வைரநெஞ்சம் 2

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
“இனியொரு விதி செய்வோம்

அதை எந்த நாளும் காப்போம்

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்”

பாரதி,,அபிமன்யுவிடம் நான் கொஞ்சம் “நோட்ஸ்” கேட்டேனே அபி சாயந்திரம் கிடைச்சிடும் பாரதி என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வைஷ்ணவி போதும் போதும் முதல்ல இரண்டு பேரும் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு இவருக்கும் இருவருக்கும் சூடாக இட்லியும், காரச் சட்னியும் தட்டில் போட்டு தர இருவரும் பேசியபடியே உண்டு முடித்தனர்.

பாரதிக்கு மதியத்திற்கு கட்டிக்கொடுத்த வைஷ்ணவி, தனக்கும் மதியத்திற்கு கட்டிக்கொண்டார். பாரதி இன்னைக்கு அம்மா வர கொஞ்சம் லேட் ஆகும் என்று சொல்லவும், அபிமன்யு வேகமாக எவ்ளோ டைம் ஆகும் னவஷிமா என்று கேட்ட அபிமன்யுவிடம் ஒன்பது மணி ஆகும் அபி சரி நான் வந்து கூப்பிடுகிறேன்.


நீங்க தனியாக வர வேண்டாம் என்று சொல்லவும் உனக்கு எதுக்கு கஷ்டமா அபி என்று சொன்ன வைஷ்ணவியிடம் ஆமா, நம்ம நடந்து தானே வர போறோம் எப்படியும் வண்டியில நீங்க வர மாட்டீங்க. அப்புறம் என்ன எனக்கும் இது ஒரு “சின்ன வாக்” வைஷ்ணவிக்கு தெரியும் இது தனக்காக சொல்வது என்று இதற்காக அபி தன் பாட்டியிடம் எவ்வளவு திட்டு விழும் இது வழக்கமாக நடப்பதுதான் இருந்தாலும் தனக்காக திட்டு வாங்குவதா நம்ம என்ன சொன்னாலும் இதற்குமேல் எடுபடாது என்று புரிந்துகொண்டு சரி எப்படி அபி என்று சொல்லிவிட்டார்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது போதே பாரதி தன்னுடைய புத்தகப்பை, மற்றும் சாப்பாடு அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே உட்கார்ந்து “சாக்ஸ்” அணிந்து கொண்டிருந்தாள் அப்போது சரியாக வந்தாள் அபியின் தங்கை ஜனனி.



பாரதி வீட்டின் உள்ளே திரும்பி அபி, ஜனனி வந்தாச்சு பாரு என்று சொல்லவும், அபியும் இதோ வந்துட்டேன் என்று சொல்வதற்கும் ஜனனி பாரதியின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள். பாரதி ஜனனியிடம் “யூனிஃபார்ம்” அழுக்காகி விடும், இரு சேர் போடுறேன் என்று சொல்லவும்.

நீயும், கீழே தானே உட்கார்ந்து இருக்க நானும் இங்கேயே உட்காந்துக்கறேன்.


பாரதியின் “குதிகால்கள்” “சாக்ஸ்” அணிந்தும் வெளியே தெரிய அதற்கு மேலேயே “ஷூவும்” அணிந்துகொண்டாள். ஜனனி “பாலீஷ்” போட்டு பளபளவென்று மின்னிய தன் “ஷூவை” பார்த்துக் கொண்டாள். தன் “யூனிஃபார்ம்” புதிதாக இருந்தது பாரதியின் “யூனிஃபார்ம்” நிறம் மங்கி இருந்தது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இதை ஜனனி வெளியே காட்டிக்கொள்ளவில்லை, வெளியே காட்டிக் கொண்டால் பாரதிக்கு மிகுந்த கோபம் வரும், சுயமரியாதை பார்ப்பவள், பாரதி என்பதால் தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டாள்.


ஆனால், பாரதியும் அதற்கு துளியும் வருத்தம் எதுவும் இல்லை, நான் இப்படித்தான் இப்படியே, என்னை ஏற்றுக் கொள்பவர்கள் என்னிடம் வந்து பேசுங்கள் இல்லையா உங்கள் வழியே பார்த்துக் கொள்ளுங்கள் நானும் என்னும் மனோபாவம்.

“வறுமை வாழ்க்கையில் இருக்கலாம்

புத்தியில் இருக்கக் கூடாது”

என்ற கோட்பாடு உடையவள். .


பாரதி தன் புத்தகப் பையுடன் கிளம்ப, ஜனனி கிளம்ப இன்னும் அரை மணி நேரம் ஆகும். பாரதி நடந்து செல்ல வேண்டும் ஜனனி காரில் செல்வாள், பாரதி தன் அம்மா, அபி, ஜனனியிடம் சொல்லிக்கொண்டு வேகமாக கிளம்பி விட்டாள்.


பாரதி செல்லும் வழியில் ஒரு 5 வயது சிறுமி பாரதியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தது. பாரதியும் தன் பையில் இருக்கும் “டிபன் பொட்டலத்தை” எடுத்து அந்த சிறுமியிடம் கொடுத்தாள். ரொம்ப நேரம் ஆச்சா பாப்பா என்று பாரதி கேட்கவும் இல்லக்கா இப்பதான் வந்தேன், சீக்கிரம் கெளம்பு பாப்பா ஸ்கூலுக்கு போகணும் இல்ல என்று சொல்லவும். சரிக்கா என்று சொல்லிவிட்டு அந்த சிறுமி சென்றுவிட்டது..


பாரதி இந்த சிறுமிக்கு, டிபன் தருவதும், அந்த சிறுமி வாங்கிக் கொள்வதும், சில மாதங்களாக பழக்கம், ஒரு நாள் பாரதி இந்த வழியாக சென்று கொண்டிருக்கும்போது சிறுமி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது. பாரதி பக்கத்தில் சென்று என்ன ஆச்சு பாப்பா? என்று கேட்கவும். அதற்கு அந்த சிறுமி பசிக்குது என்று சொல்லவும், மதியம் “ஸ்கூல்ல” சாப்பாடு தருவாங்க காலையில பசிக்குது என்று சொல்லவும் தன் கையில் இருக்கும் சாப்பாடை தந்தவள் நாளையிலிருந்து இதே இதே நேரத்துக்கு இங்க வா அக்கா உனக்கு டிபன் கொண்டு வரேன் என்று சொன்னவள் மனதில் தோன்றியது

“கொடிது கொடிது வறுமை கொடிது

அதிலும் இளமையில் கொடிது வறுமை”


அன்றிலிருந்து இந்த பழக்கம் தினமும் தொடர்கிறது இதை தூரத்திலிருந்து காரில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு உருவம் வழக்கம்போல் அதன் “பிரம்மிப்பு” நீங்காமல் பார்த்துக்கொண்டிருந்தது எப்படி இது பாரதிக்கு


பழக்கமோ அதேபோல் பார்த்துக்கொண்டிருந்த உருவத்திற்கும் இது பழக்கம்.


அங்கு வீட்டிற்குள் நுழைந்த அபியை, பங்களாவே அங்கு அதிரும்படி வடிவுக்கரசி உனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியவில்லை அபி “ராஜா வீட்டு பையன்டா” நீ போயும் போயும் ஒரு பிச்சைக்காரி வீட்ல தினமும் சாப்பிட்டு வரே நம்ம வீட்ல டெய்லி மூணு வேளையும் 50 பேருக்கு சாப்பாடு போடுறேன்.

என்ன இல்லன்னு? அங்க போய் சாப்பிட்டுட்டு இருக்க என் மானத்தை வாங்க இப்படி செய்றியா, அன்னைக்கு படிச்சு படிச்சு சொன்ன உங்க அம்மாகிட்ட, அந்த வைஷ்ணவியை வீட்ல ஏத்தாத, இன்னைக்கு பாரு நீ என்னடான்னா காலையில அங்க போறதும், இந்த சின்ன குட்டி உன்னை கூட்டிட்டு வரேன்னு, அங்கு வந்து உட்கார்ந்து கருதும் பத்தாததுக்கு உங்க அம்மா சாயந்திரம் வந்து அங்கு போய் உட்கார்ந்து இருக்கா எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா.


இப்படி நீங்க செஞ்சா இந்த வீட்டில் வேலை செய்றவங்க ஒருத்தரும் நம்பல மதிக்க மாட்டாங். அதற்கு அபி அவங்க ஒன்னும் வேலைக்காரர்கள் இல்லை, அம்மாவோட “ஃப்ரெண்ட்“ எனக்கு அம்மாவும், னவஷிமா ஒன்னு தான். என்று சொல்லவும், இதுக்குத்தான் அங்க போக வேணாம்னு சொன்னேன். அவளால நம்ம வீட்ல தனபடி தினப்படி சண்டை வருது.


இது எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், அபி தன் பாட்டியிடம் இன்னொரு விஷயம், பாட்டி இன்னொருவாட்டி அவங்களே பிச்சைக்காரி அப்படின்னு சொல்லாதீங்க. நான் “டெய்லி அங்க போய் தான் சாப்புடுறேன் அப்ப என்னையும் பிச்சைக்காரன் சொல்லுவீங்களா”? அதுவுமில்லாம அவங்க ஒன்னும் நம்மகிட்ட வேலை பார்க்கல என்று சொல்லவும் அபி என்று பெருங்குரலெடுத்து கத்தியவர். பின்பு அமைதியாகி நாளைக்கு நாளைக்கு உன் பெரிய அத்தை, சின்னத்தை, மாமா அவங்க பசங்க, அன்பு, திவ்யா, ஷாம், சித்ரா எல்லாரும் வராங்க என்று சொல்லவும் சரி என்று கேட்டுக் கொண்டவன் உள்ளே சென்று விட்டான்.


உள்ளே சென்றவன், தன் அம்மா சுதாவிடம், என்னம்மா? எல்லாரும் வராங்க போல, இருக்கு பெரிய அத்தை, அன்பு அத்தான், திவ்யா ஓகே.


ஆனா எனக்கு சின்னத்தையும், அவங்க பசங்களையும் பிடிக்கவே இல்லை. அப்படியே பாட்டி குணம் என்று சொல்லவும். அதற்கு சுதா ரொம்ப பாட்டிய எதிர்த்து பேசாத அபி, இதனால உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, பாரதிக்கு தான் பிரச்சனை, அதற்கு அபி என்ன என்ன செய்திடுவார்கள் நான் இருக்கும் போது என்று பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அம்மாவின் சொல்லை கேட்டு இருக்கலாமோ?....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top