வைர நெஞ்சம் 4

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
“எவனையும் வெற்று காகிதம்

என எண்ணாதே!

ஒருநாள் அவன் பட்டமாய் பறப்பான்

நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்”

வைஷ்ணவி, அபி, அன்புச்செழியன் இவர்கள் மூவரும் மருத்துவமனையில் காத்திருப்போர் வரிசையில் அமர்ந்து காத்துக் கொண்டிருக்க, இவர்கள் வந்ததே ஒன்பது மணி அப்போதும் மருத்துவமனையில் கூட்டம் இருக்கத்தான் செய்தது, அன்புசெழியன் வீடு ,அதே ஏரியா என்பதால், அதுவும் இவன் நண்பனின் அப்பா ,இங்கு மிகவும் பிரபலமான டாக்டர் ,அதுவும் கைராசி ஆனவர் , என்பதால் அபி கால் செய்யவும் பாரதியின் அம்மாவை இங்கே அழைத்து வர சொல்லிவிட்டான்.

இவர்கள் மூவரும் உள்ளே செல்ல அன்பு செழியனை பார்த்த “டாக்டர் சிவனேசன்” அன்பு உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா, என்று கேட்டுக்கொண்டே டாக்டர் நர்சிடம் கண் காட்,ட அவர் வைஷ்ணவியை தனியாக அழைத்து சென்று “பிபி” பரிசோதித்தார். இங்கு டாக்டர் அன்பு டம் என்ன ஆச்சு? என்று கேட்க, அதற்கு அன்பு, அபியை பார்க்க, அபி வேகவேகமாக நடந்ததை சொன்னான்.

நீங்க ரெண்டு பேரும் பதட்டமா இருக்கீங்க, ஆனால் பேஷன்ட் முகத்துல ,ஒரு பதட்டமும் இல்லை, அவங்க ஹெல்த் பத்தி அவர்களுக்கு ஒருவேளை தெரியுமோ? அதற்குள் நர்சும், வைஷ்ணவியும் வந்துவிட, டாக்டரிடம், நர்ஸ் வைஷ்ணவியின் “பிபி ரிப்போர்ட்டை” தர அதை பார்த்த டாக்டர், நாளை காலையில் வந்து “ஈசிஜி” டெஸ்ட் எடுக்க சொன்னவர் இன்று இரவு மட்டும் உட்கொள்ள மருந்து எழுதிக் கொடுத்தார்.

அபி, வைஷ்ணவி இவர்கள் இருவரையும் வெளியே காத்திருக்க சொன்னவன் மீண்டும் உள்ளே சென்று ஏதாவது சீரியஸா அங்கிள்? என்று கேட்கவும், அதற்கு டாக்டர் இல்லன்னு பொய் சொல்ல விரும்பல, ஆனால் எதுவாக இருந்தாலும் நாளைக்கு டெஸ்ட் ரிப்போர்ட் பார்த்துட்டு தான் சொல்ல முடியும் .அன்பு டாக்டரின் கையை பிடித்துக் கொண்டவன், எப்படியாவது அவங்கள குணப்படுத்திடுங்க அங்கிள் என்று கேட்கவும், அவ்வளவு வேண்டியவங்கலா அன்பு என்று கேட்கவும் ,ஆமாம் அங்கிள் என்னோட வருங்கால மாமியார், என் பாரதியோட அம்மா என்று சொன்னான் எந்தவித ஒளிவு மறைவுமின்றி, என்னடா ?உனக்கு இப்பதான் 24 வயசாகுது அதுக்குள்ள லவ்வா என்று கேட்க? அவன் மனக்கண்முன் பாரதி வந்து போனாள்.

