Gender Discrimination - ஆண் பெண் பேதம்

Advertisement

Sasireka

Member

எதற்காக இந்தத் திருமணமும் அதைத் தொட்டு வரும் பிரச்சினைகளும் ? நம் முன்னோர்கள், யோசியாமலா ஆண் பெண் எனும் இரு பாலரைக் கொண்டு திருமணம் என்ற சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் ? என்ற கேள்விகள் அடிக்கடி என் மூளையை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த தேடலை தொடர்ந்து , இதோ என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.​
இக்காலத்தில் ஆணுக்குப் பெண் சமம் என்றோ , இல்லை எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த வழிகளில் ஆணுக்குப் பெண் நிகர் ஆக முடியும் என்றோ , அல்லது ஆணுக்கு எதிராகப் பெண்ணின் உரிமையைப் பற்றியோ ஆங்காங்கே கருத்தரங்குகள் , மேடைப்பேச்சுக்கள் , வலைதளம் ,​
சட்டமன்றம் , பாராளுமன்றம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக விமர்சிக்கப்படுகிறது. ஆம் , பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் உண்மையே. அதன் பொருட்டு , தனிமனிதத்திலும் , வீட்டிலும் , சமூகத்திலும் பெண் தனது உடல் மற்றும் மன வலிமையை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நானும் ஒரு பெண்ணாகையால் , இந்தப் போக்கை ஆமோதித்துக்கொண்டிருக்கும் வேளையில் , மற்றொரு பார்வையையும் கிடைக்கப் பெற்றது .​
அதை இங்கு பதிவு செய்யும் பொருட்டே இந்தக் கட்டுரை. ஆம் , என் அனுபவமும் , நான் கடந்து வந்த விஷயங்களும் , நான் படித்த நாவல்களும் ஆண் பெண் பற்றிய மற்றொரு கோணத்தையும் என்னுள் விதைத்தது.​
ஆண் மட்டுமல்ல , நம்மைத் துன்புறுத்தும் எந்தவொரு காரணியையும் (சக பெண்களால் வரும் பிரச்சினைகள் , உடல் / மன நலம் பாதிக்கும் நோய்கள் , அறிவியலால் / கண்டுபிடிப்புகளால் வரும் தொல்லைகள் , சமூக / அரசியல் பிரச்சினைகள் , அறியாமையால் வரும் பிரச்சினைகள் , இயற்கை சீற்றம் ) , நாம் ஒத்துக்கொள்ள இயலாது.​
எப்படி இப்பூமியில் தோன்றிய ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டோ , அதேபோல்தான் , ஆணுக்கும் பெண்ணுக்கும். இரு பாலருக்கும் இரு வேறு சிறப்புக்கள் , வேறுபாடுகள் உண்டு. இது போலவே மற்ற உயிரினங்களுக்கும் தனிச்சிறப்பும் உண்டு , குறைகளும் உண்டு . எப்படி பூனையின் குணம் யானைக்கு வராதோ , குதிரையின் குணம் கழுதைக்கு வராதோ , அது போலவே ஆணின் குணம் பெண்ணுக்கு இல்லை. பெண்ணின் குணம் ஆணுக்கு இல்லை . இதுவே இயற்கை. இயற்கையே நடைமுறையும் ஆகிறது.​
ஆகவே , ஆணும் பெண்ணும் இரு வேறு உயிரினங்கள் என்பதால் , அவரவர்க்கு இறைவனால் அருளப்பெற்ற பலமும் உண்டு பலவீனமும் உண்டு. படைத்தவனின் கண் கொண்டு பார்க்கையில் , இப்பூவுலகில் சந்ததிகளைப் பெருக்கி தன்னுடைய வாழ்வைத் திறம்பட வாழ , ஆணின் தனித்துவமும் பெண்ணின் தனித்துவமும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். பெண்ணின் பலவீனத்தை ஆண் மட்டுமே சமன்படுத்த முடியும். ஆணின் பலவீனத்தை பெண் மட்டுமே சமன்படுத்த முடியும்.​
