11.அன்பின் வெற்றிவேல்

Advertisement

Pavidurai

Member


வெளியில் தங்கம்," செல்வி" என கூப்பிட.............

இதோ வறேன்மா...... என்று குரல் கொடுத்துக்கொண்டே.....
வெற்றிடம் சொல்லிவிட்டு வெளியே சென்றாள் .......

தனியே இருந்த வெற்றி ரூமில் இருந்த பொருட்களை எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்தான்.......

அவன் கண்களில் மேசையில் இருந்த டைரி பட........
வேகமாக அதை எடுத்தவன். "ஒரு நிமிடம் தயங்கி பின் திறந்து பார்த்தான்".........

அதன் முதல் பக்கத்தில், அழகான இரு வரிகள் இருந்தது.
அவன் அந்த எழுத்துக்களை தன் கைகளால் வருடி,
வாசித்தான்.


"உன் கண்களை சந்தித்த
ஒரு நொடி
என்னை மறந்து நின்றேன்".........

அதன் பக்கத்தில் தேதி போட்டு இருந்தாள்........ அது வெற்றிசெல்வி பெண்பார்க்க வந்த நாள்.........
அதன் கீழ் தன் பெயரையும்
எழுதி இருந்தாள்


அவன் மறுபக்கம் திருப்ப அதில் ,


" ஆயிரம் இருந்தாலும்
கனவுகள் நிஜமாவதில்லையோ? "........

என எழுதிருக்க...

இது என்னவா இருக்கும்?... என வெச்சி யோசித்துக் கொண்டிருக்கும்போது செல்வி வந்துவிட்டாள்........

அவன் ,"தனது டைரியை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அவன் பக்கத்தில் வந்து அவன் கைகளிலிருந்து பிடுங்க"........
"ஏய் ஏண்டி பிடுக்குற"..........
ஏய்,
செகண்ட் பேஜ்ல என்னடி அது........ எதை மீட் பண்ணி எழுதி இருக்க..........

அது எல்லாம் ஒன்னும் இல்ல விடுங்க என அவனை பார்க்காமல் உரைக்க........

ஏதா இருந்தாலும் என்ன பாத்து சொல்லு நான் இங்கதான இருக்கேன்.......நீ எதுக்கு வேற எங்கேயோ பார்த்து பதில் சொல்லுற.............


அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... ... நீங்க வெளிய வாங்க உங்கள அண்ணா கூப்பிடுறான்........
சரி சரி போறேன் . உன்ன வந்து கவனிச்சீக்கிறேன்.

வெற்றிக்கும் சில விஷயங்கள் சிவாவிடம் கேட்க வேண்டியது இருந்ததால் .........மேலும் அவளிடம் பேச்சு வளர்க்காமல் வெளியே சென்று விட்டான்...........


வெற்றி சிவாவிடம், டேய் என்னடா எதுக்குடா கூப்பிட்ட.....

"அது ஒன்னும் இல்லடா, வீட்டுக்குள்ளேயே இருந்தா உனக்கும் போரடிக்கும் இல்ல".....

அதான் அப்படியே தோட்டத்துக்கு போயிட்டு வரலாம்னு...... தான் கேட்டேன். வேற ஒன்னும் இல்ல..... என்னடா........பிசியா இருக்கியா?


அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா சரி வா போலாம்.......

இருவரும் நடந்து வீட்டின் பின்கட்டு வழியே தோட்டத்துக்கு வர.............


வெற்றிதான் சிவாவிடம் பேச ஆரம்பித்தான்......
டேய் சிவா .......இனி நீ என்ன பண்ணலாம்னு இருக்க..... மறுபடியும் யுஎஸ் போலாம்னு இருக்கிறாயா?....... இல்ல முதல்ல சொன்ன மாதிரி சென்னை ப்ரஞ்ச் தான் மாறலாம்னு இருக்கிறியா..........

ஆமாண்டா வெற்றி........... இனி சென்னையில் இருக்கிறதா பிளான் பண்ணிட்டேன்...... அப்படின்னா ஊருக்கு அப்பப்ப வந்துட்டு போய்க்கலாம்....... ஏற்கனவே டிரான்ஸ்பர் அப்ளை பண்ணிட்டு தான் வந்திருக்கிறேன்........... இங்க ஒரு மாசத்துல ஜாயின் பண்ணனும் அடுத்தமாதம் ஜாண்ட்(join) பண்ணலாம்னு இருக்கேன்.......

சரிடா......" ஆல் தி பெஸ்ட்" நல்லா பண்ணு.....

சரி ஓகே..... நீ சொல்லு
என்கிட்ட என்ன கேக்கணும் உனக்கு?.......

டேய் மச்சான் சூப்பர் டா நெனச்சு அப்படின்னு சொல்லிட்டபத்தியா........
என ஆரத் தழுவிக்கொள்ள.....

டேய் டேய் போதும்டா போதும்டா விசயத்த சொல்லு

அது ஒன்னும் இல்லடா........... செல்வி கேட்டு ஏதாவது நடக்காம இருந்திருக்கா........

........: அப்படி ஏதும் எனக்கு தெரிஞ்சு இல்லையே"............

நல்லா யோசிச்சு பாரு டா சிவா.....


(சிறிது யோசித்த சிவா.......)

இருக்குடா ஒரே ஒரு விஷயம்தான்........அவ படிக்கணும்னு சொன்னா படிக்க வைக்கல.............


வெற்றி ;
சிவா ஏன்டா,.... ஏண்டா படிக்க வைக்கவில்லை.......

அவளுக்கு ஆசை........ஆனால்
அம்மா அப்பாக்கு இஸ்டம்
இல்ல.......
.
ஓ...... இப்பதான் எனக்கும் ஞாபகம் வருது அப்பா முதல்ல சொன்னாங்க..........
பொண்ணு படிக்க ஆசைப்படுவது கல்யாணத்துக்கப்புறம் படிக்கட்டும் ........னு
சொல்லி இருக்கேன்."என்னடா சொல்ற வெற்றி என கேட்டாங்க"?....

நானும் பொண்ணு யாருன்னு நினைச்சுட்டு ......உங்க இஷ்டம்பா எல்லாம். அப்படின்னு சொல்லிட்டேன்.
என் கூடவே சேர்ந்து காலேஜுக்கு வரலாம் அப்படின்னு சொன்னாங்க......
எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லனு சொன்னேன்...

வெற்றி,
சரி டா அப்ப ஓகே ........ என் வொர்க் பண்ணுற காலேஜில சேர்த்துடலாம். .......

காலேஜ் ஸ்டார்ட் ஆக இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு இனி அங்கே சீட் வாங்கிடலாம்.....
பிஜி ஓபனாக இன்னும் ஒரு மாசம் ஆகும் .அட்மிஷன் போடலாம் பிரச்சனை இல்ல... ....... என வெற்றி சந்தோஷமாக சொல்ல.......

தன் தங்கைக்கு அமைந்த வாழ்வை எண்ணியும்...... " தன் தங்கை கணவரும் தனது நண்பனும் ஆகிய வெற்றியை
சந்தோசத்தில் சிவா ஆரத்தழுவிக் கொண்டான் ".

டேய் அப்புறம் முக்கியமான விஷயம்...

சரிடா நீ இத பத்தி யார்கிட்டயும் சொல்லாத டா சிவா நான் சார்பிரேசா(surprise) கிட்ட சொல்லிகிறேன்....

சரி சரி என சிவா ......அவனை கிண்டலடிக்க.......... "போடா போடா சிரித்துக்கொண்டே சிவாவின் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றான் வெற்றி"....


இருவரும் உள்ளே வந்ததும் கண்ணன் இருவரையும் அமர சொல்ல....

சமையல் கட்டில் இருந்து வெளியில் வந்த தங்கம் அனைவரையும் சாப்பாட்டுக்கு அழைக்க........



அனைவரும் வந்து அமர தங்கம் பரிமாறினார்.......
அனைவரும் பேசி சிரித்துக் கொண்டே சாப்பிட......
செல்வி மிக அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்......

அவள் அமைதியாக இருந்து சாப்பிடுவதை பார்த்த அப்பத்தா செல்வியை வம்பிழுக்கவேண......வெற்றியிடம்

ஐயா, வெற்றி என்னையா செய்த என் பேத்திய ரொம்ப அமைதியா இருக்கா.......

உடனே நிமிர்ந்த செல்வி, வெற்றியை பார்க்க...... அவனும் குறும்புடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டி...... அப்பத்தாவிடம் அது ஒன்னும் இல்ல அப்பத்தா...........


அதெல்லாம் ஒன்னும் இல்ல அப்பத்தா....... உங்கள பார்த்த சந்தோஷத்தில்தான் அமைதியா இருக்கா ......

அப்பத்தா உனக்கு சும்மா இருக்க முடியாது........ சும்மா சும்மா என்னையே வம்பு இழுக்குற என சிடுசிடுக்க........

அவளை பார்த்த அனைவரும் சிரிக்க...... தன்னை வம்பு இழுக்கவே அப்பத்தா இப்படி செய்தார் என்று தெரிந்து கொண்ட செல்வியும் அனைவரையும் பார்த்து முறைத்து விட்டு எழுந்து சென்று விட்டாள்.........

(சும்மா இல்ல சாப்பிட்டுட்டுதான் எழுந்துறிச்சா ....

நமக்கு சாப்பாடு தான் முக்கியம் )

சாப்பிட்டு எழுந்து எல்லோரும் அவரவர் அழைத்துச் செல்ல.......



 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top