7.அன்பின் வெற்றிவேல்

Pavidurai

Member

Hai friends ,அவளும் உணர்ந்தே இருந்தாள்....... அவன்," தன் பக்கத்தில் நெருக்கத்தில் நின்று தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதே" ஆனால்," ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை"

Me(அதாங்க பெரியவங்கசொல்வாங்கஇல்ல........... வெக்கம்.......... அது, இதுதான் போல)

அவளைப் பார்த்துக்கொண்டிருந்த வெற்றிக்கு தான்" இவளது செய்கைகள் அனைத்தும் ஒருவித ஆர்வத்தையும் ,ஒருவித மயக்கத்தையும் கொடுத்தது".......இதுவரையில் எந்த பெண்ணிடமும் அவன் இவ்வளவு நெருக்கத்தில் நின்றும்........


" ஏன்?.... " ,எந்த பெண்ணிடமும் அவன் அதிகமாக பேசியது கூட இல்லை"எந்த ஒரு பெண்ணையும் அவன் காதலித்ததும் இல்லை "பின்பு எங்கிருந்து இப்படி எல்லாம் நிற்க வாய்ப்பு கிடைக்கும். ....... ..அவனுக்கு பெண் தோழிகள் எதுவும் கிடையாது.......... படித்த இடத்திலும் சரி வேலை பார்க்கும் இடத்திலும் சரி ஜஸ்ட் ,"ஹாய் சொன்ன ஹாய் அவ்வளவுதான் "கேள்வி கேட்டா?...... பதில் அவ்வளவுதான் ........ இப்படி இருக்க ......

என்னவோ ,"அவள் பக்கத்தில் நிற்பது ஒருவித புதுமையான உணர்வுகளைய கொடுத்தது" ".............அவனும்," அதை ரசித்து அனுபவித்தான். ....................
உரிமையுணர்வு (தன் மனைவி என்ற எண்ணம்)......

"அவளுக்குத்தான் மிக அவஸ்தையாக இருந்தது அதுவும் இவ்வளவு நெருக்கத்தில் ஒரு ஆண்மகன்".......... அவளுக்கே உரிய அவளது கணவன் ...............கொஞ்சம் கொஞ்சமாக திண்டாடி கொண்டிருந்தாள். ......


வெற்றி தான்," சற்று சுதாரித்து அவளிடமிருந்து விலகி; சட்டென்று திரும்பி தன் தலையை அலுந்தகோதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டு" அவளிடம் வந்தான்.........
அவன் அவளை வம்பிழுக்க செய்தது அவனுக்கே திரும்ப வந்துவிட்டது....

பின் லேசாக தொண்டையே சிருமி, "ஏன் அமைதியா இருக்குற?............" நீ இவ்ளோ அமைதியா இருக்க மாட்டியே?.............. என்ன ஆச்சு ?.............

.............நீ எதுக்கு இவ்ளோ அமைதியா இருக்க செல்வி?.........வெக்கமா?.....


பயமாக இருக்கா?........

"நான், ஏதாவது செஞ்ச்சிருவென்னு"...........அதுவரை நிமிர்ந்து பார்க்காமல் இருந்த அவள்......... அவன் நான் ஏதாவது செஞ்சிடுவேன் அப்படின்னு கேட்ட....... உடனே சடாரென்று நிமிர்ந்து பார்த்தாள்.....
...


" அவள் சடாறென்று நிமிர்ந்து வெற்றியை பார்க்க"..........அவன் சொன்னதுதான் "உண்மை என கட்டியம் கட்டியது"........

.............
முதலில் பொய்யாக முறைத்து பின்

வெற்றி ,அவளை பார்த்து லேசாக

சிரித்து கொண்டே........

"எனக்கு இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை," நீ பயப்படத் தேவையில்லை... ....... வா!...... உள்ள போய் பேசலாம்......

என அவளை நார்மல் மூடுக்கு கொண்டு வந்து அவளுடன் உள்ளே வந்தான் .............உள்ளே வந்தவன் பால்கனி கதவை சாத்திவிட்டு அவனும் கட்டிலில் அமர்ந்து அவளையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான் அவளும் அவனது பக்கத்தில் அமர்ந்தாள் .............ஆனால். "இன்னும் குனிந்த தலை நிமிரவே இல்லை"...........


அவனுக்கு தான்," அவளை பார்க்க பார்க்க அவனது மனம் ஆட்டம் காண ஆரம்பித்தது"..............."அவனும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு",அவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தான்........ஆனால் ,"இன்று என்னவோ ."தனக்கு உரியவள் என்பதனால் வந்திருக்குமோ என்னவோ தெரியாது அவளிடம்
சற்று
உரிமையாய் நடந்து கொண்டான்".........

"அவளுக்கும் தனக்குமான இடைவெளியை குறைத்து "......

"தன் அருகில் அமர்த்தி அவளது கைகளை தன் கைகளுக்குள் எடுத்து வைத்து மெதுவாக வருடிக் கொண்டே"..........


எதுக்கு இப்படி அமைதியா இருக்க நான்," உன்னை என்ன பண்ணப் போறேன்"........ ஏன்?...... இப்படி அமைதியா இருக்கே ........... அவளோ அப்போதுதான் தயக்கம் விட்டு அவனை அவனை நிமிர்ந்து பார்த்தாள் ............ஒரு நிமிடம் கண்களிரண்டும் சந்தித்துக்கொண்டன .பின் அவள் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் அவனும் சிரித்துக் கொண்டு அவளுடன் பேச ஆரம்பித்தான்........... இங்க பாரு செல்வி ஏன் இவ்ளோ நர்வசா இருக்க.........


" நான் என்ன உனக்குதெரியாத ஆளா "?........ உனக்கு என்கிட்ட இல்லாத உரிமையா........... நீ என்ன வேண்ணா?.....எப்படி வேண்ணா?.... இருக்கலாம் .இது உன்னோட வீடு இது உன்னோட ரூம் ..........ஓகேவா.....அதனால "நீ உன் மனசை போட்டு குழப்பிக்காத," ப்ரீயா இருமா வா வந்து படுத்து தூங்கு.......
.......... பாரு ரொம்ப டயர்டா தெரியுற. ...
.......... படுத்து தூங்குமா அவளும் அவன் சொல்ல மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் அவன் சொல்லுக்கு தலையாட்டி கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துகொண்டாள் அவனும் சிரித்துக் கொண்டே மறுபுறத்தில் படுத்துக்கொண்டான். ...

யாருக்கும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது...
காலை 6:00 மணி
பறவையின் கீச்கீச் என்ற சத்ததாலும் அழகான புதுமையான ஒரு காலையாக விடிந்தது ....

...வெற்றியின் ,"தன் மேல் ஏதோ பாரம் உணர்ந்து தூக்கம் கலைந்து கண்களை திறந்து பார்த்தான்". ..... "அவன்மேல் ஒரு கையையும் ஒரு காலையும் போட்டு அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து தூங்கிக்கொண்டிருந்தாள் அவன் புத்தம்புது மனையாள்"............


"அவளை அவ்வளவு பக்கத்தில் பார்த்ததும் ஒரு நிமிடம் அவன் உறைந்து போனான்.........பின் சிரித்துக் கொண்டே கண் இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான்" ......

"கலைந்த தலையும் தூக்கத்தில் புரண்டு படுத்ததால் புடவை நழுவி பார்க்கவே கலைந்த ஓவியமாக இருந்தாள் .............
அவனது புத்தியோ இது தவறு திரும்பு என்க அவனது மனது," இதில் என்ன தப்பு இருக்கு; என் மனைவியை நான் பார்க்கிறேன் என்று சொல்ல..........


அவனது இன்றைய காலை பொழுது புத்துணர்ச்சியாக இருந்தது அவனுக்கு இன்றைய காலை தன் அன்புத் மனையாளின் தரிசனத்தில் விடிந்து இருக்கின்றது என்று நினைத்து சிரித்துக் கொண்டான்........பின் மெதுவாக அவள் கைகளை நகர்த்தி எழுந்துகொண்டான்.......... பின்," என்ன தோன்றியதோ தெரியவில்லை?...... "மெதுவாக அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை ஒதுக்கி அவளது நெற்றியில் மென்மையாக தன் இதழை பதித்து சிரித்துக் கொண்டே.....அவள் மேல் ஒரு போர்வை போர்த்தி
குளியல் அறைக்குள் புகுந்தான் .....

தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு வயலுக்கு புறப்பட்டான்.........அவன் வெளியில் போய் ஒரு மணி நேரம் கழித்து விழித்த செல்வியோ கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாள். ........ ......விழித்து சுற்றும் முற்றும் பார்த்தாள் தான் எங்கே இருக்கிறோம் என்பதை சில நொடிகள் கழித்து தான் அவளுக்கு புரிந்தது
......பின் மெதுவாக எழுந்து வெற்றியை தேடினாள் ....
அவன் ரூமில் இல்லாததால் குளியல் அறையில் புகுந்து தன்னை சுத்தப்படுத்தி கொண்டு


தனது பையிலிருந்து துணிகளை எடுத்துக்கொண்டு' பெட்'..யில் வைத்து விட்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்தாள்.........


அவள் எப்போதுமே புடவையை பாத்ரூமில் கட்டுவதில்லை .............பாத்ரூமில் கட்டினால் புடவை நனைந்துவிடும் இல்லை கீழே விழுந்து விடும் என்பதனால் அவள் எப்பவுமே ரூமில்தான் மாற்றுவாள்.......... அதேபோல் இன்றும் வெற்றி அறையில் இல்லாததால் வேகமாக கட்ட ஆரபித்தால்.........

அப்போது சடாரென கதவு திறக்கப்பட்டது. அவள் சற்றேன்று நிமிர்ந்து பார்க்க வெற்றியும் திரும்பி அவளை பார்த்தான்........ பின் அவள் சட்டென்று தனது இரு கைகளாலும் தன்னை மறைத்துக் கொண்டாள் புடவை நழுவி கீழே விழுந்தது ......திரும்பி நின்று கொண்டாள்...

வெற்றி,....
சாரிப்பா நீ டிரஸ் சேஞ் பண்ணுறேனு தெரியாது......


நான் வெளிய வெயிட் பண்றேன்......நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு கூப்பிடு என வெளியில் சென்று விட்டான் ....
....

அவளுக்குத்தான் ரொம்ப வெட்கமாக இருந்தது அவன் போனதும்...
.....
கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டு "தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள் பின், நேரமாவது உணர்ந்து வேகமாக இன்னும் வேகமாக கட்ட ஆரம்பித்தாள்".......


"சேலையை கட்டி முடித்து கதவை திறந்து அவனை உள்ளே அழைத்தாள்"...........

வெற்றி ,சாரி செல்வி என்க. .....

அவளோ,
என் மேல தான் தப்பு நான் தான் கதவை தாள் போட்டு இருக்கணும்....... சாரி ,"எனக்கு ஞாபகம் இல்லை என்று அவள் குனிந்து கொண்டு சொல்ல".....
இது எல்லாம்,
புதிதாக இருந்தது......... அவன் இதுவரையில் பார்த்த செல்வி அவன் என்ன பேசினாலும் அதற்கு எதிர்புறமாக பேசி வாக்குவாதம் செய்யுவதே வேலையாக வைத்திருந்தாள் ..........நேற்று இரவும் இன்றும் ஏனோ அவனுக்கு ,"புதிதாக ஒரு பெண்ணுடன் இருப்பது போல் ஒரு உணர்வு"........


(செல்வி நார்மல் ஆன பிறகு இருக்கு......வெற்றிக்கு )
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement