13.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member
திவ்யா குடும்பம் தற்போது மதுரையில் வசிக்கிறார்கள்.......

சரண் திவ்யாவுக்கு தூரத்து உறவு முறையில் மாமன் மகன்,
ஒருமுறை கோவில் திருவிழாவில் சரண் திவ்யாவை பார்த்து பிடித்து போய் வீட்டில் சொல்ல..... பேசி திருமணம் செய்து வைத்தனர்........

சரணுக்கு உடன்பிறந்தவர்கள் ஒரு அண்ணன்(கைலாஷ்)- மனைவி(வனிதா)இரு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு தம்பி(சுதன்) தற்போது இளையவன் சுதன்னுக்கு பெண் பார்க்கிறார்கள்......
அவரது அப்பா சிறிதாக வைத்திருந்த ஒரு மளிகைக் கடையை, இப்போது
மதுரையில் 3 இடங்களில் பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸாக வளர்ந்துருக்க....

அண்ணன் தம்பி மூவரும் நிர்வகிக்க சிறப்பாக செயல்படுகிறது........ஒற்றுமையான
குடும்பம் ........மாமியார் ஏதாவது சொன்னாலும் அனுசரித்து போகும்
மருமகள்கள் ..........அவர்களை விட்டு கொடுக்காத கனவர்கள் ..........


தற்போது வெற்றி செல்வி இருவரும் மதுரை வந்து ஒருவாரம் ஆகிருக்க.....

வெற்றிக்கு நாளை கல்லூரிக்கு வருமாறு போன் வந்தது ......

திவ்யா குடும்பத்தினரிடம் விடைபெற்று இருவரும் ஊர் வந்து சேர்ந்தனர்....
...........................................................................

வெற்றிசெல்வி இருவரும் மதுரை சென்று இரண்டு நாளாகிருக்க........

இத்தனை நாட்களில் ,"இருவருக்கும் கணவன் மனைவி என்ற உரிமையும் பாசமும் அக்கறையும் இருவரிடத்திலும் வளர்ந்து கொண்டிருந்தது"...............


"இன்னும் கொஞ்ச நாட்களில் இருவருக்கும் இடையில் இருக்கும் ; இடைவெளி இல்லாமல் போகப் போவது அறியாமல் இயல்பாக இருந்தனர்".

******************

அன்று காலை பரபரப்பாக வெற்றி கிளம்பிக் கொண்டு இருக்க........... அதைப்பார்த்து ;செல்வி தான்,.......

ஏங்க.... ஏன் இவ்வளவு அவசரமா கிளம்புறீங்க?...........

இப்பதான மணி எட்டாவது .பத்து மணிக்கு தான காலேஜ் ஓபன்.....ஏன் இவ்வளவு அவசரம்?...............

" ஏய் செல்வி", நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன் .9மணிக்கு மீட்டிங் ........ இப்பவே கிளம்பினால்தான் சரியான நேரத்துக்கு போக முடியும்......

ஏங்க, இத இப்ப வந்தா சொல்லுவீங்க?.......

வெயிட் பண்ணுங்க ......."ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்".........
"சாப்பிட்டு போகலாம்" என அவனின் பதிலை எதிர்பாராமல் ஓடிவிட்டாள்.

வெற்றியும் தனது பேக் எடுத்து கொண்டு கிளம்ப.....

வேகமாக வந்த செல்வி .....வெற்றியை வழிமறித்து....ஏங்க ஒரு நிமிசம் சாப்பிட்டு போலாம் என்க........

அவனோ இல்லமா,"லேட் ஆகிட்டு நான் கேண்டின்ல பாத்துகிறேன்".......

அதெல்லாம் வேண்டாம் .....நானே ஊட்டி விடுறேன்.........

ரெண்டு இட்லி சாப்பிட எவ்வளவு நேரம் ஆகும்?............ சரி சரி வாய் திறங்க..... "நான் ஊட்டுறே"............ நீங்க சாப்பிடுங்க......

அவளை ஒரு மாதிரி பார்த்தவன்......... "சரி ,என தலையசைத்து வாய்திறக்க"......
நல்லா சாப்பிட வைத்துதான் அனுப்பினாள்.........

அவளது அக்கறையில் மனம் குதுகளிக்க ,"சந்தோசமாக அவனும் கல்லூரிக்கு கிளம்பி சென்றான்"............





அவன் சென்றதும், தன் அம்மாவிடம்பேசிவிட்டு..........
தனது மாமியாருக்கு உதவ வந்தாள்.....


அவரோ அவளை சாப்பிட வைத்து....... தானும் அமர்ந்து சாப்பிட்டார்....... வெற்றி காலேஜ் போய் இருக்க...... கவின் தனது நண்பர்கள் காண சென்றிருந்தான்...... அவர்களின் அப்பா மில்லுக்கு சென்றிருந்தார்........



வீட்டிலிருந்த இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே கதை பேசிகொண்டு இருந்தனர்.........


பின் இருவரும் மதிய சமையலை துவங்க.......... அவருக்கு உதவியாக செல்வியும் வேலை செய்து கொண்டிருந்தாள்......... எல்லாம் தயாராக....... கவின் வெற்றியும் வந்து சேர்ந்தார்கள்." வெற்றிக்கு கல்லூரியின் முதல் நாள் என்பதால் மதியத்திற்கு அப்புறம் விடுப்பு"....... அவர்கள் வந்த முறை அவர்களது தந்தையும் வந்தமர்ந்தார்.........

மூவரும் பொதுவாக சில விஷயங்கள் பேச............
"அவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் செல்வி".....

பின் மணி சாப்பிட அழைக்க........
அவர்கள் ,'மூவரும் அமர கூடவே மணியையும் அவர சொல்ல........ அனைவரும் தங்களாகவே பரிமாறி சேர்ந்து சாப்பிடலாம் என கவின் சொல்ல'........
எல்லொருக்கும் அதுவே சரியாக பட அனைவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டார்கள்............

பின் அனைவரும் ஓய்வெடுக்க செல்ல.........."வெற்றி
அறைக்கு வந்து செல்வியிடம் ஒரு பேப்பரை நீட்டினான்"...........

அவளோ அதை வாங்காமல் என்னவென்று வெற்றியை பார்க்க............ ஆனால் ,அவனோ கையில் வாங்கி பாரு கண்களால் சொல்ல..............


மறுக்காமல் அதை வாங்கிப் பார்த்த அவளுக்கு.............. "என்ன? சொல்வதென்றே தெரியவில்லை..........
அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் கண்களை விரித்துக்கொண்டு அவனை பார்க்க.............


என்னடி இப்படி முளிக்கிற.....
என்னன்னு தெரியுதா இல்லையா?.... என கேட்டு புருவம் உயர்த்த..............

அவளோ அப்படியே அவனைப் பார்த்து நின்றாள்.........



என்ன திடீர்னு? நான் கூட உங்ககிட்ட கேட்கலையே........

நீ என்கிட்ட கேட்கலாமா எனக்கு தெரியாதா? நீ என்ன ஆசைப்படுற?....... அடுத்தது என்ன பண்ணனும் நினைக்கிறனு?......... சரி சொல்லு என்ன கோர்ஸ் பண்ணலாம்னு இருக்க..........

அதெல்லாம் வேண்டாம். அத்தை மாமா என்ன சொல்லுவாங்களோ?......


அவங்க தான் படிக்க வைக்கணும்னு சொல்லி தான் என்கிட்ட கல்யாணத்தை பற்றி பேசினாங்க........


அவளோ தன் கண்களை விரித்து "நிஜமாவா" என கேட்க....

ஏய் லூசு.... அதான் சொல்லுறென்ல.....நீ சொல்லு
மாஸ்டர்ஸ் பண்ணலாம்னு இருக்கியா? இல்ல டீச்சர் டிரைனிங் படிக்கலாம் இருக்குறியா?...............


எந்த கோர்ஸ்ல சேர போறேன்னு சொல்லு ரெண்டுலயும் அட்மிஷன் வாங்கிட்டு வந்திருக்கேன்.....ம் எதுல
சேரனுமோ அதுல சேந்துக்கலாம்......

அவளுக்கு தனது கனவு நிறைவேற போவதை நம்பவே முடியவில்லை........

அதுவும் தனது கணவன் தன்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை........

அவளுக்கு துள்ளிக் குதிக்க வேண்டும் போல் இருந்தது.....
அப்படியே துள்ளி குதித்து வெற்றியை அணைத்துக்கொண்டாள்.........

அவனும் அவளை அணைத்துக் கொண்டான்............

தனது தோளில் சூடான நீர் விழுவது போல் இருக்க மெல்லமாக செல்வி விலக்கி அவளது கண்ணீரை துடைத்து விட்டான் ........கைகளில் அழுத்தம் கொடுத்து ஆறுதல் படுத்தினான்..........


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top