AMP-8

Gayus

Writers Team
Tamil Novel Writer
#1
Hii...frds & SIS's..தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்...AMP epi 8 pottachu... Padithuvittu comments kodukka marakkadhinga....happy reading:):)


அத்தியாயம் - 8

உனை கண்ட நாள் முதல்....
என் இதயம் உன்னிடம்
தஞ்சம் அடைந்துவிட்டது....
அதை மீட்க வழி
இல்லையோ.....


காலையிலேயே புதிய வீட்டிற்கு சாமான்களை அனுப்பிவிட்டு.. இருவரும் அங்கே சென்றனர்... எல்லாவற்றையும் அடுக்கிவைத்துவிட்டு பாலை காய்ச்சி பாட்டி வீட்டிற்கு முதலில் கொடுப்பதற்காக கதவை தட்ட கதவை திறந்த பாட்டி இவர்களைக் கண்டு இன்பமாக அதிர்ந்தார்...

"என்ன தம்பி... கையில பாலோட இங்க என்னப் பண்றீங்க..." என்று கேட்க... "அம்மா... நாங்க இங்கதான் புதுசாக்குடி வந்துருக்கோம்..." என்று விஷ்வா சொல்ல... "அப்படியா தம்பி உள்ள வாங்க..." என்று அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்...

ஆதி "பாட்டி நான் கொஞ்சம் வினிஷா ரூமப்பார்க்கலாமா..." என்று கேட்க... "போயிட்டுவாப்பா... நான் போய் உங்களுக்கு டீ கொண்டு வரேன்..." என்று சொல்ல... "அப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல டீ குடிக்கப்போறேன்... சீக்கீரம் போடுங்ஙப்பாட்டி..." என்று சொல்லிவிட்டு சட்டமாக ஷோபாவில் உட்கார்ந்து டீவிப்பார்த்தவனைக் கண்டு... ஆதி தலையில் அடித்துக்கொண்டே உள்ளே செல்ல... பாட்டி சிரித்துக்கொண்டே டீப்போட சென்றார்....

உள்ளே சென்ற ஆதி அறையை சுற்றிப்பார்த்துக்கொண்டே வர... புக் ஷெல்ஃபைக் கண்டவன்... "நான் முதலில் பார்த்தபோது இந்த புக்ஸ் எல்லாம் இப்படி இல்லையே... ஒருவேலைப் பாட்டி எதாவது மாத்தி வைச்சிருப்பாங்க..." என்று நினைத்து புக் ஒன்றை கையில் எடுக்க ... ஏதோ கீழே விழும் சத்தம் கேட்க குனிந்து அதை எடுத்தவன்... அது ஒரு சிடி... மேலே ப்ராஜக்ட் என்று இருக்க...எடுத்துக்கொண்டே எழுந்தவனின் கண்களுக்கு பட்டன் தெரிய அதையும் எடுத்துவிட்டு அந்த இடத்தைப் பார்க்க ஷெல்ப் நகர்ந்ததற்க்கான அடையாளம் தெரிந்தது... ஆதிக்குப் புரிந்துவிட்டது... "இது ஒன்னேப் போதும்டா... உன்ன கண்டுப்பிடிக்கிறதுக்கு... நீ இந்த அப்பார்ட்மெண்ட்லதான் கண்டிப்பா இருக்கணும்..." என்று நினைத்தவன்... பட்டனை தனது வாட்சின் பின்புறத்தில் பத்திறப்படுத்திக்கொண்டான்...

"அம்மா.. டீ ரொம்ப நல்லாயிருக்கு..." என்று டீயை ருசித்து குடித்துக்கொண்டிருந்தான்... வெளிய வந்த ஆதிக்கு டீயை கொடுக்க... வாங்கிக்கொண்டவன்.. "பாட்டி... நான் உங்கக்கிட்ட ஒன்னுக் கேட்கலாமா..." என்று கேட்க... "ம்ம்ம்... கேளுங்கத் தம்பி..." என்று சொல்ல.. "நேத்து நைட்.. நீங்க எங்கப்படுத்தீங்கம்மா..." என்று டீக்குடித்துக் கொண்டே கேட்க... "வினிஷா ரூம்லதான் தம்பி..." அவர் சொல்ல... "ரூம்க்கு யாராவது வந்த மாதிரி உங்களுக்கு எதாவது தோணுச்சா..." என்று கேட்க.. அவரோ "இல்ல தம்பி... எனக்கு எதுவும் தோணல..." என்று சொன்னார்... "ஓகேம்மா... நாங்க கிளம்புறம்... எதாவதுன்னா தயங்காமக் கூப்பிடுங்கம்மா..." என்று சொல்லிவிட்டு சென்றனர்...

தங்களின் வீட்டை திறக்கப் போனவர்களை "ஹலோ சார்.." என்று ஹரிஷின் குரல் தடுக்க... "ஹாய்... ஹரிஷ் ம்ம்ம்... உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன்... நாங்க இங்கதான் புதுசா குடிவந்துருக்கோம்..." என்று சொல்ல... "ரொம்ப சந்தோஷம் சார்... இன்னிக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு... அப்புறம் ப்ரீயாப் பேசலாம்..." என்று சென்றுவிட்டான்...

