full link puthu vellam neenthi paarpom

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
முடிந்தவரை தமிழில் கமெண்டு கொடுக்கவே விரும்புவேன் டைம் இல்லைனாலும் டைம் இல்லாததால் தான்pic வழியாக அடுத்த லெவலுக்கு சிந்திக்க வேண்டும் என்று pic போட்டுவிடுவது இதையும் நடு ராத்திரி எழுதி சேவ் செய்து போடுகிறேன் கவனிச்சு திரும்பவும் படிங்க யாரையும் ஹர்ட் பண்ணவில்லை எனக்கு தெரிந்தை மட்டுமே விளக்கியுளேன் உங்களுக்காக
உங்கள் எழுத்தில் மெருகேறி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்களால் தமிழும் வளரட்டும் வாய்ப்பு கொடுத்துக்கு நன்றி
நன்றி ப்ரண்ட்..
 
Ansadoss

Well-Known Member
hi friend PM
உங்கள் முதல் பக்கத்தில் நீங்க கொடுத்துள்ளதை படித்தேன் ஒரு எழுத்தாளர் இப்படி சொல்லக்கூடாது எல்லாவிதமான கருத்துக்களையும் கூர்ந்து கவனித்து என்னை வளர்த்தெடுப்பேன் என்று சொன்னால் நல்ல இருக்கும் அது என்ன கலாயங்கனு....... சொல்வது

தமிழ் கூறும் நல் வார்த்தைகள் பேசுவதும் எழுதுவதும் எவ்வளவு உயர்ந்தது தெரியுங்களா???? நான் தமிழை நேசிப்பவள் இது மிகவும் சதாரண வார்த்தை தமிழ் மொழியை பற்றி அவ்வ்ளவு வெறியானவள் உடனே பொல்டிக்ஸ் என்று தமிழை கொச்சை படுத்திவிடாதீங்க……… நீங்க தமிழில் கதை எழுதி இருக்கீங்க உங்கள் தாய் மொழியில் என் தாய் மொழியில் நல்ல வார்த்தைகள் கொண்டு என் இனிய தமிழுக்கு சேவை செய்து இருக்கீங்க வாழ்த்துக்கள்

எப்பவும் ஒரு வார்த்தை கொல்லும் ஒரு வார்த்தை வெல்லும் சொல்லுவாங்க அதிலும் நீங்க ஒரு ரைடர் ஆகனும் முயற்சி பண்ணும் போது மிக கவனமுடன் இருக்கணும் ஒரு கமெண்டு போடுவதில் கூட எந்த அர்த்தமில்லாததோ மிகை படுத்தப்பட்ட கருத்தோ அல்லது எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளட்டும் என்ற நிலையிலோ ஒரு கருத்து அமையக்கூடாது இது எல்லா எழுத்தாளருக்கும் பொருந்தும் நீங்கள் போடும் கமெண்டு கூட சிந்திக்க கூடியாதகவும் படிப்பவர்களை அடுத்த நிலைக்கு நல்ல சிந்தனைகக்கு இழுத்து செல்வதாக இருக்க வேண்டும் நிந்திப்பதாகவோ குறிகிய வட்ட த்தினுள் மாட்டி கொண்டதாகவோ இருக்க கூடாது அப்பதான் வளர்ச்சி பாதை விரிவடையும் இல்லா விட்டால் ??????????

என்னடானா இவ பெரிய அல்டடல் மாதிரி பேசறானு நினைச்சீங்கனா நான் என்ன பண்ணுவது நான் போன தலை முறையாளர்களின் கதைகளில் மூழ்கிய எழுந்தவள் லெஜண்டு வரிசை பட்டியலில் உள்ள எல்லார் எழுத்துக்களும் கரைத்து குடித்தவள் என் வீடு என் பாட்டி அம்மா அப்பா மாமனார் கணவர் கசின்ஸ் ......... இருந்து அனைவரும்கதை புத்தகம் படிப்பவர்கள் இது எதற்கு விடுங்க நா பார்த்தசாரதி, கல்கி ,தீ ஜானகிராமன் போன்றோ புத்தகங்களை படிச்சு பாருங்க ஒரே கதையை பல தடவ வாசிங்க அதுவும் தீ ஜானகிராமன் கதை மரப்பசு அவரின் சிறுகதை தொகுப்பு படிங்க 10 ,15 நாட் கள் எந்த கதையும் படிக்க முடியாது அவ்வளவு தாக்கம் இருக்கும் ,எழுத்து சித்தர் பாலகுமாரன்!!!!! விக்ஷின் நான் விகிஷன் சுஜாதா!!! அவர் பெண் என்னும் தலைப்பு கொண்டு கதை போல் ஒரு புக்கு எழுதி இருப்பார் சூப்பரா இருக்கும் வாஸந்தி கதைகள் மனதை வருடும் அனுராதாராமன் அவங்க கதையை படிக்கும் போது சிரிக்கலாம் அழலாம் இந்துமதி யப்பா இப்படி பல ….இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் பேசணும் என்று இருந்தாலும் டைமில்லை என் சம்பளத்தில் நான் லெண்டிங் லைப்பிரரிக்கு கொடுத்ததில் ஒரு சொத்தே வாங்கி இருக்கலாம் என்று திட்டு வாங்கியவள்
பூவி நிறைய எழுத்தாளர்கள் பற்றி சொல்லி இருக்கீங்க. நான் பி.வி.ஆர். நாவல்கள் சிலது படிச்சிருக்கேன். 15 வயதிலிருந்து நாவல் படிக்கிறேன். அப்பொழுதெல்லாம் கிடைத்த புத்கங்களை படிப்பேன். பெரிதாக மனதில் எதும் நிற்கவில்லை. வேலைக்கு வந்த பிறகு தான் எழுத்தாளர்களை தேர்ந்தெடுத்து படிக்க ஆரம்த்தேன். ஏனோ ஆண் எழுத்தாளர்களின் நாவல்களை படிப்பதில்லை.

உங்களை போல்தான் நானும் எனது சம்பளத்தி,ல் 15 சதவிகிதம் புத்தங்களுக்கு செலவிட்டுவிடுவேன். மாதம் ரூ.10000 சம்பளம் வாங்கிய காலத்தில் 1500 ரூபாய் புத்தகங்களுக்கு செலவிடுவேன். அன்றைய நிலையில் தங்கம் 8000 ரூபாய்க்கும் குறைவு. புத்தகங்களில் இருந்த மோகம் எனக்கு தங்கத்தில் இருந்ததில்லை. இன்றளவும் அப்படியே.

பூவி நான் வாசிக்க ஆரம்பித்த புதிதில் ஒரு கதை படித்தேன். எனக்கும் என் தங்கைக்கும் நடந்த சண்டையில் அந்த புத்தகத்தை நான் முடிக்கும் முன்பே கிணற்றில் வீசிவிட்டாள். அந்த கதை இன்றளவும் மனதிலிருந்து அழியவில்லை.

கதாசிரியர் பெயர் தெரியாது. நாயகன் நாயகியின் பெயர் தெரியாது. கதையின் பெயரும் தெரியாது. சிரிக்கிறீங்களா? அதான் உண்மை.

கதை இது தான் நாயகனுக்கு நாயகியான தன் மனைவியை பிடிக்காது. அவளை கண்டுகொள்ளவேமாட்டான். காரணம் அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பி இருப்பான். அவள் இவனை ஏமாற்றியிருப்பாள். இதில் என்னால் மறக்கவே முடியாதது என்னவென்றால் நாயகன் அவன் முன்னாள் காதலிக்கு திருமண பரிசாக சலங்கைகள் கொஞ்சும் ஒரு வெள்ளி குத்துவிளக்கை பரிசளிப்பான். கதாசிரியர் அந்த விளக்கை அழகாக வர்ணித்திருப்பார். என் மனதில் அது ஆழமாக பதிந்துவிட்டது. நீங்கள் இந்த கதையை படித்திருக்கிறீர்களா? ஆம் எனில் அதன் பெயரை எனக்கு தெரியபடுத்துங்கள் பூவி.

இந்த Comment படிக்கும் இதர வாசகர்கள் யாருக்கேனும் இந்த கதையின் பெயர் தெரிந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள் தோழமைகளே.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்னருமை இனியத்தோழி, அன்பு உயிர்த்தோழி,
பொன்ஸ் @ பொன் மாரியம்மாள் டியருக்கு, எனது
மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
என்னருமை இனியத்தோழி, அன்பு உயிர்த்தோழி,
பொன்ஸ் @ பொன் மாரியம்மாள் டியருக்கு, எனது
மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின
நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி பானு டியர்..
 
mithravaruna

Well-Known Member
வணக்கம் பொன்.

அமர்க்களம் அம்மக்கிளிக்கூடு !
தேனகம் தேன் கூடு!
கூட்டுக்கிளிகளின் கூட்டு வாழ்க்கை!
காணக் கிடைக்கா காருண்ய வாழ்க்கை!

மிக மிக அழகான கதை ஆழமான கருத்து. எல்லாம் அருமை

வாழ்த்துக்கள் பொன். நன்றி
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் பொன்.

அமர்க்களம் அம்மக்கிளிக்கூடு !
தேனகம் தேன் கூடு!
கூட்டுக்கிளிகளின் கூட்டு வாழ்க்கை!
காணக் கிடைக்கா காருண்ய வாழ்க்கை!

மிக மிக அழகான கதை ஆழமான கருத்து. எல்லாம் அருமை

வாழ்த்துக்கள் பொன். நன்றி
.

ஹாய் செல்வி,
வாவ் என் கதைக்கும் குட்டி கவிதை...

நன்றி ...நன்றி ..நன்றி..செல்வி.
 
Manimegalai

Well-Known Member
வணக்கம் பொன்.

அமர்க்களம் அம்மக்கிளிக்கூடு !
தேனகம் தேன் கூடு!
கூட்டுக்கிளிகளின் கூட்டு வாழ்க்கை!
காணக் கிடைக்கா காருண்ய வாழ்க்கை!

மிக மிக அழகான கதை ஆழமான கருத்து. எல்லாம் அருமை

வாழ்த்துக்கள் பொன். நன்றி
ஓ வாவ் செல்வி,
உங்க கவிதை சூப்பர்...
பொன்னுமா கதை படிச்சாச்சா...
இரண்டாவது கதையும் நேரம் கிடைக்கும் போது படிங்க... இது அவங்களுடைய முதல் கதை..
இரண்டாவது கதை இன்னும் நல்லா எழுதியிருக்காங்க:)
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement