En Nilaath Thozhikku-33 & 34[final & epilouge]

Advertisement

readerensudha

New Member
Enna ma payanduteenhala .. chummmma
நல்ல கதை. நட்பு+காதல் இரண்டிற்கும் அடிப்படை நம்பிக்கை என்று காட்டும் அழகான கதை. மிக்க நன்றி.
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer

Thank uuuuu:)
 
murugesanlaxmi

Well-Known Member
சகோதரி கீதாஞ்சலி அவர்களுக்கு,
உங்களின் மறுப்பதிவு நாவல் என் நிலாத் தோழிக்கு நாவலை பற்றி சில வரிகள். காதல், நட்பு இவை இரண்டுக்கும் முதலில் தேவைப்படுவது நம்பிக்கை. அந்த நம்பிக்கை பற்றியும், காதலும், காதலுக்கும் மேலான நட்பை பற்றியும் பேசுவதே உங்களின் இந்த நாவல். ஹீரோ குள்ளராக இருப்பது போல் உள்ள இந்த நாவல் தான் நான் படித்த முதல் நாவல். அவருக்கும் அவர் நட்புதோழி நிலாவுக்கு இடையில் உள்ள அந்த நட்பு அருமை.

அதேபோல் அவர் அண்ணன் ரஞ்சனுக்கும், நிலாவுக்கும் உள்ள காதல் அருமை. மோதலில் ஆரம்பித்து பின் காதலில் முடிவது அருமை. ஒருவருக்காக ஒருவர் இருப்பது அருமை. அந்த பிளாஷ்பேக் பார்வதி காதல், நெஞ்சில் நிறைந்தது. காதலனின் உயிருக்காக காதலை துறக்கும் பார்வதி அருமை.

இந்த நாவலில் அனைவரும் அருமையாக இருந்தாலும் இருவர் மட்டும் எனக்கு மிக பிடித்தவர்கள். ஒருவர் ரஞ்சனின் நண்பராக வரும் ரிஷி. நல்ல நட்புக்கு உதாரணம். நண்பன் தவறு செய்தால் தட்டி கேட்பது, அவனின் சோகம் கண்டு வாடுவது, அவனின் சந்தோசம் பார்த்து மலர்வது என உண்மை நட்புக்கு உதாரணம்.

அதேபோல் ஹீரோயினையை கொஞ்சம் ஒதுங்குமா என்று கூறி அனைவரின் மனம் கவர்ந்த யாஷினி. என்ன பெண் இவர். உண்மை காதல், உருவம், பணம், இனம், மதம் பார்த்து வருவதில்லை எனற சொல்லுக்கு உண்மை வடிவம் போல் வந்தவர். நிரஞ்சனின் உருவம் கண்டு காதல் கொள்ளமால் உள்ளம் கண்டு முழுகாதல் கொண்டவர். நல்ல காதலுக்கு உதாரணம் இந்த உற்சாகப்பெண்.

இந்த நாவலில் மனம் கவர்ந்த இடங்கள், தெரிந்து கொண்ட சில செய்திகள்

# கர்ப்பணிப்பெண்களை DWARRSM என்ற நோய் தாக்கினால் பிறக்கும் பிள்ளைகள் உருவம் முழுமை அடையாது. என்ற செய்தி எனக்கு புதிது சகோதரி.
# நிலாவுடன் நட்பை பற்றி நிரஞ்சனின் உரையாடல் நிறைவு.
# சந்தோஷ் – பஞ்சாட்சரம் உரையாடல் அருமை.{பிஸ்நேஸ்மேன்களின் அவலம்}.
# குறை என்பது உள்ளத்தில் தானே தவிர உடலில் எற்படுவது குறை ஆகாது என்றும், ஒருவரின் குறை சொல்லி அழைக்ககூடாது என்ற கருத்து அருமை.
# யார்மேலேனும் கோபம் வந்தால், அந்த கோபத்துக்கு உரியவர் அவர்தானா என உணர்ந்த பின் கோபம் கொள்வது நல்ல முடிவு.
# இறுதியில் வரும் அந்த தாமோதரன் உரையாடல் வெகு, வெகு அருமை. ஒரு ஆசிரியரால் மட்டுமே அப்படி சிறப்பாக சிந்திக்கமுடியும்.
# உடல் ஊனம் உள்ளவர்களின் குறைகளை நிரஞ்சனின் கூற்று மூலம் கூறும் இடம் அருமை.
# பெண்களின் கல்வி, பாடம் படிப்பது என்பது அறிவுக்கு தான் தவிர இது கிடைக்கும், இந்த லாபம் வரும் என்று கற்பனைக்கு படிக்ககூடாது என கூறியது சிறப்பு.
அன்பு, காதல் இருக்கும் இடத்தில் குறைகள் எதுவும் கிடையது. குறைகள் எல்லாம் நிறைகளே. உண்மையான அன்புக்கு எதுவும் சாத்தியாமே. ஒருவரின் தகுதி என்பது வாழும் இடம் பொருத்து அமைவது இல்லை அவரின் மனம் பொறுத்து அமைவது என கூறி நாவலை முடித்தது சிறப்பு சகோதரி.
 
