AMP - 16

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii.. Dear frds&siss.. AMP 16 epi pottachu.. Padithuvittu comments kodukka marakkadhinga. .happy reading.. More smilies...



அத்தியாயம் - 16

நீயும் என்னருகில் நின்றால்...
உன் சுவாசம் என்மீது பட்டால்..
ஆயுளும் இனி கூடுமே..
என்றும் மரணம் பயந்தோடுமே..

அனைவரும் கோயம்புத்தூர் வருகை தந்து இரண்டு நாட்கள் எப்படியோ கடந்துவிட்டனர்.. இளாவின் வீட்டு அருகிலேயே கல்யாண மண்டபம் இருப்பதால் ஆதி வீட்டினரும் அங்கேயே வந்துவிட்டனர்.. வீடே சொந்தபந்தங்களுடன் நிறைந்து காணப்பட்டது.. ஆதி இளாவை கடைசியாக பார்த்தது சென்னையில் தான்.. இங்கு வந்தது முதல் கண்ணில்படவில்லை.. போனில் மட்டுமே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.. ஆதி இன்று எப்படியாவது அவளை பார்த்துவிட வேண்டும் என்று வீட்டையே சுற்றிக்கொண்டிருந்தான்..

இரவும் நெருங்குவிட ரேஷ்மி இளாவுக்கு மெஹந்தி போட்டுக்கொண்டிருந்தாள்.. ஆதி எதர்ச்சையாக அங்கே வர.. அவர்களுக்கு எதிராக உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. அவனை கண்ட இளா "இங்க என்ன பன்றீங்க.." என்று இரு புருவங்களையும் உயர்த்திகேட்க.. அதில் மயங்கியவன் "சூப்பரா இருக்கடி.." என்று கையில் சைகை காமித்தான். அதில் வெட்கம்கொண்டவள் கீழே குனிந்துக்கொண்டாள்... ரோஹித்தும் இதே வேலையைதான் ரேஷ்மியிடம் செய்துகொண்டிருந்தான்..

ஆதியையும், ரோஹித்தையும் கண்ட விஷ்வாவிற்கு காதில் புகை வராத குறைதான்... பின்ன ஷாலிக்கு முக்கியமான ப்ராஜக்ட் வொர்க் இருப்பதால்... அவளால் வரமுடியவில்லை.. நந்து "ஹரிஷ் வருவானா மாட்டானா.." என்று வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள்.. ஹரிஷ் ஆதியிடம் "இன்று இரவு வந்துவிடுவேன்.." என்று சொல்லியிருந்தான்...

இவர்கள் இங்கே சந்தோஷமாக இருக்க.. தாஸ் அங்கே கோவத்தில் இருந்தான்.. இன்று தான் அவனுக்கு ஆதி இளாவின் திருமண விஷயம் தெரியவந்தது.. ஆம்.. இரண்டு நாட்களாக இளாவை பார்க்காததால் ஹாஸ்பிட்டல் சென்று அவளை தேட.. எங்கும் அவள் இல்லை.. அங்கே உள்ள செவிலியரிடம் விசாரித்து தெரிந்துகொண்டான்.. "ம்ம்ம்... என்னொட பாலிசியே கல்யாணமான பொண்ணுங்கள தொடகூடாதுங்கிறதுதான்.. ஆனா உன்ன ஒருதடவயாவது தொடாம விடமாட்டேன்..." என்று சூலுரைத்துக்கொண்டான்...

இரவு வெகுநேரமாகிவிட்டதால் ஹாலில் உட்கார்ந்து அரட்டை அடித்துகொண்டிருந்தவர்களை "எல்லாரும் போய் தூங்குங்க.. காலையில நலங்கு வைக்க சீக்கிரம் எழுந்திரிக்கனும்..." என்று வயதானவர் ஒருவர் சொல்ல.. அனைவரும் தூங்குவதற்கு ஆயத்தமானார்கள்.. இளா தனது அறைக்கு செல்ல.. அவள் பின்னாடியே சென்றான் ஆதி.. இளா இரண்டு கைகளிலும் மெஹந்தி போட்டுருப்பதால் சேலையின் முந்தானை நழுவிக்கொண்டே இருக்க.. அதை சரிசெய்தபடியே அறையின் உள்ளே சென்றுவிட்டாள்..படுக்கையின் அருகே வந்தவள் கதவு சாற்றவில்லையென்று நினைவு வர திரும்பி நடக்க அங்கே கதவில் சாய்ந்தபடி நின்றிருந்தான் ஆதி...

அவனை கண்டு அதிர்ந்தவள் "இங்க என்ன பன்றீங்க ஆது... உங்க ரூம்னு நினைச்சி இங்க வந்துட்டீங்களா.." என்று கேட்க.. "இல்ல.. சும்மா உன்ன பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.." என்று அவளை ரசனையாக பார்த்தான்.. அவனின் பார்வைமாற்றத்தை உணர்ந்தவள் "ஆது.. போய் தூங்குங்க.." என்று சொல்ல... அவனோ அவள் சொல்வதையெல்லாம் கவனிக்காமல் அவளை நோக்கி முன்னேறினான்.. அவளும் பின்னாலே போக.. சுவர் இடித்து நின்றவளின் சேலை சரிய... அதை பிடிக்க போனவளுக்கு முன்னால் ஆதி பிடித்து சரி செய்தான்... இருவரும் உடல் உரச நின்றிருந்தனர்.. ஆதி கைகளால் அவளின் முடிகற்றைகளை ஒதுக்கிவிட்டவன்.. இதழ்களை கண்டவன்.. அவற்றை நோக்கி குனிந்தான்.. நீண்ட நேரம் கழித்து இதழ்களை பிரித்தான்... இளா அவனின் தோல்களில் சாய்ந்தாள்..

நந்து வாசலை பார்த்துக்கொண்டே தூங்கியும்விட்டாள்... ஹரிஷ் வீட்டின் உள்ளே நுழைய தன்னவளின் தரிசனம் கிடைக்க.. அமைதியாக அவள் உறங்குவதை ரசித்தவன்.. பின் ஆதிக்கு போன் செய்தான்.. ஆதி "இந்த நேரத்துல.. யார்றாது கரடி.." என்று திட்டிக்கொண்டே இளாவைவிட்டு தள்ளிநின்றவன்.. போனை பார்க்க "அய்யோ.. மாப்பிள கரடி.." என்று அட்டண்ட் செய்தான்.. "சொல்லுங்க மாப்பிள கரடி..." என்று ஆதி கேட்க.. "மாப்பிள கரடியா..." என்று யோசித்த ஹரிஷ்.. பின் விளங்கவும் "சாரி மச்சான்.. இந்த நேரத்துல டிஸ்டர்ப் பன்னிட்டேன்.." என்று சொல்ல.. "சரி.. சொல்லு ஹரிஷ்.. எங்க இருக்க.." என்று கேட்க.. "ம்ம்ம்.. நான் உங்க வீட்டுக்குள்ள வந்து அரமணி நேரமாகுது.." என்று ஹரிஷ் சொல்ல.. "ஓஓ.. சாரி ஜஸ்ட் வெயிட் பார் எ மினிட்.." என்று ஆதி சொல்ல.. "ம்ம்ம்.. ஓகே ஆதி.." என்று போனை வைத்தவன் நந்துவை ரசிக்க ஆரம்பித்தான்... இங்கே ஆதி "லாலீபாப் ஹரிஷ் வந்துருக்கான்.. நான் போய் அவனுக்கு ரூம் பன்னிகொடுத்துட்டு தூங்கப்போறேன்.. நீயும் நல்லா தூங்கு.." என்று மீண்டும் அவளின் இதழில் தன் இதழை லேசாக ஒற்றியெடுத்துவிட்டு "குட்நைட்.." என்று சொல்லிவிட்டு சென்றான்.. இளாவுக்கு தான் எந்த உலகத்தில் இருக்கிறோம் என்றே தெரியாமல் ஆதியின் நினைவுகளுடன் தூங்கிப்போனாள்...

கீழே சென்ற ஆதி நந்துவை பார்க்க.. அவள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.. தனத்தை அழைத்து அவளை உள்ளே கூட்டிப்போக செய்தான்.. ஷோபாவில் அமர்ந்திருந்த ஹரிஷிடம் "வாடா.. ரூம் போகலாம்.." என்று அழைக்க.. "ஆதி உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.." என்று ஹரிஷ் சொல்ல.. ஆதி சிறிது யோசித்தவன் "ம்ம்ம்.. ரூம் போயே பேசலாம்.." என்று இருவரும் தங்கள் அறை நோக்கி சென்றனர்...

"ஆதி இன்னைக்கு காலையில ஒரு பத்து இல்ல பதினொரு மணி இருக்கும்.. நான் இங்க வர்றதுக்காக ஹாஸ்பிட்டல்ல பர்மிஷன்போட்டு வெளிய வரக்குள்ள நம்ம ப்ளாட்ல இருக்கர ஒருத்தன் இளாவ பத்தி ஒரு நர்ஸ்கிட்ட விசாரிச்சான்.. அவங்க இளாவுக்கு மேரஜ்னு சொன்னதும் அவனோட பேஸ் ரியாக்ஷனே மாறிடுச்சி.." என்று சொல்ல ஆதி அவன் யாராக இருக்கும் என்று யூகித்தவன்.. "ஹரிஷ் நீங்க சொல்றவன்.. நம்ம அப்பார்ட்மெண்ட்னா.. அவன பத்தி உங்களுக்கு எதாவது ஒரு சின்ன விஷயம் தெரிஞ்சிருக்கும்.. அத கொஞ்சம் யோசிச்சி சொல்லமுடியுமா..." என்று ஆதி கேட்க.. ஹரிஷ் அன்று லிப்டில் நடந்த இன்சிடன்டை சொன்னவன்.. கூடவே "அன்னையிலருந்து ஏதோவொரு நெருடல் வினிஷா மரணத்துக்கும் இவனுக்கும் சம்மந்தமிருக்குமோன்னு.." என்று சொல்ல.. ஆதிக்கு கோபம் வர.. அடக்கிக்கொண்டான்.. இன்னோரு துருப்புச்சீட்டு கிடைத்துவிட்டது.. என்று எண்ணிய ஆதி "சரி.. மிச்சத்த சென்னைல பேசிக்கலாம்... ஆமா சாப்டியா இல்ல கொண்வரசொல்லவா..." என்று ஆதி கேட்க... "இல்ல வேண்டாம் ஆதி.. வரும்போதே சாப்டுதான் வந்தேன்... நான் ரெப்ரஷாகிட்டு ரெஸ்ட் எடுக்கரேன்.. நீ முதல்ல தூங்கு.. கல்யாண மாப்பிள காலையில ப்ரெஷ்ஷா இருக்க வேண்டாமா..." என்று இருவரும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்..

கல்யாண காலை அழகாக விடிந்தது.. மண்டபமே குட்டி பேலஸ்போல் காட்சியலிக்க.. நந்துவிடம் மீண்டும் ஹரிஷ் மொக்கை வாங்கிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தான்.. விஷ்வாவும் ஆதியும் பட்டு வேஷ்டி சட்டையில் கிளம்பி கீழேவந்தனர்... ஆதி மேடையில் அமர.. இளா அழகிய மெரூன் நிறத்தில் பொன்னிற பார்டர் வைத்த பட்டுப்புடவையில் ட்ரடிஷ்னல் தேவதையாக அழைத்துவரப்பட்டாள்.. ஆதி அவளை கண்டவன் கண்ணை அகற்றவில்லை அப்படியே விழுங்குவதுபோல் பார்த்துக்கொண்டிருந்தான்.. இவனை பார்த்த விஷ்வா "அய்யோ இப்படி மானத்தவாங்குறானே.." என்று தலையிலேயே அடித்துக்கொண்டவன்... அருகில் சென்று "டேய்.. போதும்டா.. ரொம்ப நேரமா அய்யர் உன்ன தான் கூப்பர்றார்..." என்று சொல்லி திரும்பசெய்தான்..

சுபவேலையில் பொன்மாங்கல்யத்தை இளாவின் பொன்கழுத்தில் அணிவித்தான் ஆதி.. எல்லோருடைய நல்லாசியுடனும்...

அன்று இரவே நல்ல நேரம் இருப்பதால் முதல்இரவு வைப்பதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.. ரேஷ்மியும் நந்துவும் இளாவை அழகாக ரெடிசெய்ய.. விஷ்வாவும், ஹரிஷும் படுக்கையறையை மல்லிகை மற்றும் ரோஜா இதழ்களால் அலங்கரித்தனர்.. ரோஹித் ஆதியுடன் இருந்தான்..

இளா முதல் இரவு அறைக்கு செல்ல .. அங்கே ஆதி ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்தான்... பால் டம்பலரை மேஜை மேல்வைத்துவிட்டு அவனின் அருகில் சென்று அமர.. அவளின் கைகளை பிடித்தவன் "லாலீபாப்.. இப்போ... நமக்குள்ள இது வேண்டாம்.. ஏன்னா உனக்கே தெரியும் நான் ஒரு கேஸ் விஷயமா ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன்னு.. சோ.. கொஞ்சநாளைக்கு தள்ளிவச்சிக்கலாமா.." என்று சிறு குழந்தைபோல் பர்மிஷன் கேட்டவனை.. ஆச்சரியமாக பார்த்தாள் இளா.. பின்ன முதல் சந்திப்பிலேயே அவனின் கோபத்தை கண்டவள் அல்லவா... "ஏய்.. நான் இங்க பேசிட்டுரிக்கேன்.. நீ என்ன பன்ற.." என்று ஆதி கேட்க.. "ஹான்.. ம்ம்ம்.. ஒன்னும் இல்ல ஆது.. இனிமே நீயும் நானும் ஒன்னு.. சோ.. எவ்வளவு நாளானாளும் வெயிட் பன்னுவேன்.." என்று அவனின் நெஞ்சின் மேல் சாய்ந்தவள் "ஆது.. ரொம்ப டயர்டா இருக்கு தூங்களாமா.." என்று கேட்க.. "அப்போ உனக்கு லாலீபாப் வேணாமா..." என்று ஆதி கேட்க.. "ம்ம்ம்.. எனக்கு வேணும்.." என்று எழுந்து அமர்ந்தாள்.. அவளிடம் நீட்டியவன்... அவள் அழகாக சாப்பிடுவதை ரசித்தான்... "உங்களுக்கு.." என்று அவள் கேட்க.. "வேணாம்.. நான் வேற சாப்பிடுவேன்.." என்று சொன்னான்... சாப்பிட்டு முடித்தவளுடம் "எனக்கு லாலீபாப்.." என்று அவன் ஒரு மார்க்கமாக கேட்க.. "நான் தான் அப்பவே கேட்டேன்ல.. நீங்க தான் வேணாம்னு சொன்னீங்க.." என்று வழக்காடியவளின் இதழை சிறைசெய்தான் ஆதி...

- தொடரும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top