"டேய் விஷ்வா... வைஷாலி இங்கதான இருக்கா... இன்னும் உன்னப் பார்க்க வரல..." என்று கேட்க.. "அதுவாடா.. ஆபீஸ்ல முக்கியமான ப்ராஜக்ட் போயிட்டுருக்காம்... இயர்லி மார்னிங் கிளம்பிட்டா.. இவ்னிங் வரேன்னு சொன்னா... எனக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்கு.. நான் போய்ப்படுக்கிறேன்.." என்று சொன்னவனை நிறுத்தி "நாளைக்கு அம்மாவும் , நந்தினியும் வராங்கடா.." என்று சொல்ல.. "ம்ம்ம்... ஓகேடா... ஆமா எதுக்கு வர்றாங்களாம்..." என்று விஷ்வா கேட்க... "அதுவாடா.. எனக்குப் பொண்ணுப்பார்க்க..." என்று சிரித்துக்கொண்டே சொன்னவனைக் கண்டு "ஓ.. அதான் காலையிலருந்து முகத்துல அப்படி பல்பு எறிஞ்சுதா.." என்று கேட்டவனின் முதுகிலே ஒன்றுப்போட்டான் ஆதி... "போதும்டா... பொண்ணு யாருன்னு அம்மா சொல்லிட்டாங்களா..." என்று விஷ்வா கேட்க... "ம்ம்ம்... நானும் பொண்ண அல்ரெடிப் பார்த்திருக்கேண்டா..." என்று சொன்னவனை முறைத்தான் விஷ்வா... "அடப்பாவி இது எப்படா நடந்தது.." என்று கேட்க.. "எப்பையும் நடக்கல... நான் அந்தப்பொண்ணப் பார்க்கும்போது நீயும் கூடதான் இருந்த..." என்று சொன்னான் ஆதி....

"நான்கூட இருந்தனா... எப்போடா..." என்று தலையை சொரிந்துக் கொண்டே கேட்க... சிரித்த ஆதி "நான் சொல்லமாட்டனே... வர ஞாயிறு பொண்ணுப்பார்க்கப் போறோம்ல... அப்ப நீயேப்பார்த்துக்கோ..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனைக் கண்டு வாயைப்பிளந்து "என்னடா நடக்குது இங்க..." என்ற நிலையில் நின்றான்... விஷ்வா...

வெளியே வந்த ஆதி பார்க்கில் உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்தான்... போனை எடுத்து இளாவின் புகைப்படத்தை இரண்டு விரல்களை வைத்து பெரியதாகவும் , சிறியதாகவும் சூம் செய்துப் பார்த்துக்கொண்டிருந்தான்... யாரோ தன் கையை தொடுவதுப் போல் இருக்க... நிமிர்ந்து பார்த்தவனின் முன்பு உதட்டை பிதுங்கிக் கொண்டு ஒரு குழந்தை நின்றிருந்தது...

"என்னாச்சி பாப்பா..." என்று ஆதி கேட்க... "அன்க்கல்... எனக்கு இந்த சாக்கிய பிச்சி தர்ரீங்களா... அம்மா பிச்சி தரமாட்றா..." என்று தன் கையில் வைத்திருந்த லாலீபாப்பைக் காட்ட... ஆதிக்கு இளாவே தன்னிடம் கேட்பதுப்போல் தோன்ற உடனே வாங்கி பிரித்துக் கொடுத்தான்... அதை வாங்கிக்கொண்ட குழந்தை அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைக்க... அவனும் பதிலுக்கு குழந்தையின் குண்டுக்கன்னத்தில் முத்தம் ஒன்று வைத்தான்...

குழந்தையை தூக்கிக்கொண்டவன்... "அம்மா எங்க பாப்பா இருக்காங்க..." என்று கேட்க... லாலீபாப்பை சப்பிக்கொண்டே "அங்க..." என்று கைக்காட்ட... அங்கே சென்று பார்க்க குழந்தையை தேடிக்கொண்டிருந்தாள் இவளின் அம்மா... குழந்தையை அவளிடம் ஒப்படைத்தவன்... தன்னை அறிமுகம் செய்துக்கொண்டான்... அப்பெண்ணும் தன்னை அறிமுகம் செய்ய... இருவரும் பேசிக்கொண்டே அப்பார்ட்மெண்டை அடைந்தவர்கள்... "ஓகே... அண்ணா... அவர் வந்தவுடனே உங்க வீட்டுக்கு வரேன்..." என்று சொல்லிவிட்டு சென்றாள்...

