Ennai Mayakum Mayavaney -1

Advertisement

Thulasik

Writers Team
Tamil Novel Writer
என்னை மயக்கும் மாயவனே 2
நீள் வட்டமாக மேகங்கள் அங்கும் இங்கும் களைந்து கொண்டிருந்தது.. சூரியன் மறைந்து வரும் அந்திவேளையில் ஆற்றில் தனது இரண்டு நண்பிகளுடன் அமர்ந்திருந்தாள் ராதை... ஒவ்வொரு முகத்திலும் கவலை அப்பியிருந்து... இந்த சம்பூரணம் என்னும் சம்பூ தான் காரணம்...
உங்கப்பன யாருடி டிரான்ஸ்பர் வாங்க சொன்னா சும்மா இருக்க முடியாத அவருக்கு என பொரிந்து தள்ளி கொண்டு இருந்தாள் ரம்யா... மற்றவள் கற்சிலை போல் அமர்ந்து இருந்தால் மனம் சொல்ல முடியாத வேதனையில் இருந்தது இன்னும் இரண்டு வாரம் அப்புறம் சம்பூ நம்மள விட்டுட்டு ஊருக்கு போயிடுவா இந்த எண்ணமே பாரமாக இருந்தது... இந்த பதினைந்து நெடிய ஆண்டுகள் ஒன்றாக இருந்து பிரிய போகின்ற உணர்வு சொல்ல முடியாத வேதனையில் இருந்தது...
ஆம் இந்த சம்பூரணம் என்னும் அரன் தான் ராதைக்கு அவள் இல்லை என்றால் ஒரு கண் இழந்த நிலை தான்... அவள் அப்பா ஒரு காவல் அதிகாரி இருபது ஆண்டுகளுக்கு பிறகு வந்த டிரான்ஸ்பர் அவருக்கு அதை விடவும் மனமில்லை... பெண்ணை எப்படியாவது ஐபிஎஸ் படிக்க வைப்பதே தலையாக கடமையாக இருந்தது...
இந்த மலை கிராமத்தில் மேல்நிலை பள்ளி மட்டுமே... இதை தாண்டி படிக்க செல்ல வேண்டுமெனில் முப்பது மைல்கள் மலையேறி தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும்... பஸ் வசதியும் மிக குறைவே இந்த நிலையில் அவரது டிரான்ஸ்பர் அவருக்கு பேரின்பம் தந்தது உண்மை...
இரண்டு தோழிகளையும் கத்தி கொண்டு இருந்தவளையும் அமைதியாக நீரை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவளையும் மாறி மாறி பார்த்தாள்...
இன்னும் சற்று நேரத்தில் மயங்கி விழ போகிற ரம்யாவை தாங்கி பிடிக்க அவள் அருகில் நின்றாள்... சம்பூவிற்கு புரிந்து கொண்டு சிரிப்பு வந்தது அமைதியா இருடின்று பல தடை சொல்லியும் கத்தி கொண்டிருந்தவளை எதுவும் செய்ய முடியவில்லை இவள் கத்தட்டும் என்று அமைதியாக இருந்தவளுக்கு ராதையின் செய்கை சிரிப்பும் மூட்டியது...
இப்ப எதுக்குடி இளிக்கிற உன் அப்பன கொலை பண்ணிட்டு தான் மறு வேலை பார்ப்பேன்னு சொல்லிட்டே வந்தவ திரும்பி ராதா நிற்கிற ஸ்டைல் பார்த்துட்டு அவளுக்குமே சிரிப்பு வந்தது... நல்ல வேலைடி இவ கத்தி கத்தியே மயங்கி விழுந்து எங்க இவள தூக்க வெச்சுருவாளோனு இருந்தேன் காப்பாத்திட்ட என்ன இருந்தாலும் நீ தான்டி டைமிங்குல அடிக்கிறனு சம்பூவும் ராதாவும் சேர்ந்ததை பார்த்து ரம்யாவிற்கு அழுகை அழுகையாக வந்தது...
அடியேய் காது வலிக்குதுடி போதும் நாம இனி ஒன்னும் பண்ண முடியாது அவ ஐபிஎஸ் ஆனா நமக்கும் தான் பெருமை அவ அப்பா வாங்குனதுக்கு அவ என்ன பண்ணுவா போதும்டி இந்த பதினஞ்சு நாள் அவ கூட சந்தோஷமா இருப்போம்... எங்க போறா இந்த சென்னைக்கு தனே தோணும் போது நாமளும் போலாம்... போய் கொஞ்சம் தண்ணிய குடிச்சுட்டு வா கத்துன கத்துக்கு யானை வந்தாலும் வந்துரும் சீக்கிரம் இடத்தை காலி பண்ணலாம் வான்னு சொல்லி திரும்பி சம்பூவின் முகத்தை பார்த்தாள்... அப்பாடி காப்பாத்திட்ட என்ற உணர்வு இருந்தாலும் அவளையும் மீறி கண் கலங்குவதை மங்கி கொண்டு வரும் மேகத்தையும் மீறி தெரிந்தது...
தனது புன்சிரிப்பை சிந்திய ராதைக்கு அவள் சொல்லி அழுகிறாள் நாம் சொல்லாமல் அழுகிறோம் என்று மட்டும் மனதில் தெளிவாக தெரிந்தது...
கண்ணும் முகமும் சிவந்து வந்த ரம்யாவை அழைத்து கொண்டு அந்தி மங்கிய வேளையில் தோழிகள் மூவரும் ஊரை பார்த்து நடந்தார்கள்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு யோசனை அதிகம் பேசவில்லை... ஆனால் மன போரட்டமே அதிகமாக இருந்தது..
அடுத்து ராதாவ எப்படி சமாளிக்க போறோமோ என்ற நினைப்பு சம்புவிற்கும் இவ போயிட்டா நாம என்னை பண்ணுவோம்ற நினைப்பு ரம்யாவிற்கும் இதோ அந்த முக்கு திரும்பினதும் மாமா நிற்பானே அந்த தடிமாட எப்படி சமாளிக்கிறது என்று ராதாவிற்கும் அவரவர் எண்ணப்போக்கில் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர்....
நாமும் மயங்குவோம்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top