வீரமாகாளி 8

Advertisement

மதிய உணவு இடை வேளை முடிந்து அனைவரும் அவரவர் வகுப்பில் நுழைந்தனர்.பேராசிரியர் வந்து அனைவரையும் கலைஅரங்கில் கூடுமாறு கூறினார்.அனைவரும் கலை அரங்கில் கூடினார்கள்.அவரவர் நாற்காலிகளை எடுத்துப் போட்டு அமர்ந்தனர்.பிரின்ஸிப்பல் வந்து மைக்கைப் பிடித்துப் பேசினார்.உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசமான விசயம்.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நம் கல்லூரியில் மாநில அளவிலான ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் ப்ரோகிராம் நடைபெற இருக்கிறது.எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையைக் கூறி அதிலிருந்து எத்தனையோ முறை அழைப்பு வந்தும் கூட நிர்வாகி மறுத்து விட்டார்.காரணம் மாணவ மாணவிகளுக்குள் எப்போதும் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருந்ததால் இதைத் தவிர்த்து விட்டார்.ஆனால் விஜயன் நம் கல்லூரிக்கு வந்த பிறகு எந்தப் பிரச்சனையும் இல்லை.இது வரை என் காதுக்கு சின்ன பிரச்சனை கூட எட்டியது இல்லை.

அதனால் தான் இந்த தடவை கவுன்சிலர் மீட்டிங்கில் கேட்டதும் நிர்வாகியைப் போய்ப் பார்த்து பேசினேன்.அவரும் வந்து ஒரு வாரம் கல்லூரியில் முழு நேரமும் இருந்து பார்த்துத் தான் சம்மதித்தார்.அதனால் அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து நம் கல்லூரி மாணவிகளையும் பிற கல்லூரி மாணவிகளின் நலத்தையும் கருத்தில் கொண்டு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் செய்து கொடுக்கும் படி நிர்வாகியும் கேட்டுக் கொண்டார்.நானும் கேட்டுக் கொள்கிறேன்.ஏன் சார் இதை நிர்வாகியே வந்து நேரில் சொல்லி இருக்கலாமே என்றான் ஒருத்தன்.அதற்கு அவர் நேரில் வந்திருப்பார் தான்.ஆனால் ஒரு வாரம் இங்கே வந்து போனதிலேயே அவர் பேத்தியும் நிஷாந்தியும் இறந்த இடத்தைக் கண்டவுடனே அந்த இடத்தில் அமர்ந்து அழுதார்.பேராசிரியர்கள் ப்யூ வாட்ச்மேன் இவர்கள் பார்த்து அவரை அறைக்கு அழைத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது.அவரும் மனிதர் தானேனு கேட்டார்.சாரி சார் நான் ஏதோ ஒரு வேகத்திலே கேட்டுட்டேன்.எல்லாருக்கும் சாரிப்பா.ஏன் சார் அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா.ம்ம்ஆமாப்பா.அதெல்லாம் முடிஞ்சு போன கதை.இப்போ நடக்க வேண்டியதைப் பாருங்க.சார் இன்னும் ஒரு கேள்வி.என்னப்பா இறந்து போன இன்னொரு பொண்ணு யாரு சார்.அவர் மிஸ்டர்.திருநாவுக்கரசு மகள் என்றார்.

விஜயனுக்குமே அது புதுச் செய்தி என்பதால் அதிர்ந்து போய் அப்படியே சிலை போல் இருக்க அந்த பரிதாபத்துக்குரிய நபரோ குலுங்கிக் குலுங்கி அழுதார்.மாணவிகள் தான் கதறி விட்டனர்.மாணவர்கள் கண்களிலும் கண்ணீர் வந்தாலும் தங்களைத் திடப்படுத்திக் கொண்டனர்.விஜயன் சுய நினைவு அடைந்து மேடையை நோக்கி ஓடினான்.அதற்குள் மற்ற ஆசிரியர்கள் அவரைத் திடப் படுத்த தண்ணீர் பாட்டிலுடன் ராணி ஓடி வர அவர் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மாத்திரையை எடுத்துக் கொடுத்து தண்ணீரை நீட்டினான்.அவரும் அந்த மாத்திரையைப் போட்டு தண்ணீரைக் குடித்தார்.அதற்குள் அருண் சென்று சர்க்கரை அதிகமாகப் போட்ட டீயைக் கொண்டு வந்து கொடுத்தான்.அதைக் குடிக்க வைத்து சேரில் அமர வைத்தனர்.பின் விஜயன் மாணவ மாணவிகளிடம் இது நமக்கு சவாலான கட்டம்.இதில் எந்தப் பிரச்சணையும் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உங்களுக்குப் பிடித்தவர்கள் மீது சத்தியம் செய்யுங்கள் என்றான்.எட்டு பேர் கொண்ட குழுவை நீங்களே தேர்வு செய்யுங்கள்.அதில் ஜூனியர் சீனியர் என இருபாலரும் சமமாக இருக்க வேண்டும்.அதில் தலைவர் உப தலைவர் எனப் பிரித்துக் கொள்ளுங்கள்.

அனைவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் கொடுக்கப்பட்டது.இதில்உங்கள் குழுவில் உள்ளவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுங்கள்.தலைவர் உப தலைவர் பெயரையும் குறித்துக் கொள்ளுங்கள்.அடுத்து யார் எந்த பொறுப்பை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு துறைக்கும் அந்தத் துறையில் உள்ளவர்களின் பெயர்களைத் குழுப் பெயராக வைக்கவும்.ஏனென்றால் எந்த நேரத்திலும் அந்தப் பெயரை நியாபகம் வைத்துக் கொள்ள முடியும்.என்னுடன் இருப்பவர்கள் நம்ம கல்லூரி மாணவ மாணவிகள் எதில் கலந்து கொள்கிறார்கள் என்பதைக் குறித்துக் கொள்வோம்.உங்களிடம் உள்ள ஒரிஜினல் பேப்பரை எங்களுக்கு ஒரு காப்பி கொடுத்திடனும்.போட்டிகளில் கலந்து கொள்வோர் பயிற்சிக்குச் செல்லும் போது மற்றவர்கள் உங்களுக்கான வேலையைத் தொடருங்கள்.

கடைசியாக மாணவ மாணவிகளுக்கு ஒரு எச்சரிக்கை.எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவிகள் தனியே செல்ல வேண்டாம்.நாலைந்து பேராகச் சென்றால் கூட உங்க குழுவில் உள்ள மாணவர்களிடம் சொல்லி விட்டு செல்லுங்கள்.பொறுமையைக் கையாளுங்கள்.இந்த ப்ரோகிராம் முடிந்தவுடன் உங்கள் அனைவருக்கும் என் வீட்டில் விருந்து என்றான்.அது முடிந்த அடுத்த பதினைந்து நாளில் என்னுடைய செலவில் சுற்றுலா செல்லலாம் என்றான்.எங்கே போவது என்று நீங்கள் கலந்து பேசி முடிவு சொல்லுங்கள்.முதலில் இந்த ப்ரோகிராமை வெற்றிகரமாக நடத்தித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முடித்தான்.அனைவரும் விசிலடித்தும் டான்ஸ் ஆடிப் பாடிக் கொண்டு ரொம்ப தேங்க்ஸ் அண்ணா தலைவானு கத்துனாங்க.மாணவிகளிடம் ஏதாவது சில்மிசம் செய்கிறார்கள் என்றால் அந்தக் குழு மாணவர்கள் தான் பொறுப்புனு இருக்காமல் மற்ற குழு மாணவர்களும் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.பிரின்ஸ்ப்பால் அறைக்குச் சென்று லெட்டரை வாங்கிக் கொண்டுவீட்டிற்கு போன் பண்ணி முத்து பெரிய காரை எடுத்துட்டு உடனே காலேஜூக்கு வா என்றான்.அப்போது கொஞ்ச மாணவர்கள் மாணவிகள் வந்து நின்றனர்.என்ன விசயம் என்று கேட்டார் பிரின்ஸி.சார் நாங்கலாம் NSS NCC லே இருக்கோமே.எங்களுக்குனு எந்தப் பொறுப்பும் கொடுக்கலை என்றனர்.அதற்கு விஜயன் யார் சொன்னது உங்களுக்குப் பொறுப்பு கொடுக்கலைனு.நமக்குத் தான் நிறைய பொறுப்புகள் உண்டு.விளையாட்டு மைதானம் ரெடி பண்றதில் இருந்து வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் ஜூஸ் சாப்பாடு டெக்கரேசன் திங்க்ஸ் மெடல்ஸ் சர்டிபிகேட் டிராபி ஸ்நாக்ஸ் எல்லாம் யார் வேலை.நம்ம வேலை தானே.அடுத்து எந்தக் குழுவில் ஆள் இல்லையோ அங்கேலாம் ஓட வேண்டியிருக்கும்.இப்போ புரிஞ்சுதா.ம்ம் சாரிண்ணா சாரி தலைவா னாங்க.சரி வாங்க கமிசனர் ஆபீஸ்க்குப் போகலாம்னு சொல்லி அழைச்சிட்டு வந்தான்.

திவ்யா அங்கே எல்லோரிடமும் வாயாடிக் கொண்டிருக்க ஹலோ மேடம் என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க.அவள் என்னைக் கேள்வி கேட்டாள்.நான் பதில் சொல்லிட்டிருக்கேன்.இல்லைண்ணா பொய் சொல்றா.நான் பசிக்குதுனு பேக்கில் இருந்த பிஸ்கெட் பாக்கெட் எடுத்தேண்ணா சாப்பிடுறதுக்கு.இவள் அதைப் பிடிங்கி அவ்வளவையும் சாப்பிட்டாண்ணா.என்ன இது ம்.சும்மா அண்ணா.டேஸ்ட் பார்த்தேன் நல்லா இருந்துச்சா காலி பண்ணிட்டேன்.பாருங்கண்ணா அவளே ஒத்துக்கிட்டா.சரி உனக்குத் தான் கிளாஸ் முடிஞ்சிறுச்சுல.போகாம நீ ஏன் இன்னும் இங்கே இருக்கேனு கேட்டான்.ஒன்னுமில்லைனா எல்லாரும் இருந்தாங்களா அதான் நானும் லேட்டா போகலாம்னு இருந்தேன்.அதுக்கிடையில் புகுந்த முகம்மது ஏய் சில்லு வண்டு நீ எப்போவும் காலேஜ் பஸ்ஸிலே தானே போவே.இப்போ காலேஜ் பஸ்லாம் போயிருச்சே.உன் வீடு எங்கே இருக்குனு கேள்வி மேலே கேள்வி கேட்க அது திரு திருனு மூழிச்சுச்சு.சரி விடுங்கடா.அவள் மற்ற பசங்கலாம் இருக்கவும் ஆசையா இருந்திருப்பா .திவ்யாவை உன்கிட்டே எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.இப்படி இருக்காதேனு.கேன்டீன்லே நீ என் வேணுமோ வாங்கி சாப்பிடுனு சொல்லியிருக்கேன்ல.சரி வா நான் சொல்லிட்டுப் போறேன்.நீ எல்லாருக்கும் வாங்கிக் கொடுனு சொல்லி கூட்டிட்டுப் போய் அவள் எதையோ மறைக்கிறா.அண்ணண் இப்போ கமிசனர் ஆபிஸ் போய்ட்டு வருகிற வரைக்கும் இவளை அங்கே இங்கே நகரமா புடிச்சு வைச்சுக்கனும் சரியானு கேட்டான்.

அதைக் கண்டு பிடிக்கனும்னு தானே அவள் பிஸ்கெட்டை வாங்கியே சாப்பிட்டேன்.கொஞ்ச நாளாவே இந்தப் புள்ளை ஒரு பையனோட சுத்துது.அதைக் கண்டு பிடிக்கிறது எப்படினு நினைச்சேன்.அது இன்னைக்கு நிறைவேறிடுச்சு.நீ போய்ட்டு வாண்ணே.நான் பார்த்துக்கிறேனு சொன்னாள்.அவள் தலையிலே தட்டி வாலு வாலு.வர வர நான் ரொம்ப சலுகை கொடுக்கிறேனோ என்றான்.அதுக்கு ராணி ரொம்ப இல்லைண்ணே ரொம்ப ரொம்ப.ஊருக்குள்ளே எவன்கிட்டையாவது சலம்பல் பண்ணிட்டு யாராவது கேட்டால் உன் பேரைச் சொல்லியே பயபுள்ளை தப்பிச்சிறுது அண்ணே.எல்லாரும் இப்போ அவளை விட்டுட்டு உன்னைத் திட்டிட்டிருக்கானுக.இவ்வளவும் முத்து கார் வந்தவுடனே அவனை விலக்கிட்டு டிரைவர் சீட்டிலே அமர்ந்து காரை ஓட்டிக்கிட்டே ராணி சொன்னதைக் கேட்டிட்டு வந்தான்.டேய் மச்சான் ராணி சொல்றது போல நீ ரொம்பத் தாண்டா திவ்யாவுக்கு செல்லம் கொடுக்கிறேனு அருணும் சங்கரும் சொல்ல ஜான்ஸி ரம்யா திலகவதி ராணி நால்வரும் ஏன் நீங்க என்ன வாழுது நீங்களும் அதிலே குறைஞ்சவங்க இல்லை.விஜய் அண்ணணை மட்டும் குறை சொல்லாதீங்கனு எகிறினார்கள்.டேய் பங்காளி இவளோட சேட்டை தாங்க முடியலைடா.டிபன் பாக்ஸை எப்படி எடுக்கிறா சாப்பிடுறானே தெரிய மாட்டேன்கிது.கேட்டால் உடனே உன் பேரைச் சொல்லிடுறாடா.சரி சரி அழுகாதீங்க.இனி இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்.எங்கிட்டு பார்க்கிறது.நீ இருக்கிறது வேறே டிப்பார்ட்மென்ட் நாங்க இருக்கிறது எங்கேயோ.சரி விடுங்க தாய் தகப்பன் இல்லாத புள்ளை தானே பாவம் இல்லையா.தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்தவங்களுக்குத் தான் வலியும் வேதனையும் புரியும்.ஐயோ சாரிண்ணா டேய் சாரிடா மச்சான்னு எல்லாரும் சொல்லவும் சரி சரி விடுங்கனு சொல்லி அமைதியாகிட்டான்.

சார் பிரின்சிப்பல் காலையிலே பேசும் போது நீங்களும் இருந்தீங்களே.ஒரு வார்த்தை கூடச் சொல்லலை நீங்க.ஏன் சார்?எப்படிச் சொல்லச் சொல்றே விஜய்.அவள் இறந்து கிடந்த கோலத்தைப் பார்த்து என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது.இதில் அவள் முறைப்படி பரதம் கற்றவள்.அன்று அவள் திறமை முழுவதும் காட்டி நடன ஒத்திகை பார்த்து இருந்ததால் மொத்தக் குடும்பமும் வந்திருந்தனர்.என் குடும்பம் மொத்தமும் நொருங்கிப் போய்விட்டது.இறந்தவளைத் தகனம் பண்ணுவதற்குள் தொலைக் காட்சிகளும் மீடியாக்களும் போலீசும் கேட்ட கேள்விகளில் செத்திடலாமா என்று இருந்தது.கமிசனர் வந்து பேட்டி கொடுத்து அனுப்பி வைத்தார்.அத்துடனும் விடாமல் போலீஸ் மீடியானு கேட்ட கேவிகளைத் தாங்க முடியாமல் என் அப்பா ஹார்ட் அட்டாக்கில் இறக்க என் மனைவியோ மகளின் போட்டோவையே பார்த்துக் கொண்டு அழுவதும் சிரிப்பதுமாக இருந்து பைத்தியமாகி மனநல மருத்துவமனையில் இருக்கிறாள்.எல்லாத்துக்கும் காரணமானவன் சென்னையையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லி முடித்தார்.

அவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.காரில் இருந்தவர்கள் அனைவருடைய மனதும் கனத்துப் போனது.டேய் மச்சான் அவனை ஏதாவது செய்யனும்டா என்றனர் அருண் சங்கர் இருவரும்.ஆமாண்ணா என்றனர்.மற்றவர்களும்.நம்மாலே என்ன செய்ய முடியும் என்றான் விஜயன்.அவனோ அமைச்சரின் மகன்.அவன் மேல் கை வைத்தால் சும்மா விடுவானா நம்மை என்று கூறினான்.ஒரு பொக்கே ஷாப்பில் காரை நிறுத்தி பொக்கே ஒன்றை வாங்கிக் கொண்டு.கொஞ்சம் பழங்கள் ஸ்வீட்ஸ் வாங்கிக் கொண்டு கமிசனர் ஆபிஸ் முன் காரை நிறுத்தினான்.அனைவரும் இறங்கி முத்து பழம் ஸ்வீட் பையைத் தூக்கிக் கொண்டு வர அனைவரும் கமிசனரைப் பார்க்கச் சென்றனர்.கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைய வெல்கம் ஸ்டூடன்ட்ஸ் என்றார்.அவரிடம் பொக்கேயும் பழங்கள் ஸ்வீட் பாக்ஸும் கொடுக்கப்பட்டது.அனைவரையும் உட்காரச் சொன்னார்.மூன்று நாற்காலிகளில் பேராசிரியர்களும் விஜயனும் உட்கார பக்கத்தில் கிடந்த பென்ச்சில் மாணவர்களை உட்கார வைத்து விட்டு மாணவிகளுடன் முத்தும் நின்று கொண்டான்.

லெட்டரைக் கொடுத்ததும் வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கல்லூரி நிர்வாகியும் போன் பண்ணிணார்.அருமையான மனிதர்.ஆனால் எதிர் பாராமல் நடந்து விட்டது.ஏன் சார் உங்களால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லையா.எல்லா ஆதாரத்துடன் தான் கோர்ட்டில் ஆஜர் படுத்தினோம்.ஆனால் சாட்சி இல்லாததால் குற்றவாளி தப்பி விட்டான்.என்ன செய்ய பெரிய பதவியில் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.ஏன் சார் ஐந்து வருடப் பதவியில் இருப்பவர்களுக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது ஐம்பத்தெட்டு வருடம் சர்வீஸ் செய்பவர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று கேட்டான் விஜயன் அடக்க முடியாத கோபத்தோடு.ஏன் சார் இதே உங்கள் வீட்டில் நடந்திருந்தால் அப்போவும் கையைக் கட்டிட்டுத் தான் இருப்பீங்களா சார் என்று ஜான்ஸி கோபமாகக் கேட்டாள்.

உங்கள் கோபம் புரிகிறது.நியாயமானதும் கூட.ஆனால் சட்டம் ஆள்பவர்களுக்கு மட்டும் தான் வளையுமோ நாங்கள் வளைத்தால் வளையாதா என்று கேட்டாள் ராணி.நீங்க மட்டும் கண்டுக்காமல் இருங்க சார்.ஒரு வாரத்தில் இந்த சென்னையில் எந்த ஒரு ரவுடியும் வராமல் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறினான் விஜயன்.பசங்களா முதலில் படிப்பை முடிங்க.அப்புறம் இதைப் பற்றி யோசிக்கலாம்.படிப்புக்கும் சமுதாயத்தை சீரழிக்கும் கொடியவர்களை அழிப்பதற்கும் என்ன சார் சம்மந்தம் என்று கேட்டார்கள்.இந்த ப்ரோகிராம் முடிந்தவுடன் உங்களைக் கண்டிப்பாக சந்திக்கிறேன்.அது வரை பொறுமையாக இருங்க.நீங்க கேட்ட கோரிக்கையை நானே நிறைவேற்றத் தருகிறேன் என்று கூறினார்.ரொம்ப நன்றி சார்.ஆனால் இப்போ சொன்ன பேச்சிலிருந்து மாறக் கூடாது.கண்டிப்பா மாறமாட்டோம் சார் என்றனர்.சார் சின்ன வேண்டுகோள்.சொல்லுங்க விஜய் சார் நீங்க போலீஸ் ப்ரொடக்சன் தருவது சரி.நான் என் அண்ணணிடம் சொல்லி சில பேரை என் காலேஜ்ஜை சுற்றி நிற்க வைக்க அனுமதி வேண்டும்.உங்களுக்கு எப்படி அப்படி நம்பிக்கையான ஆள்கள் கிடைப்பார்கள்.உங்க அண்ணண் யாரு.வீர மார்த்தாண்டன் என்றவுடன் எந்த ஊர்.லட்சுமிபுரம் சார்.அவனோட தம்பியா நீ.ஆமா சார் ஆனால் அவரைப் போல் கிடையாது நான்.அவர் பெயரைக் கேட்டவுடனேயே இப்படி பதறுகிறீர்கள் என்றால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.சரி சார் நான் என் ப்ரண்ட்ஸ்களை வரவழைக்கிறேன்.இந்தாங்கனு ஒரு பேப்பர் வாங்கி அதில் அவனுக்குத் தேவையான ப்ரண்ட்ஸ் காலேஜ் பேர் எல்லாம் எழுதிக் கொடுத்து நீங்களே அவர்களுடன் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு அனைவரிடமும் விடைபெற்று வெளியேறி காரில் ஏறி சார் உங்களை வீட்டிலேயே டிராப் பண்ணவா என்று கேட்டான்.வேண்டாம் விஜய் எங்களை அடுத்த பேருந்து நிறுத்தத்தில் நிறுத்து.நாங்கள் இறங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்கள்.சரி சார் என்று கூறி அவர்களை அவர்கள் கூறிய இடத்தில் இறக்கி விட்டு அனைவரும் கல்லூரிக்கு வந்தனர்.

காரை விட்டிறங்கி அனைவரும் கேன்டீன் சென்றனர்.முத்துவையும் கூட்டிச் சென்றான்.அவரவர்க்குத் தேவையானதை ஆர்டர் செய்ய திவ்யாவிடம் என்ன நடந்தது என்று கேட்டான் விஜயன்.அண்ணா அவள் ஒரு பையனை லவ் பண்றா போலிருக்கு. நீங்க அப்படிப் போனவுடனே அவன் வந்துட்டான்.இவள் கிளம்பப் போனாள்.நாங்க எதை எதையோ பேசி இவளைப் பிடிச்சு வைச்சுட்டோம்.அவன் இன்னும் வெளியிலே தாண்ணே நிற்கிறான் அப்படின்னா.சரி நீ போ இங்கிருக்க வேண்டாம்.அவளுக்கு சந்தேகம் வராமல் இருக்கனும்.சரினு கிளம்பும் போது ஏய் பக்கிகளா சீக்கிரம் சாப்பிட்டு முடிச்சிட்டு வாங்கடி.நேரமாயிடுச்சு அப்புறம் நாம லேட்டா போனா இவன் அப்பத்தா ரேடியோ பெட்டி ஊர் முழுக்க ஒலி பரப்பிடும்னு சொன்னவுடனே இவளுக்கு உண்மையிலேயே வாய் கூடிப் போச்சுடா.என்ன அங்கே குசுகுசுனு பேசிக்கிறீங்க.இவளுக்கு வாய் அதிகமாச்சுனு தானே சொன்னீங்க.எப்பவும் இருக்கிற வாய் தான்.புதுசா ஒன்னும் மாறலை.ஆத்தி என்ன காதுடா இது. இவ்வளவு சார்ப்பா இருக்கு.கட்டிக்கப் போறவன் பாடு கஷ்டம்டா சாமினு சங்கர் சொல்ல அது அவன் தலையெழுத்து அதுக்கு நான் என்ன செய்ய முடியும்னு பதில் வர அத்தனை பேரும் சங்கரைப் பார்த்து சிரிக்க ஆத்தா நீ போமா.நான் வாயே திறக்கலை. ம்ம் அந்த பயம் இருக்கட்டும்னு இவள் சொல்ல மறுபடியும் அங்கே சிரிப்பலை எழுந்தது.டேய் யாருடா நீ. நீ எங்க காலேஜ் கிடையாதே.எதுக்கு வந்திருக்கே.ஏம்மா இந்தப் பையனை உங்களுக்கு யாருக்கும் தெரியுமானு கேட்க எல்லாம் ஒன்னா சேர்ந்து தெரியாதுண்ணானு சொல்லவும் டேய் ஜூனியர் பசங்களா உங்க ப்ரண்ட்ஸானு கேட்க எங்களுக்கு யாருக்கும் தெரியாது அண்ணானு சொல்லவும் டேய் தம்பி இங்கே வானு சொல்ல அந்தப் பெண் பெயர் சுமதியோ கையைக் காட்டி வராதே வராதேனு சொல்ல அதை அனைவரும் பார்த்து விட்டனர்.இருந்தாலும் அமைதியாக என்ன நடக்கிறது என்று பார்க்க அந்தப் பையன் வந்தான்.அண்ணே ஒரு டீ ரெண்டு பிஸ்கட்னு சொல்லவும் அவன் முன் கொண்டு வந்து வைக்கப் பட்டது.இப்போ சொல்லு உன் பேரென்ன.மாதேஷ் அண்ணா.என்ன பன்றே.மெக்கானிக்கல் செட்டிலே வேலை பார்க்கிறேண்ணா.எவ்வளவு சம்பளம் வாங்குறே.மாசத்துக்கு நாலாயிரம் ரூபாய்.வீட்டிலே யார் யார் இருக்கா.அம்மா அப்பாஅக்கா தம் தங்கச்சி.எந்த இடத்திலே இருக்கே.சைதாப்பேட்டை.அதுக்கு மேலே பொறுக்க முடியாம அருண் ஏண்டா ஒவ்வொரு கேள்வியா கேட்டால் தான் பதில் சொல்லுவியா.மொத்தமா உங்க வரலாறைச் சொல்ல முடியாதோனு சட்டையைக் கொத்தாகப் பிடித்து அடிக்கப் போனான்.விஜயன் விடுடா இப்போ அவனே சொல்லிடுவான்.என் பேர் மாதேஷ்.அப்பா பேர் மகாலிங்கம் ரிக்சா ஓட்டுறாரு.அம்மா வசந்தி இந்தப் பொண்ணு வீட்டிலே தான் வேலை பார்க்குது.நான் மெக்கானிக் ஷாப்பிலே மாதத்துக்கு நாலாயிரம் ரூபாய் கூலி தருவாங்க.என் தம்பி +2 தங்கச்சி பத்தாவது படிக்குது.அக்கா எக்ஸ்போர்ட் கம்பெனிலே வேலை பார்க்குதுண்ணா.இது தான் என் குடும்ப நிலைமை.வீடு குடிசை வீடு தாண்ணா.சுமதி இங்கே வா.இவனைக் காதலிக்கிறியா.ஆமாண்ணா.அவன் குடும்பத்தைப் பற்றி இப்போ சொன்னானே.உன்னை எப்போவாவது அவன் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருக்கானா.இல்லை அண்ணா.அவன் என்ன வேலை பார்க்கிறானு தெரியுமா.சொந்தமா மெக்கானிக் ஷாப் வைச்சிருக்காண்ணா.நான் அடிக்கடி போயிருக்கேன்.அப்புறம் குடும்பத்தைப் பற்றி தெரியுமா.ம்ம் தெரியும் அண்ணா.இவன் அப்பா சொந்தமா கார் வாங்கி டிரைவர் வேலை பார்க்கிறார் அண்ணா.அக்கா காலேஜிலே படிக்கிறாங்க.அம்மா தையல் கடை வைச்சிருக்காங்க.தம்பி தங்கச்சி மெட்ரிக்குலேசன் ஸ்கூலில் படிக்கிறாங்க அண்ணா.அவன் வீட்டுக்குப் போயிருக்கியா.அப்பார்ட்மென்ட் வீடு அண்ணா.நல்ல அழகா இருக்கும்.

நீ போகும் போது யார் இருந்தாங்க.எல்லாரும் வேலைக்குப் போயிட்டாங்கனு சொன்னான் அண்ணா.அவன் சொல்றது எல்லாத்தையும் அப்படியே நம்பிட்டே.இப்போ இவன் சொல்ற கதையைக் கேளுனு சொல்லி கேட்க வைச்சாங்க.அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்றாள்.இப்போ என்ன சொல்றே.டேய் உண்மையைச் சொல்லு.உண்மையிலேயே இவளை விரும்புறியா.உண்மையைச் சொல்லனும்.இல்லை தோலை உறிச்சிடுவேன்.இல்லை அண்ணா இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இவள் சொத்தை எல்லாம் பிடுங்கிடலாம்னு எங்க அம்மா தான் அண்ணா இந்த ஐடியா கொடுத்தாங்க.என் அப்பாவும் என் அக்காவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க.எங்க அம்மா தான் கேட்காமல் பிடிவாதமா இப்படி செய்யச் சொன்னாங்க.சரி இடத்தைக் காலி பண்ணுனு சொன்னான்.டேய் போலீஸ்லே கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கலாம்லனு கேட்க பொறுங்கனு சொன்னான்.

அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..
 

banumathi jayaraman

Well-Known Member
கலை அரங்கில் கூட்டம் ஓகே
திருநாவுக்கு மகள் போன பாதிப்பு ஓகே
அடுத்து சுமதி மெக்கானிக் பையன் லவ்
கமிஷனர் ஆபீஸ்ஸுக்கு விஜய் போறது
விஜய்யின் அண்ணனின் பெருமை
சுமதியின் லவ் ஊத்தியது
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கேப்
விட்டு இருக்கலாம், இந்து டியர்
ஒரு குண்டான்ல சோறு குழம்பு ரசம்
பொரியல் மோர் எல்லாம் ஒண்ணாப்
போட்ட மாதிரி ஒரே கசமுசாவா இருக்குப்பா
 
Last edited:
கலை அரங்கில் கூட்டம் ஓகே
திருநாவுக்கு மகள் போன பாதிப்பு ஓகே
அடுத்து சுமதி மெக்கானிக் பையன் லவ்
கமிஷனர் ஆபீஸ்ஸுக்கு விஜய் போறது
விஜய்யின் அண்ணனின் பெருமை
சுமதியின் லவ் ஊத்தியது
இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கேப்
விட்டு இருக்கலாம், இந்து டியர்
ஒரு குண்டான்ல சோறு குழம்பு ரசம்
பொரியல் மோர் எல்லாம் ஒண்ணாப்
போட்ட மாதிரி ஒரே கசமுசாவா இருக்குப்பா
ரொம்ப நன்றி சகோதரி உங்கள் விமர்சனத்துக்கு.இனி கவனமா பார்த்து எழுதுறேன்.ரொம்ப நன்றி சகோதரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top