ஆக இரு வேறு உயிர்களாக, இரு வேறு சிறப்புக்களையும் , தனித்துவத்தையும் கொண்டிருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்பது என் சொந்த கருத்து. இரு பாலரின் உடலமைப்பு வேறு , சிந்தனையும் வேறு , செயல்பாடும் வேறு , எதிர்பார்ப்புக்களும் வேறு , திறன்களும் வேறு. இயற்கைக்கும் இறைவனுக்கும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு உயிர்கள் , அவ்வளவே ! இயற்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றத்தாழ்வு என்பது இல்லை.​
அதே சமயம் ஆணுக்குப் பெண் அடிமையும் இல்லை. பெண்ணானவள் எந்த இடத்திலும் தன் சுய மரியாதையும் , தனது பிறப்பின் இயல்பையும் விட்டுக்கொடுக்காமலிருக்க , சூழலுக்கேற்ப தன் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்வது அவசியமே !​
ஆக , ஆணும் பெண்ணும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற இயலும் வகையில் தான் இயற்கை மனிதனைப் படைத்திருக்கிறது . கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் , ஆணின் வெற்றியைக் கொண்டாட ஒரு பெண் தேவைப்படுகிறாள் . ஒரு ஆண் தனது வெற்றியைக் கொண்டாட அம்மா சகோதரி தோழி மனைவி என ஒரு பெண்ணையே நாடுகிறான் . வெற்றியே ஆயினும் , தனியே ருசிக்க முடியவில்லை அவனுக்கு ! பெண்ணின்றி தன் வாழ்வும் சரி , உலக வாழ்வும் சரி , ஆணுக்கு இனிப்பதில்லை . பெண்ணின்றி அமையாது உலகு !! முற்றிலும் உண்மையே !!!​
அதே போல் இறைவனுக்கு அடுத்த படியாக , இறை அருளால், பெண் மட்டுமே இன்னொரு உயிரை உலகிற்கு உருவாக்கிக் கொடுக்கும் தன்மை பெற்றவள் ஆகிறாள் ! ஆனால் , ஆணின்றி அவளின் பெண்மை முழுமை அடைவதில்லை . ஆக , ஆணின்றி அமையாது பெண்ணின் உலகு !​
பெண்ணின்றி அமையாது உலகு !​
ஆணின்றி அமையாது பெண்ணின் உலகு !!​
முற்றிலும் உண்மையே !!!​
இதை மூலாதாரமாகக் கொண்டு , மனித வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட , இன்றைய நாகரிகத்தின் பண்பாட்டின் வளர்ச்சியே திருமணம் எனும் சமுதாயக் கட்டமைப்பு !​
இந்த வகையில் கணவனாக அமையப்பெற்ற ஆண் என்பவன் , தனது பலவீனத்தையே ஈகோவாகவும் , கோபமாகவும் , தாபமாகவும் வெளிப்படுத்த முயலுகிறான் . தான் ஆண் என்பதால் , பெண்மையிடம் ஆண்மை தோற்றுபோகாதிருக்க ஆண் என்ற போர்வையின் மூலம் தன் பலவீனத்தை மறைக்க முயலுகிறான். மனைவி என்பவள் தன்னவள் தனக்கானவள் என்ற உரிமையில் , தன் பலவீனத்தை மறைக்கும் நோக்கில் தவறான முறையில் தன்னை வெளிப்படுத்துகிறான் . இதைத் தொட்டே , குடும்பப் பிரச்சினைகளும் கணவன் மனைவி விரிசல்களும் .​
பிறவி குணம் , வளர்ந்த சூழல் மற்றும் தன் சுற்றுப்புறத்தால் சில பல குறைபாடுகளைக் கொண்டிருக்கிறான் எனில் அதைப் புரிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைத் திறம்பட நடத்த , இந்த நாவல்கள் பெரும் உதவி புரிகின்றன ! சமுதாயத்திற்கு இந்த கதை ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது !​
 

Sasireka

Member
@mallika hi mam, I posted this thread by mistake here. I couldn't delete it. Can you please delete this one , I ve already posted the same under 'motivational talks'
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top