வீரமாகாளி -8

Advertisement

அனைத்து மாணவிகளையும் விஜயன் காரில் அழைத்துக் கொண்டு அவர்கள் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்ட பிறகு தான் இவன் வீடு போய்ச் சேர்ந்தான்.வீட்டுக்குள் சென்றவன் நேரே தன் அறைக்குச் சென்று குளித்து விட்டு லுங்கியும் டீசர்ட்டும் மாத்திட்டு கீழே இறங்கி வந்து தன் வீட்டுக்குப் போன் பண்ணிணான்.அண்ணியிடம் எப்படி இருக்கிறீங்க அண்ணி.டாக்டர் என்ன சொன்னாங்கனு கேட்டான்.எல்லாரும் நல்லா இருக்கேன்.இந்த மாதக் கடைசியில் குழந்தை பிறந்திடும்னு சொல்லி இருக்காங்க.அப்படியா அண்ணி.உடம்பைப் பார்த்துக்கோங்கனு சொல்லிட்டு காஞ்சனா எங்கே அண்ணினு கேட்டான்.காஞ்சனா போனை வாங்கி எப்படி இருக்கீங்க அண்ணா என்றாள்.நல்லா இருக்கேன்மா.நீ எப்படி இருக்கேனு கேட்டான்.நான் நல்லா இருக்கேன் அண்ணா.உங்க படிப்பெல்லாம் எப்படி இருக்கு.எல்லாம் நல்லா இருக்கும்மா.கொஞ்ச நாளைக்கு நான் அடிக்கடி போன் பண்ண முடியுதுமா என்றான்.ஏண்ணே என்ன விசயம்.இல்லைம்மா இங்கே காலேஜில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கல்ச்சுரல் ப்ரோக்கிராம் எங்க காலேஜில் நடக்கிறது.மாணவர் தலைவன் என்பதால் எனக்குப் பொறுப்பு ஜாஸ்திமா என்றான்.

அண்ணியிடமும் இந்த விசயத்தை சொல்லி திடீர்னு குழந்தை பிறந்தால் கூட என்னால் வர முடியாது அண்ணி.அண்ணண் எங்கே அண்ணி.அவர் இன்னும் வரலைப்பானு சொல்லிட்டு இருக்கும் போதே வீர மார்த்தாண்டன் வந்து விட்டான். போனிலே யார் என்று கேட்டான்.விஜயன்தாங்க மாமா என்றாள் மனோ.இங்கே குடு நான் பேசுறேனு சொல்லி போனை வாங்கினான்.வணக்கம் அண்ணே.எப்படி இருக்கீங்க அண்ணே என்றான்.ம்ம் இங்கே நல்லா இருக்கோம்.அங்கே நீ எப்படி இருக்கே என்றான் வீர மார்த்தாண்டன்.ம்ம் நல்லா இருக்கேண்ணே.இங்கே நான் படிக்கிற காலேஜிலே விளையாட்டுப் போட்டிகள் பாட்டு நடனம் கவிதை ஓவியம் போட்டிகள் தமிழ் நாடு அளவில் இங்கே நடக்குது அண்ணே.அதான் அண்ணிக்குக் குழந்தை பிறந்தால் கூட உடனே வர முடியாதுனு சொல்றதுக்குத் தான் போன் பண்ணிணேன்.

அப்படியா சரி சரி எல்லாத்துலேயும் கலந்துக்கிட்டு அது என்னமோ கொடுப்பாங்களே அதெல்லாம் வாங்கிட்டு வந்து நம்ம ஊருக்குப் பெருமைப்படுத்து என்றான்.சரிண்ணே என்றான் இரு இரு பணம் அதிகம் வேணுமா.ஆமாண்ணேனு கல்லூரியில் நடந்ததை சொல்லி முடித்தான்.நல்ல விசயம் தானே சொல்லிப் பணம் கேட்கிறே.நாளைக்கே உனக்கு ஒரு இலட்ச ரூபாய் பேங்கிலே நம்ம கணக்குப் பிள்ளையைப் போடச் சொல்றேன் என்றான்.சரிண்ணே வைக்கிறேனு சொல்லி போனை வைத்தான்.

ஐயா ஊர்லே எல்லாரும் நல்லா இருக்கிறாங்கலாமா.ம்ம் அங்கே எல்லாரும் நல்லா இருக்காங்கலாம்.அம்மாவுக்கு எப்போயா குழந்தை பிறக்கும்னு சொன்னாங்களா ஐயா.ஆமாம் வள்ளி இந்த மாதக் கடைசியிலே பிறந்திடுமாம் அப்படினு சொன்னான்.அப்புறம் டீவியைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஐயா இராத்திரிக்கு என்ன செய்யட்டும் என்று வள்ளி கேட்டாள்.பழைய சோறு இருக்கா வள்ளி.இல்லை ஐயா மாவு இருக்கு தோசை ஊத்தித் தரவா ஐயா.இல்லை வள்ளி சோறு வடிச்சு எதாவது குழம்பு பொறியல் வைச்சுக் கொடுனான்.முட்டைக் குழம்பு வைச்சிடவா ஐயா.ம்ம் சரி வள்ளினு டிவியைப் பார்த்துக்கிட்டு இருந்தான்.முத்து தங்கவேலுக்கிட்டே கல்லூரியில் நடந்தது எல்லாம் சொன்னான்.சொன்னான் என்பதை விட ஆச்சரியத்துடனும் மரியாதையோடும் சொன்னான்.நிஜமாவாடா சொல்றே.ஆமா மச்சான் சத்தியமா சொல்றேன்.எனக்கு இன்னும் அந்தப் பிரமிப்பில் இருந்து வர முடியலை மச்சான்.நான் ஒரு நாளைக்குப் போய்ப் பார்க்கனும்டா.அது சீக்கிரமே நிறைவேறும் மச்சான்.

நம்மளை சின்ன ஐயா கண்டிப்பா கூட்டிட்டுப் போவாருனு சொன்னான்.அதற்கிடையே போன் வந்தது.விஜயன் எழுந்திருச்சு போனை எடுத்தான்.அந்தப் பக்கமிருந்து விஜய் நீங்க கொடுத்த உங்க நண்பர்கள் பற்றிக் கல்லூரியில் விசாரிச்சுட்டேன்.நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசனும் நான் அங்கே வரலாமானு கேட்டார்.இதென்ன சார் கேள்வி தாராளமா வாங்க சார்.நீங்க எப்போ வேணாலும் வரலாம்.நீங்கை வரச் சொன்னாலும் நான் வருவேன் சார்னு சொன்னான்.சரி நான் கிளம்பி வருகிறேன்.சார் உங்களுக்கு சாப்பாடு டிபனா ரைசா சார் என்று கேட்டான்.எனக்கு எப்போவும் இராத்திரி டிபன் தான் விஜய். சரி சார் வாங்க நான் வாசலில் நிற்கிறேனு சொல்லி போனை வைச்சான்.

வள்ளி வள்ளினு கூப்பிட்டான் என்னங்க ஐயா.என்ன வேணும் ஐயா.வீட்டிலே மாவு இருக்கா என்றான்.இருக்கு ஐயா.முதல்லே இந்த ஐயாவை விடு எரிச்சலா இருக்குனு கத்தினான்.எப்புடி கூப்பிடச் சொல்றீங்க.பேர் சொல்லியே கூப்பிடு.என் ப்ரண்ட்ஸ்லாம் கேலி பண்றானுகனு சொன்னான்.சரி மாவு இருக்கா இருக்கு ஐயா.அப்போ இட்டிலி அவிச்சு நீ எப்போவும் வைப்பியே சட்டினி அதை வைச்சு சாம்பார் வைச்சிடுனு சொல்லிட்டு சோறு நிறைய இருந்தால் தண்ணீர் ஊத்தி வைச்சுடு. நாளைக்கு சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிட்டு விடு விடுவென வாசல் கேட்டைத் திறந்து வைச்சிட்டு நின்றான்.கொஞ்ச நேரத்திலேயே கமிசனர் வந்து விட்டார்.வாங்க சார்னு கூப்பிட்டு உள்ளே போனான்.

சார் எதாவது குடிக்கிறீங்களா என்றான்.ஒன்னும் வேணாம் விஜய்.இங்கேயே பேசலாமா இல்லைனா உன் அறைக்குப் போகலாமானு கேட்டார்.அப்படிலாம் ஒன்னும் இல்லை சார்.இங்கே இருக்கிறவங்க நம்பிக்கையான ஆள்கள் தான் சார்.சொல்ல வந்ததைச் சொல்லுங்க சார்னு சொன்னான்.நீங்க கொடுத்த உங்கள் நண்பர்களின் பெயர்களை வைத்து அவங்க படிக்கும் கல்லூரியில் விசாரிச்சுட்டேன்.அனைத்து கல்லூரி முதல்வர்களிடம் பேசினேன்.அருமையான பசங்கனு சொன்னார்கள்.அவர்களை உடனே அனுப்பி வைக்க சொல்லியிருக்கேன்.

அப்புறம் நீங்க ஒரு கேள்வி கேட்டீங்களே.ஏன் சார் அவனை ஒன்னும் பண்ண முடியலையானு.எங்க டிப்பார்ட்மென்ட்டிலேயும் சில கருப்பாடுகள் இருக்கு.இவனுக போடுற எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு இந்த மாதிரி கேவலமான வேலைகளைச் செய்யுறாங்க.அதுனாலே தான் நாங்க சமர்ப்பித்த அத்தனையும் போலினு யார் யார் உண்மையான ரிப்போர்ட் கொடுத்தாங்களோ அவங்களுடைய குடும்பத்தைக் காரணம் காட்டி மிரட்டி அவ்வளவும் பொய்யுனு நிருபிச்சிட்டாங்க.ஒன்னுமே செய்ய முடியலை.இப்போ அவனுடைய ஆட்டம் அதிகமா இருக்கு.தன் கண்ணிலே எதையாவது பார்த்து ஆசைப் பட்டானா அதை உடனே அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துடனும்.இதுனாலே நிறையப் பெண்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.சிலரை அவன் ஆசையைத் தீர்த்துட்டு கொன்று தூக்கி எறிஞ்சிடுவான்.சில பெண்களின் பெற்றோர் தாங்கள் ஆசை ஆசையா பெத்து வளர்த்து படிக்க வைச்சு அழகு பார்த்து ஆயிரம் கனவுகளோட பெற்றோரும் அந்தப் பெண்ணும் ஆசைப்பட அது அத்தனையும் கனவாகி மானமா சாவானு நினைச்சு மானம் தான் பெரிசுனு ஒரே நாளிலே தன் பெண்ணுக்கு விசத்தைக் கலந்து கொடுத்து கொன்றவர்களும் இருக்காங்க.என் சகோதரி பொண்ணையும் அப்படித் தான் கொன்றாள்.இப்போ பைத்தியமாகி தன் அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கா.

கஞ்சா அபின் ஆயுதம் கொலை கொள்ளைனு பெண்களைக் கடத்துறதுனு எவ்வளவோ பண்ணிட்டுறுக்கான்.நாங்க கையைக் கட்டிக்கிட்டு வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கு.இப்போ உங்க கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு அவனும் அவன் நண்பர்களும் வருவதாக நியூஸ் வந்திருக்கு.எங்களாலே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கோம்.இப்போ என்ன செய்றதுனு தெரியலைனு சொன்னாரு.சரி சார் நீங்க எதுவும் செய்ய வேண்டாம்.வழக்கமா கொடுக்கிற புரடக்சனைக் கொடுங்க.ஆனால் என்ன நடந்தாலும் நீங்க கண்டுக்கக் கூடாது.நீங்கனு நான் சொல்ற மொத்த டிப்பார்ட்மென்ட்டையும் தான் சொல்றேன்.அதோட அந்த எலும்புத் துண்டு பொருக்கிற நாய்களையும் அனுப்புங்க.மற்றதுலாம் நாங்க பார்த்துக்கிறோம் சார்.எப்படி முடியும் விஜய்.சிம்பில் சார் நான் எங்க பசங்களை எதுக்கு வரச் சொல்றேன்.இவனுக்கு ஒரு முடிவு கட்டத் தான் வரச் சொல்லியிருக்கேன்.அவனும் அவன் ஆட்களும் வரட்டும் சார்.நான் இதைத் தான் எதிர் பார்த்தேன்.லட்டு மாதிரி கையிலே கொடுத்துட்டீங்க.இனி நான் பார்த்துக்கிறேன்.

வாங்க சார் சாப்பிடலாம்னு கூட்டிட்டுப் போனான்.நீ என்ன செய்யப் போறே விஜய்.ஏதாவது ஏடாகூடாமா ஆயிடாதே.அதெல்லாம் ஒன்னும் இல்லை சார்.உங்களுக்கு நம்பிக்கையான ஆட்களை மட்டும் பாதுகாப்புக்கு அனுப்புங்க சார்.அப்படி நான் அனுப்புனா அந்த கருப்பு ஆடுகள் அவனுகளை எச்சரிக்கை செஞ்சிடுவாங்க விஜய்.சார் குழம்புன குட்டையிலே தான் சார் மீன் பிடிக்க முடியும்.நீங்க ஏன் சார் குழப்பமாகிறீங்க.அந்த ஆடுகளை வாட்ச் பண்ண என் நண்பர்கள் இருக்காங்க.ஆனால் கொலையே நடந்தாலும் நீங்க மௌனமாத் தான் இருக்கனும்.தெரியாதது போல நடந்துக்கோங்க சார்.என் கல்லூரி நிர்வாகம் என்னை நம்பி பொறுப்பைக் கொடுத்திருக்காங்க.நான் அந்த நம்பிக்கையை உடைக்க விரும்பலை சார்.எல்லாம் நல்லபடி நடக்கும்.நாளையிலிருந்தே மாணவர்கள் வரஆரம்பிச்சிடுவாங்க.நாளைக்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுங்க.சார் என்னிடம் இன்னொரு ஐடியாவும் இருக்கு.இந்தப் ப்ரோகிராம் முடியுற வரைக்கும் எங்களை போலீஸ் மாதிரிக் காட்டுனா என்ன சார்.அது எப்படி விஜய் முடியும்.தேர்வு எழுதாம பயிற்சியிலே கலந்துக்காமல் எப்படி போலீஸ் ஆக முடியும்.நாங்க உண்மையான போலீசுக்கான ஐடியா கேட்கிறோம். போலி ஐடி கார்டு தானே கேட்கிறோம்னு சொன்னான்.

அதெல்லாம் ரிஸ்க் விஜய்.உள்துறை அமைச்சருக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.சரி சார் நான் சொன்ன மாதிரியே செய்யுங்க என்றான்.சரி விஜய் உள்துறை அமைச்சரிடம் கேட்டுவிட்டு நாளைக்கு நானே வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பினார்.சரி சார் என்று கூறி வாசல் கேட் வரை வந்து வழி அனுப்பி வைத்தான்.தங்கவேலு முத்து என்று கூப்பிட்டான்.என்னங்க ஐயா என்றனர்.நமக்கு நம்பகமான ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டான்.பணத்துக்கோ தண்ணீ பொம்பளைனு எதுக்கும் மயங்காதவங்களா இருக்கனும்.அப்படி நம்பகமான ஆட்கள் வேணும்.கிடைப்பாங்களா என்று கேட்டான்.கண்டிப்பா ஐயா நமக்குத் தெரிஞ்சவங்க நிறைய இருக்காங்க என்று சொன்னான். சரி நாளைக்குக் காலேஜிலே பேசிட்டு சொல்றேன் என்று கூறினான்.

மறு நாள் கல்லூரிக்கு சீக்கிரமாகவே சென்றான்.அங்கங்கு இருந்த மரங்களின் நிழலில் மேஜை நாற்காலி போடப் பட்டு அவரவர் நோட்டு பேனாவுடன் உட்கார வைக்கப் பட்டார்கள்.விஜயன் அருண் சங்கர் மூவரும் ஆளுக்கொரு நோட்டு பேனாவுடன் தங்கள் காலேஜில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்று குறித்துக் கொண்டு இருந்தார்கள்.வருகின்ற மாணவர்களுக்குக் குடிக்க லெமன் ஜூஸ் காபி டீ என வைக்கப்பட்டு அங்கங்கு மாணவர்களும் மாணவிகளும் நிற்க வைக்கப் பட்டனர்.யாரும் கிண்டல் பண்ணிணால் அதைக் கண்டுக்காம உங்க வேலையைப் பாருங்க.ரொம்ப பிரச்சனைனா இந்த விசிலை ஊதுங்க.உடனடியாக அங்கு போலீசோ பேராசிரியர்களோ நாங்களோ அங்கே இருப்போம். சரியா எதுக்கும் பயப்பட வேண்டாம் என்று கூறினான்.

இதற்கிடையில் கமிசனர் நிர்வாகி வந்ததால் அவர்களையும் பார்க்கச் சென்றார்கள்.அவர்களுக்குக் குடிக்க காபி கொண்டு வந்து கொடுக்கப் பட்டது.பேராசிரியர்கள் நிர்வாகி கரஸ்பான்டன்ட் பிரின்சிப்பால் அனைவரும் ஒரு விதப் பதட்டத்தோடே இருந்தனர்.கமிசனர் ஒரு கவரை எடுத்து நிர்வாகியிடம் கொடுத்தார்.அவர் வாங்கிப் படித்துவிட்டு மற்றவர்களிடம் கொடுத்தார்.அனைவருக்கும் முகம் கொள்ளா சந்தோசம்.கடைசியில் விஜயனிடம் கொடுக்கப்பட்டது.வாங்கிப் படித்தவன் அதிர்ச்சியாகி நின்றான்.
 

banumathi jayaraman

Well-Known Member
அய்யய்யோ அந்த வீணாப் போன வில்லன் திரும்பவும் வர்றானா?
நிர்வாகியின் பேத்தியைக் கொன்றவனை விஜயன் தண்டிப்பானா?
போலீஸ் கருப்பு ஆடுகளையும் வேரறுப்பானா?
அந்த கவரில் என்ன இருந்தது?
எல்லோருக்கும் சந்தோஷம் விஜயனுக்கு மட்டும் ஏன் அதிர்ச்சி?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top