5...எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....

Advertisement

Yazh Mozhi

Active Member
5....எனக்குள் தேடி
உனக்குள் தொலைந்தேன்....


காலை டைனிங் டேபிலில் வைத்த உணவை ஸ்வேதா தொடாமல் கண் கலங்கி அமர்ந்திருந்த போதே மணிமாறன் கார்த்திக்கிற்கு தகவல் தெரிவித்திருந்தார்...

கார்த்திக்கின் தியரி படி அவன் வைத்த ஒவ்வொரு ஸ்டேடஸ் இமேஜ்களும் அவளை உசுப்பேத்தியே உணவை விழுங்க வைத்திட அதைத் தான் மாடியிலிருந்து மணிமாறன் மீண்டும் புகைப்படமாக மருமகனுக்கு அனுப்பி இருந்தார்....

அதை பார்த்த கார்த்திக்கு நீண்ட நாளுக்கு பின் நிறைவாக ஏதோ ஒரு சந்தோஷம் பொங்கிட புது உற்சாகத்தோடு ஆஃபிஸ் கிளம்பி சென்றான்....
இப்போது இன்னும் சில ஸ்டேடஸ் இமேஜ்களும் சேர்த்து அப்டேட் ஆகி இருந்தது.... அவனுடைய வாட்சப்பில்.

image_search_1580192977871.jpg

image_search_1580192916142.jpg​

​
image_search_1580192936235.jpg
​

image_search_1580192839349.jpg

image_search_1580192984412.jpg
image_search_1580192675394.jpgimage_search_1580192908133.jpg

ஆண்டவா நான் பிளான் பன்ன மாதிரி நம்பர ஆன்பிளாக் பன்னிட்டா...
சீக்கிரமே அவகிட்ட இருந்து இதே மாதிரி நல்ல ரெஸ்பான்ஸ் வரனும்...
சீக்கிரமா அவ சண்டைய மறந்து மிஸ் யூ கார்த்தினு என்கிட்டயே ஓடி வந்திடனும் அதுக்கு நீதான் அவ மனசுக்குள்ள புகுந்து சீக்கிரமா ஏதாவது மேஜிக் பன்னி வீட்டுக்கு அனுப்பி வைக்கனும்பா பிளீஸ்...
தெருமுனை பிள்ளையாரிடம் அட்டண்டேன்ஸ் போட்ட கையோடு அந்த பல்சர் பைக் வேகமாகக் கிளம்பியது.... ஆஃபிசிற்கு.....
ஆஃபிசிற்குள் நுழைந்தவனின் முகத்தில் எரிந்த ஆயிரம் வாட்ஸ் பல்ப்பை பார்த்த கௌதம் வேகமாக முன்னே வந்தான்....
என்ன மச்சி பஞ்சாயத்து ஓவரா... பல்லெல்லாம் குளோசப் விளம்பரம் மாதிரி பலபலக்குது....
டேய் அதெல்லாம் இல்ல டா ... சும்மா...
நடிக்காத டா டேய்... வாட்ஸ் அப் ஸ்டேடஸ் லா சும்மா அள்ளுது... நான் கூட நீ இன்னும் ரெண்டு நாளைக்கு ஹனிமூன் கொண்டாட தலைமறைவாயிடுவனு பாத்தேன்... இப்படி ஈஈஈனு பல்லகாட்டிட்டு ஆஃபிஸ் கு வந்து நிக்கிற...
டேய் ஸ்டேடஸ் போட்டது ஒரு குத்தமாடா... நான் சும்மா ஒரு எண்டர்டெயின்மெண்ட் காக போட்டேன்..
ஆஹான்..ஹி..ஹி..ஹி... நம்பிட்டேன் மச்சி வா... அது சரி காலேஜ் டேஸ்ல போட்ட இமேஜ் எல்லாம் இப்போ ரிப்பீட் ஆகுதே...
எப்படி இன்னைக்கு வேலைய பாக்குற ஐடியா இருக்கா இல்ல பிளாஷ்பாக் ல ஸ்வேதா கூட டூயட் பாட போயிடுவியா....
டேய் ஏன்டா நீ வேற என் வயித்தெரிச்சல கொட்டிக்கிற... ஏதோ நல்ல மூட்ல இருந்தேன் போட்டேன் .. இப்படி பேசியே கடுப்ப கிளப்பின ... இன்னைக்கு நைட் நான் பீர் வாங்கிட்டு உன்னைய தேடி வரமாட்டேன் ..... பதிலுக்கு நீ பீர் வாங்கிட்டு என்னைய தேடி வரமாதிரி உன் வீட்ல ஏதாவது ஏடாகூடமா மணி கிட்ட போட்டு குடுத்துடுவேன்...
டேய் வீணாப்போனவனே எத்தனை முறைடா சொல்றது மணி .... மணினு சொல்லாத மனிஷானு முழு நேம் சொல்லுனு . நீ கூப்பிட்றத பாத்து என் டீம் ல புதுசா வந்தவன் லா என்ன ஒரு மாதிரி பாக்குறான் டா.
இந்த அபர்னா லூசு வேற ஆபிஸ் முழுக்க மணி னு ஏதோ பையனுக்கு எனக்கும் லிங்க் இருக்கா மாதிரியே மொட்ட மொட்டயா பேசிட்டு போறா மச்சி...
என்ன பாத்தா என்ன அப்படியா தெரியுது...
ஆஹா... உன் வீட்ல கும்மியடிக்க இவ்வளவு மேட்டரே போதுமே மச்சி... வா வா இன்னைக்கு செம்ம ட்ரீட்டு தான்...
டேய்... டேய்...டேய் ... நான் ஒரு ஆதங்கத்துல சொன்னேன் மச்சி டேய் இதுக்கு கண்ணு காது மூக்கெல்லாம் வச்சு காதுகுத்தி எலாபிரேட் பன்னிடாதடா டேய்...
தெரிஞ்சா எம் பொண்டாட்டி ஸ்பைரல் பைண்டிங் மாதிரி என்னையவே சுட்டி மாட்டிடுவாடா டேய்....
அப்போ என் ஸ்டேட்டச பத்தி கிளறாம மூட்ட்டு வா....
நான் அதெல்லாம் மறந்து நாலுநாள் ஆச்சுடா மச்சான் ..
நல்லவன்டா நீ வா... கேண்டீன் போயிட்டு அப்புறம் கேபின்கு போகலாம்...
அதான் மச்சான் நட்புங்குறது ...கரெக்ட் ஆ என் பிரேக்ஃபாஸ்ட் ஆ பிரேக் பன்ன கூட்டிட்டு போற பாத்தியா நீ... நீ தான் டா என் தோஸ்த்து...
டேய் ஓவரா பாயாசத்த ஊத்தாதடா... நானும் நைட்ல இருந்து பட்னி... கொலப் பசி வேற .. அதான் கம்பெனிக்கு கூப்டேன் ஓவரா கூவாம வா....
அது சரி குரங்குக்கு வாக்கப்பட்டா தாவித்தானே ஆகனும்....
என்னது ...
இல்லை டா இன்னைக்கு ட்ரீட் என்னோடதுனு சொன்னேன்....
ஒன்னும் வேணா... இன்னைக்கு என்னோட ட்ரீட் தான்...
ஏன்..
ஏன்னா .....
என் பேபிமா என் நம்பர அன் பிளாக் பன்னி திரும்ப பிளாக் பன்னிட்டாடா அதுக்காக இன்னைக்கு என் ட்ரீட் மச்சி....
ஆஆஆஆஆஆ
இதெல்லாம் ஒரு பொழப்பாடா....
உன் வொய்ஃப் உன் நம்பர பிளாக் பன்னி திரும்ப அத அன்லாக் பன்னி திரும்பவும் அத பிளாக் பன்னது என்ன உலக சாதனையா.... என்னமோ கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டு வந்தா மாதிரி சார் எனக்கு ட்ரீட் வைக்கிறாராம்மா.....
டேய் ... இப்போ சோறு வேணுமா.... ??வேணாமா....???
அட சீக்கிரம் ஆர்டர் பன்னு மச்சி....
அப்போ சீக்கிரம் வா....
இல்லலனா அந்த வழுக்கு பாறை வந்தான்னா கொட்டிக்க கூட அனுப்பாம கோட்டிங் டைப் பன்னியா கீ வேர்ட் சொல்லு இந்த ப்ராஜெக்ட் என்ன ஆச்சு அந்த சாஃப்ட்வேர் என்ன ஆச்சுனு சட்டமா என் பொண்டாட்டிகு மேல கேள்வி கேட்டே சாவடிப்பான் மச்சான்....
இது நல்ல நண்பனுக்கு அழகு... மச்சி வா போவோம்... இருவரும் ஒருவர் தோளை ஒருவர் கைகளால் பினைத்தபடி பல்லைக் காட்டிக்கொண்டே ஃபுட் கோர்ட் நோக்கி நடையைக் கட்டினர்....
_______ _______ _______ _______ ______ _______
அவன் வேண்டுதல் வீண் போகவில்லை ... திருட்டு பூனை போல கோவத்தைக் காரணம் காட்டி ஒரு கட்டு கட்டியவள் விஹானை தட்டி தூங்க வைத்த கையோடு மீண்டும் செல்லை கையில் எடுத்திருந்தாள்...
மீண்டும் அவனுடைய ஸ்டேட்டசை பார்ப்போமா ஆன்லைன் வந்திருப்பானோ என்ற ஆயிரம் ஆராய்ச்சிகளோடு சாப்பிடப் போகும்போது பிளாக் செய்த அவனுடைய எண்களை ஒரு வழியாக அன்பிளாக் செய்து அவனுடைய அக்கௌன்ட் ல் கடைசியாக ஆன்லைன் வந்த விவரங்களை கண்டு மீண்டும் முகம் காந்தியது...
ஸ்டேடஸ் இமேஜ்களை பார்த்த கையோடு மீண்டும் அவன் எண்களை பிளாக் செய்துவிட்டாள்....
ஐந்து நிமிடங்களுக்கு முன்பு கூட வந்திருக்கிறான்.... நான் வீட்டில் இருக்கும் போது மெசேஜ் செய்தால் வேலை இருக்கிறது என்று கதையளப்பவனுக்கு...
நான் வீட்டை விட்டு வந்ததும் கொண்டாட்டமாக உள்ளது போல... என்று கருவிக் கொண்டே அவனுடைய ஸ்டேடஸ்களை நோட்டம் விட்டாள்...
கண்களும் விரல்களும் நகராமல் நின்று நிதானமாக இரசித்தது அந்த இமேஜ்களை...
தொலைந்த பல பழைய நினைவுக் குவியல்களில் ஒன்று அவர்களின் இந்த ஸ்டேட்டசில் பிக்சர் வைத்து பேசும் சைன் லேங்குவேஜ்....
காதல் என்று ஒருவரை ஒருவர் அனுகியது முதல் அவர்கள் திருமணம் வரையிலும் அதற்கு பிறகும் கூட இந்த பழக்கம் இருவருக்கும் உண்டு... அதிலும் அந்த குறிப்பிட்ட சில கார்டூன் இமேஜ்கள் இருவருக்கும் பிடித்தம் ..
ஒரே வகுப்பறையில் அருகருகே அமர்ந்து கொண்டு கூட இருவரும் இப்படி இமேஜ்களை மட்டும் பரிமறிக் கொண்டு பல கதைகள் பேசிக் கொண்ட பொன்னான காலங்கள் நிறைய உண்டு....
அவள் அதற்குள் பயணித்து வருவதற்குள் நாம் கொஞ்சம் கொசுவத்திகளோடு அவள் பின்னாலேயே பிளாஷ்பேக் போய் வரலாம்....
கார்த்திக் ஸ்வேதா இருவருக்கும் வெறும் மூன்று மாதங்களே வயது வித்யாசம்...
அதனால் கூட இந்த மெட்சூரிட்டி இல்லாத சண்டைகள் ஈகோ பிரச்சனைகள் இருவருக்கும் நிறைய வருவது உண்டு...
இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பி.சி ஏ முடித்துவிட்டு இல் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.சி.ஏ சேர்ந்திருந்த தருணம் அது....
கார்த்திக் மாதேஷ் __ மோகனா இருவருக்கும் ஒரே செல்லப் பிள்ளை... தாம்பரம் அருகே வசிக்கும் நவ நாகரீக
வெல் செட்டில்ட் நியூக்ளியர் ஃபேமிலி...
கார்த்திக் என்ற பெயருக்கு தகுந்த குறும்பு காதல் லீலைகள் சேட்டைகள் எல்லாம் நிறைந்த வட துருவம்.... அவன்...
ஸ்வேதா மணிமாறன் __ ரமணி யின் ஒரே செல்ல மகள். கூட்டுக் குடும்பத்திலிருந்து தனியே வேலை சம்பாத்தியம் என சென்னை வந்தவர் அப்படியே இங்கே சொந்த வீடு வாசளோடு வெல் செட்டில்ட்....
ஸ்வேதா அழகு... திமிர்... கோவம்...ஈகோ... அடம்...அத்தனைக்கும் சொந்தமான தெவிட்டாத தென் துருவம்.... அவள்....
கார்த்திக் முதன்முதலில் காலேஜ் வாசலில் நுழைந்தது முதல் சீனியர்களை கடக்கும் வரை ஆர்ப்பாட்டம் இன்றி முகத்தில் எந்த பயமும் பதட்டமும் வடியாமல் தெளிவாக நிதானமாக நடந்து வந்து இயல்பாக பேசிவிட்டு கடந்து சென்றவளை கார்த்திக்கு ஏனோ பார்த்தவுடன் பிடித்துவிட்டது...
பார்வையில் ஒரு அலட்சியம்...அதே சமயம் மயக்கும் புன்னகை அசரடிக்கும் கச்சிதமானத் தோற்றம் ...லவ் அட் ஃபஸ்ட் சைட்டில் நம்பிக்கை இல்லாதவனையே பார்த்த முதலே கவிழ்த்து போட்டு கடந்து சென்றவள் ஸ்வேதா....
அவளை பார்த்தவுடன் எல்லோரையும் போல மீண்டும் மீண்டும் பார்த்து தன்னை பார்க்க மாட்டாளா என ஏங்கியவன் தான்... அவளுடைய ஒவ்வொரு அசைவுகளையும் செய்யுள் பகுதிகளாக விழிகளால் மனனம் செய்தவன் தான்....
சாதாரண ஈர்ப்பு ஒருகட்டத்தில் கரையைக் கடந்து காதலாக அழுத்தமாக மையம் கொண்டுவிட்டது அவனுக்குள்....
கார்த்திக் ஸ்வேதா பின்னால் சுற்றிவர இவன் பின்னாலோ.... சில விழிகள் வட்டமடிக்கத் தான் செய்தது...
கார்த்திக்கின் பெற்றோர் வழி நட்பில் மிகவும் தெரிந்தவள் வர்ஷா... பி.சி.ஏ இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் தான் முடித்தனர்... கௌதம் மற்றும் மனிஷா கார்த்தியின் பள்ளி கால பால்ய நண்பர்கள் ....
அங்கே தொடர்ந்த இவர்கள் நட்பு எம்.சி.ஏ விலும் தொடர்ந்திட வர்ஷா , கௌதம், வாசு, செந்தில் , தீபா , மனிஷா என்று எல்லோரும் எம்.சி.ஏ வில் சேர்ந்த ஜிகிரிதோஸ்த்துகள்....
மனிஷாவும் கௌதமும் நட்பின் வட்டத்தில் இருந்து காதலுக்குள் தாவி நீந்தி கல்யாணத்தில் கரைசேர்ந்த காதல் ஜோடிகள்....
கார்த்திக் ஸ்வேதா இருவரும் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் விரும்புவதை உணர்ந்தாலும் ஒருவரிடம் ஒருவர் காதலைச் சொல்லவே மூன்று ஆண்டுகள் தேவைப்பட்டது ... காரணம் கார்த்தியின் நட்பு வட்டம் ஏனோ ஸ்வேதாவிற்கு எப்போதும் ஒரு சங்கடத்தை மட்டுமே தரக்கூடியது ..
கார்த்தியுடனான அவளுக்கான நேரத்தையெல்லாம் அவர்கள் நட்பு வட்டமே பறித்திக் கொண்டு இவர்களுக்கு இடையே நிற்கும் கற்சுவர்கள் போல ஒரு பிரம்மை எப்போதும் உண்டு...
அதனாலேயே மூன்று வருடங்கள் அவனை சுற்றலில் விட்டவள் நான்காம் வருடம் வேலைக்கு என்று சென்ற இடத்தில் இருவரும் ஒரே எம்.என்.சியில் செலக்ட் ஆகி அங்கே சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர்...
எந்த இடையூரும் இன்றி மெயில்கள் சேட்டிங் அவுட்டிங் பார்ட்டி பப்... பீச் இப்படி பஞ்சமில்லாமல் காதல் கலை கட்டியது ...
அதன் பிறகு தான் இருவரும் வீட்டில் தங்கள் விருப்பத்தைக் கூறி காதலுக்கு பச்சை கொடி கிடைத்ததும் கல்யாணம் கோலாகலமாக நடந்தது....
அவர்களுடைய நட்பு வட்டம் பெரிதும் எதிர்பார்த்த கதை தான்... இத்தனை வேகமாக கல்யாணம் வரை வந்தது எல்லோருக்கும் திருப்தியே...
ஆனால்....
வர வர மாமி கழுதையாப் போனா. . கழுத தேஞ்சு கட்டேரும்பாச்சுங்கற கதையா கொஞ்சம் கொஞ்சமா காதல் தேஞ்சு தேவையில்லாத சந்தேகம் சட்டாம்பிள்ளையானது ஸ்வேதாவிற்குள்...
கார்த்தியும் அவனுடைய ஈகோவால் அதை தூபம் போட்டு ஊதி ஊதி ஆரம்பத்தில் வளர்த்துவிட்டான்...
இந்த சின்ன சின்ன சண்டைகளின் போது நட்புகளை மீண்டும் சந்தித்தவனுக்கு பழகப் பழக பாலும் புளிக்கும் என்றானது...
காதலும் காதல் மனைவியும் மறந்து போனதோ... அல்லது வேலையின் பளு அப்படி நினைக்க வைத்ததோ...
எது எப்படியோ கார்த்திக்கு மட்டும் குடும்பம் குழந்தை பொண்டாட்டி எல்லாம் டார்ச்சராக மாறிப்போனது...
மீண்டும் பழைய பேட்சுலர் லைஃபை மனம் தேடியது .... மீண்டும் வாட்ஸ் அப் ஃபேஸ் புக் என்று ஒவ்வொரு நண்பர்களையும் வலை போட்டு தேடிப்பிடித்து தனக்கான ஸ்ட்ரெஸ் பஸ்டரை உருவாக்கிக் கொண்டான்...
வீடு குடும்பம் குழந்தை என்ற சிக்கலுக்குள் கார்த்தியின் பாசமும் அன்பான வார்த்தைகளும் அனுசரனையும் போதாமல் ... ஹார்மோன் சேன்ஜ்.... மூட் ஸ்விங் என்று ஸ்வேதா ஒருபுறம் மன அழுத்தத்திற்கு ஆளாகியகருந்தாள்....
அதை கவனிக்கத் தவறிய கார்த்தியோ எல்லாவற்றிற்கும் அவளை மட்டுமே காரணம் காட்டி கோவத்தை சேமித்து வீட்டில் கொட்டத் தொடங்கினான்...
அங்கே தான் இவர்களின் பிரிவு உறுதியாக வளர்ந்து ஆணித்தரமாக வேரூன்றியது...
இதற்கிடையில் கணவன் தன்னை ஒதுக்குகிறான் என்ற எண்ணம் ஸ்வேதாவிற்குள் வலுபெற்று தேவையற்ற சந்தேகங்தளை விதைத்தது...
அவனும் அதற்கு தகுந்தாற் போல வீட்டில் எதையும் பகிர்ந்து கொள்வதே இல்லை.. வீட்டுக்கு வந்தால் செல் போன் அலுவலகத்தில் லேப்டாப் என்று சுற்றுபவன் கொஞ்சம் கொஞ்சமாக இவளுடைய கோவத்தையும் சண்டைகளையும் காரணம் காட்டி உயிருள்ள மனதை கொன்று புதைத்து உயிரற்ற எலக்ட்ரானிக் பொருட்களோடும் ஆன்லைன் உறவுகளோடும் மட்டும் பொழுது போக்கிற்காக நட்புபாரட்டிக் கொண்டிருந்தான்....
இவனுடைய நட்பு வட்டமோ....
வேறு வேறு எம்.என் சி யில் வேலை பார்த்தாலும் இன்று வரையிலும் எல்லோரும் மாதம் ஒருமுறையோ இருமுறையோ சந்தித்து ஷாப்பிங் அவுட்டிங் என்று சுற்றித் திரியும் நல்ல நண்பர்களாக குடும்பத்தின் குழப்பம் அறியாது விளகியிருந்தனர்....
கௌதம் மட்டும் எப்போதும் கார்த்தியுடன் இருப்பதால் அவனுடைய அனைத்து வாழ்வியல் அப்டேட்களும் அவனுக்கு மட்டுமே அத்துப்படி....
ஒவ்வொருவருக்கும் கல்யாணம் குடும்பம் என்று மாற்றங்கள் வந்த போதும் இந்த நட்பில் எந்த ஒரு பிளவும் இன்று வரை இல்லை...
ஆனால் இந்த நட்பு வட்டத்திலிருந்து தான் இருவருக்கும் பிரிவு வருவதேக் காரணம் என்று பாவம் இன்று வரை கார்த்திக் தான் உணரவில்லை....
உணர்ந்தவளும் அதை உடைத்து உண்மையைக் கூறவில்லை...
பகடையை உருட்டியளும் .... விளையாட்டாய் ஒரு வினையை உருவாக்கிவிட்டு இதோ குதூகலமாக கிளம்பிக் கொண்டிருக்கிறாள் ஆஃபிசிற்கு எங்கேஜ்மெண்ட் இன்விடேஷனோடு....
___ தொடரும்..
 

Attachments

  • image_search_1580192718211.jpg
    image_search_1580192718211.jpg
    6.6 KB · Views: 1

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி வினோத் குமார் டியர்
 
Last edited:

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
குடும்பத்துல கும்மி அடிச்சவ எவ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top