியஸான பரிதி, "ஒண்ணுமில்ல மச்சான்.. ஃபிரீயா விடுங்க.. நம்மள நம்பி வந்தவங்க, தேவதையா இருக்கணுமா, பிசாசா இருக்கணுமா -ங்கிற முடிவை அவங்கள எடுக்க விடுங்க. எப்போ அவங்களுக்கு தன்னம்பிக்கை வருதோ, அப்போ நம்ம சொல்றத காது கொடுத்து கேப்பாங்க, அலசி ஆராய்வாங்க.. Of course, ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க.. பதில் சொல்லுங்க, முதல்ல அவங்கள சமமா உக்கார வச்சு பேசுங்க.. நீங்க சொன்னா, சரியா தான் இருக்கும்-ங்கிற நம்பிக்கையை சம்பாதிங்க.. அப்பறம் ஏன் சண்டை வருது?"

"மாமா அத்தைய பாருங்க, ரெண்டு பேரும் எதிரெதிரா நின்னாங்க.. சண்டை வந்ததா? ஏன்னா.. ரெண்டு பேருக்குமே தெரியும் அவங்கவங்க ஸ்டாண்ட் கரெக்ட்டுன்னு.. உங்க அப்பம்மா ரியலி ஒரு ஐடியல் கப்புள்..", நிறுத்தியவன்.. "அதுவும் எனக்கு எங்கப்பா கிட்ட நான் எதிர்பார்த்ததெல்லாம் இவர் கிட்டேருந்து கிடைக்குது... ஐ அடோர் ஹிம் .. ரியலி எ ஜெம் யு know ?",

பாஸ்கரும் திரும்பி பெற்றோரை பார்த்தான்.. நானும் லதிகாவும் இப்படி பேர் வாங்குவோமா?, மனம் எண்ணியது..

இத்தனை சிரத்தையாய், சரணும் நரேனும் பேசியது என்ன? கோவிலின் அன்னதானதிற்கு வைப்பு நிதியாக, ஐந்து லக்ஷம் கொடுத்து, அதன் வட்டியின் மூலம், தினசரி அன்னதானம் நடத்த உதவலாம் என மனைவியும், தலையசைத்து கணவனும் முடிவெடுத்திருந்தனர். காசோலையை கொடுத்ததும், நன்கொடை அளிப்பவர் பெயர் கேட்க, SNP "மனோகரன், கேர் ஆப் சூர்யநாராயணபிரகாஷ் ", என்றான்.. கேள்வியாய் மனைவி நோக்க.... அவளை தனியே அழைத்து சென்று மனோகரனை பற்றி கூறவாரம்பித்தான்..

விஷயம் பகிர்ந்த பின், "இப்போதைக்கு அவனோட இழப்புக்கு நம்ம ஒன்னும் செய்ய முடியாது. அன்னதானம் பண்ற இந்த புண்ணியம் அவனுக்கு போகட்டும்.."

பேச்சற்று நின்றாள் சரண்... அத்தனையும் அவளால்.... அவள் தொடங்கிய ஒரு புள்ளி .. ஒரு உயிரை குடிக்க காரணமா?, இதயம் ஒரு முறை நின்று துடித்தது .. கேட்ட விஷயத்தின் அழுத்தம் தாங்காது, சரண் மடங்கி சரிந்தாள்.

சற்று தூரத்தில் அமர்ந்திருந்த தியா, பரிதி மற்றும் பாஸ்கர் மூவரும், சரணை பார்த்து பதறி எழ.. "ஏய்.. மெதுவா ", என்று தியாவை கடிந்தான் பாஸ்கர்.. பரிதி-தான், SNP யின் பிடியில் இருந்து சரிந்து கொண்டிருந்த சரணை தூக்கிப் பிடித்தான்.. பாஸ்கரிடம் தண்ணீ என கேட்க.. பையில் இருந்த பாட்டிலை எடுத்துவந்தவன், சரண்யுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து, சிறிது வாயிலும் புகட்டினான்.

நாடி பிடித்து பார்த்த தியா, "லோ BP -ன்னு நினைக்கிறேன், ம்மா.. எப்போ சாப்டீங்க?", கேட்க...,

ஏதாவது அவள் காதில் கேட்டால்தானே ? மலங்க மலங்க முழிப்பவளை என்னதான் செய்வது?, "சரண்.. கோவில்ல இருக்கோம், என்ன பண்ணுதுடா ?", இவன் கலக்கமான குரல் கேட்டதும், உணர்வு வர பெற்றவள், தெளிந்தாள்.

"ஒண்ணுமில்ல நரேன், கிட்டினஸ்தான்", பிள்ளைகள் முன் கணவனின் கையணைப்பில் இருப்பது கூச்சத்தை தர, மெல்ல விலகினாள்.. "போலாமா?", கேட்ட சரண் முழுதாய் தெளிந்திருந்தாள்.

"நடக்க முடியுமாம்மா ?", கவலையாய் பாஸ்கர் வினவ,

மெல்ல நகையிட்டு, " என்ன பேஷண்ட் ஆக்காத. முதல்-ல மனோகரனை பத்தி கல்பாகிட்ட சொல்லு, அவளுக்கு செக்யூரிட்டி போட்டுடீங்கதான?"

"ம்ம். இன்னிக்கு பேசறேன்மா.. கார்ட்ஸ் நமக்கு போட்டபோதே அவளுக்கும் போட்டாச்சு, அவளுக்கே தெரியாம .."

பாஸ்கரும் சரணும் முன்னே நடந்தவாறு இருக்க, பின் SNP -யுடன் வந்த பரிதி, "என்னாச்சு மாமா?", என்றான்.

SNP , சுருக்கமாய் , "மனோகரனை பத்தி சொன்னேன்", என்றான்.

"ஓஹ் .. சொல்லியாச்சா , இனி கொஞ்சம் ஜாக்கிரதயா இருக்க சொல்லுங்க"

காருக்கு சென்றவர்கள், வேறு வேறு கதைகள் பேசி இலகுவானார்கள், சென்னை வந்து சேரும்வரை உற்சாகத்துக்கு பஞ்சமில்லாமல், கலகலத்திருந்தனர்.

++++++++++++++++++++++++++++++++++++

மதியம் வீடு வந்து சேர்ந்தவர்கள், பெண்கள் இருவரும் அசதியில் உறங்க.. பரிதி, டியூட்டி -க்கும், SNP - ஆபிஸுக்கும் செல்ல.. பாஸ்கர் விழித்திருந்தான்.

அவன் லதிகா-வை கடைசியாய் சந்தித்தது நினைவில் வந்தது. வழக்கு தள்ளிவைக்கப்பட்ட மறுநாள், இவளுக்காகவே கோர்ட் வந்தவனை, லதிகா ஏறிட்டும் பார்க்கவில்லை. அவளுக்காக, வரும்வரை காத்திருந்தவன், "ஹாய் ஹனி "

"இனி ஹனி, பேபி ன்னு கூப்பிட்ற வேல வேணாம், சொல்லுங்க என்ன வேணும்?",

"ம்ம்.. என்ன கேட்டாலும் கிடைக்குமா? ", சிறு முறுவலுடன் பாஸ்கர் கேட்க ..

"பாஸ்கர்...., மைண்ட் யுவர் வெர்ட்ஸ", விரலெடுத்து பத்திரம் காண்பித்து, லதிகா பதிலளிக்க...

சின்னதாய் அவள் செயல் இவனின், கோபத்தை தூண்ட, அப்போதும் , பொறுமையாய், "உன்கிட்ட எனக்கு எந்த லிமிட்டும் கிடையாதுடீ என் ராட்சஸி , அதான் கேஸ் தள்ளிபோட்டுட்டாங்கல்ல.. நம்ம கல்யாணத்த பத்தி வீட்ல பேசவா?", சீரியஸாய் கேட்டான்.

"கேஸ் எப்படி முடிஞ்சது?",கேட்ட லதிகாவின் முகம் தக்காளியாய் சிவந்திருந்தது."ஃபிராட் வேல பண்ணி முடிச்சிடீங்க... அந்த பழைய ஓனரோட கம்பளைண்ட் இதுக்கானது இல்ல.. ஆனா, எப்படியோ இதுல அத கொண்டுவந்து, சாமர்த்தியமா தப்பிச்சுடீங்க.."

கேட்டவனின் பொறுமை காற்றில் பறந்திருந்தது , "முட்டாள்.. முட்டாளேதாண்டி நீ", பற்களை கடித்து வார்த்தையை துப்ப...

"உங்கள மாதிரி போர்ஜரி-யா இருக்கறதுக்கு, நான் முட்டாளாவே இருந்துட்டு போறேன்.. குடும்பமே ஃபிராட் குடும்பம் ", லதிகா சொல்லிய அடுத்த நொடி, காது "ங்கொய்", என்றது.. கண்ணில் பூச்சி பறக்க... கன்னம் எரிந்தது. சில நொடிகள் கடந்தே அவளுக்கு பாஸ்கர் தன்னை அடித்திருக்கிறான் என்று புரிந்தது. கன்னத்தை பிடித்து, இமைக்க மறந்து நின்றாள்.. அழக்கூட தோன்றாமல்.

"என்னை பத்தி பேசு..உனக்கு அதுக்கு ரைட்ஸ் இருக்கு", உஷ்ணப்பார்வை பார்த்தவன், "என் ஃபேமிலிய பேசின..... பிச்சிடுவேன் பிச்சு.", பாஸ்கரின் வார்த்தைகள் கேட்ட பின்பு, கண்களில் கண்ணீர் திரண்டது..

"அப்ப நான் யாரு இவனுக்கு ?", மனம் சண்டை போட்டது..

இவர்கள் நின்று கொண்டு இருந்தது.பிரைவேட் பார்க்கிங் ஏரியா, தவிர அலுவல் நேரமும் முடிந்திருந்தால் யாரும் அங்கு இல்லை ..

"உனக்கு புத்தி இருந்தா, யோசி... எப்போ உங்களுக்கு போன் வந்தது?, எப்போ சாம்பிள் கிடைச்சது?, எப்போ கம்பெனி கை மாறிச்சு-ன்னு உக்கார்ந்து யோசி..
சே.. ஒரு நாள் பூரா வேஸ்ட்டா போச்சு ", கத்தியவன் , விருட்-டென காரை கிளப்பி சென்றவன்தான்.. இன்றுவரை அவளுடன் பேச முயற்சிக்கவில்லை.

இனி அவ்வாறிருக்க முடியாது, கல்பா-வின் அம்மாவுடன் சரண், கோவிலை விட்டு வந்ததும் மதியமே பேசி... அடுத்த வெள்ளியன்று பெண் பார்க்க வந்து அப்படியே ஒப்புதாம்பூலமும் மாற்றிக் கொள்வதாயும் முடிவெடுத்தனர்.

பாஸ்கர் , நேரம் பார்த்தான். ம்ம் இப்போ அங்கதான் [இந்த அங்க - கல்பாவோட ப்ரெண்ட் ஆபிஸ்] இருப்பா, போய் பாத்து பேசணும்..அப்பா சொன்ன மாதிரி, லவ்வர்ஸ் அடிச்சுக்கலாம், கப்புள்ஸ் கூடாது , தெளிவா பேசி பாப்போம்.. இல்ல, என்ன பேசினா எனக்கென்ன -ன்னு இருக்க வேண்டியதுதான்... மாமா சொன்ன மாதிரி டக்-ன்னு கால்-ல விழ வேண்டியதுதான். பலவாறு எண்ணி சென்று கொண்டு இருந்தான்.. ஆனால், இவனின் ஒவ்வொரு செல்லும் லதிகாவை காணப்போகிறோம் என்ற உணர்விலேயே , புத்துணர்ச்சி அடைந்திருந்தன. இவனது அகமும், முகமும் பளிச்...

அந்த அலுவலகம் சென்றவன் நேரே, ஊழியர்கள் ஹாலை கடந்து, அவளது அறை கதவை திறந்து, நிதானமாய் லதிகாவை பார்த்துக்கொண்டே அமர்ந்தான்.

++++++++++++++++++++++++++

SNP , அலுவல்களை முடித்து கிளம்ப, காருக்கு வந்தான், காலையில் காஞ்சிக்கு விடியலில் செல்வதற்காக வந்திருந்த டிரைவருக்கு ஒய்வு கொடுத்து மதியமே அனுப்பிவிட்டான். செல்போனை வெளியே எடுத்து வைத்து, ரஹ்மானின் பாடல்களை ஒலிக்க விட்டு, புறப்பட்டான்..

பத்து நிமிடங்களுக்கு மேல் ஆன போதும், உலக அதிசயமாய் போனில் யாரும் அழைக்கவேயில்லை.. சிக்னலில் நின்றதும், செல்போனை பார்க்க, அது செல்போன் டவர் சிக்னல் இல்லை என்று காண்பித்தது.. ஒருமுறை அனைத்து [ஆஃப்] உயிர்ப்பிக்க., டவர் கிடைத்தது. மறு நொடி, போன் அடித்தது.. எதோ ஒரு லேண்ட்லைன் நம்பர்.. அட்டென்ட் செய்ய.. "சார், உங்க ஆபீஸ்-ல வேல பாக்கற பொண்ணை எவனோ, இங்க தரதர-ன்னு இழுத்துட்டு வந்திருக்கான் ஸார், எனக்கு ரோடு பேரு தெரில, லொகேஷன் ஷேர் பண்றேன், அப்பறம் உங்கபாடு.." ,ஒரு குரல் மிக பதட்டத்துடன் சொல்லி வைத்தது. லொகேஷன் தகவல் வந்திருந்தது.. ஆனால், SNP - யின் செல்போன் டவர் இப்போது காணாமல் சிக்னல் இல்லாமல் போனது..

அலைபேசி காண்பித்த இடமும், அருகாமையில் இருக்க, எதையும் யோசிக்காமல், வண்டியை அங்கே செலுத்தினான் SNP ....

மொழிவோம் ..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top