AMP-13

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii... Frds&siss.. AMP 13epi pottachu.. Padithuvittu comments kodukka marakkadhinga... Happy Reading...:):):)



அத்தியாயம் - 13

நொடி பொழுதிலும்...
காதல் வரும் என்றுணர்ந்தேன் உன்னாலே....
எல்லா ஜென்மங்களிளும்...
அதை உணர வேண்டும்
உன்னாலே....

ஆதி.. இளாவின் எதிர்புறம் அமர்ந்தவன்.. இளாவை பார்க்க.. அவளோ இவனை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.. "ம்ம்ம்.. போலீஸ் யூனிபார்ம்லயும் சூப்பரா இருக்கானே.." என்று நினைத்துக்கொண்டாள்.. ஆதி இவளை பார்க்க வரும் சந்தோஷத்தில் உடை மாற்றாமல் வந்திருந்தான்.. அவள் தன்னை சைட் அடிப்பதை கண்டவன்.. "ஏய்.. லாலீபாப்.. என்ன சைட் அடிச்சதுபோதும்.." என்று சொல்ல.. "நான் ஒன்னும் உங்கள சைட்.. அடிக்கல.." என்று அவள் அழகாக பொய் சொல்ல.. "ஓஓ.. அப்போ என்னப்பன்னிட்டு இருந்தீங்க.. மேடம்.." என்று சிரித்துக்கொண்டே ஆதி கேட்க.. "அது.." என்று தடுமாறியவள்.. "அது.. உங்கள ஃபர்ஸ்ட் டைம் யூனிபார்ம்ல பார்க்கிறேன்ல.. அதான் கொஞ்சம் ஓவரா பார்த்துட்டேன்.." என்று அவனையும், கீழேயும் மாறி மாறி பார்த்துக்கொண்டே சொன்னவளின் அழகில் மயங்கியவன் அவளையே பார்க்க.. அவளும் பார்க்க.. இவர்களின் மோன நிலையை கலைத்தது பேரரின் குரல்...

இரண்டு கேப்பச்சீனோ ஆர்டர் கொடுத்துவிட்டு.. இருவரும் அமைதியாக இருக்க.. ஆதிதான் முதலில் பேச ஆரம்பித்தான்.. "லாலீபாப்.. என்னபத்தி கொஞ்சம் உங்கிட்ட சொல்லனும்.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. சொல்லுங்க.." என்று அவளும் கேட்க ஆரம்பித்தாள்.. "உனக்கே தெரியும் போலீஸ் வேலங்கிறது ரிஸ்க் நிறைய இருக்கும்.. அடிக்கடி ட்ரான்ஸ்பர்.. இப்படி நிறைய இருக்கு.. ம்ம்ம்.. அப்புறம் எனக்கு கோவம்...கொஞ்சம் வரும் நீதான் என்ன அட்ஜஸ் பன்னிக்கனும்.. நம்மளோட ஃபர்ஸ்ட் மீட்டீங்கே சரியில்ல.. சாரி.. ஆனா உன்ன ஹாஸ்பிட்டல்ல மறுபடியும் பார்த்ததும்.. ஏன்னே தெரியாம உன்ன எப்பவும் பார்த்துகிட்டே இருக்கனும்னு தோணும்... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.. ஆனா இதுக்கெல்லாம் ரீசன் காதல்னு லேட்டாதான் புரிஞ்சிகிட்டேன்.. உனக்கும் என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியும்.." என்று சொல்லிமுடித்தவன்.. கிப்டை அவளிடம் கொடுக்க.. இதுவரை அவன் சொல்வதையெல்லாம் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தவள்.. அவனை பார்த்துக்கொண்டே அதை வாங்கி பிரிக்க.. அதில் இருந்ததை கண்டவள்.. பொய்யான கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்கவும்.. "ஐ லவ் யூ.. லாலீபாப்.." என்று அவன் சொல்லவும்.. இருவரும் ஆர்டர் செய்த காஃபி வரவும்.. சரியாக இருந்தது..

"என்ன.. கிப்ட் பிடிச்சிருக்கா.." என்று அவன் கேட்க.. "ம்ம்ம்.. நீங்க என்ன லாலீபாப்னு சொல்லி அழைக்கிறதும் பிடிச்சிருக்கு.. இப்போ வாங்கிக்குடுத்த லாலீபாப்பும் பிடிச்சிருக்கு.." என்று அழகாய் வெட்கப்பட்டுக்கொண்டே சொன்னாள்.. "ம்ம்ம்.. அப்புறம் இன்னும் ரெண்டு மாசத்துக்கு நான் கொஞ்சம் பிசி.. ஒரு இம்பார்ட்டன்டான கேஸ் ஒன்னு போய்ட்டு இருக்கு.. சோ.. நான் போன் அட்டண்ட் பண்ணாம இருந்தா.. அப்சட் ஆககூடாது புரிஞ்சுதா.." என்று ஆதி சொல்ல... "ம்ம்ம்.. அப்போ உங்களுக்கு என் நியாபகம் வந்தா.. நீங்க என்ன செய்வீங்க.." என்று முக்கியமான கேள்வியை அவள் கேட்க... "ம்ம்ம்.. நான் உனக்கு.. கால் பன்னுவேன்.. நீ எடுக்கலனா.." என்று முடித்தவன்.. சுற்றிமுற்றி பார்த்தவன்.. யாரும் இவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் இல்லை.. என்றதும்.. "கொஞ்சம் க்ளோஸ்ல வாயேன்.." என்று அவளிடம் சொல்ல.. "ம்ம்ம்.." என்று காதை அவனின் அருகில் கொண்டு செல்ல.. "உன் போட்டோ.. என் போன்ல இருக்கு.. அதுக்கு முத்தம் கொடுத்து.. என்ன தேத்திப்பேன்.." என்று சொல்ல.. அவன் சொல்வதை லேட்டாக புரிந்துக்கொண்டவள்.. "ஆது.." என்று சிணுங்கியவளின் முகத்தில் செம்மை குடிக்கொண்டது.. இருவரும் அடுத்த அரைமணிநேரம் ஏதோ ஏதோ பேசிக்கொண்டே கேப்பச்சீனோவை காலி செய்தனர்...

"சரி.. கிளம்பலாமா..." என்று ஆதி கேட்க.. "ம்ம்ம்... போலமே.." என்று சொல்ல.. இருவரும் வெளியே சென்றனர்..

இதுவரை அவர்கள் இருவரும் பேசியதை கேட்ட தாஸ்.. "ஓஓ.. என்ன புடிக்கதான்.. ப்ளானிங்கா ஆதி.. அது உன்னால முடியாது... பார்ப்போம்.. நீயா இல்ல நானான்னு.. உன் லவ்வர் என்ன ரொம்ப டிஸ்டர்ப் பன்றாளே.. ம்ம்ம்.. கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருக்கலாம்னு நினைச்சா.. இருக்கவிடமாட்றிங்களே..." என்று நினைத்துக்கொண்டவன்.. வேகமாக வெளியே சென்று பார்க்க.. இளா ஆதியிடம் பேசிக்கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தவள்.. அவனிடம் சொல்லிக்கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி சென்றாள்... ஆதியும் தனது அலுவலகத்துக்கு கிளம்பினான்.. ஆதி சென்றவுடன்... இளாவை பின்தொடர்ந்து சென்றான் தாஸ்..

வண்டியில் சென்றுக்கொண்டிருந்த ஆதியின் போன் ஒலிக்க எடுத்துப்பார்த்தவன்.. விஷ்வா என்று இருக்க அட்டண்ட் செய்து.. "சொல்லுடா.. வேல முடிஞ்சுதா.." என்று கேட்க.. "ஃபினிஷ்டா.. இவ்னிங் ட்ரெயின்ல வரேன்.. மிட் நைட்டாகும் வர.. பிக்கப் பன்றியா.. இல்ல நானே வந்தரவா.." என்று கேட்க... "ஏய்.. நானே வரேண்டா.. ஹான் சொல்ல மறந்துட்டேன்.. நாளைக்கு அம்மாவும், நந்துவும் ஊருக்குப் போறாங்கடா.." என்று சொல்ல.. "இப்போதானடா வந்தாங்க.. அதுக்குள்ள ஏன்.." என்று விஷ்வா கேட்க.. "இல்லடா கல்யாணம் கோயம்புத்தூர்ல வைக்கர்தா இளா வீட்லயும், அம்மாவும் முடிவுப்பன்னிருக்காங்க.. இன்னும் ஒருமாசம்தான இருக்கு அதான்.. இப்பவேபோய் எல்லா ரெடிபன்னாதான் கரக்டா இருக்கம்னு அம்மா சொல்றாங்கடா.." என்று ஆதி சொல்ல.. "ஓகேடா.. நைட் மீட் பன்னலாம்.." என்று வைத்தான் விஷ்வா..

சுந்தரிபாட்டியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டற்கு அழைத்து சென்றான் ஹரிஷ்.. தனது அறையில் இருந்து ஹாலுக்கு வந்த நந்து கதவு திறந்து இருப்பதால் மூடுவதற்கு செல்ல.. எதிர் வீட்டின் வாசலில் நின்றிருந்த பாட்டியையும், ஹரிஷையும் பார்த்தவள்.. "பாட்டி.. டிஸ்சார்ஜ் பன்னிட்டாங்களா.. இப்போ எப்படி இருக்கு பாட்டி.." என்று அவரின் கையைப் பிடித்துக்கொண்டாள்.. "ம்ம்ம்.. பரவாலடா.." என்று அவர் சொல்ல.. "நந்து இவங்கள கொஞ்சம் உள்ள.. கூட்டிட்டு போ... திங்ஸ்லாம் கீழ இருக்கு.. நான் போய் எடுத்துட்டு வந்தர்றேன்..." என்று ஹரிஷ் சொல்ல.. "ம்ம்ம்.. நீங்க போய்ட்டு வாங்க.." என்று சொல்லிவிட்டு பாட்டியை உள்ளே அழைத்துசென்றாள்... ஷோபாவில் அமர்ந்தப் பாட்டி "என்னால இந்த புள்ள கஷ்டப்படுதே.. ஆண்டவா அந்த புள்ளைக்கு நல்ல துணைய கொடுங்கப்பா..." என்று புலம்ப.. "யாருக்கு பாட்டி இந்த வேண்டல்.." என்று கேட்டுக்கொண்டே அவருக்கு இஞ்சி டீ ரெடிப்பண்ண.. "ம்ம்ம்.. எல்லாம் இந்த ஹரிஷ் தம்பிக்கு தான்.. எனக்குன்னு இருந்த ஒரு சொந்தம் போனதுக்கப்புறம்... இந்த தம்பி தான்.. எனக்கு எதாவதுன்னா உதவி பன்றாரு.." என்று சொல்ல.. "ஓஓ.. பாட்டி அவரோட அப்பா, அம்மா எங்க இருக்காங்க.." என்று கேட்க.. "ஹரிஷ்க்கு யாரும் கிடையாதுடா.. ஆசிரமத்துல வளர்ந்ததா.. ஒரு தடவ வனிஷா சொன்னா..." என்று சொன்னார் பாட்டி... இதை கேட்ட நந்துக்கு ஏனென்றே தெரியாமல் மனதுக்கு கஷ்டமாக இருந்தது...

தனம்.. நந்துவை தேடி வெளியே வர.. அங்கே ஹரிஷை கண்டவர்.. "தம்பி எதிர்வீட்டம்மா.. எப்படி இருக்காங்க.. நீங்க அந்த ஹாஸ்பிட்டல்ல தான டாக்டரா இருக்கீங்க.." என்று கேட்க.. "ஆமா.. ஆண்ட்டி.. அவங்கள இன்னிக்குதான் டிஸ்சார்ஜ் பன்னாங்க.. உள்ள தான் இருக்காங்க.. வாங்க..." என்று ஹரிஷ் சொல்ல.. "இருப்பா.. என் பொண்ணுதான் அந்த பாட்டிக்கு என்னாச்சோன்னு புலம்பிகிட்டே இருந்தா.. அவள கூட்டிட்டு வந்தர்றேன்.." என்று தனம் நந்துவை தேடிப்போக.. "ஆண்ட்டி அவங்க பாட்டிகிட்டதான் பேசிட்டிருக்காங்க.. வாங்க உள்ள போகலாம்.." என்று அவரை உள்ளே அழைத்து சென்றான் ஹரிஷ்...

உள்ளே வந்த ஹரிஷை பார்த்துக்கொண்டே இருந்தாள் நந்து.. தனம் பாட்டியிடம் நலம் விசாரிக்க.. அப்படியே நாளை ஊருக்கு செல்வதை சொல்ல.. அதை கேட்ட ஹரிஷ் நந்துவை பார்க்க.. அவளும் அவனை தான் பார்த்தாள்..

தனமும், நந்துவும் தங்கள் வீட்டிற்கு செல்ல.. ஹரிஷ் பாட்டியை தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.. "பாட்டி கொஞ்ச நாளைக்கு நீங்க இங்கயே தங்குங்க.." என்று சொல்லி அவரை படுக்கையறையில் படுக்கவைத்துவிட்டு.. ஹாலுக்கு வந்தவன் இருக்கையில் அமர்ந்தான்... "நாளைக்கு அவ ஊருக்கு போயிட்டான்னா பார்க்கவே முடியாது.. என் லவ்வ எப்படி அவளுக்கு சொல்றது.." என்ற குழப்பத்தில் அப்படியே தூங்கிவிட்டான்...

இரவு ட்யூட்டி முடித்துவிட்டு வெளியே வந்த இளா.. தனது ஸ்கூட்டியை உயிர்பித்து வீடு நோக்கிப் பயணித்தாள்... தாஸும் பின்தொடர்ந்தான்.. அவள் வீடு இருக்கும் தெருவை கண்டவன் கொஞ்சம் பயந்துதான் போனான்.. அங்கே இருக்கும் பல குடியிருப்புகள் காவல் துறையினறது.. இருந்தும் வீடுவரை தொடர்ந்தான்.. அவள் அப்பார்ட்மெண்ட்டுக்குள் சென்றுவிட்டாள்.. தாஸ் வெளியே நின்று அப்பார்ட்மெண்ட்டின் செக்யூரெட்டி, மற்றும் ப்ரொடக்ஷனை பார்த்து.. "ஆஹா.. இங்க வச்சி இவள ஒன்னும் பன்ன முடியாது போலவே.. இதுக்கு வேற ரூட்ல தான் போனும்.." என்று யோசித்துக்கொண்டிருந்தவனை... "ஹலோ.. யாரு நீ... இங்க என்ன பன்னிட்டுருக்க.. எந்த ஏரியா.." என்று செக்யூரெட்டி கேட்க.. "இல்லன்னா.. தெரிஞ்சவங்க இங்கதான் இருக்கறதா சொன்னாங்க.. அதான் பார்க்கலாமேன்னு வந்தேன்.." என்று அவன் மழுப்புவதை கண்டுகொண்ட செக்யூரெட்டி "யோவ்.. உன் பேச்சே சரியில்ல.. ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிடு... இன்னொருவாட்டி இந்த ஏரியாவுல உன்ன பார்த்தேன்.. அப்புறம் மாமியார் வீட்லதான் இருக்கனும்.." என்று மிரட்ட.. தாஸ் சென்றுவிட்டான்...

இரவு தனது உடைகளை எடுத்துவைத்துக்கொண்டிருந்த நந்துவின் அருகில் சென்று அமர்ந்த ஆதி.. தங்கையின் முகம் ஏதோ யோசனையில் இருப்பதுபோல் தோன்ற.. "என்னடா.. ஏதோ யோசனையில இருக்கபோல.." என்று கேட்க.. திடீரென்று பக்கத்தில் அண்ணனின் குரல் கேட்கவும் திரும்பியவள்.. அவனின் தோல் சாய்ந்து.. "அண்ணா.. எனக்கு என்னமோ ஆச்சுன்னா.. அந்த ஹரிஷ் இருக்கார்ல அவர நான் லவ் பன்றனோன்னு தோணுதுன்ன.." என்று அழுதாள்..

தங்கை சொன்னதை கேட்டு அதிர்ந்த ஆதி.. "ஏய்.. நந்து என் தங்கச்சி ரொம்ப தைரியமானவன்னு நினைச்சா.. இப்படி அழற.. ம்ம்ம் இங்க பாரு.." என்று சொல்ல.. நிமிர்ந்து பார்த்தவள்.. "என்ன மன்னிச்சிடுன்னா.. எனக்கே அது குழப்பமா இருக்கு.." என்று நந்து சொல்ல.. "நந்து குழப்பம் வந்தாதான் காதல்னு அர்த்தம்.. இப்போ புரியுதா.." என்று சொன்ன அண்ணனை கட்டிக்கொண்டவள்.. "தேங்ஸ்ணா.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. மாப்பிள ரொம்ப நல்லவர்தான்.. ஆனா உன்கிட்ட மாட்டிகிட்டு என்ன பன்னபோறார்னு தான் தெரியல.." என்று ஆதி சொன்னதும்.. அவனை முறைத்து பார்த்தவள்.. "போண்ணா.." என்று அவனை பொய்யாக அடித்தாள்... "சரி எத பத்தியும் யோசிக்காம.. நிம்மதியா தூங்கு.. அண்ணா எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் ஓகே.. குட்நைட்..." என்று சொல்லிவிட்டு சென்றான்.. நந்துவும் எந்த குழப்பமும் இல்லாமல்
நன்றாக தூங்கினாள்...

-தொடரும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top