விழி வெப்பச் சலனம் - 28

Advertisement

Meghna suresh

Well-Known Member
வணக்கம் தோழமைகளே.

ஒருவழியாய் கதையை முடித்துவிட்டேன். வழக்கத்திற்கு மாறாக போன பதிவிற்கு நிறைய உந்துதல் கருத்துகளை பார்க்க முடிந்தது.

என்னை பொறுத்தவரை கதையில் இருக்கும் குறைகளை, பிழைகளை சுட்டிக் காட்டும் கருத்துகளே உந்துதல் கருத்துகள்.

அந்த வகை கருத்துகளை சென்ற பதிவிற்காய் வாங்கியதில் மகிழ்ச்சி. இது விளக்கம் தர வேண்டிய தருணம். முதலில் எளிய கேள்விக்கு விடை கொடுப்போம். தோழி ஒருவர் சென்னையில் இருந்து நீங்கள் வெகு தூரமான முதுமலை சுற்றுலா தளமாக தேர்ந்தெடுத்து விட்டீர்கள் என சொல்லி இருந்தார்.

அவருக்கு என் விளக்கம். அவர்களின் முதுமலை பயணம் தொடங்குவது திருச்சியில் இருந்து. திருச்சி முதல் சேலம் 3 மணி நேரம். சேலம் முதல் ஊட்டி ஐந்து மணி நேரம் அங்கிருந்து முதுமலை ஒரு மணி நேரத்தில் எட்டிவிடலாம். நான் மதியம் கிளம்புபவர்கள் மறுநாள் அதிகாலை சென்றடைந்தார்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஆக நேரக் கணக்கு சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நிறைய தோழிகள் இசையும், அமுதனும் திருமணத்திற்கு முன் எப்படி இணையலாம் என்ற கேள்வியை முன் வைத்து இருந்தீர்கள். நான் அதற்கான பதிலை இந்த பதிவில் கொடுத்து இருக்கிறேன்.

அதோடு நான் அதை சரி என்று மொழியவில்லை. அது கதையில் ஒரு சம்பவம் அவ்வளவே. நான் எழுத்தாளர் என்பதால் எதை எழுதுவதை கீழ்மை என கருதுகிறேன் என்றால், ஒரு பெண்ணை உடலாலும், மனதாலும் வன்புணரும் காட்சிகள் அமைப்பது.

பெண்ணை போகப் பொருளாக சித்தரிப்பது. என் கதையின் வழியே மானுட, சமூக நீதிக்கு எதிரானவற்றை எழுதுவது. மற்றபடி இரு உயிர் ஒப்பி கலப்பதை அங்கீகாரமற்ற செயல் என நான் ஒருபோதும் நினையேன். அதற்காக லிவிங் டூகதர் எனும் பொழுது போக்கு மேம்போக்கு வாழ்வியல் முறையை நான் ஆதரிப்பவளில்லை. அது அடுத்த தலைமுறைக்கான சிக்கல். ஆனால் அப்படி யாரேனும் என் பக்கத்து வீட்டில் வாசித்தால் அவர்களை கண்டிப்பாக சக மனிதர்களாய் மதிப்பேன். அவர்களை கண்டு முகம் சுழிக்க மாட்டேன். ஏனெனில் அது அவர்கள் வாழ்வு. அவர்கள் உரிமை.

மற்றபடி அவரரவர் வாழ்க்கைக்கு தேவையான கோட்டின் நீதியை அவரவர் தான் கிழிக்க வேண்டும். அத்துமீறி அடுத்தவர் உள் இடைவெளி நுழைதல் ஆபத்து. மற்றவரை வருத்தாத அன்பின் பெருவாழ்வில் தான் மானுட நீதி அடங்கி இருக்கிறது என எண்ணுகிறேன்.

தொடர்ந்து உங்கள் உந்துதல் கருதுக்களை பதியுங்கள். அது தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டும்.

நட்பில்

மேக்னா சுரேஷ்.
Vizhi Veppach Chalanam 28 1

Vizhi Veppach Chalanam 28 2
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top