வீரமாகாளி 7

Advertisement

விஜயனுக்கு திவ்யாவின் நிலைமையைப் பார்த்ததிலிருந்து மனசே சரியில்லை.அவன் பாத்ரூமுக்குள் நுழைந்து குளித்துவிட்டு லுங்கியைக் கட்டிக் கொண்டு வந்து தன் மனதைத் திசை திருப்ப பாடல்களைப் போட்டுக் கேட்டான்.அப்படியும் திவ்யாவின் நிலையை நினைத்து வருந்தினான்.பின் ஊருக்குப் போன் போட்டுப் பேசினான்.அந்த நேரம் வீர மார்த்தாண்டன் இல்லாததால் கொஞ்சம் மனம் விட்டுப் பேச முடிந்தது.அண்ணியிடமும் காஞ்சனாவிடமும் இங்குள்ள நிலையைச் சொன்னான்.அனைவரின் நலத்தையும் விசாரித்து விட்டு
போனை வைத்தான்.பின் கொஞ்ச நேரம் தோட்டத்தில் இறங்கி நடந்துவிட்டு தூங்கிப் போனான்.காலையில் எழுந்தவன் தன் காலைக் கடன்களை முடித்து விட்டு கல்லூரிக்குக் கிளம்பினான்.கல்லூரியில் திவ்யா எங்கிருக்கிறாள் என்று தேடிப் பார்த்தான்.அவள் மற்ற தோழிகளிடம் சகஜமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் தான் அவனது முகத்தில் சிரிப்பே வந்தது.அதன் பின் தன் வகுப்பறையில் நுழைந்து அமர்ந்து கொண்டான்.திடீர்னு பிரின்சிப்பால் அழைப்பதாக ப்யூன் வந்து சொல்லவும் எழுந்து சென்றான்.கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றான்.விஜய் இந்த வருடம் நம்ம காலேஜில் தான் மாநில அளவிற்கான விளையாட்டுப் போட்டிகள் கல்ச்சுரல் ப்ரோகிராம் நடத்த வேண்டும் என்று தகவல் வந்திருக்கு.நீ தான் மாணவர் தலைவன் என்பதால் இந்தப் பொருப்பு உங்களது தான்.யார் யார் எது எதில் கலந்து கொள்கிறார்கள் என்று குறிப்பெடுத்துக் கொண்டு உங்க ஹெஓடீ திருநாவுக்கரசும் ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் வில்சனும் உங்களுக்கு உதவி பண்ணுவாங்க.

விஜய் அதிகமான காலேஜில் இருந்து மாணவ மாணவிகள் வருவார்கள்.அதற்காக நம் கல்லூரி நிறுவனர் போலீஸ் ப்ரடெக்சன் தரச் சொல்லி கமிசனருக்கு லெட்டர் அனுப்பியிருக்கார்.நீ இன்னும் இரண்டு மூன்று மாணவர்களுடன் உங்க ஹெச்ஓடியும் ஸ்போர்ட்ஸ் மாஸ்டரையும் கூட்டிட்டுப் போய் பெர்மிசன் வாங்கிடுங்க.நான் இப்போவே எல்லா டிபார்ட்மென்ட்டுக்கும் சர்க்குலர் அனுப்பிடுறேன்.நாளையிலிருந்து உங்க வேலையைத் தொடங்குங்க.அப்போ தான் பயிற்சி பண்ண சரியா இருக்கும்.விஜய் இந்த வருடம் நம் கல்லூரியில் இந்த விழா நடப்பதால் நாம தான் அதிகப் பரிசுகள் வாங்கனும்.ஆல் தி பெஸ்ட் என்று கூறி அனுப்பி வைத்தார்.தேங்க்யூ சார்னு சொல்லிட்டு வெளியே போவதற்கு கதவைத் திறக்கும் முன் விஜய் ஒரு நிமிசம் இங்கே வா என்றார்.என்ன சார் ஏதாவது சொல்லனுமா.ஆமா விஜய்.நீ இந்தக் கல்லூரிக்கு வரும் முன் இங்கே நடந்த கடைசி கல்ச்சுரல் ப்ரோகிராம்லே சில கல்லூரி மாணவர்கள் நம் கல்லூரி மாணவிகளிடம் தகாத முறையில் நடக்கப் போய் அதில் இரண்டு மாணவிகள் இறந்து விட்டனர். நம் கல்லூரி கட்டிடத்தில் மேலிருந்து குதித்து இறந்து விட்டனர்.அதில் ஒரு பெண் நிர்வாகியின் பேத்தி பெயர் சுமித்ர

துறுதுறுனு இருப்பா.ரொம்ப அழகும் புத்திசாலியும் கூட.படிப்பு நடனம் கவிதை ஓவியம் இதில் ரொம்ப கெட்டி.அவள் ஒருத்தரை ஒரு தடவை பார்த்தால் போதும்.அச்சு அசல் போல அப்படியே வரைந்து விடுவாள்.அவள் ஓவியப் போட்டியில் பங்கு பெற்று பரிசாக வாங்கிய மெடல்கள் சான்றிதழ்கள் ஏராளம்.ஆனால் அது தான் அவள் உயிருக்கே வினையாக முடியும் என்று யாரும் அப்போது எதிர் பார்க்கவில்லை.அவளுடன் படித்த பெண்களில் நிஷாந்தி என்ற மாணவி இவளுக்கு ரொம்ப நெருக்கம்.இரட்டைப் பிறவிகள் போல் இருப்பார்கள்.

ஒரு நாள் நல்ல மழை.அவளுக்கு அன்று பிராக்டிக்கல் வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தான் கிளம்பிப் போனாள்.நம் நிறுவனரும் தன் பேத்தி பாதுகாப்பா வந்திடுவானு நினைச்சுப் போயிட்டார்.நல்ல மழை என்பதால் இருட்டி விட்டது.எப்படிப் போவது என்று யோசித்தவள் ஒரு ஆட்டோவில் ஏறிப் போனாள்.மழை அதிகமாக இருந்ததால் மக்கள் கூட்டமும் அதிகமில்லை.அப்போது ஒரு கூட்டம் ஒருவனைத் துரத்த ஆட்டோ டிரைவர் ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகுது என்று நினைத்து வேகமாக ஓட்டியிருக்கிறார்.ஆனால் அதற்குள் துரத்தியவர்கள் அவள் கண் முன்னே கொன்று விட்டார்கள்.இவள் கொன்றவனை நன்றாகப் பார்த்து விட்டாள்.அவள் போலீஸ் ஸ்டேசனுக்கு விடுங்கண்ணா.நான் கம்ப்ளைன்ட் கொடுக்கனும்னு அடம்பிடிச்சிறுக்கா.ஆனால் ஆட்டோ டிரைவர் இது பெரிய இடத்து விவகாரம்மா.இதெல்லாம் கண்டுக்காம விட்டுறனும்னு சொல்லி அவளை வீட்டில் போய்க் கொண்டு போய் விட்டுவிட்டு நிர்வாகியிடமும் சொல்லி இருக்கார்.அவரும் நான் பார்த்துக்கிறேனு சொல்லிட்டார்.ஆனால் மறு நாள் பேப்பரில் அந்த செய்தி தலைப்பு செய்தியாக இருக்க இவள் கல்லூரிக்கு வருவதற்கு முன் கமிசனர் ஆபிசில் போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டா.அவரும் உன்னாலே அடையாளம் காட்ட முடியுமானு கேட்க இவள் அவனை வரைந்து கொடுத்து விட்டு வந்து விட்டாள்.கோர்ட்டில் அவனுக்குப் பதிலாக வேறு ஒருத்தனை ஆஜர் படுத்த இவள் கொன்றவன் இவனில்லைனு சொல்லி அங்கே கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனைக் காட்டி இவன் தான் கொன்றான் என்று சொல்லி அன்று நடந்தையும் சொல்ல ஆட்டோகாரரிடம் விசாரிக்க அவரோ நான் பார்க்கலை.நான் அப்போ மழையினாலே சீக்கிரமே வீட்டுக்குப் போயிட்டேனு சொல்லிட்டான்.கோர்ட் குற்றம் செய்யாதவனுக்கு தண்டணை வழங்கியது.

அதிலிருந்து அவளைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும் முன் அனைவருக்கும் போதும் போதும் என்றாகி விட்டது.இங்கே இப்படி அவளுடன் போராடிக் கொண்டிருக்க அடிபட்ட பாம்பு இவளைக் கதற வைக்க குறி பார்த்துக் கொண்டிருந்தது.பழையபடி பட்டாம் பூச்சியாய் சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருக்கும் போது தான் நம்ம கல்லூரியில் இந்த கல்ச்சுரல் ப்ரோகிராம் வந்தது.எல்லாம் நல்லபடியாகத் தான் நடந்தது.இந்த நச்சுப் பாம்பு இவளைக் கொல்ல வந்திருப்பது தெரியாமல் போய் விட்டது.கல்ச்சுரல் ப்ரோகிராம் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தும் பரிசும் கொடுத்துக் கொண்டிருந்த போது நிஷாந்தியும் சுமித்ராவும் பாத்ரூம் செல்வதற்காக தனியே வந்திருக்கின்றனர்.இவர்கள் தனியாக எப்போது சிக்குவார்கள் என்று கொதித்துக் கொண்டிருந்தவனுக்கு இவர்கள் மட்டும் தனியாக வந்தது நல்ல சந்தர்ப்பமாக மாற காத்திருந்த கருநாகமும் அவன் போடும் எலும்புத் துண்டுக்காக வாலாட்டும் நாய்களும் தொடர்ந்து வந்து இவர்களிடம் தங்கள் பலத்தைக் காட்ட இரு பெண்களும் எவ்வளோவோ போராடி அவர்களிடமிருந்து தப்பித்து மொட்டை மாடியில் சென்று இருவரும் மேலிருந்து குதித்து விட்டனர்.அந்தக் கயவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.அவர்கள் பரிசு வாங்க பெயர் அழைத்த போது தான் அவர்கள் வராததால் மாணவிகளும் சில மாணவர்கள் அவர்களுக்குத் துணையாக தேடி வந்த போது தான் இவர்களின் நிலையைக் கண்டு அதிர்ந்து போய் மாணவிகள் கதற ஒருவன் ஓடி வந்து விசயத்தைச் சொல்ல கல்லூரியே அதிர்ந்து போய் விட்டது.அவசர அவசரமாக இருவரையும் தூக்கிப் போட்டுக் கொண்டு மருத்துவமனை சென்று சேர்த்தோம்.அங்கு எவ்வளவோ சிகிச்சை கொடுத்தும் பலனில்லாமல் இறந்து விட்டனர்.போலீசார் வந்தனர்.நிர்வாகி குடும்பம் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் அனைவரிடமும் விசாரித்தனர்.என்னென்னவோ கேள்விகள் கேட்டனர்.மனுசன் நொருங்கிப் போய்விட்டார்.

பிரேதப் பரிசோதனையின் போது இருவர் கையிலும் அவனுடைய சட்டைக் காலரில் ஒரு அடையாளம் இருந்தது.அதை வைத்து ஆளை அடையாளம் கண்டு கொண்டனர்.ஆனால் அவன் மினிஸ்டர் மகனாக இருந்ததால் அவனை நெருங்கப் பயந்தனர்.இந்த விசயம் கேள்விப்பட்ட மாணவர்கள் கொதித்து எழுந்தனர்.நிர்வாகி முடிஞ்சது முடிஞ்சு போச்சு.இறந்தவர்கள் திரும்பப் போவதில்லை.நீங்க உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்னு சொல்லி அமைதிப்படுத்தினார்.அதுக்கப்புறம் நம் கல்லூரியில் கல்ச்சுரல் ப்ரோகிராம் நடக்க அவர் சம்மதிக்கவில்லை.மகள் இறந்த துக்கத்தில் மகனும் மருமகளும் தற்கொலை செய்து கொண்டனர்.ரொம்பவே நொருங்கிப் போயிட்டார்.அவரும் அவர் மனைவியும் கூட இந்த முடிவை எடுக்க முன் வந்த போது அவர் மகள் அண்ணண் அண்ணி ஒரு பொண்ணை மட்டுமா பெத்தாங்க.இதோ இன்னும் இரண்டைப் பெத்திருக்காங்களே.அவர்களை யார் வளர்க்கிறதுனு கேட்டு சண்டை போட்டு மகளும் மருமகனும் அடிக்கடி வந்து பார்த்து சமாதானப்படுத்தி அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்தனர்.இந்த வருடம் ஏன் ஒத்துக்கிட்டார்னா உன்னாலே தான்.நீ கல்லூரிக்கு வந்து மாணவர் தலைவன் ஆன பிறகு இந்தக் கல்லூரிக்குள் ஒரு சின்ன சண்டை கூட வந்ததில்லை.அதை நம்பித்தான் இந்த வருடம் நம்ம காலேஜில் கல்ச்சுரல் ப்ரோக்கிராம் நடத்த ஒத்துக்கிட்டார்.அதனாலே தான் போலீஸ் ப்ரொடக்சனுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கார்.அதனாலே கேர்புல்லா இரு எந்த விசயத்திலும் பொறுமையா இருந்து அன்பா பேசி சாமாளிச்சிடு.அடிதடினு இறங்கினாத் தான் நிறைய பிரச்சனைகள் வரும்.அன்பால சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை.அதுனாலே பார்த்து நடந்துக்கோ என்றார்.சரி சார் எந்தப் பிரசனையும் வராமல் பார்த்துக்கிறேன்.அதுக்கு முன்னாலே இப்போ சர்க்குலர் நீங்க அனுப்பியவுடனே மதிய இடைவேளைக்குப் பிறகு எல்லா டிப்பார்ட்மென்ட் மாணவர்கள் ஆசிரியர்களையும் நம்ம கலை அரங்கத்தில் கூட்டி நீங்க விசயத்தை சொல்லுங்க சார்.அப்படிச் சொல்லும் போது இந்தப் பிரச்சனையையும் சொல்லி அனைவரும் ஒற்றுமையா இருந்து இந்த ப்ரோகிராமை நடத்திக் கொடுங்க.இது முடிந்தவுடன் உங்களுக்கு அருமையான பரிசு உங்கள் மாணவர் தலைவன் தரப் போறானு சொல்லி முடிங்க.மற்றதை நான் பார்த்துக்கிறேன் சார்.ஓகே விஜய் அப்படியே செய்றேன்.சார் ஒரு கேள்வி இன்னும் அவனுக உயிரோடு இருக்கானுகளா சார்.ம்ம் என்னத்தைச் சொல்ல.அவனுக இன்னும் உயிரோட இருந்து சென்னையே அவன் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கனும்னு ஆடிட்டிருக்கான்.ஒரு வேளை இந்தப் ப்ரோக்கிராமுக்கும் வரலாம்.அதுனாலே தான் இந்த ஏற்பாடுனு சொன்னார்.சுமித்ராவுக்கு எப்போதும் கிராமத்துப் பெண்கள் நல்லாப் படிச்சு நல்ல வேலைக்குப் போய் சம்பாதிக்கனும்னு அடிக்கடி சொல்லுவா.அதுனாலேயே நம்ம கல்லூரிக்கு வந்து பணம் கட்ட முடியாமல் கஷ்டப்படுற மாணவிகளைச் சேர்க்கச் சொல்லி அவங்க தாத்தாவை உண்டு இல்லைனு பண்ணிடுவா.அதுனாலே தான் அவள் இறந்த பிறகு நம்ம கல்லூரிலே அதிகமான கிராமத்து மாணவிகளுக்கு சீட் கிடைக்குது.ஓகே சார் கவலையே படாதீங்க.இந்த தடவை எந்தப் பிரச்சனையும் இல்லாம பார்த்துக்குறேனு சொல்லிட்டு வெளியேறி தன் வகுப்புக்கு வந்தான்.

அங்கே மாணவர்கள் இவன் வருகைக்காக காத்திருக்க இவன் வந்தவுடன் அனைவரும் என்னடா பிரச்சனை.எதுக்குடா உன்னை பிரின்ஸி கூப்பிட்டாருனு கேட்டார்கள்.இந்த வருடம் நம்ம கல்லூரியில் மாநில அளவிலான கல்ச்சுரல் ப்ரோக்கிராம் நடத்துவதற்கு தகவல் வந்திருக்கு.அதைப் பற்றிப் பேசத் தான் கூப்பிட்டிருந்தாரு.ஏய் டேய் மச்சான் எவ்வளவு நல்ல விசயத்தை இவ்வளவு சோகமா சொல்றே.ஐ ஜாலிடா ஜாலிடா டேய் மச்சான் நல்ல நல்ல கலரான பிகர்ஸ்லாம் வருவாங்க.நல்லா சைட் அடிக்கலாம்.கடலை போடலாம்னு சொல்லிக் கத்தினான்.பொண்ணுக போடுவே போடுவேடா ஏன் போட மாட்டே.உனக்கு இதைத் தவிர வேறே எதுவும் தெரியாதா.போபோ எவள்கிட்டேயாவது செருப்படி வாங்காம இருந்தா சரினு ஜான்ஸி சொன்னா.ஏய் போங்கடி உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்துப் பொறாமை.என் அழகைப் பார்த்துப் பொறாமை.நம்மலை சைட் அடிக்கமாட்டான்கிற பொறாமை.போங்கடி காத்து வரட்டும்.வர்றவளுககிட்டே என் பெர்மான்ஸைக் காட்டி ஒருத்தியையாவது உஷார் பண்ணிடனும் மச்சானு சொல்லவும் மொத்த வகுப்பும் அவனை வித்தியாசமா ஒரு லுக் விட்டு தூனு காறித் துப்ப அதிலே ஒருத்தன் டேய் மச்சான் விஜய் இவன் சைட் அடிக்கிறேனு சொன்னதுலாம் கூடப் பரவாயில்லைனு பேசாம இருந்தேன்.ஆனால் இவன் அழகைப் பார்த்துப் பொறாமைப்படுதுக இந்தப் பொண்ணுகனு சொன்னான் பாரு.அதைத் தாண்டா தாங்க முடியலைனு புலம்ப பொண்ணுக எல்லாம் ஆமா பெரிய ஷாருக்கான் அஜித் விஜய் சூர்யானு நினைப்பு.ஏய் போங்கடி போங்கடி உங்களுக்கு பொறாமைடி.ஏய் போடா எருமை.உன் முகத்தை தினமும் கண்ணாடிலே பார்த்துட்டு எப்படிடா இப்படிப் பேச மனசு வருதுனு கேட்க ஏய் போடி சில்லு வண்டு நீலாம் என் அழகைப் பத்திப் பேசாதே போ போ.போடா மூக்கு டப்பா உன்னைப் போய் அழகுனு சொன்னே கொலை பண்ணிடுவேன்.மூஞ்சியைப் பாரு மூஞ்சியை இந்தக் காலேஜிலேயே பருப்பு வேகலை.இதுலே அடுத்த காலேஜ் பொண்ணுங்களை உஷார் பண்ணப் போறாராம் இவருனு சொல்ல ஏய் போடி முருங்கைக் காய்.எனக் கென்னடி குறைனு பொங்க விஜய் அவனை அமைதியா இருக்கச் சொல்லு.மேலே மேலே பேசிட்டே போனானா அப்புறம் ஏற்படுற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லைனு ஜான்ஸி சொல்ல என்னடி பண்ணுவேனு அவன் பொங்க. ம்ம் கேன்டீன்லே சுடுதண்ணியை வாங்கி அப்படியே மூஞ்சிலே ஊத்திடுவேன்.ஏற்கனவே கரி சட்டி மாதிரி இருக்கிற முகம் இன்னும் வெந்து நஞ்சு போன அலுமினியச் சட்டி மாதிரி ஆகிடுவே பரவாயில்லையானு கேட்டாள்.ஏய் சூப்பர் ஜான்சி நான் வேணா இப்போவே போய் வாங்கிட்டு வந்திடுவா.ஊத்திடுறியானு கேட்டான் கருணா.அடேய் மச்சான் என்னடா இப்படி சொல்லிட்டே.பின்னே நீ ஓவரா சலம்பல் பண்ணிட்டிருந்தா தாங்க முடியலைடா எங்களாலேயே அப்படினு அருண் சொல்ல சோ சேட்.டேய் விஜய் பாருடா இவனுகளுக்குக் கூடப் பொறாமையைனு சொன்னவுடனே பக்கத்திலே உட்கார்ந்து அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்ட ரம்யா அவள் பாட்டிலில் இருந்த தண்ணியைத் தூக்கி அவன் தலையிலேயே கவுத்திட்டா.நானும் போனா போகுதுனு அமைதியா பார்த்துட்டிருந்தா ரொம்பவா ஆட்டம் காட்டுறே.கொன்னுடுவேன் போய் மூடிக்கிட்டு உட்காருனு கத்தினா.டேய் மாப்பிள்ளை அமைதியா இருக்கிற ஒரு சிங்கத்தையும் சீண்டி விட்டுட்டீயேடானு அருண் சொல்லவும் எல்லாரும் சிரித்தனர்.அட ஆமாங்க அந்த வகுப்பிலேயே ரொம்ப அமைதியான பொண்ணு அது மட்டும் தான்.மத்தது எல்லாம் வாலில்லாத குரங்குகள்.அருண் அப்படிச் சொன்னவுடனே அவன் மேலே விழுந்தது பாட்டில்.ஆத்தி மச்சான் நாம இந்தப் பொண்ணையா இவ்வளவு நாளும் ரொம்ப நல்ல பொண்ணுணு நினைச்சோம்னு வடிவேல் பாணியில் சுஜித் சொல்ல அதுக்கு நான் பொறுப்பில்லைனு அவள் சொல்ல ஆத்தா அங்காளேஸ்வரி மலையேறு ஆத்தா.இப்போ தாண்டா மாப்பிள்ளை புரியுது.படபடனு பட்டாசு மாதிரி பொறியுறவங்களைக் கூட நம்பிடலாம்.ஆனால் அமுக்கினியாட்டம் இருக்கிறதை நம்பக்கூடாதுனு என் அப்பத்தா சொன்னதுஉண்மைனு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே ஒரு நோட்டு பறந்து வந்து அவன் மேலே விழுந்தது.எல்லாரும் டேய் மச்சான் இது உனக்குத் தேவையானு சொல்லி கிண்டலடிக்கப் பொண்ணுகளோ உனக்கு நேரமே சரியில்லை அமைதியா உட்காருனு சொல்லவும் அவன் மறுபடியும் ஏய் முருங்கைக் காய் இன்னிக்கு தேதியைக் குறிச்சு வைச்சுக்கோ.நான் எப்படியாவது ஒரு பொண்ணைக் காதலிச்சு கல்யாணம் பண்ணி உன் முன்னாலே நிற்கலை என் பேரை நானே மாத்திக்கிறேனு ரஜினி ஸ்டைல்ல சொல்லவும் அத்தனையும் சேர்ந்து மொத்தி வருகிற பொண்ணுககிட்டே இப்படி கிறுக்குத் தனமா ஏதாவது பண்ணிணே உன்னை சும்மா விட மாட்டோம் பார்த்துக்கோனு சொன்னாங்க.மதிய இடைவேளை வந்ததும் எல்லாரும் கேன்டீனுக்குப் போக அதுக்குள்ளே இங்கு நடந்த விசயம் தெரிந்த நெருங்கிய நட்புகள் வந்து இவனை ஓட்டித் தள்ள சரி சரி விடுங்க விடுங்க.காதல்லே ஜெயிக்கனும்னா சில பல அவமானங்களையும் தாங்கித் தான் ஆகனும்னு சொல்ல அனைவரும் சிரித்தனர்.திவ்யா வந்து ஏண்ணே உனக்குக் கொஞ்சம் கூட சூடு சொரணை வெட்கம் மானம்லாம் இல்லையா.இவ்வளவு கழுவி கழுவி ஊத்தி எப்போவும் அமைதியா இருக்கிற அம்மு அக்காவையே சீண்டி விட்டு இவ்வளவு தர்ம அடிகளும் வாங்கின பிறகும் எப்படினே உன்னாலே சிரிக்க முடியுது.நானாயிருந்தா தும்பைப்பூ செடியிலே தூக்கு போட்டு செத்திருப்பேனு சொல்லி சிரித்தாள்.ஏம்மா உனக்குத் தூக்குப் போட தும்பைப் பூ செடி தான் கிடைச்சுதா.இங்கே மரங்கலாம் இல்லையானு கேட்க அதுலாம் உங்களைப் போல ஆளுகளுக்குனு சொல்லி சிரிச்சா.என்னடா மச்சான் அடுத்து என்ன செய்யனும்னு சொல்றியானு கேட்கவும் கேன்டீன்லே இருந்த மொத்தமும் தூனு துப்பி சிரித்தார்கள்.

அடுத்து தொடரும்.இந்தக் கதையைப் படிப்பவர்களிடம் ஒரு சின்ன விண்ணப்பம்.படித்துவிட்டு லைக்ஸ் கமென்ட் பண்ணுங்க.குறைகள் இருந்தால் கண்டிப்பாகச் சொல்லவும்.திருத்திக் கொள்ள வாய்ப்பு கொடுக்கவும்.இது வரை படித்து லைக்ஸ் கமென்ட் மெசெஜ் பண்ணியவர்களுக்கு நன்றி.
 
வீரமாகாளி கதையை வாசிக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.நான் படிச்சது என்னவோ ஆசிரியர் பயிற்சி தான்.பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான்.வெறும் விவசாயம் தான் தொழில்.ஆனால் +2 முடிக்கிற வரை ஆங்கிலத்தில் கிராமர் என்றால் உயிர்.கடகடனு எழுதி முடிச்சிடுவேன்.நான்காம் வகுப்பிலிருந்தே கிராமருக்குனு ட்யூசனில் வகுப்பு இருந்தது.ஆனால் அதற்கப்புறம் படிப்பைத் தொடர முடியாமல் போச்சு.வீட்டு சூழ்நிலை மாறிடுச்சு.குடும்பப் பொறுப்பு என் தலையில் விழுந்தது.வீட்டில் அடுப்படி வேலையிலிருந்து விவசாய வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தில் குடும்பம் நடத்த வேண்டிய சூழ் நிலை.அதற்கப்புறம் நான்கு வருடங்கள் கழித்து ஆசிரியர் பயிற்சி கிடைத்தது.காலாண்டு முடிவதற்குள் பெரும் சவாலாகத் தான் இருந்தது படிப்பு.அதற்கப்புறம் பிக்கப் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.படிச்சவுடனே வேலை கிடைக்கும்னு பார்த்தால் அதிலும் தோல்வி.1989 ல் பயிற்சி முடித்ததற்கு 1996 ல் தான் வேலை கிடைத்தது.இடையில் ஆங்கிலத்திற்கும் எனக்கும் அதிக இடைவேளை.அப்றம் ஸ்கூலில் சேர்ந்த பிறகு மறுபடி ஆங்கிலம் சரளமாகப் படிக்க எழுத முடிந்தது.அதுக்கும் அரசாங்கத்தால் முட்டுக்கட்டை வந்தது.சர்வசிக்ச அபியான் திட்டம் மூலமாக.மறுபடி ஆங்கிலம் என்னை விட்டுத் தூரப் போய் விட்டது.இப்போ தான் பசங்க மூலமா ஓரளவு கற்றுக் கொண்டிருக்கிறேன்.அதனால் மெயில் அனுப்புபவர்கள் தமிழிலேயே அனுப்பவும்.தவறாக எண்ண வேண்டாம்.எனக்கு எதையும் நேரிடையாகப் பேசித்தான் பழக்கம்.இதை வெளிப்படையாகப் பேச எனக்கு அசிங்கம்லாம் இல்லை.அதனால் எனக்குத் தமிழிலேயே மெசேஜ் அனுப்புங்கள்.நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top