வைரநெஞ்சம்-7

Pragathi Ganesh

Well-Known Member
பாரதி தன் கையிலிருக்கும் வைஷ்ணவியின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தவண்ணம் இருந்தாள் அழுது, அழுது சிவந்த முகம் மேலும் சிவந்து காணப்பட்டது. அவளால் இன்னும் தன் தாய் இறந்ததை ஆகிறதுநம்ப முடியவில்லை. ஆம், இன்றோடு வைஷ்ணவி இறந்து பத்து நாட்கள் ஆகிறது. தன் தாயின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன என்று இன்னும் அவளுக்கு புரியவில்லை, தெரியவில்லை. வைஷ்ணவி இத்தனை வருடம் உயிரோடு இருந்தது, மிகப்பெரிய ஆச்சரியம் ஒரு வேளை பாரதி காகவும், தன் மகனை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமா என்ற வைராக்கியத்தில் உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாரோ கடவுளுக்கே வெளிச்சம்.

பாரதிக்கு ஒன்று மட்டும் தெரியும், தான் தூங்கிய பிறகு வைஷ்ணவி, ஒரு புகைப்படத்தை பார்த்து, பார்த்து அழுது கொண்டிருப்பார். அந்த புகைப்படத்தில் வைஷ்ணவி தன் மூத்த மகன் ஆதித்யாவையும்,ஒரு வயது பாரதியையும் அனைத்து பிடித்தார் போல் இருக்கும் புகைப்படம். ஒன்று மட்டும் உறுதி அந்த புகைப்படத்தில் இருப்பது, தன்னுடைய அண்ணன் என்று மட்டும் தெரியும். ஆனால், ஒருநாளும் பாரதி வைஷ்ணவி இடம் இதுகுறித்து கேட்டதில்லை தனக்கு தெரிய வேண்டிய விஷயமாக இருந்தால் தந்தாயே தன்னிடம் சொல்லியிருப்பார் அதனால் அவள் எதுவும் கேட்டதில்லை.

பாரதியும், வைஷ்ணவியின் தாய், மகள் என்ற உறவையும் தாண்டி நல்ல தோழிகள். பாரதிக்கு தனக்கு சக தோழிகள் யாரும் இல்லை குறையே வந்ததில்லை. பாரதிக்கு மூன்று வயதாக இங்கு வந்ததிலிருந்து, ஒரு குழந்தைக்கு சமமாக குழந்தையோடு குழந்தையாக மாறி வைஷ்ணவி விளையாடுவது அவள் பெரிதாக யாரையும் தேடியதில்லை. பாரதி படிக்கும் வரை, வைஷ்ணவியும் உடன் விழித்திருப்பார், இப்படி பாரதியின் ஒவ்வொரு செயலிலும் வைஷ்ணவியின் பங்கு அபாரம் அவளுக்கு தந்தைக்கு தந்தையாக தாய்க்கு தாயாக தோழிக்கு தோழியாக இருந்தவர்.

பாரதிக்கு சிறுவயதிலிருந்தே, ஒரு பழக்கம் உண்டு, காலையில் பள்ளி சென்றது முதல், அவள் பார்த்தது, பேசியது தன் மனதில் தோன்றியது, தவறோ, சரியோ அனைத்தையும் தன் தாயிடம் சொல்லும் பழக்கம் உடையவள்.

சிறுவயதில் கூட படிக்கும் மாணவ, மாணவிகள், தன் தந்தையை குறித்து கேட்பதால், பாரதி யாரிடமும் நட்பு பாராட்டியது இல்லை, தன் தாயை தவிர்த்து சினேகம் என்று வரும்போது அபி, ஜனனி இடம் மட்டும் நட்பும் உண்டு.


வைஷ்ணவி எப்பொழுதும், பாரதியிடம் சொல்வதுண்டு படிக்கும் காலத்தில், உடை அலங்காரத்தில், கவனம் போனால் படிப்பில் அதற்காக ஏனோதானோ என்று உடுத்தவும் கூடாது. நாம் உடுத்தும் உடை, மற்றவர்களின் கண்களுக்கு உறுத்த கூடாது, ஆரோக்கியத்தில், அதிக கவனம் வேண்டும். அதேபோல், வாரத்திற்கு ஒரு வேளை, விரதமிருக்க சொல்லுவார், நாம் பட்டினியாக இருக்கும் பொழுதுதான், அடுத்தவரின் பசி புரியும், பொதுவாக நம் இந்திய கலாச்சாரத்தில், அனைத்து மதத்திலும் விரதம் ,நோன்பு நோன்பிற்கான காரணம் இதுதான்.
பாரதி என்னும் சிலையை செதுக்கும் சிற்பியாக வைஷ்ணவி இருந்தார் என்ன ஒன்று சிலை முழுதாக செதுக்கும் முன்பே அவர் உயிர் அவர் உடலை விட்டு பிரிந்துவிட்டது. பாரதியை விட்டு அல்ல.

பாரதி என்னும் உயிருள்ள சிலை செதுக்கும் பொறுப்பை காலத்தின் கையில் கொடுத்துவிட்டார் காலம் காலம் தன் கையில் ஒளியை வைத்துக் கொண்டு பாரதியைச் செதுக்க தயாராகிவிட்டது.
“உலி விழுவது வலி எனும்
கருதும் கற்கள் சிற்பம் ஆகா”

தன் தாயின் நினைவில் உலகம் மறந்து உட்கார்ந்து கொண்டிருந்தவள் வாசலில் நிழலாட திரும்பிப் பார்த்தால் அங்கு அன்புச்செழியன் கண்ணில் வலியுடன் நின்றுகொண்டு இருந்தான். பாரதியின் கண்களில் சிறு ஆச்சரியம் வந்துபோனது இருவரும் பத்து நாட்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்ந்தார்கள்.

(தொடரும்)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரகதி கணேஷ் டியர்

ஸ்டோரியே மறந்து போச்சு
இருங்க திரும்பவும் முதலிலேயிருந்து படிச்சுட்டு வர்றேன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement