வெக்கை பூமணி நாவலும், அசுரன் படமும்

Advertisement

jesypreethi

New Member
காட்சி சினிமா டெக்னிக்கல் விஷயங்கள் தாண்டி இந்த அசுரன் படத்தை ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம்...

இரண்டு காட்சிகளை சொல்லி ஆக வேண்டும்...

இளம்பெண்ணின் தலையில் செருப்பு வைத்து நடத்தி கூட்டி வரும் போது பார்த்து பேசாமல் இருந்த கூட்டமும்... இளைஞனை பலர் அடிக்கும் போது வேடிக்கை பார்த்துவிட்டு இறுதியாக நாம அப்படியா பழகுறோம் என சப்ப கட்டு கட்டும் பெரியவரும் தான் கிட்டத்தட்ட இந்த சமூகத்தில் பெரும்பாலானவர்கள்...

சாதி கொடுமை நடக்கும் போதே அதை கண்டிக்க மறந்தவர்கள் க்கு தான் இந்தப்படம் சமர்ப்பணம் ‌..

சில காலம் முன்பு, கீழ்வெண்மனியில் சாதியின் பெயரில் குடிசைகள் எரித்து கொலை செய்தபோது... வாச்சாத்தி யில் மக்கள் கொலை செய்யப்பட்ட போது... தீண்டாமை தலை விரித்து ஆடிய போது... இக்காலத்தில்... சமீபத்தில் சாதியின் பெயரில் கற்பழிப்புகள் நடக்கிற போது...ஆணவ கொலை நடக்கும் போது...உங்கள் உற்றார் உறவினர் சாதியின் பெயரில் வசை பாடிய போது... யாருக்கோ எதுக்கோ என இருக்கும் மக்களை தான் ஓங்கி அறைகிறான் இந்த அசுரன்.

"ஒரே நிலத்துல இருக்கோம்...ஒரே மொழி பேசுறோம்....நாம ஒத்துமையா இருக்க முடியாதா ன்னு " கேள்வி கேட்கிறான் இந்த அசுரன்

பிரிவினை உண்டாக்குகிறான் அசுரன் என உளறுவோர் க்கு.. சிவசாமி சொல்லும் இந்த வார்த்தை சமர்ப்பணம்

" நல்லா படி.. படிச்சு அதிகாரத்துக்கு வா...வந்து உனக்கு நடந்த கொடுமை மாதிரி யாருக்கும் நடக்காம பார்த்துக்கோ.."

இதை விட வேறெப்படிங்க சொல்ல முடியும்??

இந்த படம் பூமணியின் 'வெக்கை' நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த் புத்தகம் இப்போது அமேசான் கிண்டிலில் வெறும் 39 ரூபாய்க்கு கிடைக்கிறது
கண்டிப்பாக வாங்கி படியுங்கள்: https://amzn.to/30S3CYh
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top