Sri B

Well-Known Member
காதல், நட்பு...வார்த்தைகள் வேறனாலும் அதுல இருக்குறது அன்பும் நம்பிக்கையும் தான்னு.. அழகா சொல்லிருக்கீங்க.. நிலா,ரஞ்சன்,நீரு,....எல்லா கதாபாத்திரமும் நல்லா இருக்கு... அழகான கதை கீது மா...வாழ்த்துகள்;):)
 
அண்ணா... முதலில் இவ்வளவு தாமதமாய் பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்... என் கைப்பேசியில் தமிழில் டைப் செய்ய மிகவும் கடினமாக இருந்தது. அதனால் சிஸ்டமில் பதில் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சிஸ்டமில் சிறுது நேரம் அமர்ந்து கதை பதிவுகளை டைப் செய்ததும் கழுத்து வலி வந்துவிடுகிறது. அதனாலேயே ஆப் செய்துவிட்டு ஓய்வெடுத்துவிடுவேன். இப்படியே நாட்கள் சென்றுவிட்டது அண்ணா... தயவு செய்து மன்னிச்சிடுங்க...

தங்களது பொன்னான நிமிடங்களைச் செலவழித்து என் கதைகளை படித்து தங்களின் அருமையான கருத்துகளையும் பகிர்வதற்கு மிக்க மிக்க நன்றிங்க அண்ணா.... அருமையான அலசல்!

ஹீரோ குள்ளராக வைக்க எனக்கு கொஞ்சமும் தயக்கம் தோன்றவில்லை அண்ணா... நிஜ வாழ்வில் போராட்டத்துடன் வாழ்பவர் எல்லோருமே என்னைப் பொறுத்தவரை ஹீரோ ஹீரோயின்தான்! நான் சொல்வது சரிதானே அண்ணா..:)

ரிஷி... உண்மையில் நல்ல நண்பதான் அண்ணா... அதேபோல் நானும் உங்கள் கட்சிதான் எனக்கும் நிலாவைவிட யாஷினியை அதிகம் பிடிக்கும்!!

இப்போதெல்லாம் படிப்பு எதற்காக என்பதே தெரியாமல் பல பிள்ளைகள் படிக்கின்றனர். கல்வியைப் பற்றி எவ்வளவோ சொல்ல நினைத்து அதில் ஒரு துளியை மட்டுமே கொடுத்தேன் அண்ணா...

ஒவ்வொரு கதையையும் கூர்ந்து படித்து தாங்கள் அளிக்கும் விமர்சனம், வெகு நிறைவு! Thanks for ur wonderful support anna.... :)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
காதல், நட்பு...வார்த்தைகள் வேறனாலும் அதுல இருக்குறது அன்பும் நம்பிக்கையும் தான்னு.. அழகா சொல்லிருக்கீங்க.. நிலா,ரஞ்சன்,நீரு,....எல்லா கதாபாத்திரமும் நல்லா இருக்கு... அழகான கதை கீது மா...வாழ்த்துகள்;):)

நன்றி நன்றி செல்லம்.....:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top