வீட்டின் உள்ளே சென்றவன்... அங்கே ஒரு கையை கன்னத்தில் வைத்துக்கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவனை கண்டு அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டே அவனின் பக்கத்தில் அமர்ந்தான்... "என்ன மச்சான் தூங்கப் போல..." என்று கேட்க... கொலைவெறியான விஷ்வா "எங்கடா... அதான் தூங்கவிடாம பண்ணிட்டியே... என்னப்பார்த்தா உனக்கு பாவமா இல்ல... பொண்ணு யாருடா... நானும் எல்லா அங்கல்லயும் யோசிச்சிப் பார்த்துட்டேன்... யாருன்னே தெரியலடா..." என்று சொன்னவனை கண்டுகொள்ளாமல்... "மச்சான் எனக்கு ஒரே தூக்கமா வருது...நான் போய் படுக்கிறேன்டா.. மதியம் சப்பாடுக்கு சொல்லிடுடா... எப்படியும் நீ தூங்கப்போறதுல்ல..." என்று சொல்லிவிட்டு தன் அறையில் புகுந்துக் கொண்டான்...

"அடப்பாவி... இங்க என்ன தூங்கவிடாமப் பண்ணிட்டு... அவன் நிம்மதியா தூங்கப்போறானே..." என்று புலம்பியவன்... "சரி நம்ம ஷாலிகிட்ட பேசுவோம்..." என்று அவளிடம் மொக்கைப் போட ஆரம்பித்துவிட்டான்....

இளாவின் வீட்டில் லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்த ரோஹித்தின் முன்பு அமர்ந்தனர் சிவராம்,சீதாவும்... அவர்களை நிமிர்ந்துப்பார்த்தவன்... "என்னாச்சி ரெண்டுபேருக்கும்.... லுக்கே சரியில்லையே..." என்று நினைத்தவன்... "என்னப்பா..." என்று சாதாரணமாக கேட்க... "அதுவாடா.. நம்ம இளாவ நாளானைக்குப் பொண்ணுப் பார்க்க வர்றாங்கல்ல..." என்று சீதா சொல்ல... "ம்ம்ம்... அதுக்கென்னம்மா... மச்சான் ரொம்ப நல்லவர்மா... கண்ணமூடிகிட்டு நம்ம இளாவ கொடுக்கலாம்..." என்று சொன்னவனை பார்த்து தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டவர்கள்...

"டேய்... அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லடா... உனக்கு ஒரு பொண்ணப் பார்த்து வச்சிருக்கோம்... திங்கள் அன்னைக்கு பொண்ணுப் பார்க்க வர்றதா சொல்லிட்டோம்..." என்று சிவராம் சொல்ல... அதிர்ந்த...ரோஹித் நிதானமாக... "அப்பா நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்... நான் ரேஷ்மிய லவ் பன்றேன்..." என்று சொல்லிவிட்டு தலையை குனிந்துக்கொண்டான்... இவனின் செய்கையைப் பார்த்த பெற்றோர்கள் சிரிக்க... சீதா மகனின் காதைப்பிடித்து திருகிக்கொண்டே "இத சொல்ல உனக்கு இவ்வளவு நாளாச்சா... ஏன்டா என்கிட்ட முன்னாடியே சொல்லல..." என்று கேட்க... "விடு சீதா அதான் இப்போ சொல்லிட்டான்ல... டேய் படவா உனக்குப் பார்த்த பொண்ணே ரேஷ்மி தான்டா..." என்று சிவராம் சொல்ல... "ரொம்ப தேங்ஸ்ப்பா,தேங்ஸ்மா..." என்று அவர்களைக் கட்டிக்கொண்டான்...

"ப்ரதர்... எனக்கெல்லாம் எதுவுமே கிடையாதா... நான்தான் உன் லவ்க்கு ரொக்கமன்ட் பன்னது..." என்று கதவில் சாய்ந்துக் கொண்டுக் கேட்ட இளாவைக் கண்டு சந்தோஷம் அடைந்நவர்கள்... "இளா எப்படா வந்த... கேம்ப் நல்லபடியா முடிஞ்சுதா" என்று சீதா கேட்க.... "ம்ம்ம்... எல்லாம் சூப்பராப்போச்சு..." தன் அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டாள்...

அவளின் தலையை தடவிக்கொண்டே... "மாப்பிளப் போட்டோ பார்த்தியாட...உனக்குப் புடிச்சிருக்கா..." என்று ஆர்வமாக கேட்ட பொற்றோர்களைக் கண்டு முகம் சிவந்தவள்... வெட்கப்பட்டுக்கொண்டே தனது அறைக்கு ஓடிவந்துவிட்டாள்... "ச்ச்ச... அவன நினைச்சாலே... எனக்கு என்னமோ ஆயிடுது... ஒரு வேலை நான் அவன லவ் பன்ன ஆரம்பிச்சிட்டனோ..." என்று யோசிக்க... "ம்ம்ம்... ஏதுவா இருந்தாலும்... பொண்ணுப் பார்க்க வரும்போதுப் பார்த்துக்கலாம்..." என்று தன் வேலைகளைப் பார்க்க சென்றாள்...

ஆதியோ இவளை பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தான்... "நம்மளப் பார்த்வுடனே வேணான்னு சொல்லிட்டா என்னப் பன்றது... அப்படி சொல்லிடுவாளா என்ன... அப்படி சொல்லிட்டா... நான் உன்ன லவ் பன்றேன்னு சொல்லிட வேண்டியதுதான்..." என்று முடிவெடுத்துவிட்டு அவளை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனான்....

-தொடரும்
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes