14) என்னுயிர் நீதானே

#1
என்னுயிர்

காரை விட்டு இறங்கியதும் ஷரண்யா
திகைத்துப் போய் நின்றாள் ......அது ஒரு அரண்மனை போன்ற வீடு சுற்றி முழுக்க வேலைக்காரர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்..

அப்போது ஒரு பெண்மணி வந்து அவர்களை வரவேற்றான் அவள் ராஜஸ்தான் மக்களைப் போலவே இருந்தது மேலும் சில வேலைக்காரர்கள் வரைஅவர்கள் ராஜஸ்தான் உடையில் இருந்தனர் சரண்யா என்ன வினோத் சீனியர்
ஹைதராபாத்ல கூட ராஜஸ்தான் காரங்க அவங்க டிரஸ் போட்டுக்கிட்டு இங்கே வேலை செஞ்சுட்டு இருக்காங்க இந்த வீட்டு முதலாளிக்கு ராஜஸ்தான் ரொம்ப பிடிக்கும் அதனால் தான் அந்த ஊர்க்காரர்கள் வேலைக்கு வச்சிருக்காரு அந்த ஊர் வழக்கப்படி அந்த வீட்டில் எதுவும் நடக்கும் புத்திசாலியான முதலாளி....

வேற யாரு நான் தான் என்று தீபக் சொல்ல சீனியர் இது உங்க வீடு தானா இது என் வீடு இல்ல எனக்கு எங்க அப்பா எனக்காக கிப்ட்டா கொடுத்த வீடு எனக்கு ராஜஸ்தான் போன அந்த ஊர்க்காரர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் எவ்வளோ நல்லது தெரியுமா அதனால்தான் இந்த வீட்டில அந்த வீட்டுக்காரர்களை வேலைக்காரர்களை வச்சிருக்கேன் அப்படிலாம் இல்ல எல்லா ஊர்லையும் நல்லவங்களா இருக்க மாட்டாங்க எதாவது ஒரு கெட்டவங்களா இருப்பாங்க என்று சரண்யா மூஞ்சி சுலிக்க .....

அதான் நீ இருக்கியே அப்புறம் என்ன என்றுவினோத் மனதில் சரண்யா விட்ட பிறகு அனைவரும் உணவருந்தினர் அப்பொழுது ஒரு பெண்மணி சரண்யா பார்த்து நீ பார்க்க ராஜஸ்தான் பொண்ணு மாதிரியே இருக்கிறாய் என்ன தமிழ் நல்லா பேசுறியே என்ன ஊரு பொண்ணு ....

ஷரண்யா விற்கு புரை ஏறிவிட்டது ஷிவானி தடுத்து ராஜஸ்தான்ல கிடையாது சுத்த தமிழ்நாடு பொன்னு ஹைதராபாத் ல பிடிக்கிறோம்...
என்று சொல்ல....


வினோத் இவளுக்கு ஷரண்யா வ பத்தி
எதுவும் தெரியாது போல இருக்கும்
பின்ன இந்த மாதிரி பொன்னு கூட ஷிவானி எப்படி பழகுவா என்று மனதில்
நினைத்துக் கொள்ள.......


தீபக் தன் வீட்டை நண்பர்களுக்கு சுற்றி
காட்ட ,சிறிது நேரம் கழித்து சிறுவர் சிறுமியர் கூட்டம்... ஷிவானி, ஷரண்யா திகைத்து பார்த்தனர் அனைவரும் வினோத்தை சுற்றி சூழ்ந்து கொண்டு வினோதன்னா, வினோதன்னா என்று அவனைச் சுற்றிக்கொண்டு முத்தம் கொடுத்தனர்.....

சீனியர் இந்த பசங்க என்ன உங்க கிட்ட வந்து விளையாடிட்டு இருக்காங்க...... அக்கா நாங்க ஆசிரமம் பசங்க வார விடுமுறை ல
இங்க வந்து வினோத் அண்ணா கூட
ஜாலியா இருப்போம் என்று சிறுவன் கூற
ஷரண்யா மனதில் வினோத் நல்ல இடத்தை பிடிக்க....

வினோத் மனதிலோ
ப்பா ட்ராமா ஸ்கூல் பசங்க என்ன மா
நடிக்குதுங்க,இன்னும் சிம்பத்தி க்ரியேட்
பன்னனுமே,என்ன பண்ணலாம்,என்று
திட்டம் தீட்டினான்.....


நீண்ட நேரம் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு சிறுவன் ஐயோ ஹாசினி எங்க காணோம் என்று கதறினான் என்னடா சொல்ற ஹாசினி அவ வந்தாளா ஆமா இருந்தா இப்ப காணும் என்று கேட்க தூரத்தில் என்ன காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அந்த குழந்தை கத்தும் சத்தம் கேட்டுது

ஷரண்யா அந்த குழந்தை சத்தம் நோக்கி திசை நோக்கி ஓட அங்கே ஒரு காண்டா மிருகம் போல் இருக்கும் ஒரு மனிதன் அக் குழந்தையை தூக்கிக் கொண்டு செல்ல அனைவரும் அவனை பிடிக்க ஓட வினோத், ஷரண்யா தவிர மற்ற அனைவரையும் ஒர் காரில் வந்த நபர்கள் கடத்தி செல்ல வினோத் ஷரண்யா நடுரோட்டில் திக்கு தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர் .....

என்ன ஆச்சு நம்ம கூட வந்தா உங்களை யாரும் கடத்திட்டு வர போயிட்டாங்க என்ன நடக்குது சீனியர்...... எனக்கு தெரியும் ஷரண்யா இது அவனோட வேலையை தான் இருக்கும் என்று கத்த

யார் சீனியர் சொல்லுங்க..

வேற யாரு என்னோட அண்ணன் தான்.....

உங்க அண்ணனா உங்க அண்ணன் எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணனும்..

உனக்கு தெரியாது ஷரண்யா எங்க அப்பாக்கு ரெண்டு மனைவி நான் தான் முதல் மனைவி க்கு பொறந்தவன் எங்க அம்மாக்கு ரொம்ப நாள் குழந்தை இல்லை ரொம்ப நாள் கழிச்சு நான் பொறந்தேன் அதுக்கு முன்னாடி எங்க அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்க அண்ணன் பொறந்துட்டான் ,நாலு வருஷம் கழித்து எங்க அம்மாவுக்கு நான் பொறந்தேன் ஆக்ஷ்வலி சொத்துக்களை எங்க அம்மா பெயர் இருந்தது எங்கே அந்த சொத்தை எல்லாம் எங்க அம்மாவுக்கும் எனக்கும் சேர்ந்திடும்னு பொறாமை

அதனால் தான் எங்க பெரியம்மா எங்க அம்மாவை ரகசியமா ஏதோ பண்ணி சாவடிச்சிட்டாங்க பெரியவங்க சின்ன வயசுலருந்து எங்க அண்ணன் ரொம்ப பிடிக்கும் ஆனா அவன் சின்ன வயசில் இருந்தே என் மேல ஒரு பகை உணர்வு தான் வளர்ந்திருக்கு...

இந்த விஷயம் பாவம் எங்க அப்பாக்கு ஒன்றுமே தெரியாது கொஞ்சம் நாள் போக நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிக்கும்போது எங்க அப்பா இறந்து போயிட்டாரு அப்புறம் எங்க அண்ணன் தான் எனக்கு கூட இருந்தா நல்லா தான் பாத்துக்கிட்டா கொஞ்ச நாள் போக போக அவன் எங்கள் சொத்த கொஞ்சம் பாரு நான் ஊதாரித்தனம் பண்ண ஆரம்பிச்சா

நான் அதை எதிர்த்து கேட்டேன் என்கிட்டே சண்டை போட ஆரம்பிச்சா அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க அம்மாவும் இஷ்டத்துக்கு சொத்தை நாசம் பண்ணிட்டு இருக்காங்க பத்தாதற்கு அவன் ஏதோ ஒரு பொண்ண ஏமாற்றி இருக்காங்க அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் நம்ம ஹாசினி

அந்தக் குழந்தைக்கு ரெண்டு வயசு இருக்கும்போது அவங்க அம்மா என பார்க்க வந்து எல்லாம் சொன்னாங்க அதற்கான ஆதாரத்தையும் வெச்சிருந்தாங்க,நான் உங்க கிட்ட உங்களுக்கு ஒரு நியாயத்தை வாங்கி தரேன் குழந்தை ய கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போன ஆனா அவனுக்கு வேற எங்க பெரிய இடத்துல பொண்ணு வேற பார்த்து வச்சிருந்தாங்க


என்னாலும் சுத்தமா ஏத்துக்க முடியல சரண்யா அதனால்தான் அவங்களை எதிர்த்து கேட்ட ...

அம்மாவையும் குழந்தையையும் நான் வீட்டில் தங்கவைத்து அதுக்கு அந்த துஷ்டர்கள் பண்ண வேலை என்ன தெரியுமா...

யாருக்கும் தெரியாம ஹாசினி அம்மாவை கொலை பண்ணிட்டாங்க..

அவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்க பொய்யா அவங்களை சித்தரித்து போலீஸ்க்கு பணமும் கொடுத்து எல்லாத்தையும் சரி பண்ணிட்டாங்க...

நான் இங்க இருந்தா பிரச்சனை ன்னு சொல்லிட்டு எங்க வக்கீல் மூலமாக அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் லாக் பண்ணி வச்சிட்டேன் அதே சமயத்துல என்ன இங்க வந்துட்டேன் பாப்பாவை ஒரு ஆசிரமத்துல சேர்த்து தெரிஞ்ச ஹைதராபாத்துக்கு வந்து தங்கிவிட்டேன் ...


ஹைதராபாத்தில் படிப்பையும் முடித்துக் கொண்ட, இங்க என்னமோ நடக்குது ஷரண்யா....

அருண் அண்ணா க்கு இது எதுவுமே தெரியாது அருண் அண்ணா க்கு பொறுத்தவரை பெரியம்மா அண்ணன் ரொம்ப நல்லவங்க அவர் எங்க தூரத்து சொந்தம் அதான் எங்கள பத்தி அவ்வளவா தெரியாது...

நான் அவருக்கு தம்பி என்கிற விஷயம் மட்டும் நல்லா தெரியும்... எல்லாம் சொத்து எழுதி வைத்து அவள் தான் என் குழந்தனு தத்து எடுக்கலாம்னு இருக்கிற நேரத்துல கரெக்டா கண்டு பிடிச்சு கடத்திட்டுப் போறான் அவன் எனக்கு தெரியும் அவன் தான் பிளாக்மில் செய்ய நம்ம பிரண்ட் ஸ கடத்தி போய் விட்டான்...


இப்ப நான் என்ன பண்ணுவேன் ஷரண்யா வினோத் நடுரோட்டில் தலையில் கை வைத்துக் கொண்டு கீழே உட்கார ஷரண்யா அவன் தலையை வருடிவிட்டு கவலைப்படாதீங்க சீனியர் நாம எப்படி ஆச்சு பாப்பாவ கண்டுபிடித்துவிடலாம் ..

யார் என்ன பண்ணப் போறாங்க வாங்க ஒரு கை பார்த்திடலாம் நாம ளா அவங்கள சொல்லிட்டு கேவலம் ஒரு குழந்தை பிறந்ததும் மனைவி துனை இந்த ஆம்பளைக்கு தேவபடாது,சொத்துக்காக பெற்ற குழந்தைகளைக் கொள்ள வரவங்கள இப்பதான் பாக்குறேன் சீனியர்...

நாங்க எங்கேயாவது வண்டி வருதான்னு பார்க்கலாம் என்று பார்க்க ஒரு கார் வந்து நிற்க லிஃப்ட் சிறிது தூரம் செல்ல கார் வேறு திசை நோக்கி செல்வதால் இவர்கள் இறங்கி விட்டு வேறு திசை நோக்கி சென்று கொண்டு இருந்தார் அப்போது ஒரு பெரிய குடோன் ஒன்று வெளியே ஒருவன் நின்று கொண்டிருந்தான்...

அவனைப் பார்த்த பிறகு சரண்யா இங்கதான் குழந்தை வைத்திருப்பார்களா எனக்கு தோணுது நான் போய் பாத்துட்டு வரேன் நீங்க எதுக்கு தனியா போன நானும் வரேன் ஏதாச்சு பொண்ணு இந்த பொண்ணு ன்ற வேலையெல்லாம் வேணாம் நானும் வர..


இருவரும் உள்ளே சென்று குடோனில் சுற்றிப் பார்க்க யாரும் இல்லை ....... சீனியர் யாருமே இல்ல , நான் நினைச்சேன் சினிமால வர்ற மாதிரி ரொம்ப தூரம் பயணம் பண்ணி ஒரு குடோனில் தான் கடத்தி வச்சுருப்பாங்க அதான் நானும் குடோனில் வந்து பார்க்கலாம் என்று .....

ஷரண்யா விளையாட சரண்யா சரி சரி சரி இப்ப என்ன பண்றது ஒரு க்ளூவும் கிடைக்கல குழந்தை எந்த பக்கம் கூட்டிட்டு போனாங்க இல்ல நம்ம ஃப்ரெண்ட்ஸ் எங்க கூட்டிட்டு போனாங்க ன்னு தெரியல எனக்கு பயமா இருக்கு.....


அப்போது வினோத்தின் கைபேசி சிணுங்கியது ஷரண்யா பிடிங்கிக்கொண்டு ஸ்பீக்கரில் வைத்தால் வினோத்திற்கு தோன்றியது அய்யோ நம்ம பன்றது ட்ராமா னு தெரிஞ்சா இவள
பழி வாங்க முடியாதே...


ஆனால் அந்த ஆசாமி ஏய் இந்த குழந்தைகளுக்கு உயிரோட வேணும்னா 10 லட்ச ரூபாய் இப்ப கொண்டுவர இல்ல இந்த குழந்தை உயிரோடு இருக்காது என்று சொல்ல அந்த குழந்தை அங்கிள் எனக்கு பயமா இருக்கு காப்பாத்துங்க அங்கிள் ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு என்று அழ தொடங்கி விட்டது.....

அட கடவுளே நடிக்க சொன்னா இவன் நிஜமா குழந்தைய கடத்திருங்காங்க ,10 லட்ச ரூபாய்க்கு நான் எங்கே போவேன் எங்க அப்பாகிட்ட கேட்கவே முடியாது நான் என்ன செய்வேன்,


வேற வழி இல்ல நம்ம மொத்த பலத்தையும் பயன்படுத்தி அவர்களை அடிச்சிட்டான் குழந்தையை கூட்டிட்டு வரணும் ,இவளையும் கூட்டிட்டு போக வேண்டி தான் இருக்கு என் தலையெழுத்து

என்று ஷரண்யா நம்ம போற வழியில நம்ம குழந்தை காப்பாற்ற வந வா அவன் சொல்ற இடத்துக்கு போலாம் என்று மறுபடியும் போன் செய்து நீ சொல்ற மன 10 லட்சம் ரெடி பண்ணிட்டு நீ எங்க இருக்குன்னு சொல்லு நான் வாரேன் அவன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்

அங்கே சென்று குழந்தையை பார்க்க கண்ணையும் ,கைகளை கட்டிருக்க குழந்தை அழுத படி இருக்க...


சீனியர் குழந்தை உங்க அண்ணன் கடத்தல யாரோ பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தை ய கடத்தி இருக்காங்க அவங்க கிட்ட காசு இல்லாம எப்படி காப்பாற்றுவது லூசா நீ சினிமா பாரு ஹீரோ கையில காசு இருக்காது சண்ட போட்டு குழந்தையை காப்பாற்றனும்.....


சீனியர் குழந்தை உங்க அண்ணன் கடத்தல யாரோ பணத்துக்கு ஆசைப்பட்டு இருக்காங்க அவங்க கிட்ட காசு இல்லாம எப்படி காப்பாற்றுவது லூசா நீ சினிமா பாரு இல்ல ஹீரோ கையில காசு இருக்காது ஃபைட் செய்து தான் காப்பாற்றனும்...

எது வேணா பண்ணுங்க குழந்தை பாவம் கண்ண கட்டி விட்டுருக்காங்க நான் போய் குழந்தையை காப்பாத்த போற என்று செல்ல....


ஷரண்யா ஷரண்யா ஷரண்யா என்று அழைத்தாலும் அவள் கண்டு கொள்ளாமல் போய் குழந்தையின் கை, கண் கட்டை அவிழ்த்து விட்டு ஹாசினியை தூக்கி கொள்ள ,அங்கே கணீர் என்ற சத்தம் கேட்க சடாரென திரும்பி பார்க்கும் பொழுது வினோத் ஒருவனை சரிமாரியாக தாக்கிக் கொண்டிருந்தான் அனைவரையும் அடித்து விட்டு குழந்தையுடன் ஷரண்யாவை அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் ஒருவன் சரண்யாவின் தலையில் கட்டையால் அடிக்க சரண்யா மயங்கி கீழே விழுந்து விட்டால் குழந்தையை தூக்கிக்கொண்டு வினோத் தடுக்க போகும்பொழுது வினோத்தின் கையில் பலத்த அடி இருவரையும் கட்டிப் போட்டுவிட்டான் குழந்தையை வைத்து கொண்டான்.....

ஷரண்யா மயங்கி இருப்பதை பார்த்து விட்டு அவர்கள் புறம் திரும்பிய வினோத் குழந்தை ய கடத்துர மாதிரி நடிகை என்று சொன்னாலும் அதை வச்சு இருக்கீங்க.... என்ன நான் என்ன பண்றது நீ சொல்றா மாதிரி நடிச்சா 10 ஆயிரம், இந்த மாதிரி பண்ணா 10 லட்சம் கிடைக்கும்..... நிஜமாய் நான் பணக்காரர் எல்லாம் ஒன்னும் கிடையாதா ஏற்கனவே உங்களுக்கு அறுபதாயிரம் கொடுத்துட்டாச்சு கூடுதலாக 20 ஆயிரம் தரேன்டா அதுக்கு மேல காசு இல்ல ப்ளீஸ் டா டேய்...

அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா கையில காசு வாயில தோசை இப்ப காசு கொடுக்க போறியா இல்ல அந்த பொண்ணு எழுப்பிவிட்டு எல்லாம் உண்மையை சொல்லி விடுவேன் பரவாயில்லையா எப்படி வசதி......

டேய் என்னடா ஓவரா பிளாக்மெயில் பண்றீங்க என்கிட்ட காசு இல்ல டா ப்ளீஸ் விட்ருங்க....

அதெல்லாம் தெரியாது ........

அப்ப என் கை கட்ட அவிழ்த்து விடு அப்புறம் பாக்கலாம் நீயா நானானு என்று வினோத் சொல்ல ஆமா இது சினிமாவில் இருந்து இப்ப வரைக்கும் ஒரு டயலாக்....

அவன் கையை அவுத்து விடு என்ன னு பாக்கலாம் எப்படி அடிக்க முடியாது வா என்று சொல்லிவிட்டு ஒருத்தன் வினோத்தின் கை கட்டை அவிழ்த்து விட

அவரை சரமாரியாக தாக்கி விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சரண்யாவை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்
.

சரண்யா கண் விழிக்கவே இல்லை வேறு வழி இன்றி சரண்யாவை தூக்கிக் கொண்டு சென்றான் குழந்தையின் கையை பிடித்து நடந்தான் அப்போது குழந்தை
அங்கிள் ஆன்டி எதுக்கு இப்படி தூங்குறாங்க நானே பாப்பா நடந்துவர ஆண்டியை பிடித்துவிடுவாங்க

ஆன்ட்டிக்கு உடம்பு செரியில்லை பாப்பா அதனால்தான் தூக்கிட்டு போறேன் பாவம் அந்த அந்த ரௌடி அங்கில் தலையில அடிச்சி ஆன்ட்டிக்கு தூக்கம் வந்தது என்று குழந்தை பரிதாபமாக கேட்க ..

ஆமா ஆமா என்று சொல்ல நான் ஒரு நாம ஒண்ணு நினைச்சா விதி ஒன்று நடக்குது கடவுளே ,திடீரென மழை வருது மழை வருது வேற இடமே கிடைக்கலையா என்று ஒரு குடிசை பார்த்தான் அங்கே ஷரண்யா வை உட்காரவைத்து குழந்தையும் உட்கார வைத்தான்....

அங்கிருந்த பெரியவர் தம்பி என்ன ஆச்சு ஏன் இந்த புள்ள மயங்கி கிடக்கு குழந்தை சொன்னது என்ன கடத்தி போனாங்க எங்க அம்மா என்ன காப்பாற்ற வரும் போது ரௌடி அங்கிள் அம்மா வ அடிச்சிட்டாரு. இது அம்மாவா சின்ன பொண்ணாஇருக்கு உனக்கு அம்மா வா.....

ஆமா எங்க அம்மா அப்பா க்கு சீக்கிரம் கல்யாணம் ஆச்சு அதான்...

இந்த காலத்தில் சீக்கிரமாக செய்றது இருக்குதா என்று பெரியவர் ஆச்சரியமாக கேட்க.....

வினோத் ஹாசினியை தனியாக அழைத்து சென்று ஏன் பாப்பா பொய் சொன்ன...

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எனக்கு வேர அம்மா அப்பா இல்ல அதனாலதான் உங்க அம்மா அப்பா என்று சொன்ன தப்பு இல்லையே ....

வினோத் சிரித்துக் கொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு உள்ளே வந்தான்....

உள்ளே வந்தவன் சரண்யா முழித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆக, ஐயையோ இவளுக்கு நம்ம ட்ராமா தெரியாத பாப்பா இப்ப வாயைத் திறந்து பேசினா போச்சு, நான் ஆசைப்பட போகிறேன் என்று மிகத் பயப்பட..

அங்கு ஒரு பெரிய அதிர்ச்சி இருவருக்கும் காத்துக்கொண்டிருந்தது இருவரையும் பார்த்து சரண்யா

யார் நீங்க நான் எங்க இருக்கேன் என்று கேட்டாள்

தொடரும்.....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes