6.அன்பின் வெற்றிவேல்

#1
நாட்கள் தன் போல் நகர .........வெற்றி, "சிவாவிடம் செல்வியின் நம்பர் வாங்கியதோடு சரி" அப்புறம் ,"அவனும் அழைக்கவில்லை அவளும் அவனுடன் பேசவில்லை ".

ஆனால் , கவியுடனும் திவ்யாவிடமும் அவளது பேச்சுக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.


மூவரும் இத்தனை வருடங்கள் பேசாததை எல்லாம் இப்போது பேசி தீர்த்தார்கள்.....


" அலைபேசியில் மூவரும் சேர்ந்து அரட்டை அடிப்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது" ........

இது அனைத்தும் தெரிந்த "சிவாவும் வெற்றியும் தங்களுக்குள் அவர்களை கிண்டல் செய்து சிரித்துக் கொள்வார்கள்".........

இவ்வாறாக சில தினங்களில்
நிச்சயதேதி குறிக்கப்பட்டு ........
...............
சிவாவும் ஊருக்கு வந்தான்.அவனும் வந்துவிட கல்யாண வேலைகள் மணமக்கள் வீட்டில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ..........

"நிச்சய தேதி குறிக்கப்பட்டு மறுநாளே திருமணம் செய்வதாக பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்".........

இவ்வாறாக கல்யாணத்திற்கு தேவையான நகைகள் புடவைகள் என அனைத்தும் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டினர் இருவரும் சேர்ந்து செய்தனர்....... அப்போதும் வெற்றி," செல்வியிடம் வம்பு வளர்ப்பதும் அவள் கோவப்பட்டால் அவளை சமாதானப்படுத்துவதும் என இருந்தான். ..........

இவர்களைப் பார்த்த பெரியவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..........இவன் சீண்டுவதும் அவள் கோவப்படுவதும்
இவற்றை எல்லோரும் இருவரது உடன்பிறந்தவர்களும்,
பெற்றோர்களும்
கண்டும் காணாததுபோல் இருந்தனர்........

ஆனால் சரண் மட்டும் டேய் வெற்றி போதும்டா.....பாவம்டா
தங்கச்சி என்பான்......வெற்றி, அதற்க்கும் செல்வியை தான் சீன்டுவான்.........

"அவள் மட்டும் எப்போதும் எல்லா இடத்திலும் அவனை முறைத்துக் கொண்டே அலைந்தாள்"............

அவன் அதற்கும் ...... ..;சற்றும் அசராமல் அவளைப்பார்த்து கண்ணடிப்பதும், சீண்டுவதுமாகவே இருந்தான்......


....................
....
....
..."நாட்கள் நகர திருமண நாளும் அழகாக விடிந்தது"...........

அதிகாலையில்,

"ஆதவன் தன் செந்நிற கதிர்களை பூமியில் பரப்ப ,நீலவானம் முழுவதும் இளஞ்சிவப்பு கதிர்கள் பரப்ப
வானம் செங்காந்தள் மலர்
அள்ளி தெளித்தது போல்
வானமே செவ்வானமாக
அழகாக காட்சியளித்தது"..........

அதிகாலை சுப முகூர்த்தம் என்பதால்,

அவ்வேளையில் மண்டபத்தில் மணமேடையில் வெற்றி செல்வியின் கழுத்தில் சங்கு கழுத்தில் பொன் மஞ்சள் பொருந்திய தாலி அணிவித்து தன்னில் பாதியாக ஆக்கிக் கொண்டாண்...........


பின்," நெற்றி வகிட்டில் தனது ஆள்காட்டி விரல் மற்றும் பெருவிரல் கொண்டு குங்கும கீற்றினை எடுத்து அழகாக நெற்றி வகிட்டிலும் அவள் மார்பில் ஆடிய தங்கத்தாலியிலும் வைத்துவிட்டான்".........


இவ்வாறாக திருமணம் இனிதே நடைபெற்று பின் விருந்து உபசரணங்கள் முடிந்ததும் மணமக்கள்," மணப்பெண் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்".......

" மணப்பெண் வீட்டில் வயதில் மூத்தவர் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்"......

வீட்டின் நடுக்கூடத்தில், இருவரையும் சேர்த்து அமர வைத்து பாலும் பழமும் கொடுத்தனர்.......

வெற்றியின் கைகளில் கொடுக்க அவன் பாதியை அருந்தி மீதியை தனது மனையாளுக்கு கொடுக்க செல்வியோ தம்ளரை அவனை பார்த்து வாங்க அவனோ அவளை வம்பு வளர்க்க எண்ணி கண்ணடித்து கைகளால் சீண்டிக்கொண்டே கொடுத்தான்..... அவளோ யாரும் அறியா வண்ணம் அவனை முறைத்துக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டாள்.......


அவள் கையில் வைத்து பார்த்துக் கொண்டிருக்க அவளை பார்த்த அப்பத்தா, என்னடி பண்ணிக்கிட்டு இருக்க என்க.....பாலை குடி டி......என அதட்ட....
அதற்க்கும் வெற்றியை முறைட்டுக்கொண்டே அவள் குடித்து முடித்தாள்....... அவளைப் பார்த்து வெற்றி மற்றும் அங்கு இருந்த சில உறவுக்காரப் பெண்கள் அனைவரும் சிரிக்க ..........அவள் இப்பொழுது வெற்றியை வெளிப்படையாக முறைத்தாள்.........

அவனும் அவளைப் பார்த்து வசீகர புன்னகையை சிந்தினான்....... " ஒரு நொடி ,ஒரே ஒரு நொடி அவள் அவளவன் சிரிப்பில் மயங்கித்தான் போனாள்"..........
பின் சட்டென்று தலையைத் திருப்பி தன்னை நிலைபடுத்திகொண்டாள்......


இவ்வாறாக நேரம் மணி நான்கை கடக்க மணமக்களை மணமகன் வீட்டிற்கு அழைத்து செல்ல தயாராகினார்கள் ......"செல்வியின் பெற்றோர் மணமக்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர்".........

அவளோபெற்றவர்களை நினைத்து கண்ணீர் வடிக்க அவளது பெற்றோர் அவளை ஆறுதல்படுத்த சிவாவும் முன் நின்று அவளை சமாதானப்படுத்தினான்...... தன் தங்கையை தன் தோளில் சாய்த்து அப்புக்குட்டி," அட எதுக்கு இப்போ அழுற நீ வேற எங்கேயுமா போக போற நம்ம வெற்றியோட வீட்டுக்குத்தானே"........ அவன் உன்ன நல்லா பாத்துப்பான்டா.....

அத்தை மாமா உன்ன நல்லா பாத்துகபாங்க; ஏன் கவலைப்படுற?.....


உனக்கு நாங்க இல்லாத குறையை அவங்க தீர்த்து வைப்பாங்க......இதுக்கு மேல என்ன வேணும்; உன் ஃப்ரெண்டு கவியும் அங்க தான் இருக்கான்; .......வேற என்ன வேணும் சந்தோஷமா போடா எப்பவேணாலும் வரலாம்........ என அவளை ஒருவழியாக ஆறுதல் படுத்த..........


வெற்றி;
நாங்க உன் தங்கச்சி நல்லா தான் பார்த்துப்போம்.....
அவள் எங்களை கொடுமை பண்ணாம இருந்தா சரி என்க
அவள் அவனை முறைக்க எல்லோரும் சிரிக்க ......"இப்படி அவளை கலாட்டா பண்ணி அவளை இயல்பு நிலைக்கு திருப்பி அவளை தன்னுடன் அழைத்துச் சென்றான்".......

அவளோ போற வழி எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டே இருக்க அவளைப் பார்த்த வெற்றிக்கு தான் மனதுக்கு கஸ்டமாக இருந்தது....


அவளது அனைத்து செய்கைகளும் அடம்பிடிக்கும் சிறு குழந்தையென தெரிய ....... வெற்றிக்கு," அவளது கன்னத்தை பிடித்து கிள்ளி சிறு முத்தம் வைத்து தன்னுடன் சேர்த்தணைக்க தோன்றியது"............ சற்றென்று .......அப்போதுதான்; "அவனுக்குப் புரிந்தது அவனது எண்ணப்போக்கு .........பின் அவளை தன் தோள்களில் சாயித்து ஆறுதல் படுத்த அவளுக்கும் அது தேவைபட சாயிந்து தேம்பி வெளியில் பார்த்து கொண்டே வந்தாள்......


அவனும் ,"அவளது கையைப் பிடித்து அலுத்தி ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தான்"


இருவரும் வெற்றியின் வீட்டை அடைந்தனர்....

அங்கு வாசலில் நிற்க வைத்து ;திவ்யா, இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து உட்கார வைத்தாள்"......... அவர்களுக்கு குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டு பின் இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி வைத்தனர் ........


சிவாவை கவின் அறையிலும், செல்வியை திவ்யா அறையிலும் ஓய்வெடுக்குமாறு பெரியவர்கள் அனுப்பி வைத்தனர்...... செல்வி திவ்யாவுடன் சென்று அவளை அறையில் தனது உடை மாற்றி தலை அலங்காரம் நகைகள் எல்லாத்தையும் மாற்றி இலகுவான உடைக்கு மாறி ஓய்வெடுக்க ஆரம்பித்தாள்.......

இவ்வாறாக மணி ஏழை கடக்க திவ்யா செல்வியை எழுப்பி சிறு குளியல் போட வைத்து அவளை இரவு இரவு சடங்கிற்காக தயார்படுத்தினாள்......

" அழகான இளம் ரோஜா வண்ண மெல்லிய ஜரிகை வைத்த பட்டுடுத்தி இடைவரை தொட்ட கூந்தலை இரு காது பக்கத்திலும் சிறு முடி எடுத்து சின்ன கிளிப் வைத்து தலைமுடியை பின்னி நெருக்கமாக தொடுத்த மல்லியை அழகாக தலை முழுவதும் வைத்து விட்டாள் ......சிறு நகைகளும் அழகான குட்டிஜிமிக்கியும் அணிவித்து அவளை ஒரு தேவதைப் போல் அலங்கரித்தாள் .......


செல்வி,
அக்கா எதுக்காக இவ்வளவு வைக்கிறீங்க எனக்கு இதெல்லாம் அதிகமா இருக்கு கனமா இருக்கு என்று சொல்ல.......
திவ்யாவோ; அடியே அக்கா என்கிற
"நான் உனக்கு அக்காவாடி ..........என் தம்பி இதை கேட்டா உன்னையும் என்னையும்சேர்த்து அடிப்பான்......

அதனால, அண்ணி னு கூப்பிடு சரியா என்க ........அவளோ சரி சரிக்கா," உங்க தம்பி அப்படியே அடித்துட்டாளும் அவருக்கு என்ன திட்டுறதே வேலையா போச்சு............... எப்ப பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்கிறது" என அவள்
முணங்க......


சரி; சரி .....உன் முனங்கள் எல்லாம் அவன் கிட்ட வச்சுக்கோ...... இப்ப வா அங்கே .......


அப்போது திவ்யாவின் அம்மா வும் இருவரையும் அழைக்க


இருவரும் பூஜை அறைக்கு வந்து சேர்ந்தனர் .....

மணி;

அம்மாடி அன்பு வாமா வந்து பூஜையறையில் நீயும் வெற்றியும் சேர்ந்து விளக்கேத்துங்க என்க..... .............

"இருவரும் சேர்ந்து அழகாக தீபம் ஏற்றி வழிபட்டு பெரியவர்கள் கால்களில் ஆசிர்வாதம் வாங்கி வெளியில் வந்தனர்"........


பின் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து அனைவரும் சேர்ந்து உண்டனர் சிறிது நேரம் கழித்து வெற்றியை அவனது அறைக்கு அனுப்பி வைத்து செல்விக்கு சில அறிவுரைகளையும் வழங்கி அவளையும் வெற்றியின் அறைக்கு அனுப்பி வைத்தனர்; கையில் இருவருக்கும் பாலும் கொடுத்து விட்டனர்..............


அவளும் தயங்கி தயங்கி அறை கதவினை தட்ட அது தானாக திறந்து இருந்தது........ அவள் சிறிது நேரம் வெளியே நின்று பார்த்துக் கொண்டே நிற்க ;"அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால் மெதுவாக உள்ளே நுழைய வெற்றியோ உள்ளே இல்லை...... "

"அவன் பால்கனியில் நின்று கொண்டிருந்தான்" ..........

மெதுவாக அவன் பின்னால் சென்று நின்று கொண்டு அவனை எப்படி அழைப்பது என அவளும் கையை பிசைந்து கொண்டே நிற்க ..........

"அவனோ ஏதோ உள்ளுணர்வு தோன்ற திரும்பிப் பார்த்தான்........... அங்கு செல்வி கையை பிசைந்து கொண்டு நிற்பதைப் பார்த்ததும் ,அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது" ............


மனதில்( என்ன வாய் பேசுவ இப்ப அமைதியா இருக்கிற இவளை சும்மா விட கூடாதே சீண்டி பார்த்தா என்ன )


வெற்றி மெல்ல அவள் அருகில் வந்து நெருங்கி நிற்க ...................


அவளோ ஒவ்வொரு அடியாக பின்னால் வந்தாள் ...இவ்வாறாக "அவன் முன்னால் நகர அவள் பின்னால் நகர கதவின் இடித்து நின்றாள்".........


"வெற்றியும் முன்னால் வர அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி நூலளவே இருந்தது"..........


அவளது கண்கள் இரண்டும் படபடக்க
கைகள் இரண்டும் நடுங்க அவளும் வியர்வைத் துளியால் நனைய
தலை குனிந்து நின்றாள் அவளது செய்கைகள் அனைத்தையும் பார்த்து நின்ற வெற்றிக்குத்தான் ஆர்வமாக இருந்தது...
அவளோ ,"அவனை தலை நிமிர்ந்து பார்க்கவே இல்லை".....
..
.....

..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement