9.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member


அடியே ! உன்ன ...
என மேன் ரோட்டில்
வண்டியை நிறுத்தி திரும்பி அவளை முறைத்து அவளின் தலையில் ஒரு கொட்டு வைக்க .......

அவள் அவனை முறைத்துக் கொண்டே வாய்க்குள்..... கருவாயா என்னையே கொட்டிடயில்ல இருடா ! உன்னை வச்சிக்கிறேன் என வாய்ப்புள்ள முணங்க..... அவள் முணங்குவது வெற்றிக்கு தெளிவாக கேட்க....

ஏய் ,என்னடி ?..


" முனங்குற சவுணடா சொல்லுடி.... கேக்க மாட்டேங்குது" .....
என்க ........
அவளோ,
கேட்க வேண்டாம் தான் மெதுவா சொல்கிறேன் என மறுபடியும் முனங்க ...........

.
அவனும் சிரித்துக் கொண்டே
ஏய் ,நானும் ரெண்டு நாளா" இந்த செல்வியை தாண்டி மிஸ் பண்ணேன்"............ நான் ஆசைப்பட்டதும்" இதே அடாவடித்தனத்தை தான்....... இந்த வாயாடியத்தான்....... இதோ இந்த கண்ணுல தெரியுதே இந்த திமிர பார்க்கத்தான் இரண்டு நாளா ரொம்ப ஆசை பட்டுட்டு இருந்தேன் "........

நீ தான் காட்டவே இல்ல.......
" இன்னைக்கு தான் வெளியே வந்திருக்கா"......என திரும்பி "தேங்க்யூடி" ....." என் செல்ல பொண்டாட்டி என அவளின் கன்னத்தில் நச்சென்று முத்தம் வைக்க"......

அவளோ தன் வாயை " ஆ"வென பிளந்து இரு கண்ணத்திலும் கைகளை வைத்து அதிர்ச்சியாக அவனைப் பார்க்க .......

ஏய் , பொண்டாட்டி
"இப்படியெல்லாம் கண்ணை விரிச்சி பார்க்காதடி "அப்புறம், நடக்கிற எதற்கும் நான் பொறுப்பல்ல......என
அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தான்...............

அவ்வளவுதான் சட்டென தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்..... பின் அவனும் சிரித்துக் கொண்டே தன் வண்டியை ஸ்டார்ட் செய்து இருவரும் ஒரு வழியாக தோட்டம் வந்து சேர்ந்தனர். .... ....
தோட்டம் சுற்றி நாலுபக்கமும் முள்வேலி போட்டு பெரிய இரும்பு கேட் இருந்தது.....

இருவரும் கேட்டின் அருகில் வண்டியை நிறுத்தி வெற்றி கேட்டினை திறக்க...

இவர்களை பார்த்து நடுத்தர வயதில் ஒருவர் ஓடிவந்தார்.......

"பழனி அண்ணா "மெதுவா வாங்க ......... ஏன்னா?.......இவ்வளவு வேகத்தில் வரீங்க....
" பார்த்து வாங்கண்ணா" ......



இருக்கட்டும் தம்பி..
வாங்க தம்பி..... உள்ள வாங்க..... அம்மா செல்வி நல்லா இருக்கிறியா?...

ம்ம்ம்ம்ம்....என சிரித்துக்கொண்டே தலையசைக்க....

தம்பி இரண்டு பேரும் இளநீர் குடிக்கிறீங்களா ?....... வெட்டி தரவா?......


இப்பதாண்ணே......
வீட்ல சாப்பிட்டு வந்தோம்.
....." ஒரு அரை மணி நேரம் கழிச்சு குடிக்கிறோம்" அண்ணா. செல்விக்கு தோட்டத்தை சுத்தி காட்ட தான் கூட்டிட்டு வந்தேண்ணா ........

சரி ...நீங்க வேலைய பாருங்கண்ணா.... நான் பாத்துக்கிறேன் என்க; அவரும் சரிப்பா என போய்விட்டார்.........

"தோட்டம் பல ஏக்கரில் அழகாக ஒருபக்கம் பூச்செடிகளும் ஒரு பக்கம் மா,மாதுளை, கொய்யா என பழ மரங்களும்..... ஒரு பக்கம் நஞ்சையும் அடுத்து தென்னையும்......... ஒரு பக்கம் வாழையும் என தோட்டமே அழகாக காட்சி அளித்தது........
இயற்கையின் எழில்மிகு அழகாக இருந்தது........ ஆங்காங்கே "தூரம் தள்ளி மயில்களும் மரங்களின் கிளைகளில் கிளிகளும் கீச் கீச் என சத்தத்துடன் மிகவும் ரம்மியமாக இருந்தது".........
தோட்டத்தின் வாயிலில் நின்று பார்க்க இவ்வளவு அழகாக இருக்கு என செல்வி ஆர்வமாகவும் ஆசையாகவும் சொல்ல.......... அவனும் அவளது ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்து சிரித்துக்கொண்டே "வா" போகலாம் என கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றான்........

முதலில் இருவரும் போனது தென்னந்தோப்பு அதைத்தாண்டி
வயலில் நெல் நடவு செய்து கொண்டிருக்க ....அங்கு இருந்த பெண்கள் அனைவரும் இவர்களை பார்த்து எழுந்து நிற்க..... அதில் ஒரு வயசான "அப்பத்தா"

ஐயா!
வெற்றி," என்னய்யா புள்ளைய வெயில கூட்டு வந்திருக்க என்க"......
"அதுவா அப்பத்தா நம்ம செல்விக்கு
தோட்டத்தை சுட்டி காட்டலாம்னு கூட்டி வந்தேன்"......

அப்படியாய்யா".....புள்ள அப்படியே மகாலெட்சுமி மாதிரி இருக்க்காயா......
இரண்டுபேருக்கும் சோடி பொருத்தமா
இருக்குய்யா என வாழ்த்த".......

இருவரும் சிரித்துக்கொண்டே அப்பத்தாவின் பக்கத்தில் வந்து.....
.........
" இருவரும் அப்பத்தாவின் காலில் விழுந்து வணங்கினர்.......
அவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் ஆசிர்வதித்தார்."


இருவரும் அங்கிருந்து நகர்ந்து," தோட்டத்தின் மத்தியில் இருந்த கிணற்று பக்கம் வந்தனர்".......


அங்கு தென்னை மரத்திற்கு தண்ணீர் பாயிந்து கொண்டு இருக்க........ செல்வி ,"அந்த வரப்பில் இறங்கி கால்களை தண்ணீரில் நினைத்து விளையாட ஆரம்பித்து விட்டால் .....அவளை பார்த்து வெற்றிக்கு சிரிப்பு வந்துவிட்டது........

பின் அவனும் சிரித்துக்கொண்டே ;அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்க..........

எதார்த்தமாக திரும்பி அவனைப் பார்த்த அவளுக்குத்தான் வெட்கமாக வந்தது......
மனதிற்குள்," எப்படிப் பார்க்கிறான் பாரு எனச் செல்லமாக அவனைத் திட்டிக்கொண்டே"..........

அவனைப் பார்த்து....
வெற்றி போதும் சைட் அடித்தது என்க....
அவனும் ;அவளது ,"துடுக்குத்தனம் திரும்பி வந்ததை நினைத்து சிரித்துக்கொண்டே".........

அவளைப் பார்த்து கண்ணடித்து
"எம் பொண்டாட்டி நான் சைட் அடிக்கிறேன்".............
...... நான் சைட் அடிக்காம வேற யாரு சைட் அடிப்பா? ...... என அவளைப் பார்த்து புருவம் உயர்த்த.....
.......

" அவளோ போதும் போதும் நிப்பாட்டுங்க" என அவனை தள்ளி முன்னால் நடந்தாள்.....

அவனும் சிரித்துக் கொண்டே அவளை பின்தொடர ;அப்போது, வெற்றிக்கு போன் வர அவன் நின்று பேசிக்கொண்டிருக்க.......

அவளோ வரப்பில் நடந்தவள் "திடீரென வழுக்க........அம்மா என கத்திகொண்டே தடுமாறி கீழே விழ....... மேலெல்லாம் சகதி ஒட்டி ஆடையிலும் ஒட்டிக்கொண்டது"..........

அவளது அலறல் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த,அவனும் அவளைப் பார்த்து சத்தமாக சிரித்து விட்டான்..........



அவள் அவனைப் பார்த்து கோபமாக இப்படித்தான் ,;உங்கள நம்பி வந்த பொண்ண கீழே விழுந்தா சிரிப்பீங்களா என அவனை முறைக்க"......



சாரிப்பா ....சாரிப்பாசெல்வி..... திடீரென கீழே விழுந்த உடனே சிரிப்பு வந்துடுச்சு........
என வேகமாக அவள் பக்கத்தில் வந்து அவளுக்கு எழுந்துவர கைகொடுக்க...



அவளோ அவனது கையை தட்டி விட்டு ........அவனை முறைத்து கொண்டு எழ முயற்சிக்க.......

" எழ முடியாமல் கீழே விழுந்ததில் கால் பிசறி வலி எடுக்க"......



அவளோ வலியில் கண்ணிர் கண்களில் கண்ணீர் பொங்க அவனைப் பார்க்க .........அவளது கண்ணீர் அவனை ஏதோ செய்ய ,"சட்டென்று குனிந்து அவளை தன் இரு கரங்களாலும் தூக்கிக்கொண்டு நடந்தான் ................ சற்றென்று தன்னை தூக்குவான் என எதிர்பார்க்காத செல்வியோ அவன் தூக்கியதில் பயந்து அவனது இரு தோள்களையும்
இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களையும் இருக மூடிக்கொண்டாள்..........

கிணற்றின் பக்கத்தில் உள்ள திண்டில் அமரவைத்தான்.......... "அவளோ மெதுவாக கண்களை திறந்து பார்க்க ..........வெற்றியின் முகமோ அவளது முகத்துக்கு மிக அருகில் இருக்க "...........

அவளோ சற்றென்று விலக முற்பட........
அது முடியாமல் போக ஏனென்று அவள் நிமிர்ந்து வெற்றியின் முகம் பார்க்க....." அவனோ தன் கண்களால் அவளுக்கு சுட்டிக் காட்டினான்".........
"அவனது கழுத்து செயின் அவளது தாலி கயிறும் உடன் பினைந்து இருந்தது".........

அவன் மெதுவாக அந்த செயின் கொக்கியை தாய் தாலி கையில் இருந்து பிரிக்க முயல அது வருவை என அவளுக்கு போக்கு காட்டியது........

அவனோ காரியமே கண்ணாக மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்க ....."அவளுக்குத்தான் மிகவும் அவஸ்தையாக இருந்தது....... "அவனின் அண்மையும் அவனுக்கே உரிய
அவனது வாசனையும் அவளுக்குள் ஏதோ மாற்றங்களை தந்தது"..........


அவளோ அந்த நிமிடங்களை கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் ரசிக்க ஆரம்பித்தாள்.........

அவளது மனது வெற்றியை ரசிக்க ஆரம்பித்தது ............ "கலையான முகம் நீளமான அடர்த்தியான புருவங்கள் ......அதற்கு ,கீழே கூர்மையான யாரையும் எளிதாக எடை போடும் கண்கள் .... ...கூர்மையான நாசி அதற்கு கீழே அழகான அளவான மீசை......... அவனது வட்ட முகத்திற்கு ஏற்ற பார் ஏற்றவாறு
சின்ன சிவப்பான அழுத்தமான உதடுகள்....... எப்போதும் தண்ணி மயக்கும் மாயக்கண்ணன் போல் அழகான சிரிப்பு.......

அதில் எப்போதும் தன்னை மயக்கும் மாயக்கண்ணன் போல் வசீகரமான சிரிப்பு...........

அவள் அந்த நிமிடங்களை ரசித்துக் கொண்டிருக்க "வெற்றியோ ;அவளது தாலி கயிற்றில் இருந்து தனது சயினை எடுத்துக்கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...


" தன் மனைவி தன்னை ரசிக்கும் அழகை"........

வெற்றி லேசாக
தொண்டையை சிறும தண்ணுணர்வு வந்த "செல்வியோ" .....
"வெற்றியை பார்க்க முடியாமல் தடுமாற......
அவளது தடுமாற்றத்தில் அவளை வெற்றி ரசிக்க"........

அதற்க்குமேல் பொறுக்கமுடியாமல் அவள் எழுந்து போக முற்பட அவளது
கையை பிடித்து அமர வைத்தவன்.......
மறுபடியும் அவளை தூக்கி தொட்டியில் இறக்கி விட்டு தானும் இறங்கி அவளது உடையை சுத்தம்படுத்த உதவ அவளுக்குத்தான்
ஒருமாதிரி ஆகிவிட்டது .......எற்கனவே
தண்ணீரில் இறங்கியதால் அவளது
டாப்ஸ் தண்ணீரில் மேலே வந்திருக்க......வெற்றி அவளது கையில் இருந்த சேற்றை துடைத்து அவளை தூக்க அவளது இடுப்பில் கை வைக்க செல்விக்குத்தான் மிகவும்
அவஸ்த்தையாகி விட்டது....
" அவனது இரும்பு கரங்கள் அவளது
மென்மையை உணர வெற்றி
அதிர்ந்து செல்வியை பார்க்க; அவளோ அவனது கரத்தினை தனது கரத்தால்
இறுக பற்றிக்கொள்ள" ......
அவனுக்கும் இந்த பெண்மை அதன் மெண்மை எல்லாம் புதிது......அவனும்,
அதில் கொஞ்சம் தடுமாற அவன் கையின் அழுத்தம் கூட அவளோ அதிர்ந்து விழிக்க.......அதற்க்குமேல்
முடியாமல் வெற்றி "அவளை தன்னுடன் இறுக சேர்த்தனைக்க,.....அவளும் இதுவரை எந்த ஆனுடனும் நட்பை தாண்டி பழகிறாதவள் ஒரு ஆண் அதுவும் தன்னுடைய கணவன் தன்னை சேர்த்தணைத்துக் கொண்டது......இதுவரை தோன்றிறாத
உணர்வை தந்தது.......அவள் சிலிர்த்து சிலையாக சமைந்து நிற்க" ............
.......
"இருக்குமிடம் உணர்ந்த வெற்றி
சற்றேன்று விலகி தன் தலையினை அழுந்தகோதி தன்னை சமன்படுத்த" .......



அங்கு ,
வெற்றியின் வீட்டில் செல்வின் அம்மா அனைவரையும் விருந்துக்கு வருமாறு அழைத்தார்

அண்ணி
செல்வியின் போன் எடுக்கவில்லை ....
அவளிடம் தருமாறு சொல்ல அவரோ அவள் வெற்றியுடன்
தோட்டத்திற்கு சென்று இருப்பதாக கூறினார்
......வந்ததும் போன் செய்யச் சொல்வதாக சொன்னார்....

இங்கு,
வெற்றியோ தன்னை சமன் செய்து விட்டு ......செல்வியை பார்க்க "அவளோ அவன் விட்ட நிலையிலேயே நின்றாள்"...........




























 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top