என்னுடைய காதல் இன்னும் அந்த பொண்ணுக்கு தெரியாது அங்கிள், அவ இப்பதான் “பிளஸ் டூ” படிக்கிற. அவ டாக்டர் ஆகணும்னு நிறைய “ஆம்பிஷன் வச்சிருக்கா” என்னுடைய காதல் எந்த வகையிலும், அவளுடைய முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என்னுடைய பாரதி, ரொம்ப ஸ்பெஷல் டாக்டர், மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது, யார் கண்டா, அவ படித்து டாக்டராகி உங்களை விட பெரிய ஆளானாலும், ஆகிவிடுவா என்று சொல்லவும் அன்புவின் தோளில் அடித்தவர், அடப்பாவி எனக்கு போட்டியா? உன்னோட ஆளு தயார் பண்றியா. ஒன்னும் கவலைப்படாத அன்பு என்னுடைய கடமையை நான் செய்வேன். அதுக்கு மேல கடவுள் பார்த்துக்குவாரு. .அவருக்கு தெரியவில்லை வைஷ்ணவி இத்தனை வருடம் உயிரோடு இருந்ததே பெரிய விஷயம் வைஷ்ணவியின் பிராத்தனைகள், பாரதியின் மேல் கடவுள் காட்டிய இரக்கமும் தான் வைஷ்ணவி இத்தனை வருடம் உயிர் வாழ்ந்ததற்கு காரணம்.

அவ சின்ன வயசுலேயே நிறைய கஷ்டப்பட்டு இருக்கா, அப்படின்னு அடிக்கடி ,சுதா அத்தை சொல்வாங்க ,நான் அவளை நல்லபடியா பாத்துக்கணும் அவனுக்கு தெரியாது “இதுவரை பாரதி பட்டது ஒன்னும் இல்லை எண்ணுமளவுக்கு நிறைய கஷ்டம் பட போகிறாள்”

சரி அங்கிள் நான் வரேன். வெளியே அபி மிகவும் பதட்டத்தோடு இருந்தான் , அன்புசெழியன்க்கும் பதட்டமாக தானிருந்தது ,என்ன அபி வெளியே காட்டிக் கொண்டான் அன்புசெழியன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை அவ்வளவு தான் வித்யாசம்.

அன்பு, அபியிடம் நான் இங்கு வந்தது ,எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது. என்று அபியிடம் சொல்லவும் ,பாட்டியைப் பற்றி தெரிந்தவன் சரி என்றான். அன்பு, வைஷ்ணவி இடம் ஒண்ணும் கவலைப் படாதீங்க எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று சொன்னதும். அவர் முகத்தில் துளியும், பதட்டமும், பயம் எதுவும் இல்லை. அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அவர் மனதில் ஒரு முடிவுக்கு வந்தவர். அபியிடம் சீக்கிரம் போலாம் வா அபி பாரதி காத்துக்கிட்டு இருப்பா. அன்பு விடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். அதற்கு ஏற்றார் போல், பாரதி , ஒரு நாளும், இதுபோல் தன் அம்மா தாமதமாக வந்தது இல்லையே இன்று மிகவும் பயத்தோடும் காத்துக் கொண்டிருந்தாள். சுதா எவ்வளவு சொல்லியும், ஒரு வாய் உணவு கூட உண்ணவில்லை, அம்மா வரட்டும் ஆன்ட்டி என்று அப்படியே அமர்ந்துகொள்ள.

சுதாவிற்கு தான் மிகவும் பதட்டமாகமாகியது. வைஷ்ணவி ,அபி இருவரும் வந்துவிட, பாரதி வேகமாக பாய்ந்து சென்று தன் தாயை கட்டிக்கொண்டால். தலை முதல் கால் வரை தாயை பார்வையால் வருடியவள். ஒன்றும் இல்லை என்று தெரியவும், அபியிடம் அம்மாக்கு என்ன ஆச்சு? என்று கேட்கவும், அபியும், பாரதியை விட மூன்று வயது தானே பெரியவன், வைஷ்ணவியை போல் அவனால் அவன் உணர்வை முகத்தில் மறைக்க தெரியவில்லை. பாரதியின் கையை பிடித்துக்கொண்டு ஓவென்று அழுது விட்டான் .அவன் ஒரு வருங்கால மருத்துவன், 22 வயது இளைஞன், என்பதையும் மறந்து அழுது கொண்டிருந்தான். .

இதைப் பார்த்திருந்த சுதா, வைஷ்ணவி இருவரும் அபியை சமாதானப்படுத்தினர். வைஷ்ணவி, சுதாவிடம் ரொம்ப நேரம் ஆச்சு கிளம்பு சுதா, என்னால உனக்கு ரொம்ப தொந்தரவு என்று சொல்லவும் அடி வாங்குவ வைஷ்ணவி என்ன பெரிய வார்த்தை எல்லாம் பேசுற இல்ல உங்க அத்தை திட்ட போறாங்க அண்ணா வேற வந்துட்டு இருப்பாரு நீ போ சுதா அபிய அழைச்சிட்டு போய் சமாதானப்படுத்தி தூங்க வை என்று சொல்லவும் மனமே இல்லாமல் இருவரும் சென்றனர்.

இங்க பாரதி, வைஷ்ணவி வைஷ்ணவி இடம் என்னாச்சும்மா? அபி ஏன் அப்படி அழுகிறான்? உண்மைய சொல்லு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதற்கு வைஷ்ணவி, பாரதியிடம் அம்மா சொல்றது ஞாபகம் வச்சுக்கோ பாரதி. எதற்காகவும், யாருக்காகவும், பயப்படக்கூடாது, அழக்கூடாது, நாளைக்கு இந்த அம்மாவே இல்லாமல் போனாலும், உன் படிப்பை ஒருநாள் நிறுத்தக்கூடாது. எந்த சூழ்நிலையிலும், ஒரு பொண்ணுக்கு படிப்பும், தைரியமும் தான் முக்கியம், நம்மகிட்ட இருக்க காசு, பணம், எல்லாம் நம்மள விட்டு ஒருநாள் போகலாம், ஆனா நம்ப படிப்பும், நம்ப வாழ்க்கையில ஜெயிப்போம், அப்படின்ற தைரியமும் நம்பிக்கையும்தான் முக்கியம். என்று சொல்லவும். அதெல்லாம் சரி இப்ப எதுக்கு? இதெல்லாம் என்கிட்ட சொல்ற? பாரதி கேட்கவும், அம்மா எது சொன்னாலும் அதுல ஒரு காரணம் இருக்கும்.

சரி வா முதல்ல ரெண்டு பேரும் சாப்பிடுவோம் என்று வைஷ்ணவி சொல்லிக்கொண்டே, தட்டில் சாதம் போட்டு, ரசம் ஊற்றி, துவையலும். வைத்து , சாதத்தை குனழய பிசைந்து , பாரதிக்கு ஊட்டிய வைஷ்ணவியின் மனதில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. என்னதான் தைரியமாக காட்டிக்கொண்டாலும், தன் 17 வயது மகளை, இந்த உலகத்தில், தனியாக போராடப் விட்டு செல்ல போகிறோமே,அதுவும் இல்லாமல், பாரதியுடன், வைஷ்ணவி வீட்டை விட்டு வெளியே வரும்போது, பாரதி தனக்கு பாரதி இருந்தால் இ ஆனால் பாரதிக்கு? அதுவுமில்லாமல் தன்னுடைய மூத்த மகனை ஒருமுறையாவது கண்ணால் கண்டு விட மாட்டோமா என்று ஏங்கி கொண்டிருந்த வைஷ்ணவிக்கு, அதற்கான வாய்ப்பு இனிமேலும் இல்லை என்று தெரிந்து விட்டிருந்தது.

எப்படியாவது தன் மகன், தன்னைத் தேடி வந்து விட மாட்டானா, அப்படி வந்துவிட்டால், அவன் கையில் ஒப்படைத்து விடலாம் . தான் வளர்ந்த விதத்தை, பாரதி வளர்ந்த, விதத்தையும், ஒப்பிட்டுப் பார்த்தார். தான் ஒரே பெண்ணாக, செல்வ மகளாக,தாயின், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தோம். ஆனால், என் பாரதி அந்த வயதிற்கு, உரிய நியாயமான கிடைக்கவேண்டிய, எதுவும் கிடைக்கவில்லை, ஆனால் ஒரு நாளும், அதை பற்றி ஒரு குறையாக சொன்னதுமில்லை,அவ்வளவு ஏன் ? அதை துளிக்கூட, முகத்தில் காட்டியதும் இல்லை, எதற்கும் என் பாரதி ஆசைப்பட்டதும் இல்லை்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top