2)விடை காண்போம் வா

Advertisement

Prashadi

Member
குட் மார்னிங் மக்களே!

இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள்!

டேய் அஷோக்!!!
இந்த நாளை உன் டையரில குறிச்சு வச்சுக்கோ!

அப்டின்னு யாருக்கு? என்ன சபதம் போடுவிங்க? னு FM ல கேட்டாங்க.
எல்லாரும் ஒவ்வொன்னு சொன்னாங்க. அதனால உங்க Master Mindz மட்டும் சும்மாவா என்ன? நாங்களும் ஒரு சபதம் போட்டோம்ல .

சோ மக்களே! இந்த நாளை உங்க டையரில குறிச்சு வச்சுக்கோங்க, இந்த ஒருநாள் முடியறத்துக்கு முன்னாடி ஒரு பத்து பேர் கிட்டயாவது ஒரு சின்ன மாற்றத்தை கொண்டுவரல......எங்க ஸ்டூடியோ பேரு Master Mindz இல்ல! இல்ல! இல்ல! ('இல்ல'‌ - இதை எகோ எஃபெக்ட் ல போட்டுக்கோங்க மக்களே )

சரி விஷயத்துக்கு வரேன்.
இன்னைக்கு எங்களோட மூணாவது ஷோர்ட் பிலிம் ரிலீஸ் பண்றோம்!!!!

இன்னைக்கு பன்னிரண்டு மணிக்கு!

ஆனா வழமையான கதை களம் இல்ல மக்களே! கொஞ்சம் சீரியஸ்ஸான டாபிக்.

லாஸ்ட் டைம் "இது எங்க ஏரியா" மூவிக்கு 1 மில்லியன் விவ்ஸ் குடுத்து 69.8K லைக்ஸ்ஸும் வாரி வழங்கி எங்களுக்கு சப்போர்ட் பண்ணிங்க‌. அதே மாதிரி உங்க சப்போர்ட் வேணும் மக்களே. ஆனா லைக்ஸ், கமெண்ட்ஸ்,விவ்ஸ தாண்டி நாங்க சொன்ன விஷயம் உங்களை வந்து சேருறது தான் எங்க சக்ஸஸ்!

Hope for the best!

Our 3rd Move!

"ஏன்‌ பெண்ணென்று பிறந்தாய்!"

Director & Head of Master Mindz: #MM_Magizh96

Cinematography:
#MM_Nareshwar

Script:
#MM_Menmozhi

Graphics & VFX:
#MM_Hussain

Chief Editor:
#MM_Dhravya

Music:
#MM_Justin

Produced By:
Mr.Agamagizhan CEO of Master Mindz(PVT)Ltd
Keep supporting! ☺️

என்று பெரிய போஸ்டை மாஸ்டர் மைண்ட்ஸ் ஆபிசியல் ஃபேஸ்புக் பேஜ்ஜில் தட்டிவிட்டு பெரிய மலையைப் பெயர்த்தது போல் களைத்து இருக்கையில் சாய்ந்து கண்மூடினாள்‌.

'ம்கும்' என்று கனைக்கும் சத்தம் கேட்க
இவளோ அதே நிலையில் "சொல்றா கோணமூக்கா!" என்றாள்.

"நான் மகிழ் இல்லைமா" என்ற குரல் கேட்ட அடுத்த நொடி பதறியடித்து எழும்பி "சாரி மாமா. நான் அவன் னு நினைச்சு... தெரியாம‌...." என்று சமாளித்துக் கொண்டிருக்க

"அதை விடுமா. நான் உன்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் கேக்கனும் மா" என்று ஆபிஸின் இன்னொரு அறையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை மும்முரமாக சரிபார்த்துக் கொண்டிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேட்டார்.

"சொல்லுங்க மாமா"என்று அவரை தன் எதிர் இருக்கையில் அமர வைத்தாள்.

"நே...நேத்து ரிஷப்சன் ல ஒன்னும் பிரச்சினை இல்லையே. அ..அவன் நல்லா தானே மா இருக்கான்."
'மனசில இவ்ளோ பாசத்தை வச்சுகிட்டு அதை அவன் முன்னாடி மறைச்சா. அவன் ஒதுங்கி தானே போவான்‌' என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க

அவர் "ஏன் மா அமைதியாகிட்ட?" என்று கேட்டதில் தெளிந்து " ஒன்னும்மில்ல மாமா. உங்களுக்கு என்ன நடந்துச்சுனு தெரியனும் அவ்ளோ தானே. சரி மேல பாருங்க. " என்க அவரோ புரியாமல் பார்த்தார்.

"அட பிளேஷ் பேக் மாமா" என்றவுடன் அவரும் சிரித்து விட்டு மேலே பார்த்தார்.

இதை கண்ணாடி தடுப்புக்குள்ளே
இருந்து பார்த்த நரேஷ், " அங்க பாத்தியா டா. உங்க அப்பாவ. " என்று கை காட்ட
மகிழும் திரும்பி பார்த்துவிட்டு," என்கிட்ட னா காய வேண்டியது. அவகிட்ட மட்டும் சிரிச்சு பேச வேண்டியது. வா நம்ம வேலைய பாப்போம்" என்று கணிணி யின் பக்கம் திரும்பிக் கொண்டான்.

நேற்று காலை 6 மணி....

அதிகாலை உதித்து கொண்டிருக்கும் சூரியனை மலை மேல் மல்லாக்க படுத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முன்னே பதுமைப் போல் ஒருத்தி வந்து நின்றாள். முகம் தெளிவாக தெரியாவிட்டாலும் அவள் வெட்கப் படுகிறாள் என்று அவள் பாவனையிலே தெரிந்தது.

"மச்சான் எந்திரிங்க" என்று மெல்லிய கொஞ்சலாய் ஒலித்தது அவள் குரல்‌.
இங்கு இவனோ மாட்டேன் என‌ தலையசைத்து சிரித்தான்.

"மச்சான் எந்திரிங்க!!"இப்போது சற்று தடிமனாக கேட்டது குரல்
அவன் சற்று அதிர்ந்து மீண்டும் இல்லையென தலையசைத்தான்.

அவள் முகமும் கலங்கிய நிலையில் இருந்து தெளிந்து கொண்டிருந்தது.

"டேய்!!! எந்திரிடா கோணமூக்கா!"
என்றதில் தெளிவாக தெரிய பதறி கனவிலிருந்து தெளிந்தவன் தன் முன்னே நிற்பது பதுமை அல்ல, அவன் பேய் என்று தெரிந்தது.

"ஹேய் நீ இங்க என்னடி பண்ற?"

"உன்னை எழுப்ப தான்‌ வந்தேன். இன்னைக்கு ரிசப்ஷன் கு போகனும் ல. எந்திரிச்சு போய் குளி"

"ப்ச் அதுக்கு ஏன் இவ்வளோ காலைல எழுப்புன? ஒன்பது மணிக்கு தானே பங்ஷன்." என்று சலித்துக் கொள்ள

"டேய் நாம போறது பங்ஷன் ல கலந்து என்ஜாய் பண்ண இல்ல. அவளை வெறுப்பேத்த"

"யெஸ் யூ ஆர் ரைட்.
ஆனா என் தூக்கம் கெட்டுடிச்சே....பிசாசு பிசாசு" என்று தலையில் ரெண்டு கொட்டி விட்டு அவள் கவனிக்கும் முன் குளியலறைக்கு ஓடி விட்டான்.

'கொட்டிட்டு போறான் பாரு கோண மூக்கன்' என்று முணுமுணுத்தாள் மெல்லிய புன்னகையுடன்.
பின் "ஆ...வலிக்குது." என்று தலையை தேய்த்து விட்டு கீழே சென்றாள்.

குளித்து முடித்து கறுப்பு பேண்ட் மற்றும் வெள்ளை சட்டையை அணிந்து முழுக்கையை கைமுட்டி வரை மடித்து விட்டான். கைக்கும் ரோலெக்ஸ் வாட்ச் மற்றும், கறுப்பு நிற பிளேசரை அணிந்து கொண்டான். சராசரி ஆணின் உயரம் இருந்தாலும் ஒரு தடவையேனும் அவனைப் பார்த்து இரசிக்க தோன்றும்.
கராட்டி பழகிய உடம்பிற்கு கறுப்பு பிளேசரும் அழகு சேர்க்க, ஸ்மார்ட் ஆக தெரிந்தான். அவன் மாநிறத்துக்கு இயல்பாக கன்னத்தில் விழும் குழி பேரழகு! அவனது கூரான நாசி தனி அழகு!

கண்ணாடியில் தன்னை சரி பார்த்துக் கொண்டிருந்தவன். ஷேவ் செய்த முகத்தில் ஒரு கசந்த புன்னகை தவழ்ந்தது. என்ன முயன்றும் அவளிடம் ஏமாந்து போனதை மறக்க முடியவில்லை. ஆனாலும் 'நீ அவள காதலிச்சு ஏமாந்து போனது தோல்வி கிடையாது. அவ முன்னாடி வாழ்ந்து காட்டாம போறது தான் தோல்வி' என்று மென்மொழி உதிர்த்த வார்த்தை மனதில் மீண்டும் ஒலிக்க

இருகைகளையும் ஒரு முறை விசுக்கி பிளேசரின் கைகள் கைக்கு பாந்தமாக அடங்கியதும் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் புதைத்து மறுகையால் தலையைக் கோதி விட்டு அந்த கையை இயல்பாக வைத்து ஷு காலடி அழுத்தமாக கேட்டபடி படிகளில் இறங்கினான்.

என்றும் இல்லாத அழகாய் இறங்கியனைக் கண்டு மெய் மறந்து நின்றாள்...மென்மொழி...

அவள் முன் வந்து நின்று சொடக்கிட்டு அழைத்து "என்ன‌ சைட் அடிக்கிறியா?"
அதில் தெளிந்து சற்று நாணம் கொண்டாள். பின்பு தான் அவன் முன் தான் நின்ற கோலம் உரைக்க
பழைய குணம் தலைதூக்கியது," ஆமா சைட் அடிச்சா என்ன தப்பு? என் அத்தை பையனை தானே அடிச்சேன்" என்க

அவன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து கொஞ்சமே கொஞ்சம் கர்வமாக புன்னகைத்தான்.

அதைக் கவனித்தவள்," விட்டா இவன் பேன பெருமாள் ஆக்குவான் போல" என்று முணுமுணுத்து விட்டு அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வாசலிற்கு சென்றவுடன்
இப்போது சமைந்து நிற்பது இவன் முறையாகியது...

தொடரும்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top