2....எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....

Advertisement

Yazh Mozhi

Active Member
image_search_1575880903621.jpg


அறைக்குள் அடைந்து கிடப்பவளிடம் ரமணி தான் கொஞ்சம் பேசிப் பார்க்க நினைத்து நெருங்கினார்....

ரமணி ஸ்வேதாவின் தாய்.... மகளைப் பற்றியும் அவளுடைய அவசப் புத்தியைப் பற்றியும் நன்றாகவே அறிந்தவர்...

கணவன் மனைவி சண்டைக்குள் நாம் உள்ளே நுழைந்து பிரச்சினையை பெரிது படுத்தக் கூடாது என்று தான் இத்தனை நாட்கள் தூர நின்று அமைதி காத்திருந்தார்...
ஆனால் மகள் சண்டை என்
று வீட்டிற்கு வந்தவள் மாதம் கடந்தும் வீடு திரும்பிய வழியைக் காணோம் என்றதும் பெற்ற தாய்க்கு பயம் பிடித்துக்கொண்டது...


ஆனாலும் எப்படியாவது இந்நிலையை சரிசெய்யலாம் என கணவரை நாடினால் அவரும் பெற்றவராக தன் மகளையும் பேரனையும் பார்த்துக் கொண்டு வருவது வரட்டும் என்ற போக்கில் பெண்ணிற்கு பிடிவாதத்தை வளர விட்டுக் கொண்டு இருக்கிறாரே....


எது நடந்துவிடக் கூடாது என்று பயந்திருந்தாரோ இப்போது அதுவே நடந்துவிட்டதே...
வீட்டிற்கு வந்த விடுதலைப் பத்திரத்தைப் பார்த்து இரமணிக்கு மூச்சடைத்தது என்றால் மணிமாறன் மனதிற்குள் உடைந்து போனார்.....

ஆசை மகளின் காதலை எவ்வளவு பிரச்சனை எழுந்த போதும் வெற்றிகரமாக குடும்பம் என்ற பந்தமாக மாற்றித்தந்த நல்ல தந்தை...
அவருக்கே இந்த பிரச்சனையின் ஆழம் இப்போது தான் புரிந்தது...

இருந்தாலும் பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் மகளை தேற்ற நினைக்க மகள் மௌனமாக அறைக்குள் அடைந்து கொண்டாள்....
இப்போது இவள் அழுவதும் மற்றவரைக் கண்டு வீம்பிற்கு முகந்திருப்புவதையும் பார்த்த போதே ரமணிக்கு ஏதோ தவறாகிவிட்டது அதுவும் பிழை தன் பெண் மீது தான் என நன்றாகவே புரிந்துவிட்டது....


எப்படியாவது பேசி அவளுடைய மனதை மாற்றி இந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து இருவரையும் மீண்டும் இணைந்து வாழச் செய்ய வேண்டும் என நினைத்து நெருங்கினாள்... மகள் கல்லுளிமங்கையாக மௌனம் காக்கிறாள் அல்லது வீம்புக்கு கோவமாக கத்திப் பேசி கதவடைக்கிறாள்....


ரமணி இன்று ஒரு முடிவோடு உள்ளே வந்தவர் கோவம் என்ற மகளின் முகமூடியை அவர் அணிந்துகொண்டு அவளை கேள்வி கேட்க நினைத்து வர....


அங்கே அவள் எந்த கேள்விக்கும் தேவைகளே இன்றி பதிலை திரட்டி ஒப்புவித்துக் கொண்டிருந்தாள்..
கையில் கார்திக்கின் புகைப்படத்தை இறுக்கமாக பற்றிக் கொண்டு...

நெஞ்சில் அனைத்தபடி தலை சாய்ந்து அழுது அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்....


நான் உனக்கு வேண்ண்டாம் டா மடையா... நான் உனக்கு வேண்டவே வேண்டாம்... என்னால உனக்கு நிம்மதியில்ல சந்தோஷம் இல்லை என்ன பார்த்து நீ என்னவெல்லாம் சொல்லிட்ட....

நான் நான் உன்ன கடைசி வரைக்கும் கூட இருந்து கஷ்டம் குடுக்க விரும்பல டா கார்த்திக்... .
என்னால உன்ன விட்டு இருக்க முடியாது தான் ஆனா இதோ இந்த ... இந்த ஒரு மாசம் உயிரோட தானே இருக்கேன்... இப்படியே இருந்துப்பேன்... போ...


உனக்கு தான் நான் பெரிய தொல்லை ஆச்சே.... உன்னைய நானாடா தினம் தினம் டார்ச்சர் பன்றேன்..... நானா உனக்கு ஏன்டா கல்யாணம் பன்னோம்னு நினைக்க வைக்கிறேன்..... நானா எல்லா தப்பும் பன்னேன்.....


ஆமா... போ எல்லாம் அப்படியே இருக்கட்டும்... நா... நான் அப்படி தான்... என்கூட வாழ அவ்வளவு கஷ்டமா இருந்தா போ... போயிடு.... நானும்.... உன் பக்கத்துல இருந்து இனி உன்னை தொல்லை பன்ன மாட்டேன்... போ...


அழுகை பொங்க பொங்க வார்த்தைகளோ சத்துக் குறைந்த சவளைப் பிள்ளைகளாக நலிந்து போய் வந்தது ஸ்வேதாவிடமிருந்து....
எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா.... தெரியுமாடா உனக்கு. தெரியுமாடா.... மாங்கா மடையா.... ஃபோட்டோ ல மட்டும் எப்படி சிரிக்கிறான் பாரு.....


சொல்லுடா தெரியுமா உன்ன எனக்கு எவ்வளவு பிடிக்கும் னு உனக்கு தெரியுமா.....

தெரியாது ... தெரிஞ்சிருந்தா இப்படி டைவர்ஸ் பேப்பர் குடுத்து இருக்க மாட்ட நீ...

ஆனா... நா .. நான் உன்னைய நல்லா புரிஞ்சிகிட்டேன் அதான் இப்படி உனக்கு கஷ்டம் கூடுக்கக்கூடாதுனு நானே விலகிப் போறேன்....
அதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது...
நா.... நாம சேர்ந்து இருந்தா ரெண்டு பேருக்கும் நிம்மதியே இருக்காது... காதலிக்கும் போது இருந்த அஃபெக்ஷன் கேரிங் எல்லாம் இப்போ உனக்கு இல்ல கார்த்திக்....

உன...உனக்கு நான் போர் ஆகிட்டேன்... நான் இந்த ஏழு வருஷத்துலயே உனக்கு பழையசா ஆகிட்டேன்... என்ன உனக்கு பிடிக்கல... அதான் என் மேல பாசம் போச்சு... லவ் போச்சு.... எல்லாம் ... எல்லாம் போச்சு... இனி நான் உனக்கு வேணா கார்த்திக்...

நீ ஆசைபட்டா மாதிரி இரு ... நான்... நான் இப்படியே உன்...உன்ன நினைச்சி நினைச்சு... தினம் அழுது புலம்பியே... போறேன்... போய்டுவேன் உன்னை விட்டு தூரமா போய்டனும் கார்த்திக் போயே ஆகனும்....

இல்லைனா திரும்ப வந்து உன்னைய ரொம்ப கஷ்டப் படுத்தி உனக்கு என்மேல மிச்சம் மீதி இருக்க காதலும் காணம போக நானே காரணமாகிடுவேன் டா... அத... அத மட்டும் நிச்சயமா என்னால தாங்கவே முடியாது..
நான் நான் சீக்கிரமே அந்த பேப்பர் ல சைன் பன்னிடுவேன்... சரியா... கொஞ்சம் பொருத்துக்கோ டா... பி....பி...பிகாஸ்... ஸ்டில்... ஐ ..ஐ லவ் யூ சோ..மச் டா புருஷா... ஐ லவ் யூ சோ... மச்.... எ.... என்னால உன்னை யாருக்கும் விட்டு குடுக்க முடியாது டா.... நான்... உயிரோட இருக்க வரைக்கும் அப்படி உன்னை யாருக்கும் விட்டு கொடுக்கவே முடியாது டா... ஐ லவ் யூடா கார்த்திக் சாரி டா மடையா ....


உனக்கு பிடிக்காதுனு தெரிஞ்சும் அழுகுறேன் ல ... சாரி... கன்ட்ரோல் பன்ன முடியலடா... ரொம்ப ரொம்ப சாரி... டா... இப்படியே பைத்தியக்காரத் தனமாக இன்னும் என்ன என்ன உலறி இருப்பாளோ... அதற்குள் ரமணி கண்கலங்கி.... அவளை நெருங்கி வந்து தோலைத் தொட...
வேடம் கலைந்து கோவ முகத்தோடு நடிக்க முனைந்தவளை வேகமாக ஒரு அரை விட்டார் அந்த தாய்....

வாய மூடு ஏதாவது பேசின உன்ன என்ன பன்னுவேன் தெரியாது மூடு வாய... அந்த அடியில் மேலும் உடைப்பெடுத்தக் கண்களோடு ரமணியை இடையோடு கட்டிக்கொண்டு அழுது கரைந்த ஸ்வேத்வை ...

ஒரு வழியாக முறைத்து முறைத்தே உணவை ஊட்டி மடிமீது உறங்க வைத்துவிட்டு வெளியே யோசனை படிந்த முகத்தோடு வந்தவர் அடுத்து ஆயத்தமாக கோவம் பொங்க மணிமாறனிடம் வந்தார் ...

எல்லாம் உங்களால... வயசு பொண்ணு கல்யாணம் பன்னி குடுத்து வீட்டுக்கு வந்தா பிரச்சனை என்னனு கேட்டு பேசி அனுப்பி வைங்கனு தலையால அடிச்சிகிட்டா...
கேட்டீங்களா... கேட்டீங்களா நீங்க... அவளுக்கு இருக்குற அடத்துக்கும் செல்லத்துக்கும் நல்லா தூபம் போட்டு தான் இன்னைக்கு பாதி பைத்தியமாக படத்தோட பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கா...

மாப்பிள்ளை மேல தப்பே இருந்தாலும் நீங்க பேசுங்க என்ன ஏதுனு கேளுங்கனு எத்தனை முறை சொன்னேன் ..

எல்லாம் உங்க அருமை மகளுக்கு தான் ஏதோ கிருக்கு பிடிச்சிருக்கு.. அவதான் டிவோர்ஸ் கேட்ருக்கா... போல....
இப்போ அவளே அதுல கையெழுத்து போட கூட முடியாம பைத்தியம் மாதிரி தேம்பி தேம்பி அழுது ... மொத்தமா போறேன் அது இதுனு ....

ரமணி.....

என்ன ... என்ன ரமணி ...

ஏதோ சின்ன சண்டைனு சும்மா இருந்தோம் ... இப்போ எனக்கு என்னமோ மனசுக்கு இதெல்லாம் சரியா படல... நீங்க பேசுறீங்களா... இல்லை நானே பேசவா... மாப்பிள்ளை கிட்டயாவது இல்லை அவங்க வீட்லையாவது பேசுங்க ..


இல்ல நீங்களும் உங்க பொண்ணு மாதிரி ஈகோ பாத்துட்டே இருந்தா. இனி அவ இப்படியே இருக்க வேண்டியது தான்...

புரிஞ்சிதா....

ம்ம்ம்....

என்னங்க இவ்வளவு பேசறேன் ம்ம்ம் னா என்ன அரத்தம்...

நாளைக்கு கண்டிப்பா மாப்பிள்ளை ஆ நேர்ல பாத்து பேசுறேன் ரமணி ... நீ கவலை படாத....

கவலை இல்லைங்க ஆதங்கம்... அவ மேல நீங்க வச்ச பாசமும் அவளுக்கு குடுத்த செல்லமும் அவ வாழ்க்கைய கேள்வி குறி ஆக்கிடக் கூடாதேங்குற ஆதங்கம்...

அதோட அவளும் மாப்பிள்ளை மேல உயிரையே வச்சு இருக்கா.. ஆனா இடைல இந்த டிவோர்ஸ் ஏன்னு தான் புரியல.

ஆனா ஒன்னுங்க தப்பு உங்க அருமை மக மேல தான் அது மட்டும் நல்லா தெரியுது....

சீக்கிரமே பேசுங்க...

கண்டிப்பா பேசுறேன்... நீ டென்ஷன் ஆகாத... என் பொண்ணு எந்த தப்பும் பன்னியிருக்க மாட்டா... ஏதோ... அவளுக்கு மனச உருத்துது போல மா... இல்லாட்டி அவ இப்படி இருக்க மாட்டா....

என்னங்க நீங்க... விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பான்ற கதையா பேசுறீங்க... உங்களால தான் உங்க பொண்ணு இப்படி இருக்கா...

அவள திட்டாத ரமணி தப்பு என்னோடதாவே இருக்கட்டும் இத பத்தி நீ இனி சங்கடப்பட வேணா... நானே இத சரி பன்றேன்...

நீ போ..

ச்சா. நல்ல அப்பா .... நல்ல பொண்ணு... எப்படியோ போங்க... நான் இனி எதையும் பேசுறதா இல்ல... தலையணை பறக்க முகந்திருப்பிக் கொண்டார் ரமணி..... ஒரு முடிவோடு வெட்டவெளியை வெறித்துக் கொண்டிருந்தார்... மணிமாறன்...

அங்கே...கார்த்திக்கோ.... கௌதமை பிடித்து வைத்து ஒரு சொற்பொழிவே நடத்திக்கொண்டு இருந்தான்..... ஸ்வேதா... என் அஞ்சல... மச்சான்... ரேஞ்சுக்கு......

__தொடரும்.......
___காயத்ரி வினோத் குமார்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top