AMP-12

Advertisement

Gayus

Writers Team
Tamil Novel Writer
Hii.. Frds & siss AMP 12epi pottchu.. Padithuvittu comments kodukka marakkadhinga.... Happy Reading...:):):)

அத்தியாயம் - 12

உனது விழிகளால் எனை களவாடினாய்..
எனது விழிகளால் உன்னை
களவாடினேன்...
நம் இருவரையும் களவாடியது
காதல்...

ஹாஸ்பிட்டலில் கண் விழித்த பாட்டியிடம்.. "என்ன நடந்துச்சும்மா.." என்று ஆதி கேட்க.. "நான் வினிஷா ரூம்க்கு போனப்ப யாரோ உள்ள இருந்தான்... நான் அவன பார்த்துட்டு வெளியே சத்தம் போட்டுட்டே வந்தனா... அப்போ டைனிங் டேபிள் மேல இடுச்சி கீழே விழந்தேன்... அப்புறம் என்ன நடந்துச்சின்னு எனக்கு தெரியல... ஆனா என் பேத்தியோட சாவுக்கும் அவனுக்கும் சம்மந்தம் இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி தம்பி... அவன விட்டுடாத..." என்று சொல்லிவிட்டு மயக்கநிலைக்கு சென்றார்...பாட்டி..

அவர் சொன்னதை கேட்ட ஆதியும், விஷ்வாவும் ஒரு முடிவுக்கு வந்தவர்கள்.. பின் இருவரும் இரயிவே ஸ்டேஷனுக்கு செல்ல... விஷ்வவாவை ஊட்டிக்கு ட்ரெயின் ஏற்றிவிட்டு அலுவலகத்துக்கு சென்றான் ஆதி... ராஜன் "சொல்லுங்க ஆதி.. இதுவரைக்கும் கேஸ்.. என்ன நிலையில இருக்கு.." என்று கேட்க.. இதுவரை நடந்த அனைத்தையும் சொன்ன ஆதி.. "கல்பிரிட்கிட்ட நெருங்கியாச்சு சார்... இன்னும் ரெண்டு மன்த்ஸ்ல அவன எவிடன்சோட புடிக்கிறேன் சார்... பொண்ணுங்களுக்கு வெளியே தான் ப்ராப்ளம்னு பார்த்தா.. வீட்டுக்குள்ள இருந்தாலும் ப்ராப்ளம்.." என்று ஆதி சொல்ல.. "ம்ம்ம்.. என்ன பண்றது.. ஹான்.. இந்த டூ மன்த்ஸ்ல மறுபடியும் தற்கொலை நடந்தா.." என்று அவர் கேட்க... "ம்ம்ம்.. நோ சார்... அதுக்கு சான்சே இல்ல.. நான் அங்க இருக்கறவரைக்கும் அவன் ஒன்னும் செய்யமாட்டான்... நேத்து நைட் வினிஷா வீட்ல நடந்த இன்சிடன்ட்கூட.. அவனோட பட்டன தேடி வந்துருக்கனும்.. இப்போ அவனோட ப்ளான் என்னவா இருக்கும்னா... அப்பார்ட்மெண்ட்டவிட்டு போறதுதான்... இப்போ அவனால இந்த இடத்தவிட்டு நகரமுடியாது.. ஏன்னா.. அவன் மேல டவுட் வரும்.. சோ.. கொஞ்ச நாள் அவன் இங்க இருந்துதான் ஆகனும்.." என்று ஆதி சொல்ல... "வெல்... ஆதி.. தென் உன் மேரேஐ் பத்தி என்கிட்ட சொல்லவேல..." என்று அவர் கேட்க.. "உங்களுக்கு எப்படி சார் தெரியும்..." என்று ஆதி கேட்க... "ம்ம்ம்.. பொண்ணோட அப்பா என்னோட க்ளோஸ் ப்ரண்ட்..." என்று சொல்ல.. ஆதி சிரித்துக்கொண்டே "ஓஓ..." என்றான்... "ஒகே சார்... மீட் யூ லேட்டர்.." என்று சல்யூட் வைத்துவிட்டு சென்றான்...

இளா வீட்டினர்.. ரேஷ்மியின் வீட்டில் மதிய உணவு முடித்துவிட்டு கிளம்ப... ரோஹித் ரேஷ்மியை தேட.. அவள் கண்ணில் பட்டால்தான.. அப்போது ஓடியவள்தான் இன்னும் அவன் முன்னாடி வரவில்லை... அவன் காரில் ஏறி ஸ்டார்ட் செய்யவும் அவள் வர.. அவளை பார்த்துக்கொண்டே செல்ல... அவளும் விடாது பார்த்தாள்... இவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்ட இளா "அண்ணா.. முன்னாடி பார்த்துபோ..." என்று சொல்ல.. "ஏய்.. உன் வேலயப்பாரேண்டி.. எதுக்கு என்ன டிஸ்டர்ப் பன்ற.." என்று அவளின் தலையிலேயே கொட்ட... "இருடா.. உனக்கு கல்யாணத்துக்கு அப்புறமும் ரேஷ்மிகிட்ட சொல்லி உப்பு காஃபி போட்டு தர சொல்றேன்.." என்று தலையை தேய்த்துக்கொண்டே இளா சொல்ல.. "அய்யோ.. அப்படி எதுவும் செஞ்சிடாதடி.." என்று அலறிக்கொண்டே ரேஷ்மியிடம் கண்ணசைத்துவிட்டு வண்டியை ஓட்டினான்...

அப்பார்ட்மெண்ட் வாசலில் காய்கறி விற்பவனிடம் பேரம் பேசிக்கொண்டிருந்த நந்துவை கண்ட ஹரிஷ் புன்னகைக்க... பதிலுக்கு அவளும் புன்னகை சிந்த.. காய்கறிகாரனிடம் பணத்தை கொடுத்தவள்... ஹரிஷுடன் பேசிக்கொண்டே சென்றாள்... அவள் பேசுவதை ரசித்துக்கொண்டே வந்தான் ஹரிஷ்... "ஆமா.. நீங்க என்ன பண்றீங்க.." என்று அவள் கேட்க.. "டாக்டர்ங்க.." என்று அவன் சொல்ல.. "ஓஓ.." என்று சொல்லியவளின் அழகில் மயங்கிவிட்டான் ஹரிஷ்... இருவரும் பேசிக்கொண்டே லிஃப்டின் உள்ளே செல்ல.. அங்கே தாஸ் நின்றிருந்தான்.. நந்து "நீங்களும் ஃபோர்த் ப்ளோர்தானே ஹரிஷ்.." என்று கேட்க.. "ம்ம்ம்... ஆமாங்க..." என்று சொன்னான்... மூவரும் அமைதியாக நிற்க... எதர்ச்சையாக தாஸ் பக்கம் திரும்பிய ஹரிஷ்... தாஸின் பார்வைப்போன திசையை கண்டவனுக்கு கோபம் தலைக்கேற.. "ஹலோ.. மிஸ்டர் என்ன பன்றீங்க.." என்று அழுத்தமாக கேட்க.. அதில் பார்வையை திருப்பியவன்.. ஹரிஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்... அவனின் இந்த செய்கையில் கோபம் வர... அதை அடக்கிக்கொண்டான்.. ஆம் தாஸ் நந்துவை கண்ணில் கேவலமான வேட்கையோடு பார்த்துக்கொண்டிருந்தான்... தேர்ட் ப்ளோரில் இறங்கிவிட்டான் தாஸ்.. நந்து திரும்பி ஹரிஷை பார்க்க அவனின் முகத்தில் தெரிந்த இறுக்கத்தை கண்டவள் அதிர்ந்தாள்... "என்னாட்சி இவருக்கு கொஞ்சநேரம் முன்னாடிகூட நல்லாதான இருந்தார்..." என்று நினைக்கவும் லிஃப்ட் திறக்கவும் சரியாக இருந்தது.. ஹரிஷ்க்கு ஏனென்றே தெரியாமல் ஒரே நெருடலாக இருந்தது.. ஏதோ யோசனையில் இருந்தவன்... தன்னை யாரோ அழைப்பதுப்போல் இருக்க நிமிர்தவன்.. நந்து தான் அவனிடம் "போய்ட்டு வரேன்..." என்று சொல்லிவிட்டு நடந்தாள்.. அவள் போவதை பார்த்தவன் "நந்து..." என்று அழைக்க... திரும்பியவளிடம் "எங்கப்போனாலும் யாரயாவது துணைக்கு கூட்டிட்டுபோ.." என்று சொல்லிவிட்டு கதவை திறந்து உள்ளே சென்றுவிட்டான்... அவன் சொன்னதை கேட்ட நந்து "என்னமோ ஆயிடுச்சி இவருக்கு..." என்று தோளை குலுக்கிவிட்டு சென்றாள்...

இரவு பத்து மணியளவில் வீடு வந்து சேர்ந்தனர் இளாவின் குடும்பம்... தன்னை ரெப்ரஷ் செய்துக்கொண்டு படுக்கையில் விழுந்த இளா போனை எடுக்க.. கரக்டாக ஆதி அழைத்தான்.. உடனே அட்டண்ட் செய்து காதில் வைத்தாள்... "லாலீபாப்.. இன்னும் தூங்களையா.." என்று ஆதி கேட்க.. "இனிமேல்தான்..." என்று அவள் சொல்ல.. "ம்ம்ம்.. ஓகே... எனக்கும் முக்கியமான வேல இருக்கு.. நாளைக்கு மீட் பண்ணலாம்.. 11.30க்கு பர்மிஷன் போட்டுட்டு XXX காஃபி ஷாப்க்கு வர்றியா..." என்று கேட்க.. "ம்ம்ம்... ஆனா நீங்க இன்னும் ஐ லவ் யூ சொல்லலயே..." என்று அவள் ஏக்கமாக கேட்க... ஆதிக்கு இப்போதே அவளைப்பார்க்க வேண்டும்போல் இருந்தது... "இப்போ சொல்லமாட்டேன்... நேர்ல பார்த்து சொல்றேன்..." என்று சொல்ல.. "ம்ம்ம்... கண்டிப்பா.." என்று சிறுகுழந்தைப்போல் கேட்டவளை "ம்ம்ம்.. கண்டிப்பா லாலீபாப்..." என்று சமாதானம் படுத்தினான்... "குட்நைட்.." என்று சொல்லிவிட்டு வைத்தவன்... "ம்ம்ம்.. இவளே ஒரு பேபி.. இவ பேபிடாக்டர்..." என்று சிரித்துக்கொண்டான்...

ஊட்டிக்கு சென்றடைந்த விஷ்வா.. ஹோட்டலில் ரூம் புக் செய்து, ரெப்ரஷானவன்.. ஆதிக்கு போன் செய்து தான் வந்து சேர்ந்துவிட்டதை சொல்லி.. சில விஷயங்களை பேசிவிட்டு வைத்தனர்... அடுத்ததாக ஷாலிக்கு கால் செய்தான்... அதற்காகவே காத்திருந்ததுபோல் உடனே அட்டண்ட் செய்தாள்... "ஷாலி டைம் என்னாச்சி இன்னும் தூங்காம என்ன பன்ற..." என்று கடிந்துக்கொள்ள.. "ம்ம்ம்.. உங்களுக்காகதான் வெயிட்டிங்.. நீங்க நல்லபடியா போய் சேர்ந்துட்டீங்களான்னு தெரியவேண்டாமா.." என்று சொன்னாள்... "அதான் இப்ப தெரிஞ்சிடுச்சில்ல நிம்மதியா தூங்கு.." என்று அவன் சொல்லவும்தான் அவளுக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.. "எங்கப்பா.. தூங்கமுடியுது.. கொஞ்சநாளா யாரோ என் ரூம வாட்ச் பன்றமாதிரியே தோனுது..." என்று சொல்ல விஷ்வா அதிர்ச்சியடைந்தவன்... "ஷாலி எல்லா டோரும் க்ளோஸ்ல இருக்கான்னு செக் பன்னு.." என்று சொல்ல அப்படியே செய்தவள்... "ம்ம்ம்... எல்லா டோரும் ஸ்ட்ராங் க்ளோஸ்..." என்று அவள் சொன்னபோதுதான் கொஞ்சம் நிம்மதியானான் விஷ்வா.. இருவரும் கொஞ்சநேரம் பேசிவிட்டு வைக்க.. விஷ்வா ஆதிக்கு போன்செய்து ஷாலி சொன்னதை சொல்ல.. "அவ ரூம் டோர்லாம் லாக் போட சொல்லிட்டியா.." என்று ஆதி கேட்க.. "ம்ம்ம்.. சொல்லிட்டேண்டா.." என்று சொல்ல... "குட்.. நீ அங்க இருக்குற வேலய முடிச்சிட்டு சீக்கிரம் வாடா... சாப்ட்டு தூங்கு... ஓகே குட்நைட் மச்சி..." என்று சொல்ல.. "ம்ம்ம்.. ஓகேடா குட்நைட்.." என்று இருவரும் போனை வைத்தனர்...

காலையில் எழுந்த இளா ஓரே ஜாலியாக இருந்தாள்.. அவளின் உற்சாகத்தை பார்த்த பெற்றோர்கள் என்னவென்று கேட்க... "ம்ம்ம்.. ஒன்னும் இல்லையேம்மா.." என்று ஏதோ ஏதோ சொல்லி அறைக்கு ஓடிவந்துவிட்டாள்.. குளித்துவிட்டு வந்தவள்.. என்ன உடை அணியளாம் என்று யோசித்துக்கொண்டே கபோர்டை ஆராய்ந்தாள்... கடைசியாக மாட்டியிருந்த சாரியை எடுத்தவள்... கண்ணாடி முன்பு நின்று தன் மீது வைத்துப்பார்க்க... அழகாக இருக்கவும் அதையே அணிந்துக்கொண்டாள்...

ஆதி காலையில் அலுவலகத்துக்கு கிளம்ப.. அவனின் முன் வந்து நின்றார் தனம்.. ஷு லேசை கட்டிக்கொண்டே "என்னம்மா.. ஏதோ பேசவந்துட்டு அமைதியா நிக்கற..." என்று ஆதி கேட்க... "ஒன்னும் இல்லடா... கல்யாணம் ஒன்ற மாசத்துக்குள்ள, கோயம்பூத்தூர்லே வச்சிக்கலாம்னு பொண்ணு வீட்ல சொல்றாங்கடா.. அதான் உங்கிட்ட கேட்கலாம்னு.. வந்தேன்..." என்று சொன்னவரை இருக்கையில் அமர வைத்தவன்.. "அம்மா.. உனக்கு என்ன விருப்பமோ அதயே செய்மா.. தாலி கட்ட நான் ரெடி.." என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.. அவன் போவதையே பார்த்தவர்.. தானாக சிரித்துக்கொண்டார்...

சாப்பிடுவதற்கு ஹாலுக்கு வந்த இளாவை கண்ட சீதா.. திருஷ்டி சுத்திப்போட... "ம்மா.. போதுமா பசிக்குது.." என்று சொல்ல.. "ம்ம்ம்.. ரெடிடா.. நீபோய் உட்காரு.. நான் எடுத்துட்டு வரேன்.." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.. நன்றாக உண்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு சென்றவள்.. குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு.. கேபினுக்கு சென்று எப்போதடா பதினொன்று ஆகும் என்று காத்திருந்தாள்...

ஆதியும் அதற்காக தான் காத்திருந்தான்... "ச்ச்ச.. இன்னிக்குன்னு பாத்து டைம் ரொம்ப ஸ்லோவா போதே.." என்று புலம்பி தீர்த்தான் மனதில்.. பதினொன்று ஆனவுடன் கிளம்பினான்... இளாவும் பர்மிஷன் போட்டுவிட்டு, ஸ்கூட்டியில் கிளம்பியவள் காஃபி ஷாப் வந்ததும் உள்ளே சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.. "போலீஸ்ன்னா பன்ச்சுவாலிட்டியா இருப்பாங்க.. ஆனா இவரு.. அஞ்சு நிமிஷம் எக்ஸ்ட்ரா ஆயிடுச்சி இன்னும் காணோம்.. ம்ம்ம்.." என்று நினைத்துக்கொண்டிருந்தாள்..

ஆதியோ அவளுக்கு ஒரு கிஃப்ட் வாங்கிக்கொண்டு காஃபி ஷாப் உள்ளே நுழைந்தான்..அவனை பார்த்துவிட்ட இளா கை ஆட்ட அவளிடம் சென்றான்... இவர்கள் இருவரையும் காஃபி குடிக்க வந்த தாஸ் பார்த்துவிட மறைவாக அமர்ந்துகொண்டு அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான்...

-தொடரும்
 

Chittijayaram

Well-Known Member
Aadhi ila kitta love solliduvan, Dass next yaarai Enna pannuvan nu terialaye, Harish nandu vai love panradu solvana, nice epi mam, rocking thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top